Friday, December 18, 2009

88. கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!

நம்ம தம்பி விவசாயி இளா பதிவுல போயி அவரோட ஆணிவேர் என்ற சிறுகதையைப் படிச்சேன். ரொம்ப நல்ல கதை. ஊர் பாசத்தையும் சொந்தங்களின் வலிமையையும் பத்தி அழகா எழுதியிருக்கார்.

அங்கிருந்து இந்த காசாங்காடு ஊரின் வலையகத்துக்குச் செல்ல நேர்ந்தது.. ரொம்பவே அசத்திட்டாங்க. அவங்க ஊரைப் பத்தின எல்லா விஷயங்களும்.. எல்லா விஷயங்களும்னா.. எல்லாமுமே அங்க இருக்கு.. அதுவும் அழகா வகைப்படுத்தி.. என்னமா.. அசத்தியிருக்காங்க..

இப்படியே நம்ம எல்லா கிராமங்களைப் பத்தியும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..

சில பேர் ஆர்வக்கோளாறில (MS உதயமூர்த்தி ஐயா பாணியில் சொல்லணுமா சோடா பாட்டில் உற்சாகம்) ஆரம்பிப்பாங்க. ஆரம்பத்தில இருந்த அந்த சுறுசுறுப்பு அப்புறம் குறைஞ்சுப் போயி அப்புறம் வலைப்பக்கங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது.. அது போல இல்லாமல் 2008 அக்டோபர் மாசத்துலேயிருந்து ஆரம்பிச்சி முந்தாநாள் இறந்து போன நடுத்தெரு செட்டியார் வீட்டு மாசிலாமணி ஐயா வீட்டு செய்தி வரை இணையத்துல எழுதியிருக்காங்க..படிக்கப் படிக்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அவசியமா காசாங்காடு Global Village (அப்படித்தான் சொல்றாங்க) இணையத்தளத்துக்குப் போயிப் பாருங்க. அவ்வளவு நல்லா இருக்கு.. http://www.kasangadu.com/

ஊரில் உள்ள பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், அரசு அலுவலகங்கள், திருமண மண்டபம் எல்லாம் போட்டோக்களோட போட்டிருக்காங்க..

ஊராட்சி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களெல்லாம் இருக்கு. போக்குவரத்து வசதிகள், ஊரில் உள்ள வீட்டுப் பெயர்கள் எல்லாம் இருக்கு..

டிசம்பர் மாசம் ஒண்ணாம் தேதி கிராமத்துல ஒரு தெருவுல தண்ணி வராம இருந்து மறுபடியும் சரி பண்ணினாங்களாம்.. அந்த செய்தியும் அங்க இருக்குங்க...


ஊரில் உள்ள தெருக்கள் எல்லாம் அவ்வளவு சுத்தமா இருக்கு... பள்ளிக்கூடங்களெல்லாம் அவ்வளவு அழகா இருக்கு.. இதெல்லாம் பார்க்க ஒரு மகிழ்ச்சிதான்..

ஊருக்குள்ள எவ்வளவு ஒற்றுமையிருந்தால் இவ்வளவும் நடந்திருக்கும் !!

இன்னும் பெரிய ஆச்சரியம் எதிலுமே ஊராட்சித் தலைவர் பெயரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சி பெயரும் இல்லை..

ஊருக்குள்ள அரசியல் கட்சிகளை நுழைய விடாமல் இருந்தால் ஊர் ஒற்றுமையாகவும் இருக்கும் .. ஊரும் நல்ல முன்னேற்றம் அடையும்.காசாங்காடு கிராம மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

உங்களைப் போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..

15 comments:

ஆயில்யன் said...

//காசாங்காடு கிராம மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
உங்களைப் போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..//

எஸ்! காசாங்காடுவினை -மாதிரியாக எடுத்துக்கொண்டு அனைத்து இடங்களிலும் இது போன்ற தகவல்கள் பெறும் தரும் இணைய தளங்களினை உருவாக்குதல் இனி வரும் காலங்களில் பல வித நன்மைகளினை தரும் !

Anonymous said...

காசாங்காடு வலைமனை நல்லாத்தேன் இருக்குது. இந்த படத்துல இருக்குற அம்மணி காசாங்காடுங்களா?

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு... காசாங்காடு விசிட் கிளம்பிட்டோம்... (இணையத்லதான்..)

பழமைபேசி said...

கலக்கல்.... அவ்ர்களது ஒற்றுமைக்கும் பக்குவத்திற்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்!

Matangi Mawley said...

aahaa! namma naatla ippadiyum oru gramam irukkiratha nenachchaa mika perumayaa irukku.. unga blog moolam therinthukondathil mikka makizhchchi! romba arumayaa irukku unga blog..

சீமாச்சு.. said...

//காசாங்காடு வலைமனை நல்லாத்தேன் இருக்குது. இந்த படத்துல இருக்குற அம்மணி காசாங்காடுங்களா?
//

ஆமாங்கண்ணா.. காசாங்காடு பக்கத்த்த்துல கேரளாங்கிற ஊர்லேருந்துங்ணா..

காசாங்காடு மக்களை வாழ்த்தறதுல என் கூட அவங்களும் சேர்ந்துக்கிட்டாங்கண்ணா..

சீமாச்சு.. said...

//Matangi Mawley said...
aahaa! namma naatla ippadiyum oru gramam irukkiratha nenachchaa mika perumayaa irukku.. unga blog moolam therinthukondathil mikka makizhchchi! romba arumayaa irukku unga blog.//

ரொம்ப நன்றி மாதங்கி.. காசாங்காடு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது..

சீமாச்சு.. said...

//பழமைபேசி said...
கலக்கல்.... அவ்ர்களது ஒற்றுமைக்கும் பக்குவத்திற்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்!
//


ஐயா.. வாங்க.. எப்படியிருக்காங்க பாருங்க காசாங்காட்டுக்காரவய்ங்க்க..

நாம நம்ம ஊரு கோயம்புத்தூருக்கும் இப்படி பண்ணனும்..

கபீஷ் said...

Thanks for sharing. Nice to hear.

சீமாச்சு.. said...

// கபீஷ் said...
Thanks for sharing. Nice to hear.//

வாங்க கபீஷ்.. சின்ன வயசில் காமிக்ஸ் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் குட்டிக் குரங்கு கபீஷ் தான்..

Jawahar said...
This comment has been removed by a blog administrator.
சீமாச்சு.. said...

வாங்க ஜவஹர்,
உங்கள் ஃபோன் நம்பர் இருந்ததால் உங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை..

உங்களைத் தொடர்பு கொள்கிறேன் விரைவில்..
அன்புடன்
சீமாச்சு

Kasangadu News Team said...

தங்களின் பதிவை கண்டு பெருமகிழ்வு கொண்டோம். தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

உங்கள் பதிவை செய்தி தளங்களில் குறித்துள்ளோம். நன்றி.

http://news.kasangadu.com

Sathya said...

அருமையான தகவல்.. நன்றி..

தருமி said...

காசாங்காடு பக்கம் போய் பார்த்தேன். மகிழ்ச்சி