Friday, February 09, 2007

38. பாத்துக்குங்க.. கண்ணு பட்டுவிடப் போகுது..

இந்த முறை இந்தியா போய் வந்த போது கவனிக்க நேர்ந்தது..
எல்லார் வீட்டுலயும் சகட்டு மேனிக்கு யார் கண்ணையாவது இப்படீ மாட்டி வெச்சுருக்காங்க...

அம்மா கண்ணு..

அய்யா கண்ணு.... இப்படி.. சமயத்துல பாக்கவே பயமாயிருக்குது...

முன்னாடியெல்லாம்.. ஆண்டவன் கண்ணெத் தெறக்கமாட்டானா..ன்னு தான் பாட்டியெல்லாம் புலம்பும்..

இப்பயெல்லாம்.. அவரு கண்ணத் தெறந்துட்டாரு போல இருக்கு.... 'மவனே இனிமே .. மூடினே.. உனக்கு இருக்கு...' அப்படீன்னு கண்ணை மட்டும் இப்படிப் புடிச்சுப் போட்டிருக்காங்க.. போல இருக்கு..

உலகம் என்னவோ எல்லாத் திசைகளிலும் வளந்துக் கிட்டுதான் இருக்கு.... இதுவும் ஒரு வளர்ச்சிதான் போல..

(இந்தப் படத்தில் இருப்பது.. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்த ஸ்வாமிகள் கண்கள்)

12 comments:

துளசி கோபால் said...

//எல்லார் வீட்டுலயும் சகட்டு மேனிக்கு யார் கண்ணையாவது இப்படீ மாட்டி வெச்சுருக்காங்க...//

அட! என் 'கண்'ணுலே படலையே இது(-:


ஒரு வேளை சென்னைக்கு மட்டும் 'மெட்ராஸ் ஐ' வேணுமோ என்னவொ? :-)

நாமக்கல் சிபி said...

ரொம்ப நாளா ஆளைக் காணோம்!

நலமா?

Anonymous said...

டோண்டு போயி சீமாச்சு வந்தது டும் டும் டும் டும்.
அதர் ஆப்சன் யூஸ் பண்ணிக்கலாய்க்கலாமா?
:)

சிறில் அலெக்ஸ் said...

அட நான்கூட பாத்திருக்கேன்.

முகம் முழுவதையும் வைத்தால் நல்லாயிருக்கும்.

சீமாச்சு.. said...

அன்பு சிபி,
இப்பத்தான் உங்க வாலண்டைஸ் டே கவிதை படிச்சிக்கிட்டிருந்தேன்.. அப்ப உங்க கிட்டேருந்து ஒரு கமெண்ட்...
சந்தோஷம்..
வாழ்க்க்கையில் கொஞ்சம் பிஸியாகிட்டேன்.. தனி மடலில் சொல்றேன்..
நன்றி.
அன்புடன்,
சீமாச்சு..

சீமாச்சு.. said...

எப்ப பதிவு போட்டாலும் 'சொந்த வீட்டு சீதனம் மாதிரி' துளசியக்கா கமெண்ட் கெடச்சிடுது..
நன்றி துளசியக்கா..

அன்புடன்,
சீமாச்சு..

சீமாச்சு.. said...

அன்பு அனானி நெ 1,
//டோண்டு போயி சீமாச்சு வந்தது டும் டும் டும் டும்//

என்னை டோண்டு மாமா லெவலுக்கெல்லாம் தூக்காதீங்கய்ய.. அவரெல்லாம் வலையுலக டெண்டுல்கர்.. நானெல்லாம் சும்மா...

நான் எங்கய்யா இதைத் தப்புன்னு சொன்னேன்.. தப்பில்ல்ல் ராசா.. எதுவுமே.. தப்பு இல்ல..

அன்புடன்,
சீமாச்சு.

இலவசக்கொத்தனார் said...

யார் கண்ணு பட்டு இப்படி இந்த பக்கம் காணாமலேயே போனீங்களோ!!

சமீபத்தில் இந்தியா விஜயமா?

சீமாச்சு.. said...

அன்பு கொத்தனார்..,
//யார் கண்ணு பட்டு இப்படி இந்த பக்கம் காணாமலேயே போனீங்களோ!!
//

அந்தக் கண்ணு நல்லதுதான் போல.. இந்தியாவுல மத்தவங்க படற கஷ்டமெல்லாம் பார்க்கும் போது நம்முது சுகமான சுமைகளாத் தான் தெரியுது..
//
சமீபத்தில் இந்தியா விஜயமா?
//

ரொம்ப சமீபத்துல.. வாங்கிட்டு வந்த ஸ்வீட்டு பாக்கெட் கூட பிரிக்கலேன்னாப் பாத்துக்கங்களேன்..

அன்புடன்
சீமாச்சு...

சீமாச்சு.. said...

அன்பு சிறில்,
//
அட நான்கூட பாத்திருக்கேன்.

முகம் முழுவதையும் வைத்தால் நல்லாயிருக்கும். //

முகம் முழுவதும் தனியாவும் வெச்சுருக்காங்க.. இப்ப இதுவும் ஒரு ஃபேஷனாத் தான் இருக்கு.. ஒரு வீட்டுல சும்மா ஏழெட்டு மாட்டி வெச்சுருந்தாங்க..

'தம்பீ.. வீட்டுக்கு வரவங்க ஒரு கிஃப்டாத் தர்றாங்க.. தூக்கிப் போட முடியறதுல்ல தம்பீ..'
அப்படீன்னு அவர் பதில்..

அன்புடன்,
சீமாச்சு...

வடுவூர் குமார் said...

நீங்க போட்டிருக்கிற படமே ஒரு வழி பண்ணுகிறது.

அபி அப்பா said...

சீமாச்சு, உங்கள பாத்துதான் நா வலைப்பூவுக்கு வந்தேன். நீங்க ஜூட் விட்டுட்டீங்க!! உங்க கிட்யிருந்து ஒரு "தன்னம்பிக்கை" பதிவு எதிபார்க்கிறேன். அதாங்க "அண்ணா சார்" பற்றிய பதிவு.