Tuesday, May 11, 2010

98. மாநகர மேயருடன் சீமாச்சு...

"திங்கள்கிழமை, சார்லெட் நகர மேயருடன் மதிய உணவருந்த நம் கம்பெனியிலிருந்து 8 பேர் போக வேண்டும். நீங்களும் வருகிறீர்களா?” - என்று ஒரு அதிகாரி சொன்னவுடனேயே, பறக்காவட்டித் தனமாக “இதோ வந்தூட்டேன்” அப்படீன்னு சொல்லாமல் ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் சொல்கிறேன்” என்று வாய்தா வாங்கிவிட்டேன்..



முடிவு சொல்வதற்கு முன்னர் வடக்கு கேரலைனா மாநில சார்லெட் மாநகர மேயர் Anthony Foxx பற்றி கொஞ்சம் கூகுளிட்டுத் தெரிந்து கொண்டேன். மேயர்னா இங்கெல்லாம் ”மாநகரத் தந்தை “ என்றெல்லாம் பந்தா பண்ணுவதில்லை போல. 154 பவுன் தங்க மாலை போட்டுக்குவாரா? ஒரு சன் டீவீ , மூன் டீவீ கவரேஜ் உண்டா? அட்லீஸ்ட் இன்னும் 5 வருஷத்துக்குள்ள ஒரு துணைமுதல்வர் ஆவதற்கு சான்ஸ் உண்டா? ‘அஞ்சா நெஞ்சன்” மாதிரி அண்ணன்மார்கள் யாராவது உண்டா என்றெல்லாம் ஆராய்ச்சி செஞ்சுத்தான் பார்த்தேன்.. ஹூஹூம் .. ரொம்ப எளிமையான + இனிமையான + இளமையான மேயர் சார்லெட்டுக்கு வாய்த்தது ஒரு அதிர்ஷ்டம்தான்.

சார்லெட் மாநகரத்தை ஒரு “உலகத்தரம்” வாயந்த நகரமாக்குவதற்கும், இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், நகரத்தில் பன்னாட்டுக் கலாச்சாரத்தைப் போற்றுவதற்கும், வெளிநாட்டு மக்கள் இந்த நகரத்தின் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தை பேணிக்காக்க உதவியதற்கு நன்றி நவிலவும் இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. என் கம்பெனி சார்பில் ஆசிய அமெரிக்கர் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டிருந்தேன்.

மேயரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள சார்லெட் பன்னாட்டு அமைப்பின் (Charlotte International Cabinet) தலைவராக இருக்கும் திருமதி டாக்ட்ர் மஹா கிங்க்ரிச் (அமெரிக்கரை மணந்து இங்கு பலவருடங்களாக இருக்கும் ஒருஇந்தியப் பேராசிரியை. பரதநாட்டியத்தில ப்ண்டிதையும் கூட..) தலைமை தாங்க, இந்திய இந்து கோவிலின் பிரதிநிதி விஷ்ணு சஹஸ்ரநாமத்திலிருந்து சில ஸ்லோகங்கள் சொல்லி தொடங்கி வைக்க, விழாவும், மதிய உணவும் மிக நன்றாக நடந்தது.

இந்த ஊரு அரசியல்வாதிகளெல்லாம் அவங்க அவங்க ஊரை முன்னேற்றுவதற்கு எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்த போது ரொம்ப பெருமூச்சு தான் வந்தது. மாநகர வளர்ச்சி குறித்தான் மேயரின் சிந்தனைகள் பாராட்டத்தக்கதாக இருந்தன. இனிமேல் இவர் செய்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இவ்வளவு வருஷமிருந்திருந்தாலும், “ஊருக்கு யார் மேயர்” என்றெல்லாம் தெரிந்து கொண்டதில்லை. ( நாங்களெல்லாம் , மாநில கவர்னர், நாட்டுத் தலைவர் லெவல் மட்டும் தான் கேட்டுக்கிறதாக்கும் !!). இனிமேல் உள்ளூர் விஷயங்களிலும் ஏதோ ஒரு விஷயத்தில் பங்கெடுத்துக்கிறதென்று முடிவு பண்ணியாச்சு..

