Thursday, April 07, 2011
116. அன்னா ஐயா, தயவு செஞ்சி சாப்பிடுங்க !!
Tuesday, March 01, 2011
115. சீமாச்சுவின் தாம்பூலம் -- 02 மார்ச்சு 2011
ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் செல்லும் போதும் நான் பார்க்க ஆசைப்பட்ட இடம் டாஸ்மாக். முன்னரெல்லாம் பல வர்ண நியான் போர்டுகளுடனும் சீரியல் லைட்டுக்களுடனும் மயிலாடுதுறை எங்கும் பரவலாக இருந்த (சில சாம்பிள்: மஞ்சு ஓயின்ஸ், சேகர் ஒயின்ஸ்.. இன்னும் பலபேர்களில்) ஒயின்ஸ் ஷாப்புகள் மாதிரி டாஸ்மாக்கும் இருக்கும் என்று நினைத்துத் தேடுவதுண்டு.. ”டாஸ்மாக் எங்கேயிருக்கு?” என்று யாரையும் கேட்கணும் என்று ஆசையாக நினைத்து.. அந்த நினைவாகவே மறந்து அமெரிக்கா திரும்பியிருக்கிறேன்.. கூச்சமெல்லாம் இல்லை.. என்னவோ ஒரு மறதி.. - ஒரு மாதம் வரையில் வாக்கு விவரங்கள் கொண்ட எலக்ட்ரானிக் இயந்திரங்களுக்கு யார் பாதுகாப்பு தருவது? மாநில போலீஸ் என்றால், அந்த போலீசார் யார் கண்ட்ரோலில் இருப்பார்கள்? அவர்கள் வாக்கு இயந்திர்ங்களில் தவறு நடக்காமல் எப்படி உறுதி செய்வார்கள்?
- இரண்டாயிரம் கோடிகளுக்கு (அல்லது பல்லாயிரம் கோடிகளுக்கு) விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சம்பந்தமான முக்கியமான கோப்புகளே மாயமாக மறையும் பொழுது வாக்கு இயந்திரங்கள் மாயமாகாமல ஒரு மாதம் காப்பாற்ற முடியுமா?
- இயற்கை அல்லது செயற்கை விபத்துக்களால் (தீ விபத்து, வாக்கு இயந்திரங்களின் மீது தண்ணீர் பட்டு வீணாக்கப்படுதல்) போன்றவற்றால் வாக்கு இயந்திரங்கள் பாதிக்கப்பட்டால் மறுவாக்குப் பதிவு நடத்தப்படுமா?
- ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் அக்ன் நட்சத்திரம் அனலாய்க் கொதிக்குமே.. வாக்கு இயந்திரங்கள் ஏர்கண்டிஷண்ட் அறைகளில் பாதுகாக்கப்படுமா? அப்படி ஏர்கண்டிஷணர்கள் இயங்குவதற்கு தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுமா?
- வாக்கு இயந்திரங்கள், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ அல்லது அரசாங்க அலுவலகங்களிலோ தான் பாதுகாக்கப்படும். அவ்வாறு பாதுகாக்கப்படும் இடங்களில், பொதுமக்கள் மற்றும் அலுவலர்களே நுழிய அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறான பொது இடங்களில் ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டி வைக்க முடியுமா?
- எல்லாவற்றுக்கும் மேலாகஒரு மாதத்திற்கு தேர்தல் முடிவுகள் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தால் என்னைப் போன்ற மக்களுக்குத் தலை வெடித்து விடாதா?
oOo

