Friday, February 24, 2006

16. இந்தியாவுக்குத் தேவை - கட்டுமான விஷயங்களும் தான்...

தேர்தல் கமிஷனில் வாக்காளர் அடையாள அட்டைக்குப் போட்டோ எடுக்கிறார்களாம். ஒரு ச்சின்னப் பையன் ஒரு டிஜிட்டல் காமிராவை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் பிலிம் காட்டுகிறான் பாருங்கள்... அவர் பின்னால் 4-5 IAS Officers வேறு.

இப்படி க்குட்டியூண்டு கேமராவை வைத்து போட்டோ எடுத்து.. அதைத் தனியாக data entry செய்தால் எவ்வளவு தவறுகள் வரும்.

இங்க அமெரிக்காவில் ஒரு சாதாரண சின்ன கம்பெனியில் கூட டிஜிட்டல் கேமராவைக் கம்பியூட்டரில் இணைத்து போட்டோவும் டேட்டாவும் ஒரே நேரத்தில் பிடித்து அதையும் ஒருவர் வசதியாக அமர்ந்து செய்ய.. அவ்வளவு ஒன்றும் செலவாகாது..
நம்மளையெல்லாம் கேட்டால் செஞ்சுத் தரமாட்டோமா...?
இவ்வளவு பொறுப்பான அதிகாரிங்களெல்லாம் இருக்காங்க..
ஏன் நம்மளை மாதிரி அக்கறை கொண்ட இந்திய இளைஞர்களின் உதவியெல்லாம் பெற்றுக்கொள்ள ஒரு முனைப்பும் காட்ட மாட்டேங்கறாங்க..

இந்த்ப் பையன் இந்தக் கேமராவை வெச்சு எல்லோரையும் என்னிக்குப் போட்டோ புடிச்சு.. எப்பத் தப்பும் தவறுமில்லாத வாக்காளர் லிஸ்ட் தயாரிச்சு.. என்னிக்குத் தேர்தல் நடத்தி..

ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

15. ச்சின்ன வயசில நான் எப்படி இருந்திருக்கேன்..!இந்தப் பழையப் பெட்டியைத் துழாவுவது என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான்..
பெட்டியைக் குடைந்தபோது இந்த பழைய ஹால் டிக்கெட் போட்டோவுடன் கிடைத்தது..
1987-ல் GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வு எழுத விண்ணப்பித்தது. சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி தான் தேர்வு மையம். M.Sc Maths படித்து முடித்து... GATE எழுதி IIT Kharagpurல் M.Tech (Computer Science) படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து அது ஆயிற்று 18 வருடங்கள்...
முடியைக் கொடுத்து அனுபவம் பெற்றாயிற்று..

இந்த முடிக்காகத்தான்.. வெட்டவேண்டுமேயென்று NCC-யில் சேர மறுத்தேன். இப்ப தோணுது.. NCC யில் சேர்ந்திருக்கலாமோ-யென்று...

14. நட்புன்னா.. இது தான்யா.. இதேதான்யா


நட்புக்கு இது இன்னொரு இலக்கணம். என் மகள் சூப்பர் டூப்பரின் இன்னொரு கதை.. (வாரம் ஒரு கதை தான் .. பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் எழுத வேண்டும்).. சுடச்சுட.. நேற்று இரவு எழுதியது...

There were four dogs. Their names were Dale, Dill, Phil and Lil. They were friends.

One day Dale got sick.

Dale Asked Phil, "Can you buy some medicine, so I can get better before I enter the dog show?"

Phil said, "Okay."

So Phil went to CVS. He barked until the shopkeeper said, "OK. I'll give you some medicine." and she gave it to Phile.

Phil took the medicine to Dale in his dog house where everybody was standing around him.

Dale took the medicine and felt better. Lil and Dill felt happy. When Dale was better they all celebrated.

The next day Dale won first place.

Dale said, "Thank you Phil."

Phil said, "You're welcome. That's what friends are for."

Afterwards Dale put his medal with other medals.

இப்படித்தான் இருக்க வேண்டும் நட்பென்பது.

"கேட்டினும் உண்டோர் உறுது கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்"

தொடர்ந்து என் மகள் எழுதும் கதைகளைப் படித்து பின்னூட்டமும் வாழ்த்துகளும், தனிமடல்களும் இடும் என் நட்பு வட்டத்திற்கு நன்றிகள்.