“மேயருடன் லஞ்ச்” என்று முதல்நாள் வீட்டில் பந்தா விட்டதில், 7 வயசு சூர்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை.. “Daddy, when you meet the Mayor, can you get his autograph for me? " என்று கேட்டு அவளின் நோட்டையும், பேனாவையும் உடனேயே என் ஆபீஸ் பையில் வைத்து விட்டாள். திங்கள் கிழமை ஸ்கூலுக்குக் கிளம்பும் போது “மேயர்கிட்டே ஆட்டோகிராப் வாங்கிட்டு வரட்டுமாடா” என்று கேட்டதற்கு, ’நம்ம அப்பாவாவது மேயர்கிட்டே பேசறதாவது’ என்று எண்ணம் வந்திருக்கும் போல, “Try Daddy, But you dont need to.." என்று ராகமாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்..

மறக்காமல் சூர்யா நோட்டை மேயரிடம் எடுத்துச் சென்று, அவளை (இரண்டாங் கிளாஸ்)ப் பற்றி பெருமையாக சொல்லிவிட்டு அவளுக்கு அவள் நோட்டில் அதில் அவர் ஆட்டோகிராப்பும் வாங்கிவிட்டேனாக்கும்.

திங்கள் மாலை அவளிடம் ஆட்டோகிராப் நோட்டையும் கொடுத்து, நான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் காட்டிய பிறகு அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மறுநாள் (இன்று) அந்த நோட்டை எடுத்துப் போய் அவள் வகுப்பில் ஆசிரியையிடமும், மற்ற நண்பர்களிடமும் காட்டிப் பெருமைப் பட்டாயிற்று.. “Soorya, you are so lucky to have our Mayor's autograph" என்று அவள் வகுப்புத் தோழிகள் சொன்னார்களாம்..

oOo oOo

மயிலாடுதுறை செல்லும் போது எங்க ஊரு MLA, MP, Chairman, பல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வழக்கமுண்டு. பல மக்கள் பிரதிநிதிகள் எங்கள் வீட்டுக்கும் வருவார்கள்.. போவார்கள்.. அப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியுடன் “உற்சாக பான விருந்து” சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில், அவர் மூன்றாவது ரவுண்டு தாண்டியபோது கேட்டது “சீனு... நீங்க தான் அமெரிக்காவுல பெரிய்ய பேங்குல வேலைப் பாக்கறீங்களே.. கொஞ்சம் பணம் தர்றேன் .. உங்க பேங்க்குல அக்கவுண்ட் ஆரம்பிச்சிப் போட்டுத் தர்றீங்களா?”

அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !!



22 comments:

  1. //இந்த ஊரு அரசியல்வாதிகளெல்லாம் அவங்க அவங்க ஊரை முன்னேற்றுவதற்கு எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்த போது ரொம்ப பெருமூச்சு தான் வந்தது//

    அதே :( பட் உங்க மேயரின் செயல்பாடுகளை கவனித்து வாருங்கள் பிற்காலத்தில் நமக்கும் உதவக்கூடும் :)


    //அப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியுடன் //

    ஆஹா அம்புட்டு பெரிய ஆளு இருக்கா நம்ம ஊர்ல எல்லாருமே பஞ்சத்தில அடிப்பட்ட ஆளுங்க மாதிரியில்ல சுத்தி திரியிறாங்க :)

    ReplyDelete
  2. //ஆஹா அம்புட்டு பெரிய ஆளு இருக்கா நம்ம ஊர்ல எல்லாருமே பஞ்சத்தில அடிப்பட்ட ஆளுங்க மாதிரியில்ல சுத்தி திரியிறாங்க//

    ஆயில்ஸ், அவரு பெரிய்ய ஆளாயிருக்கணும் அல்லது இன்னும் கொஞ்ச நாள்ல பெரீய்ய ஆளாயிடுவோம்னு நம்பிக்கையோட இருக்கணும்.

    யாரையும் தோற்றத்தை வச்சி எடை போட்டுடாதீங்க.. இதுக்குத் தான் தாடிவெச்ச் தாத்தா சொன்னாரு “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்”

    ReplyDelete
  3. [[[அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம் நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !!]]]

    அது நிச்சயமாக நடக்காது..

    மேலுலகத்தில் அசுரர்களுடன் சண்டை போட்டு சண்டை போட்டு முருகனுக்கு அலுத்துப் போச்சாம்.. அதான் ஒட்டு மொத்தமா பேக்கப் பண்ணி நம்மகிட்ட அனுப்பிட்டான்.. அனுபவிங்கடான்னு..!