எனக்குப் பச்சைப் பட்டாணி ரொம்பப் பிடிக்கும். அப்படியே உரிச்சி உரிச்சி சாப்பிடலாம். இங்கே அமெரிக்காவில் சார்லெட்டில் ஃப்ரோசன் பட்டாணி தான் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நான் தேடுவது பச்சைப் பட்டாணியும், சுண்டைக்காயும் தான். சில இரண்டு வார விஜயமாக வருடங்களுக்கு முன் இந்தியா வந்த போது சென்னை விமான நிலையத்திலேயே வைத்து நண்பரிடம் ”எங்கியாவது சுண்டைக்காய் கிடைச்சால் வாங்கிவாய்யா.. சாம்பாரில் போட்டு இல்லேன்னா கூட்டு பண்ணி சாப்பிடணும் போலருக்கு” என்று சொன்னேன்.. இரண்டுவாரம் நண்பரிடமிருந்து எந்த செய்தியும் காணோம். ஊர் திரும்பிப் போகும் போது சென்னை ஏர்போர்ட்டில் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நின்று கொண்டிருந்த போது, அந்த “சுண்டைக்காய்” நண்பர் ஓடி வந்தார். என்னைத் தேடிப் பிடித்து கண்டுபிடித்த போது அந்த மார்கழி இரவிலும் அவர் சட்டை வியர்வையால் நனைந்திருந்தது.. மூச்சிரைக்க வந்து என்னிடம் நின்ற அவர் கையிலிருந்த பையில் 2 கிலோ சுண்டைக்காய் இருந்தது. “உனக்காக ஊரெல்லாம் அலைஞ்சி சொல்லி, தேடிப்பிடிச்சி மயிலாப்பூர்ல வாங்கிட்டு வந்தேன்யா.. ஊருக்கு எடுத்துப் போயி சாம்பார் வெச்சி சாப்பிடு” என்று சொன்னவரின் அன்பில் உருகித்தான் போனேன். “இந்த மாதிரி பச்சைக் காய்கறிகளை அமெரிக்காவில் கஸ்டம்ஸில் அனுமதிக்க மாட்டார்கள்... நான் இதை எடுத்துப் போக முடியாது.. உன் மனைவியிடம் கொடுத்து சாம்பார்/கூட்டு வெக்கச் சொல்லி என் பேரைச் சொல்லிச் சாப்பிடுய்யா” என்று அந்த சுண்டைக்காயை ஆசையுடன் கையில் வைத்திருந்து திருப்பிக் கொடுத்துவிட்டேன்..
Tuesday, January 25, 2011
113. ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட் தான்..
பின்னணியில் தேசிய கீதத்தை ஆரம்பித்தவுடன் அப்படியே நின்று மரியாதை செலுத்தும் தாத்தாவுக்கு பணிவான வணக்கங்கள். அவரது செயலைப் பார்த்தும் கூட அதைப் பின்பற்றாமல் அதை வேடிக்கைப் பார்க்கும் (அல்லது தாத்தாவுக்குப் பாதுகாப்பு தரும்) காவல்காரர் கற்றுக் கொள்ளவேண்டியது அதிகம்..

இதைப் படித்து விட்டு சல்யூட் வெச்சாத்தான் தேசபக்தியா.. எங்களுக்கெல்லாம் எல்லாம் மனசில இருக்கு.. அப்படீங்கிற டயலாகெல்லாம் வரும் தான்.. இருந்தாலும் புரோட்டாக்கால் பின்பற்றுவதில் எப்பொழுதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட்தான்..
குடியரசுதின வாழ்த்துக்க்ள்..
Thursday, January 13, 2011
112. படித்ததில் சிரித்தது...
1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்
Tuesday, January 11, 2011
111. சீமாச்சுவின் தாம்பூலம் - 11 ஜனவரி, 2011

oOo oOo
அது போல சென்ற வாரம் ஒரு கார் ப்ளேட் பார்த்தேன்..அதில் “2XYNOXX" என்று போட்டிருந்தது அது பார்ப்பதற்கு Personalized Tag மாதிரி தான் தெரிந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. பக்கத்திலிருந்த என் மகளிடமும் மனைவியிடமும் கேட்டேன்.. அவர்களுக்கு சட்டெனப் புரியவில்லை.. பிறகு நான் விளக்கியதும்..”ஆமாமில்லே..” அப்படீன்னு ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் பின்னூட்டட்த்தில் சொல்லுங்கள்.. நிச்சயம் யாராவது சரியாகச் சொல்வீர்களென்று தெரியும்..