ஒவ்வொரு பின்னூட்டமும் அவளுக்குப் படித்துக் காட்டப்படுகிறது..அவளுக்கு மிக்க மகிழ்ச்சி.இப்பொழுதெல்லாம் கதை எழுதத் தொடங்கும் போதே நிறைய சிந்திக்கத் தொடங்குகிறாள். எல்லாம் நட்பு நெஞ்சங்களின் ஊக்கமும் ஒரு பெரிய காரணம்..

குறிப்பாக வலைபதிவர் ஷண்முகியின் வாழ்த்துகள் அவளுக்கு மிகப்பெரிய சந்தோஷம். தன் பெயருடைய ஒருவரே வந்து வாழ்த்தியது அவளுக்கு மகிழ்ச்சி.

எனக்கு எங்கள் ஊர் வாசன் பிள்ளை இப்படியொரு நண்பர்.. இது போல் என் மகளுக்கு ஒரு ஷண்முகியக்கா...

Tuesday, February 21, 2006

13. நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு ச்சின்னஞ்சிறுகதை...

படத்தில் இருப்பவை இரண்டு குருவிகள். ஒன்றின் அலகில் நான்கு பலூன்கள் கட்டப்பட்டுள்ளன... இந்தப் படத்துக்கு ஒரு கதை எழுதவேண்டும்.
இவ்வலவு அருமையான கதை என் மகள் எழுதுவாள் என்பது எனக்கே ஆச்சரியமான விஷயம் தான்...

இனி கதை இங்கே.

There once was two birds. Their names were Mike and Sally.
Sally said to Mike, "Let's go to a Carnival".
They agreed.
Soon, they were at the carnival.
"There's a clown with balloons!", exclaimed Sally.
"Let's get some", said Mike.
When Mike got back with the balloons, the balloons carried him into the sky.
"Help Sally", Mike yelled.
Sally went up and popped the balloons.
Mike began to fall.
"Use your wings and fly" said Sally.
Mike and Sally flew and landed perfectly.
Then they enjoyed the Carnival rides.

---THE END---

ஆஹா.. எவ்வளவு பெரிய சுயமுன்னேற்றத் தத்துவம்..."Use your wings and fly..". ஹனுமானுக்கு, ஜாம்பவான் சொன்ன தத்துவமல்லவா இது...இதுக்கு மேல நான் சொன்னா.. என் மகளை நானே அதிகம் புகழ்வது மாதிரி ஆகிவிடும்.
Sunday, February 19, 2006

12. உங்க கிட்ட பணம் கொடுத்தா... என்ன செய்வீங்க...?

நாமெல்லாம் ஓரளவுக்குப் படிச்சவங்க தானே...
சரி. உங்க கிட்ட யாரோ ஒரு நண்பர் வந்து..."ஏலே.. குப்புசாமி..இந்தா ஒரு ஐயாயிரம் ரூபா பணம் கொஞ்சம் இருக்கு.. வெச்சுக்கோ... அப்புறம் நான் கேக்கும்போது மறக்காமல் திருப்பிக் கொடு.." ன்னு பணம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?
வாங்கி வெச்சுப்போம் தானே? எங்க..? நம்ம பர்ஸுல தானே..
ஏன் கொடுக்கிறார்.. ஏதோ ஒரு காரணம்.. நம்மகிட்ட இருந்தா ஒர் பத்திரமா இருக்கும்-னு தானே..

என்னை மாதிரி கொஞ்சம் முன் ஜாக்கிரதையுள்ள ஆளுங்க.."அண்ணே.. கொடுக்கிறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை... திருப்பிக் கேக்குறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை.. நான் கொஞ்சம் செலவாளி... சமயத்தில் செலவ்ழிஞ்சுரும்... கேக்கிறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு நாள் டயம் கொடுங்க... எடுத்து ரெடியா வெச்சிருக்கேன்.." சொல்லுவோம்... தப்பில்லை...
'சமயத்தில் என்ன செலவழியறது.... உடனே அடைக்க வேண்டிய கடன்களை அடைப்போம் தானே...

