Saturday, June 27, 2009

81. பைத்தியக்காரன்..சாரு நிவேதிதா..ஜெயமோகன்..

இன்னிக்குப் பொழுது போகாமல் பதிவர் பைத்தியக்காரன் அவர்களின் ”சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்” என்ற பதிவுக்குப் போய்விட்டேன்.

முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது. சாரு பதிவு போட்ட மறுநாளே தலைவர் போட்டுவிட்டதால் எதையுமே refer பண்ணி எழுதின மாதிரி தெரியவில்லை.

தலைவர் மனதிலிருந்து அப்படியே கொட்டியிருக்கிறார். எவ்வளவு விஷயங்கள் மனதில் வைத்திருக்கிறார். எல்லாமே ச்சின்னச்சின்ன சண்டைகள்..பூசல்கள்.. மற்றும் நிகழ்ச்சிகள்.

தேதி வாரியாக “நீ இப்படி எழுதினே”..”அவர் இப்படி எழுதினார்” என்று ச்சும்மா புட்டுப்புட்டு வைக்கிறார்.

இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதென்றால் உண்மையிலேயெ பெரீய்ய்ய ஆள்தான். அவசியம் சந்திக்க வேண்டும். ஆனால் சிறு பத்திரிகைகளோ இலக்கியங்களோ நமக்கு அவ்வளவு பழக்கமில்லை. அதிகம் படித்ததில்லை.

சினிமா பத்திப் பேசலாம் என்றால் நம்ம ரேஞ்சே தனிதான்.. அதிக பட்சம் சிவாஜி, பசங்க, சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும் பேசலாம்.. மத்தபடி “கிம் கி டுக்” எல்லாம் நமக்குத் தெரியாது.. முடிஞ்சால் சந்திச்சுப்பார்ப்போம்.. பேச விஷயமா கிடைக்காது..



இவர் இப்படி எழுதியிருக்கிறாரே.. சாரு அப்படி என்னதான் எழுதியிருக்கார் அதையும்தான் பார்த்திடுவோமே என்று அங்கு போனால் அது பெரிய குப்பையாக இருந்தது...

தொடர்ந்து ஜெயமோகனையும் படித்தேன். ஜெயமோகனை எனக்கு மரத்தடி குழும நாட்களிலிருந்து தான் தெரியும். அங்கு அப்பொழுது குழுவினரின் கேள்விகளுக்கு ஜெயமோகனிடமிருந்து பதில் கேட்டுப் போட்டார்கள்.

அவர் பதில்களை அப்பத்தான் படித்தேன். நான் ஏதோ “அரசு பதில்கள்” லெவலுக்கு 2 வரி எழுதியிருப்பார்னு நெனச்சேன். மனிதர் ஒவ்வொரு கேள்விக்கும் 5 பக்கம் விரிவான பதில் எழுதியிருந்தார். ஒவ்வொரு பதிலிலும் ஒரு சின்சியாரிட்டி தெரிந்தது. அது முதல் ஜெயமோகன் பத்திகள் படித்திருக்கிறேன். நல்லா எழுதுகிறார் என்ற அபிப்பிராயம் இருந்ததால் அவ்வப்போது படிக்கிறதுண்டு..


இப்போ இவங்க ரெண்டு பேர் போடும் சண்டையைப் படிச்சால் குப்பத்து சண்டையை விடக் கேவலமாக இருக்கிறது. படிக்கும் போதே ஒரு அருவருப்பு வந்து விடுகிறது. “இவனுங்களுக்கு எழுத வேற விஷயமே கிடைக்கலையா? அல்லது விஷயஞானம் இல்லியா” என்கிற சந்தேகம் வந்திடிச்சி. .. இப்படி குப்பையை எழுதிக் கொண்டிருப்பதற்கு இவங்க பேசாமல் எங்கியாவது வேற வேலைக்குப் போகலாம்..


நானெல்லாம் பெரிய்ய இலக்கியவாதியெல்லாம் கிடையாது. எங்கியாவது நல்ல மேட்டர் இருந்தால் தேடிப்படிக்கும் ஒரு சராசரிக்குக் கீழான வாசகன். வீட்டுல மட்டும் நம்ம கலெக்‌ஷன்ல ஒரு ஆயிரம் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கு.. அப்பப்ப படிப்பதுண்டு.. வருஷா வருஷம் இந்தியா போகும்போது குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்காவது புத்தகம் வாங்கி வருவதுண்டு.. எதையாவது படிச்சால் ஏதாவது புதுசாத் தெரிஞ்சுக்கலாமா அப்படீன்னு மட்டும் தான் நினைப்பதுண்டு.. இன்னிக்கு இந்தக் குப்பைகளைப் படிச்சி மனசு குப்பையானது நான் மிச்சம்.


கன்னா பின்னான்னு திட்டத் தோணுது.. நாகரீகம் தடுக்கிறது.. இவனுங்க தான் எழுத்தாளர்கள் ..இவனுங்க எழுதுவதுதான் இலக்கியம் அப்ப்டீன்னு சொன்னா அதெல்லாம் எனக்குத் தேவையில்லை-ன்னு முடிவுக்கு வந்தாச்சி.. இதை ஒரு தனிப்பட்ட ஒரு சீமாச்சுவின் எண்ணமாகப் பார்க்காமல் ஒரு சராசரி வலை வாசகனின் எண்ணமாகப் பாருங்க..