தேர்தலில் போட்டியிடும் போது வாக்கு சேகரிக்க சைக்கிளில் தான் செல்வார்.. அவருக்கு ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் போது ஒரு காவலர் பாதுகாப்பு தரப்பட்டது.. அந்த காவலரிடம் அப்பொழுது வாகன வசதியில்லை.. அதனால் அவரையும் தன் சைக்கிளை டபுள்ஸ் அழைத்துக்கொண்டு (அவரே சைக்கிளை மிதித்துக் கொண்டு) சென்று வாக்கு சேகரித்தார்..

Monday, January 10, 2011
110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?



Thursday, January 06, 2011
109. நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க !!








Tuesday, January 04, 2011
108. உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் சாராத இளைஞர்கள் !!
oOo

சவி ராஜாவத் என்கிற 30 வயது இளம்பெண். எம்.பி.ஏ. படித்திருக்கும் இந்தப் பெண், ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியான டோங் மாவட்டத்தின், சோடா எனும் தன் தாய் கிராமத்துக்காக, கார்ப்பரேட் நிறுவன பணியைத் துறந்து, அதன் பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார்! சேலைத் தலைப்பையே முக்காடாகப் போட்டுக் கொண்டு நடக்கும் பெண்களின் மத்தியில்... பிராண்டட் ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று நிற்கும் அந்தத் தலைவியின் தோற்றமே சுவாரஸ்யமாக்குகிறது சூழலை! பேச்சிலும் வேகம் இந்த மிஸ்ஸுக்கு!
''என் தாத்தா ரகுவீர் சிங், சோடா கிராமத்தில் மூன்று முறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். என் தந்தை ராணுவத்துக்குப் பணியாற்றச் சென்றதால் நாங்கள் மட்டும் நகரவாசிகளாகிவிட்டோம். தாத்தா, பாட்டிஎல்லாம் ஊரிலிருந்த நிலங்களைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். ஜெய்ப்பூரிலிருந்து எப்போதாவது ஊருக்கு சென்று வருவதோடு சரி. இடைப்பட்ட காலத்தில் கிராமத்தில் வளர்ச்சியே இல்லாமல் போய், மிகமிக பின் தங்கிவிட்டது ஊர்.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் வரவே, எங்கள் கிராமத்தை பெண்களுக்கானது என்று அறிவித்துவிட்டனர். வழக்கமாக எங்கள் குடும்பமே தலைவராக இருந்ததால், கிராம மக்கள் 100 பேர் ஜெய்ப்பூரிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்து, விஷயத்தைச் சொல்லி, தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது நான் டெல்லியில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் தலைவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆந்திரா போர்டிங் ஸ்கூலில் படிப்பு, டெல்லியில் கல்லூரிப் படிப்பு, புனேவில் எம்.பி.ஏ., கார்ப்பரேட் வேலை என முன்னேறிச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் யோசிக்கவே... 'எதற்கும் ஒரு முறை நம் கிராமத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்து முடிவெடு’ என்றார்கள் வீட்டில்.
மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல், 'சோடா'வாசிகள் கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. மழை நீர் மட்டுமே நீராதாரம் என்பதால், அவற்றுக்குப் போதுமான தீவனம் கிடைப்பதில்லை. ஒரு சில பயிர்கள் மட்டுமே விளையும். அதுதான் இங்குள்ள சுமார் 7,000 பேருக்கும் சோறுபோடும் தொழில். இன்னும் அடிப்படை வசதிகள், சுகாதாரம் எனும் பல விஷயங்களிலும் பின்தங்கிய நிலைதான்.