எதுவுமே தப்பில்லை...
சரி கொடுத்த அன்பரே.. ஒரு நாள் ராத்திரி 11 மணிக்கு கதவைத் தட்டி.."குப்புசாமீ..அந்தப் பணம்.. உடனே..தேவைப் படுது..அவசரமா..கம்பன் எக்ஸ்ப்ரஸ்..ல ஊருக்குப் போறேன்" -னு சொல்றாருன்னு வெச்சுக்கோங்களேன்...
என்ன சொல்வோம்...
"என்ன்ய்...யா.. இது... இப்படிப் பண்றே....கொஞ்சம் முன்னாடி சொல்லப் ப்டாதா...? நாளைக்கு பாங்க் லீவு ஆச்சே....இப்படிப் படுத்தறே..." சலிச்சுக்குவோமா..இல்லியா..?

இன்னும் கொஞ்சம்.. கூடுதலா.."உன்னையெல்லாம்..யாருய்யா..எங்கிட்ட கொடுக்கச் சொன்னது..? நான்...கேட்டேனா உன்னை..? "

சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் எரிச்ச்லும் சேருமில்லயா..? "இதுக்குத் தான் வாங்காதீங்க.. இது வேலீல போற ஓணானை..மடீல விட்டுக்கற கதை...ன்னு சொன்னேன்.. " அந்தப் பணத்தில் பட்டுப்புடவையோ.. அல்லது வீட்டுச்சாமானோ.. வாங்கிக்கிட்ட மனைவியும் ..சொல்வாங்க தானே..

கொடுக்க முடியாதுன்னு இல்லை... நம்மளை பழி சொல்லிடக்கூடாதுன்னு.. ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி... அவ்வளவுதான்...

1996-ல் எனக்கு இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டது...

மயிலாடுதுறையில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தேன்.. கொஞ்சம் பெரிய வீடு... 2 க்ரெள்ண்ட் நிலம்.. அதில் நடுநாயகமாக 2400 சதுர அடியில் வீடு..சுற்றிலும் தோட்டம்.. பெரிய காம்பவுண்ட் சுவருடன்... பெரியதாக....

உடனே குடிபுகும் எண்ணம் இல்லையாதலால்... வீட்டைஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கும் விட்டாயிற்று...

வீட்டு வாடகையை.. எப்படி.. பெறுவது...? அதற்கும் ஒரு தேவையில்லாவிடினும்... அதை ஒரு நண்பரிடம்.. (நீண்ட நாள் நண்பரெல்லாம் இல்லை.. சமீபத்திய அறிமுகம் தான்.. ஆனாலும் நேர்மையானவரென்று பட்டது.... ) சரி வாடகையை...மூர்த்தி சாரிடம் கொடுத்துடுங்க என்று.. சொல்லிவிட்டேன்...அவரும் நான் வாங்கி வைத்திருக்கிறேன்.. என்று உத்திரவாதம் தந்துவிட்டார்...

பணத்துக்கென்று உடனடி தேவையொன்றுமில்லை... நானும் அமெரிக்கா வந்துவிட்டேன்..வாழ்க்கை வழக்கமான பாதையில்...

15 மாதம் கழித்து..திரும்பி மயிலாடுதுறை சென்றேன்.... எல்லோரையும் பார்த்து விட்டு....வீட்டையும் போய்ப் பார்த்துவிட்டு.. குடியிருந்தவரிடம்.. 'என்னங்க.. வீடு நல்லாருக்கிறதா...' என்று சம்பிரதாயமாக விசாரித்தேன்..
'எல்லாம் வசதியாக இருக்கு... மாசாமாசம் வாடகையை மூர்த்தி சார் கிட்ட கொடுத்துக்கிட்டு வர்றோம்..வாங்கிகிட்டீங்க்ளா..?" -ன்னு கேட்டார்..

'இல்லங்க.... இன்னும் சாரைப் பார்க்கல.. பார்த்து வாங்கிக்கிறேன்... ஒண்ணும் ப்ரச்சினையில்லை..."

அன்றுதான் ..விமானத்தில் வந்திருந்ததால்.. ஜெட் லாக் வேறு.. தூக்கம் வேறு வரவில்லை..யாரைப் பார்க்கலாம்.. பொழுது போகும் என்று டி.வி.எஸ்..50 எடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் போது.. மூர்த்தி சார்.. பார்த்து விட்டார்...
"எப்ப வந்தீங்க தம்பி...வாங்களேன்..வீட்டுக்கு.."
பிடிவாதமாக..வீட்டுக்குள்..அழைத்துப் போய்விட்டார்...
எல்லா நலன்களும் விசாரித்த பிறகு... வீட்டு வாடகையைப் பற்றிப் பேச்சு வந்தது..
"அதெல்லாம் ஒண்ணும் அவசரத் தேவையில்லை..ஸார்.. உங்களால் முடிஞ்ச போது குடுங்க... நான் ஒரு மாசம் இங்கதான் இருக்கப் போறேன்.."