    ReplyDelete
  4. ஆஹா அவுருதானா? பட் ஆசை நிராசையாகிடும்போல தெரியுதுதே அருவி ஊர் ஆளுங்க வந்து ஆட்டம் போடுவாங்க போல :)

    ReplyDelete
  5. //நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்//

    இறைவனுக்கே தர்ம சங்கடம் கொடுக்கறீங்களா- சீமாச்சு அண்ணே? :)

    //மறக்காமல் சூர்யா நோட்டை மேயரிடம் எடுத்துச் சென்று, அவளை (இரண்டாங் கிளாஸ்)ப் பற்றி பெருமையாக சொல்லிவிட்டு அவளுக்கு அவள் நோட்டில் அதில் அவர் ஆட்டோகிராப்பும் வாங்கிவிட்டேனாக்கும்//

    பெண்ணுக்கு என்ன எழுதிக் கொடுத்தாரு மேயர்? அதைச் சொல்லுங்க! அதை ஸ்கேன் செஞ்சிப் போடாம, மேயர் பதிவுல நடிகை படம் போட்டு, அவரையும் நம்மூர் அரசியலுக்கு இழுத்தா எப்படி? :)

    ReplyDelete
  6. 98 பதிவு மேயர்!
    100 ஆம் பதிவு - மிச்சேல் ஓபாமா-வா? :)

    100 வது பதிவுக்கு என்ன ஸ்பெஷல் சீமாச்சு அண்ணே?
    கொஞ்சம் சமூகமும் இலக்கியமும் சேர்ந்தாப் போல எங்களை எல்லாம் ஊக்குவிப்பது போல இருக்கட்டும்! :)

    ReplyDelete
  7. போஃட்டோவுல போஸ் ஸூப்பர்... அடுத்தது என்ன கவுண்டி தேர்தல்ல நின்னுட வேண்டியதுதான்.

    ReplyDelete
  8. 2011 இல் டாக்டர் விஜய் முதல்வராக வருவதற்கு அடுத்த இரண்டு பதிவையும் போட்டுவிடவும்

    ReplyDelete
  9. நீங்க எப்போ மேயராகப் போறீங்க?
    நீங்க ஆனா, நானும் நீங்களும் இருக்குற படத்தைப் போட்டு நானும் இதுமாதிரி பதிவு போடுவேனே

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  10. "அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம்."

    அடேங்கப்பா ... ஒரே ஒரு 'மாயவரம் மஹான்'-கிட்டயே இவ்ளோ-ன்னா .. அத்தனை 'மாயவரம் மஹான்கள்'-கிட்டயும் எவ்ளோ இருக்கும் ?

    நம்மூரு மாதிரி "சிறுநகர சீமான்கள்" கிட்டயே இவ்ளோ-ன்னா அப்போ சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாதிரி "பெருநகர பெம்மான்கள்"-கிட்ட ? மந்திரி மஹானுபாவர்கள்-கிட்ட ? முதல்வர்கள்-கிட்ட ? பாராளுமன்ற உறுப்பினர்கள்-கிட்ட ? மத்திய மந்திரிகள்-கிட்ட ??

    யப்பா யப்பா யப்ப்பாஆஆஆஆஆ ?? இந்தியாவுக்கு தனியா நிழலுலக வரவு செலவு அறிக்கையே தாக்கல் பண்ணலாம் போல ??

    குஷ்வந்த்சிங் நகைச்சுவைதான் நினைவுக்கு வருது :

    நம்ம நாட்டுக்கு வந்திருந்த ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணி தொண்டரடிப்ப்பொடி சூழ ச்ச்சும்ம்மா அட்டகாசமா ஊர்வலம் வந்துகிட்டிருந்த நம்ம அரசியல்வாதிய காட்டி 'யாரு இவங்கல்லாம் ?'-னு கேட்கவும் வழிகாட்டி சொன்னாராம் 'இவங்கல்லாம் மக்கள் சேவகர்கள்'-னுட்டு.

    'அப்போ இவங்கல்லாம் ?'-னு அழுக்கு உடைகளோட சாலையோரமா தலை குனிஞ்சி நடந்து போய்க்கிட்டிருந்த திருவாளர்.பொதுஜனங்கள காட்டி கேட்டாராம் வெ.நா.ப.

