தினமும் ஒரு பதிவு (பதிவுன்னு சொன்னா திட்டுவாருங்.. இடுகைன்னே சொல்லிக்கிறனுங்க !!) என்று போட்டுத் தாக்கிக்கிட்டிருந்தவருக்கு இப்போ நேரம் கிடைக்கிறதே கஷ்டமாயிடுமாம்.. அதிக வருகை மற்றும் பின் தொடர்பவர்கள் இருக்கும் பதிவாதலால் அதை மொத்த விலைக்குத் தருகிறாரா என்று ஒரு மூத்த பதிவர் வேறு விசாரித்து விட்டாராம். பேரம் படிந்தாலும் படியுமாம் !!
இப்போ தாய்க்குலத்துக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால்.. பதிவரை ஒரு கை பார்த்துவிடலாமென்றிருக்க்கிறாராம்.. ஏற்கெனவே அட்லாண்டா போனபோது “அடிபட்ட” அனுபவம் பதிவருக்கு உண்டாம்..!!
செய்தி கேட்டு அடிக்கடி கனவில் வந்த சிலேடைப்புலவர் “தம்பி .. இரட்டை வாழ்த்துக்கள் .. சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்..” அவர் இனி வேறு பதிவர் கனவில் வரலாமென்று போய்விட்டாராம்...
”சிலேடைப் புலவர் கனவுல வந்ததாலதான் இரட்டை சந்தோஷம்.. சாதாரண புலவர் வந்திருந்தால் இப்படி சந்தோஷம் இரட்டிப்பு ஆகியிருக்குமா” அப்படீன்னு ஒருத்தர் சீண்டினாராம்..
மனசு நிறைய்ய சந்தோஷங்களோடு..”பதிவாவது... உலகமாவது..” என்று பதிவர் அசிரத்தை காட்டுகிறாராம்..
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த “இரட்டை வாழ்த்துக்கள்” ஐயா...
நீங்களும் சொல்லிக்கிடுங்க.. பதில் வர இரண்டு மாசமானாலும் ஆகும்... நமக்கு பதிலாங்க முக்கியம்.. நம்ம பதிவர் குடும்ப சந்தோஷம் தானே முக்கியம்”
சூதனமா விடையைக் கண்டுபிடிச்சு வாழ்த்துங்கோ மக்களே !!
பி.கு: இதுக்கும் சினேகாதானுங்களா? அப்படீன்னு கேக்குறவங்களுக்கு.. புன்னகை தாங்க பதில்.. புன்னகை இளவரசியின் ரசிகருக்கு வேற என்ன தெரியுமுங்க !!
18 comments:
இஃகி இஃகி!!
ஆனா உங்களோட செய்தி ஓடையை முழுசா தரக்கூடாதா? ரீடரில் அரைகுறையாக வருதே..
என்னோட சிற்றறிவுக்கு இது ரொம்ப அதிகம். அடுத்த முறை தொலைபேசும் போது யாரென்று சொல்லி விடவும்
என்றும் அன்புடன்
Boston ஸ்ரீராம்
//என்னோட சிற்றறிவுக்கு இது ரொம்ப அதிகம். அடுத்த முறை தொலைபேசும் போது யாரென்று சொல்லி விடவும்//
Conf போட்டே சொல்லிருங்க..
இரட்டை இலை குழந்தை - களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு பழமையான கருத்து ஒன்னு பேசிக்குவாங்களே, அது சரிதானா
பதிவர் பழமைபேசிக்கு இரட்டைக் குழந்தையா? நான் கூறியது சரியா?
அப்படியெனில் குழந்தை பிறந்துவிட்டதா?
பழமையார் மறுபடியும் அப்பாவாகிறார் என்று தெரியும்...'இரட்டை' வரவு என்று தெரியாது...அழைத்து நல்ல செய்தியை பகிர்கிராரா என்று பார்ப்போம்...
தென் பாண்டி
எல்லோரும் சரியாவே ஊகிச்சிக்கிட்டிருக்கீங்க !!! “பழம்பெரும் பதிவர் நம்ம பழமைபேசி அவர்கள் தான் http://maniyinpakkam.blogspot.com/2009/05/blog-post_12.htmlஅவருக்கு இன்று காலை இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.. தாயும், சேய்களும், புது அக்காவும் நலமே..
// ஆகாய நதி said...
பதிவர் பழமைபேசிக்கு இரட்டைக் குழந்தையா? நான் கூறியது சரியா?
அப்படியெனில் குழந்தை பிறந்துவிட்டதா?
//
நீங்க சொன்னது கரெக்ட்தான்.. ஆனால் கேள்வி “குழந்தைகள் பிறந்து விட்டனவா?” என்று பன்மையில் கேட்டிருக்க வேண்டும்..
இந்த மாதிரியெல்லாம் தமிழ்ல தப்பு பண்ணீனா, பழமைபேசி ஐயாவுக்கு சினம் வரலாம்.. (ஆனா.. இப்ப கண்டுக்க மாட்டாருங்க !!)
//அழைத்து நல்ல செய்தியை பகிர்கிராரா என்று பார்ப்போம்...
//
வெற்றி தென்பாண்டி ஐயா.. நல்ல சேதி தான் காற்றிலேயே வந்திட்டுதே.. அப்புறம் என்ன அவர் வேற அழைத்துச் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க? சும்மா நீங்களே கூப்பிட்டு வாழ்த்திடுங்க...
இல்லேன்னா உங்க தொலைபேசி சொல்லுங்க .. குழந்தைகளுக்குத் தாய்மாமன் முறையில் நான் கூப்பிட்டுச் சொல்லிடறேன்.. சம்மதம்தானே !!!
அன்புடன்
சீமாச்சு..
வாழ்த்துக்கள் பழமையார்.
பழைமைக்கு இரட்டை வாழ்த்துகள். என்ன பேரு வச்சிருக்காருங்க?
என் சார்பா வாழ்த்த அவருக்கிட்ட சொல்லிடுங்க.
\\இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன\\ சினேகா படத்த பார்த்தப்பவே நினைச்சேன். :-))
ரெட்டை வாழ்த்து(க்)கள்.
இஃகி இஃகி!!
இனி அவரு இப்படித்தான் ரெண்டு குழந்தைகளையும் பார்த்து சிரிக்கணுமா
ரைட்டு!
வாழ்த்துக்கள் பழமைபேசி :)
இரட்டை வாழ்த்துக்கள் :)
வாழ்த்துகள் பழமைபேசி.
பழமைபேசிக்கு ஏற்கனவே செந்தழல் ரவி வாழ்த்து தெரிவித்து பதிவு போட்டிருக்கிறார்.
தகவலுக்கு நன்றி.அவரைப் போய்க் கண்டுகிட்டு வருகிறேன்.
இஃகி இஃகி இஃகி இஃகி:-))))
Post a Comment