"இல்ல தம்பி... டிக்கெட் எல்லாம்.. எடுத்து வந்திருப்பீங்க.. இங்கேயும் உங்களுக்குப் பணம் தேவைப்படலாம்...வாங்கிக்குங்க...நீங்க வர்றீங்க ன்னு கேள்விப் பட்டு பேங்க் லாக்கரிலேருந்து எடுத்து வெச்சேன்..."

உள்ளே.. திரும்பி.. மனைவியிடம்.."தரணீ.. தம்பி பையை எடுத்து வா..."

உள்ளிருந்து ஒரு மஞ்சள் கலர் சங்கம் சில்க் ஹவுஸ் பை வந்தது..
'புடிங்க் தம்பி.. உங்க வாடகைப்பணம்.."

உள்ளே திறந்து பார்த்தேன்... ஒவ்வொரு மாத வாடகையும் ..குடித்தனக்காரர் தந்தது.. தனித்தனியாக.. ரப்பர் பேண்ட் போடப்பட்டிருந்தது....
அதில்..எந்த மாதத்திற்கான வாடகை.. எந்த்த் தேதியில் தந்திருந்தார்.. என்ற குறிப்பும்.. எழுதிய பேப்பர் துண்டு ஒவ்வொரு ரப்பர் பேண்டிலும் செருகியிருந்தது....

ஆச்சரியமாக இருந்தது....

"ஏன் சார்.. இதை நீங்கள்.. உங்க தேவைகளுக்குப் பயன் படுத்தியிருக்கலாமே... நான் ஒண்ணும் சொல்லியிருக்கமாட்டேனே..?"

"நமக்கு எதுக்குத் தம்பி உங்க பணம்....ஆண்டவன் நமக்கு நெறயக் கொடுத்திருக்கான்....பத்திரமா... கொடுக்கணுமேன்னு தான் பேங்க்ல...லாக்கர் ல வெச்சிருந்தேன்...."

இந்த மாதிரி ஒரு இருபது பைகள்.. அவர் லாக்கரில் எப்பொழுதும் இருக்கிறது.. சமயங்களில்.. . கூடவும்.. இருக்கும்.. எல்லாம்.. மற்றவர் பணம்... அவர் அதைத் தொடுவதில்லை.... எடுத்து தன் பேங்க் அக்கவுண்டிலும்போடுவதில்லை...

வாங்கி வைத்திருந்தால்.. எப்ப கேட்டாலும் கிடைக்கும்.. நீங்கள் கொடுத்த அதே நோட்டு.... அதே நம்பர்களுடன்...

இதைப் போல் நிறைய அதிசயங்க்ள் அவரிடம் உண்டு....
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை... ஏதாவது கேட்டால்..
"ஆண்டவன் நமக்கு..நெறய கொடுத்திருக்கான் தம்பி...."

சபலமேயிருந்ததில்லை.. அவரிடம்....

இத்தனைக்கும் அவர் .. குடும்பச் சூழ்நிலைகளால்.. அதிகம் படித்ததில்லை.... ..

Saturday, February 18, 2006

11.. அம்மா... உனக்கு இப்ப த்ருப்தியா.. சொல்லு,,,,

அம்மா....
அக்கா தங்கையுடன் சேர்ந்து மூன்று குழ்ந்தைகள். எப்பொழுதும் அம்மா கூடவே இருந்துதான் படித்தோம். அப்பா வேலையாக டில்லியில்..
வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் வருவார்..
மற்றப்டி படிக்கும் காலத்தில் எப்போதும் அம்மா.. அம்மா.. அம்மாதான்..

ஒரே பையன்.. அம்மா செல்லம் வேறு.. தட்டில் சாதம் போட்டு... கையில் விடும் அதிகப்படியான நெய்யில் .. நான் அம்மா செல்லம் என்று எனக்குத் தெரியும்..

"படிச்சு...முடிச்சு.. வேலைக்குப் போயி எனக்கு என் பையன் பட்டுப் புடவை வாங்கித் தருவான்.,.", அம்மா பெருமிதம் எப்பொழுதும் 1970களில்..
பட்டுப்புடவை.. பட்டுப்புடவை.. இது தான் அம்மாவின் கனவுகள் அப்பொழுது..