கிராமத்துக்குச் சென்று சுற்றிப் பார்த்த எனக்கு, மிகவும் வருத்தமாகிவிட்டது. 'என் நிறுவனத்துக்கு என்னைப் போல் ஆயிரம் ஊழியர்கள் கிடைக்கலாம். ஆனால், என் கிராமத்துக்கு இப்போது நான் அவசியம் தேவை...’ என்று முடிவெடுத்தேன். 'நம்மால் புரட்சிகளை, மலர்ச்சிகளை கொண்டு வரமுடியாது. என்றாலும், மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளிகளை விதைக்க முடியும்' என்ற நம்பிக்கையை, என் படிப்பும், என் கிராம மக்கள் மீதான அக்கறையும் தந்தன. கடந்த பிப்ரவரியில் தேர்தலில் நின்றேன்!''

சவி ராஜாவத் மனு தாக்கல் செய்தவுடனே ஒரே ஒருவரைத் தவிர போட்டியில் இருந்த மற்ற 15 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் வாங்கியிருக்கின்றனர். அமோகமாக வென்றிருக்கிறார் ராஜஸ்தானின் புகழ்பெற்ற ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவரான இந்த ராஜகுமாரி.
இந்த குறுகிய நாட்களுக்குள் சோடா கிராமத்தினருக்கு தங்கள் தலைவி பற்றி அத்தனை நிறைவு. ''கிராமத்தின் முக்கியப் பிரச்னையான தண்ணீருக்காக மழை நீரை சேமிக்க கிராமத்து பெரியவர்கள் மற்றும் ஜெய்ப்பூரின் மண் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டு, கிராமத்தின் நூறு ஏக்கர் அளவிலான ஏரியை ஆழப்படுத்தினார் ராஜாவத். இதற்கு உதவியாக உடல் உழைப்பை கிராம மக்கள் சுமார் 3,000 பேர் தர முன் வந்தோம். சிறுவர்கள், பெண்கள், ராஜாவத்தின் பெற்றோர் உட்பட அனைவருமாக ஏரியை வெட்டியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது'' என பஜன்லால் கூற, தொடர்ந்தார் ஹீராபாய்...
''முன்பெல்லாம் மழை பெய்த சில மாதங்களில் ஏரி வறண்டு விடும். இப்போது ஆழமாக வெட்டப்பட்டுள்ளதால் அதிக நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஏரியை வெட்டும்போது அள்ளிய மண்ணை வெளியில் எங்கும் கொட்டாமல், ஏரியினுள்ளேயே குவித்து சிறிய தீவுகள் போல் செய்து விட்டார் எங்கள் தலைவி. அருகில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு, இப்போது இந்தத் தீவுத்திடல்கள் புகலிடமாகி விட்டன. இத்துடன், நூறு மரக்கன்றுகளையும் நட் டிருக்கிறார். இதெல்லாமே ராஜாவத்துக்கு கிடைத்த வெற்றி!'' எனப் புகழ்மாலை சூட்டினார்.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கருத்தரங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட ராஜாவத் அதில் கலந்து கொண்டு தனது கிராமத்தின் நிலை பற்றி பேசியுள்ளார். பிரச்னையை முறையாக எடுத்து வைத்ததைப் பாராட்டிய அமைச்சர், சோடா கிராமத்தின் மழைநீர் சேமிப்புக்காக 71 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறார்.
''அமைச்சர் அறிவிப்பு கொடுத்து விட்டாலும், பணத்தை பெறுவதற்கான ஃபைல்களை நகர்த்துவதில் பல்வேறு சுணக்கங்கள். கடந்த ஜூன் வரை 24.6 லட்ச ரூபாயை வாங்கி விட்டேன். பாக்கியைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். அரசு நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளியை இந்த அனுபவம் புரிய வைத்தது.
இதைச் சரி செய்ய என் போன்ற இளைய தலைமுறை பாலமாக இருப்பது அவசியம். இதுகுறித்து ஒருமுறை எஃப்.எம். ரேடியோவில் நான் அளித்த பேட்டி யைக் கேட்டுவிட்டு, தொழி லதிபர் ஒருவர் என் கிராம முன்னேற்றத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்! இதையெல்லாம் வைத்து, கிராமத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றும் வேலை களைத் தொடங்கிஇருக்கிறேன்'' என்று சொல்லும் ராஜாவத், சி.என்.என். சேனல் சார்பில், நாட்டிலுள்ள யங் லீடர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
''படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்துக்காகச் செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு மாறிவிடும்'' என்று கோரிக்கை விடுக்கும் சவி ராஜாவத், அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.
பஞ்சாயத்து தலைவி பணியோடு, தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயத்தையும் தற்போது தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். சுமார் 25 ஏக்கர் நிலம் இருந்தாலும், குறைந்த நீராதாரம் என்பதால், அதை வைத்து குறைந்த அளவில் கடுகு பயிரிட்டிருக்கிறார். இதெல்லாம் இவருடைய புகழை அக்கம் பக்கம் பரவச் செய்துகொண்டிருக்கிறது.
''ராஜாவத் அடிக்கடி நடத்தும் குறை கேட்கும் நாள் நிகழ்ச்சிகளுக்கும் கிராமத்தினரிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அருகிலுள்ள பஞ்சாயத்துக் களின் தலைவர்கள் மற்றும் தலைவிகள், இவரை அணுகி ஆலோசனை கேட்கத் துவங்கி விட்டனர். ராஜஸ்தானின் அரசியல்வாதிகளும் இவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால், ராஜாவத்துக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கலாம்'' என்று பெருமையோடு சொல்கிறார் பஜன்லால்!
வாழ்க இளைய பாரதம்!
Sunday, December 19, 2010
107. துறவியும் துளைகளும்..
விழுப்புரம் : கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப் பேரவையின் நான்காம் ஆண்டு நல்விழா கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ஜாதி உணர்வு அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒன்று. ஜாதி தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகளால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. ஒரு ஜாதி மற்றொரு ஜாதியோடு மோதிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதனுக்கு பக்குவம் ஏற்பட அனுபவம் தேவை. பக்குவம் வரும் போது ஞானம் வருவதால் உயர்வு பெறுகிறான்.

முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்து போடுங்கள். பிறக்கும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சேர்க்கும் போதும் பெயருக்கு பின் ஜாதி பெயரை சேர்த்து வையுங்கள். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் தான் பிறந்த ஜாதியை உயர்த்த பார்ப்பர்.
அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் போது 153 ஜாதிகளையும் ஒருங்கிணைத்து, "முதலியார் வேளாளர்' என்று ஒரே பட்டியலில் பதிவு செய்யுங்கள். சங்க நிர்வாகிகள் நன்கொடை வசூல் செய்து அதில் துவங்கும் தொழில்களுக்கு நம் ஜாதியை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்
Wednesday, December 15, 2010
106. சீமாச்சுவின் தாம்பூலம் - 15 டிசம்பர், 2010
பதிவு கொஞம் நீளமாகிட்டது போல.. உண்மைத்தமிழன் பேரைச் சொன்னாலே.. பதிவும் நீண்டுடுது.. எனது டாஸ்மாக் அனுபவம், பதிவுலக நண்பர்களைச் சந்தித்தது, தீபாவளி.. கடைமுகம்.. இன்னும் சுவையான அனுபவங்கள் அடுத்த பதிவில்.. விரைவில்...
என் நண்பரின் மகனின் எந்திரன் வீடியோ.. அவசியம் நிமிடம் 2:20 லிருந்து 2:45 வரை பாருங்கள். ஒரு புன்சிரிப்பு கியாரண்டி. நிச்சயம் ரீவைண்ட் செய்து பார்த்து மறுபடியும் சிரிப்பீர்கள்