    வழிகாட்டியும் சளைக்காம சொன்னாராம் :

    "இவங்கதான் இன்னாட்டு மன்னர்கள்"

    ReplyDelete
  11. ஆமா ... கடந்த ஒரு நூற்றாண்டா நடந்துகிட்டிருந்த அந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறி முடிஞ்சிடுச்சா ?

    ReplyDelete
  12. சீமாச்சு சார்

    தமன்னாவிற்கு கோவில் கட்டும் முயற்சியில் இந்த தமன்னா தாசன் இறங்கியுள்ளேன். என்னுடன் இணைந்து இத்திருப்பணியில் இணைத்துக் கொள்ள அழைக்கிறேன்.

    விபரங்களுக்கு

    http://soopersubbu.blogspot.com - ற்கு

    வருகை புரியுங்கள்.


    நன்றி

    சூப்பர் சுப்பு

    ReplyDelete
  13. ஆகா இந்த பதிவை எப்படி தவற விட்டேன். ரைட்டு கேயாரெஸ் சொன்ன மாதிரி 100 வது பதிவு ஒபாமா கூடத்தான்.

    ஆமா ஸ்கூல் கட்டனும்ன்னு உங்க கனவு. டீம்டு யுனிவர்சிட்டி கட்டனும்னு நம்ம அரசியல்வாதி கனவு:-))) அதுக்காக தான் பணம் சேர்க்கிறார். ஆக எல்லார் கனவும் கல்வியிலே தான் இருக்கு. அட ராமா!

    ReplyDelete
  14. பதிவுக்கும் தமன்னாவுக்கும் என்ன சம்பந்தம். சரி இருந்துட்டு போகுது. பார்க்க நல்லா தான் இருக்கு:-))

    ReplyDelete
  15. // நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு //
    ஏனுங்க, அவிங்க கூட குந்தி 'உற்சாக பானம்' சாப்பிடத் தெரிஞ்ச உங்களுக்கு, அவிங்களுக்கு புத்தி சொல்லத் தெரியாதா? உங்களை மாதிரி ஆளுக்குத் தானுங்கோ அதே தாடி வச்ச தாத்தா "நகுதற் பொருட்டன்று நட்பு" அப்பிடின்னு பாடி வச்சாருங்க. //கலாச்சாரத்தை பேணிக்காக்க உதவியதற்கு நன்றி நவிலவும் இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.// ஏனுங்க, முதல்வரை கூலிக்குப் பாராட்டுற மாதிரி, துணை முதல்வரை இந்து ராம் பாராட்டுற மாதிரி, உங்க கலாச்சாரத்தை அங்கியும் போயி ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கே. மேயரு அவுரு வேலையைச் செய்யிறாரு. நீங்க ஏனுங்க அவருக்குப் பாராட்டு விழா வக்கிறீங்க? இண்டியன்ஸ் எங்க போனாலும் காக்கா பிடிக்கிறதுதானுங்களா? //மறக்காமல் சூர்யா நோட்டை மேயரிடம் எடுத்துச் சென்று, அவளை (இரண்டாங் கிளாஸ்)ப் பற்றி பெருமையாக சொல்லிவிட்டு அவளுக்கு அவள் நோட்டில் அதில் அவர் ஆட்டோகிராப்பும் வாங்கிவிட்டேனாக்கும்.// ஏனுங்க, கொழந்தைக்கு இன்னிக்கு ஆட்டோகிராப் வாங்கின மாதிரி, இண்டியன் ஸ்டைல்ல, நாளைக்கி எதாச்சும் சிபாரிசுன்னு போயி நின்னு இண்டியன்ஸ் மானத்தை வாங்காதீங்கோ!

    ReplyDelete
  16. hi, if it is true,. you have to tell who is that peopel's representative, because you guys are playing with people's tax money and Indian Govt's money:

    http://akkinisithan.blogspot.com/2010/05/blog-post_23.html#comment-form

    ReplyDelete
  17. உங்கள் கனவு பலிக்க ஆணடவனை பிரார்த்திக்கிறேன்..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  18. //hi, if it is true,. you have to tell who is that peopel's representative, because you guys are playing with people's tax money and Indian Govt's money://

    எல்லோருக்கும் அடுத்த பதிவில் பதில் சொல்லிட்டாப் போச்சி..

    ReplyDelete
  19. படிச்சு பெருமூச்சுதான் விட முடியுது

    ReplyDelete
  20. சீமாச்சு சார்,

    நானும் D.B.T.R பள்ளியின் முன்னால் மாணவன்....

    ReplyDelete