1990 களில் வீட்டில் வசதி வந்துவிட்டது... நான் சவுதி போய் சம்பாதிக்க் ஆரம்பித்து விட்டேன்.. பணவசதி சொல்லிக்கொள்ளும் படி இல்லையென்றாலும்... பஞ்சமில்லை.. ஆண்டவன் அருள்..

1991 -ல் ஒரு நாள்.. திடீரென்று.. அம்மா சொல்லிவிட்டாள்.. "நான் இனிமேல் நிதப்படிக்கு பட்டுப்புடவை தான் கட்டிக்கப் போறேன்.." தினமும் பட்டுப்புடவை.... தினமும்.. தண்ணீரில் துவைத்து ..பிழிந்து .. காயவைத்து...
பக்கத்து வீட்டுப் பெண்களின்... "பையன் வாங்கித்தரான்னு.. அந்த்ப் பட்டுப் புடவையை எப்படிப் படுத்தறா பாரு மாமி.. ட்ரை க்ளீன் பண்ணி .. அயன் பண்ணி கட்டிக்கக் கூடாதா.."... அம்மாவுக்கு அதெல்லாம் பத்திக் கவலையில்லை..... எப்போதும் போல சாதா அம்மா தான்...ஓரு கனவு நிறைவேறிய த்ருப்தி....

தொண்ணூறு இறுதியில்.. "எனக்கு பவுனில் வளையல் வாங்கிக் கொடுடா..சீனா.." கேட்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா.... 'நம்ம அம்மா தானே..' அப்புறம் செய்யலாம்னு.. ஒரு உரிமை கலந்த அலட்சியம்... கொஞ்சம் கண்டு கொள்ளவில்லை.....

கையில் நிறைய வளையல் போட்டிருந்து.. மயிலாடுதுறையில் தனியாக இருக்கும் போது யாராவது வந்து அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு எடுத்துப் போய்விட்டால்.... வளையல்போகட்டும்....அம்மாவுக்கு ஏதாவது...ஆயிடுச்சுன்னா.." என்ற ஜாக்கிரதை உணர்ச்சியும் ஒரு புறம்..

எங்களுக்கு முதல் குழந்தை பெண்மகவு (நம்ம சூப்பர் ..டூப்பர் தான்...) பிறந்த போது...நான் பிரசவ அறைக்குள்தான் இருந்தேன்.. மனைவி படும் துயரம் பார்த்டு.. அம்மாவும் என்னைப் பெற்றெடுக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருப்பாதானே.. என்று உடலெல்லாம் பதறியது..

மனைவிக்காவது.. அமெரிக்காவில் உள்ள பெரிய மருத்துவமனை..... நான்.. ஏதோவொரு வீட்டு நடுக்கூடத்தில் தான் பிறந்தேன்.. அப்பொழுதெல்லாம்.. பெயின் கில்லர்கள் கூடக் கிடையாது...'பொறக்கும் போதே.. உனக்குத் தலை கொஞ்சம் பெரிசுரா.... நீ ஒரு மண்டை பெருத்த மகாதேவன்...டா.." அம்மா சொல்வதுண்டு...

"என்னைப் பெக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருக்கியாம்மா.. " என் நெஞ்சு விம்மியது... உடனே..நகைக் கடைக்குப் போய்.. 1 டஜன் வளையல்கள் அம்மாவிற்கு... 24 பவுன்..அம்மாவிற்குக் கொடுத்தவுடன்.. பெருமை பிடிபடவில்லை.. அம்மாவிற்கு.... இதை இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்..


கடைசி நாட்களில்.. அம்மாவிற்கென்று தேவைகள் அதிகம் இருக்கவில்லை...

அம்மா கையால் நிறைய தான தருமங்கள் செய்ய வைத்தாகிவிட்டது.. அப்பாவுடன் தனியாக இருக்க ஆரம்பித்ததால்... அம்மாவுக்கு நிறைய நேரம் மிச்சப்பட்டது.. 'வாயில்லா ஜீவன்கள்.. " என்று பசுமாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்ள்... வீட்டில் பசுக்கள் கிடையாது.. தெருவில் வரும் பசுக்கள் தான்.. அவைகளிடம் நிறையப் பேசுவாள்... அகத்திக்கீரை கட்டு கட்டாகக் கொடுப்பாள்.. வாசலில்வரும் ஆடு மாடுகளுக்கெனெ.. ஏதாவது எப்பொழுதும் சாப்பிட வைத்திருப்பாள்.. வாசலில் வரும் பசுக்களும்.. அம்மாவுக்காக வாசல் கேட்டில்.. நின்று கொண்டிருக்கும்...

