Tuesday, February 20, 2007

39. சில வித்தியாசமான சுவர்ச்சித்திரங்கள்...

வழக்கமாக நான் சென்ற எல்லா இந்திய உணவகங்களிலும் பெரும்பாலும் இந்தியாவைப் பற்றிய சுவர்ச் சித்திரங்கள் இருக்கும்.

எல்லாமே..ஒட்டகமாகவும், பாலைவனத்து காட்சிகளாகவும், ஒரு மொகலாயர் சில மாதுக்கள் புடைசூழ மது அருந்தும் காட்சிகளாகவோ இருக்கும்.

என்னடா இது... நம் நாட்டைப் பற்றிக் காட்ட இந்தச் சித்திரங்கள் தானா கிடைத்தது என்று வருத்தப் பட்டதுண்டு..

இந்த முறை இந்தியா சென்ற போது கோவை அன்னபூர்ணா உணவகத்தில் உணவருந்திய போது சுவரில் எல்லா சித்திரங்களும் நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சுட்டியதாக இருந்த்து. ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா வற்றையும் என் கேமராவில் நிரப்பிக் கொண்டேன். என் ஆர்வம் பார்த்து அந்த உணவக மேலாளர்.. மற்ற தளத்தில் இருந்த சுவர் சித்திரங்களையும் காண்பித்தார்.. வயிற்றுக்கும் மனதுக்கும் உணவளித்த கோவை அன்னபூர்ணாவுக்கு நன்றி..

நான் கண்டு களித்த சில சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு... இன்னும் 40 இருக்கிறது...

















Friday, February 09, 2007

38. பாத்துக்குங்க.. கண்ணு பட்டுவிடப் போகுது..

இந்த முறை இந்தியா போய் வந்த போது கவனிக்க நேர்ந்தது..
எல்லார் வீட்டுலயும் சகட்டு மேனிக்கு யார் கண்ணையாவது இப்படீ மாட்டி வெச்சுருக்காங்க...

அம்மா கண்ணு..

அய்யா கண்ணு.... இப்படி.. சமயத்துல பாக்கவே பயமாயிருக்குது...

முன்னாடியெல்லாம்.. ஆண்டவன் கண்ணெத் தெறக்கமாட்டானா..ன்னு தான் பாட்டியெல்லாம் புலம்பும்..

இப்பயெல்லாம்.. அவரு கண்ணத் தெறந்துட்டாரு போல இருக்கு.... 'மவனே இனிமே .. மூடினே.. உனக்கு இருக்கு...' அப்படீன்னு கண்ணை மட்டும் இப்படிப் புடிச்சுப் போட்டிருக்காங்க.. போல இருக்கு..

உலகம் என்னவோ எல்லாத் திசைகளிலும் வளந்துக் கிட்டுதான் இருக்கு.... இதுவும் ஒரு வளர்ச்சிதான் போல..

(இந்தப் படத்தில் இருப்பது.. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்த ஸ்வாமிகள் கண்கள்)