இவங்களையெல்லாம் இனி ஜென்மத்துக்கும் படிக்கப் போறதில்லை.. வேற ஏதாவது உருப்படியாச் செய்யலாம் அப்படீன்னு முடிவுக்கு வந்தாச்சி..


குப்பைகள் !!!!


பி.கு: பதிவில் இருவரைக் குறிப்பிடும் போதும் விகுதிகள் மரியாதை குறைந்து விழுந்துள்ளன. அது என் தார்மீகக் கோபத்தில் வந்தது தான்.. ”அது எப்படி எழுதலாம்” என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை..

பி.கு: சாரு பத்தி எழுதும்போது சினேகா போட்டா போடாவிட்டால் எப்படி?

14 comments:

நிலாரசிகன் said...

தலைப்பை கண்டு வந்து ஏமாந்தவர்களின் முதலாமவன்.:)

ஆயில்யன் said...

//பி.கு: சாரு பத்தி எழுதும்போது சினேகா போட்டா போடாவிட்டால் எப்படி? //

இது ரொம்ப பழைய படம் இப்படி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன் :)))))))))))))

பழமைபேசி said...

ச்சே, நாந்தான் மு.வ அவர்களோட எழுத்தை ரெண்டொரு நாட்களுக்கு முன்னமே இடுகையா இட்டனே? அதற்குப் பின்பும் உங்களுக்கு இவ்வளவு துணிகரம் எதுக்குங்க தலை?

பழமைபேசி said...

தலைப்பு... இஃகிஃகி!!

சென்ஷி said...

பயங்கர நுண்ணரசியல்வாதியா இருக்கீங்களே :)

உண்மைத்தமிழன் said...

முழுவதையும் படிச்ச பின்னாடி ஒரு சந்தேகம் தானா வருது..?

சாருவுக்கும், சினேகாவுக்கும் என்ன ஸார் சம்பந்தம்..?

பழமைபேசி said...

//இந்தியா போகும்போது குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்காவது புத்தகம் வாங்கி வருவதுண்டு.. //

சொல்ல மறந்துட்டேன்! ரொம்ப வருத்தப்படாதீங்க...அதான் நாங்க ஓசி எடுத்துட்டு வந்து படிக்கிறம்ல?

Anonymous said...

நமக்கு நடுவே பல அரசியல் மனக் கவலைகள் வீட்டுக் கவலைகள் என்று இருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல பொழுதுபோக்காகவும் விலா நோகச் சிரிக்கும் விதமாகவும் உள்ள இந்த இருவர் சண்டையை மனப் பூர்வமாக வரவேற்போம்...
அரங்க. கந்தசாமி

அபி அப்பா said...

அண்ணா தலைப்ப்பு சூப்பர். கண்டிப்பா சூடாகிடும். பைத்தியகாரனுக்கு ஜ்யோவ்ராம் சுந்தர் பதில் பதிவு பார்க்கவும். அதும் நல்ல சூடா இருக்கு. நல்ல பொழுது போக்கா இருக்கு.

அபி அப்பா said...

உனா தானாவுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும். சாருவுக்கும் சினேகாவுக்கும் என்ன சம்மந்தம்:-))

சீமாச்சு.. said...

//பைத்தியகாரனுக்கு ஜ்யோவ்ராம் சுந்தர் பதில் பதிவு பார்க்கவும்//

அபிஅப்பா, ஒரு சார்பா விவாதம் நடக்கும் போது சுவாரசியம் தெரிவதில்லை. சுந்தர் தான் சாருவின் விசிறி என்று தெரிந்த பின்னார் அவர் என்ன எழுதினார் என்று ஊகிக்க முடியாதா?

சாரு எழுதியது பெரிய்ய குப்பை.. அதை எழுதுவதற்கு பதில் அந்த ஆளு வேற நல்ல தலைப்புல நல்ல விஷயங்கள் எழுதியிருக்கலாம்...

அந்த எழுத்தை மனசாட்சியில்லாமல் ஆதரிக்கும் சுந்தரை என்ன சொல்வதென்று தெரியவில்லை

சீமாச்சு.. said...

//இது ரொம்ப பழைய படம் இப்படி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன் :)))))))))))))
//

ஆயில்யன் இது ஒண்ணும் பழைய படம் இல்லை ராஜா !! புத்தம் புதுசு. தானைத்தலைவி புன்னகை இளவரசி சினேகா ஒல்லியாக இருப்பதைப் பார்த்து பழைய படம் என்று சொல்லப்படாது...

புது படமா நினைச்சிக்கிட்டு கன்னத்துல போட்டுக்க ராஜா !!!

சீமாச்சு.. said...

//தலைப்பை கண்டு வந்து ஏமாந்தவர்களின் முதலாமவன்.:)

//
நிலா ரசிகன்.. வாங்க.. தலைப்ப்புல என்ன ஏமாற்றம்.. எல்லாம் உண்மைதானே !! மூன்று பதிவர்கள் பேரு தொடர்ச்சியா இருக்கு..

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!!

கா.கி said...

சாருவை விட, அவரது அடி வருடிகளின் ஆதரவே என்னை கோபப்படுத்தும். நான் படித்த பல பதிவர்கள், சாருவின் ஆதரவாளர்களாகவே இருந்தது வருத்தமாக இருந்தது. இப்போது, உங்களையும், உங்கள் மூலமாக இன்னும் சில பேரையும், கண்டவுடன், ஆறுதலாக இருக்கிறது.