அம்மா காலமாகி வீட்டில் காரியம் நடந்து கொண்டிருக்கும் போது... அம்மா அன்பு வைத்திருந்த எல்லா ஜீவன்களும்.. வாசலில் வந்திருந்தன.. அம்மாவைக் காட்டுக்குக் கொண்டு செல்லும் போது.. ஒரு பசுமாடு....பின்னாடியே.. ரொம்ப தூரம் வந்தது..... கண்ணில் ஒரு ஏக்கம் தெரிந்தது...கலங்கியேப் போய்விட்டேன்..

வீட்டுப் பக்கத்தில் வதான்யேஸ்வரர் கோயிலில் ஏழெட்டுப் பசுக்கள் உண்டு.. பக்தர்கள் கோவிலுக்கு நேர்ந்துவிட்டவை...அவை தரும் பாலில் கோவிலில் அபிஷேகம் நடக்கும்.. அவைகளுக்குக்கென்று கோவில் ப்ரகாரத்தில் நிழல் த்ரும் இட்மோ.. ப்ராமரிக்கக் கட்டுமானங்களோ இன்னும் வந்திருக்க்கவில்லை..

சென்ற நவம்பர் 7, 2005ல்.. அம்மா நினைவு நாளில்.. அம்மா பெயரில்.. கோவிலில் ஒரு பசுமடம் (கோசாலை) கட்டி.. அப்பா கையால்.. திறந்து வைத்தேன்.. பத்து முதல் பதினைந்து பசுக்கள் தாராளமாகக் கட்டலாம்.. அவை நீரருந்த தண்ணீர்த்தொட்டி.. தண்ணீர்த்தொட்டிக்கு நீர் பிடிக்க மோட்டார் வசதிகள்.... பசுக்களைக் குளிப்பாட்ட வசதிகள்....பராமரிப்புச் செலவுகளுக்கு மாதாமாதம் பண வசதி...பக்தர்களுக்கு பசுவின் பெருமை தெரிய முகப்பில் காமதேனு ஓவியம்...பக்தர்கள் வந்து பசுக்களுக்கு கீரை கொடுத்து தொட்டுச் செல்ல வசதிகள்..

கோவிலுக்கு வரும் பக்தர்கள்.. பசுக்களுக்கு அகத்திக்கீரை வாங்கித்தர வசதியாக்... வாசலில் அர்ச்ச்னை தட்டு விக்கும் பாட்டியிடம் தனியாக பணம் தந்து.."பாட்டி.. எப்பவும் ஒரு 25 கட்டு அகத்திக்கீரை கட்டு வெச்சிருக்கணும்..இந்த பணத்தை வெச்சி முதல்ல வாங்கிப்போடு.." என்று சொல்லி வைத்தோம்...

எல்லாம் பார்த்துப் பார்த்து.. என் அருமை அண்ணன் (என் உடன் பிறக்காவிட்டாலும்... எங்கள் வீட்டுத் தலைமகன்... நான் தெயவத்துக்குச் சம்மாக மதிக்கும் ஒரு அதிசயப் பிறவி.. இவரைப்பற்றி நிறைய எழுதணும்..) ..ஆலோசனையில்.. எல்லாம் பாத்து..ப்பாத்து.. செய்திருக்கிறோம்..

அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.. அம்மாவுக்குப் பிடித்த ஒரு விஷய்ம்...

எல்லாப் பசுக்களும் ஒரு வகையில் அம்மா தான்...


அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே.....

இது முடிவல்ல இன்னொரு ஆரம்பம் தான்... உன் தயவில்.. உன் அருளில்.. அண்ணனும்.. அப்பாவும்.. நம் குடும்பமும் அருகிருக்க.. இன்னும் நிறைய செய்வோம்.... எல்லோருக்கும் செய்வோம்...

Thursday, February 16, 2006

நண்பனே.. எனது உயிர் நண்பனே

10. நண்பனே.. எனது உயிர் நண்பனே - சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதைஎன் மகள் a.k.a சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதை. இந்தப் படத்தில் இரண்டு கோழிகள் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கோழி மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றன்.. ஒரு கோழியின் பெயர் டீனா...இன்னொன்று டயானா...சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.. ஆம் அமெரிக்க வெள்ளைக் கோழிகள்..அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கின்றன்? தொடர்ந்து படியுங்கள்.. கோழிகளுக்குத் தமிழ் தெரியாத்தால்....கதை...ஆங்கிலத்தில்..

There were two friends.
They were hens and lived on Kevin's farm.

Their names were Tina and Diana.
Diana said to Tina, "let's escape from the farm".

Tina said, "OK... let's leave"
The next morning the hens left. On their way, they found a cottage.They found blankets and sofas.They found other stuff too.

They sat in the couches in front of the fireplace with blankets.

They discovered they didnt have wood to light fire in the fire place.
So they went to the woods.

There they found out there wasnt an axe to chop wood.

So Tina used her sharp beek and made an ax out of wood.
After they chopped wood and came back,

Tina said "Its CLUCK.. I mean warm in here".

They both laughed and went to sleep on the couches in the little cottage.

THE END


எப்படி இருக்கு இந்தக் கதை...

Sunday, February 12, 2006

09. படம் பார்த்து கதை சொல்லு...மேலே உள்ள படம் புரிகிறதா? நான்கு எறும்புகள் உணவை எடுத்துக்கொண்டு வரிசையாகச் செல்கின்றன். என் மகள் (இரண்டாம் வகுப்பு) வகுப்பில் இந்தப் படத்திற்கு ஒரு கதை எழுதச் சொல்லியிருந்தார்கள்..
கதைக்கு முன்... இது அவளது சொந்தக் கற்பனை. நாங்கள் யாரும் அவள் கற்பனைக்கு உதவவில்லை...
அந்த எறும்புகளுக்கு.. சில்வியா, ப்ரியன்னா, ஜாஷ், சாம் என்று பெயர் வைத்துள்ளார்.. நல்ல இந்தியப் பெயர்களாக.. கவிதா, வினிதா, குமுதா, நர்மதா என்று வைத்திருக்கலாம்.. பரவாயில்லை...
அவள் வகுப்பிலேயே..அவள் கதை மட்டும் தான் எல்லோருக்கும் படிக்கப் பட்டு..."க்ரேட்.. சூப்பர் டூப்பர்.." என்று குறிக்கப் பட்டுள்ளது...

இப்பொழுது கதை ஆங்கிலத்தில்....

There was once a batch of ants. Their names are Silvia, Brenna, Josh and Sam.

Silvia said "Let's hunt for food".
So they went hunting for food. Soon they reached a zoo.

There they saw a cockroach named Simba.
Simba was guarding a pile of acorns. The ants said they wanted some acorns

Simba said "You need a magic word for taking the acorns".
So they went to Mario, Simba's friend. They asked him the magic word.

Mario said, "The magic word is Abracadabracazzoo".
"Thanks", said Brenna.
The ants went back to the zoo.
They said, "We know the magic words. They are Abracadabracazzoo.."
said Brenna.
Simba said,"Take as many acorns as you want."
The ants took some and went home.
The ants went home and had a party

THE END

எப்படி இந்தக் கதை...
அடுத்த SuperDuper கதை இன்னும் சில நாட்களில்...

Tuesday, February 07, 2006

தேர்தலில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் !!

இன்றைய தினமலரிலிருந்து....

தேர்தலில் போட்டியிட தியாகிகள் சங்கம் முடிவு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட நெல்லை மாவட்ட தியாகிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளில் தியாகிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காம் தியாகிகள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் முன்னாள் கலெக்டர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் வரும் 11 ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தென்காசி மலர் ஐ.டி.ஐயில் கூடுகிறது. தியாகிகள் சங்க உறுப்பினர்களும், மற்றும் காந்தீயவாதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.யாருக்காவது இந்த சங்க உறுப்பினர்களைத் தெரியுமா? என் குடும்பத்தினர் சார்பாக, அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு, என்னாலியன்ற நிதியுதவி செய்ய ஆசைப்படுகின்றேன்... அவர்களை அறிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.

நல்லவர்கள் நோக்கம் நிறைவேற ஆண்டவனை வேண்டுவோம்.