Monday, June 08, 2009

80. சூர்யா .. என்ன ஒரு பிரார்த்தனை !!

அமெரிக்காவிலிருந்து இந்தியா கிளம்பிப் போவதென்றால் ஒரு ஆறு வயசுக் குழந்தை ஆண்டவனிடம் என்ன பிரார்த்தனை செய்யும்?

மனைவி, குழந்தைகளெல்லாம் வெள்ளிக்கிழமை கிளம்பி இந்தியா போய்ச் சேர்ந்து விட்டார்கள். இன்னும் 10 வாரத்துக்கு வீட்டில் தனிமைதான். வருடா வருடம் இந்த நேரம் இப்படித்தான்.. 91 வயசு அப்பாவுக்கு பேத்திகளுடன் விளையாட மகன் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக கடந்த 9 வருடங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயும் அதிகமாக பயணிக்க மாட்டார்கள். மயிலாடுதுறையில் தாத்தாவுடன் இருப்பது மட்டுமே வேலை..


கடந்த சில மாதங்களில் இரண்டு விமான விபத்துக்கள் !! US Airways விமானம் ஒன்று பறவைகளால் சேதப்பட்டு ஹட்சன் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அது நியூ யார்க்கிலிருந்து எங்க ஊருக்கு வந்த விமானம் !!

சில தினங்களுக்கு முன் Air France விமானம் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி 228 பேர் பலியானார்கள் !!

இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் டீச்சர் குழந்தைகளிடம் பேசுவார்கள் போலிருக்கிறது.. சூர்யா படிப்பது ஒண்ணாங் கிளாஸ். அவளுக்கு இந்த விபத்துக்கள் பற்றித் தெரிந்திருக்கிறது..

ஊருக்குக் கிளம்புமுன் இதுதான் அவள் பிரார்த்தனை !!

Muthamma !! (இது வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசுவாமிக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர்)..

Muthamma !! we are travelling to India today. Please make sure no flying birds gets into our plane's engine. Dont make our plane blast midway in the air !! Please save all of us !!

என்னிடம் திரும்பி.. “Daddy, please pray for us to Muthamma !!"

அந்தச் சின்ன மனசுக்குள் எவ்வளவு பெரிய பாரம் !!! ப்ளேனில் போகும் அந்த 22 மணி நேரங்களும் இந்த பயமே அவள் மனது முழுவதும் இருந்திருக்குமோ !!

இதெல்லாம் வகுப்பில் விவாதித்தே ஆகவேண்டிய விஷயமா !!


குழந்தைகளுக்கு இதெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை !! நானெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் வானத்தில் அண்ணாந்து பார்த்துத்தான் விமானம் பார்த்திருக்கிறேன். பயணித்ததில்லை !!


15 comments:

சென்ஷி said...

:-(

சிறுகுழந்தைகளின் மனத்தில் பயத்தை விதைப்பது மிகவும் கொடியது!

//அந்தச் சின்ன மனசுக்குள் எவ்வளவு பெரிய பாரம் !!! ப்ளேனில் போகும் அந்த 22 மணி நேரங்களும் இந்த பயமே அவள் மனது முழுவதும் இருந்திருக்குமோ !!//

மிகவும் வேதனையாக இருக்கின்றது :(

ஆயில்யன் said...

//நானெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் வானத்தில் அண்ணாந்து பார்த்துத்தான் விமானம் பார்த்திருக்கிறேன். பயணித்ததில்லை !!//

நீங்களாச்சும் பரவாயில்ல நானெல்லாம் 6 வதுக்கு அப்புறம்தான் வானத்துல அண்ணாந்து,ஹெலிகாப்ப்டர்ரை பார்த்தேனாக்கும் :))

ஆயில்யன் said...

//Muthamma !! (இது வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசுவாமிக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர்)..//


எங்க வீட்ல முத்துகுமரா :)))))

பழமைபேசி said...

ஐயா, இங்கயும் அதே கதைதான்... அவ்வ்வ்வ்......

sriram said...

ஆஹா இன்னும் 10 வாரத்துக்கு bachelor ஆ? Enjoy your bachelorhood..
புது வேலை எப்படி போகுது? பேசி ரொம்ப நாள் ஆச்சு, இந்த வாரம் தொலைபேசுகிறேன்.
என்றும் அன்புடன்
Boston Sriram

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//91 வயசு அப்பாவுக்கு பேத்திகளுடன் விளையாட மகன் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக கடந்த 9 வருடங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்//

இதுவும் சமுதாயப் பணி தான் சீமாச்சு அண்ணே! வாழ்த்துக்கள்!

//இன்னும் 10 வாரத்துக்கு வீட்டில் தனிமைதான்//

கவலைப்படாதீங்க! வேலைக் கொடுக்கும் வேலை ஒன்னைக் கொடுத்துடறோம்! :)

//Muthamma !! (இது வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசுவாமிக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர்)..//

:)))
டாய் முத்தம்மா! சின்னப் பொண்ணு என்னென்னமோ நினைச்சிக்குது பாரு! ஒழுங்கு மருவாதியா அதுக்கு உற்சாகப் பயண வேடிக்கை காட்டு! இல்ல என் மயிலாரை அனுப்பி கொத்தச் சொல்வேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதெல்லாம் வகுப்பில் விவாதித்தே ஆகவேண்டிய விஷயமா !!//

வீண் அச்சம் ஏற்படுத்தாமல், நிகழ்வுகளைப் பேசுவதில் தவறில்லை! தொலைக்காட்சியைப் பார்த்து எப்படியும் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்! அதற்கு முன் ஆசிரியர் மனதை இயல்பாக்க முனையலாம்! (ஓவர் இயல்பாக்காமல், இயல்பான இயல்பாக்கம்)

ILA said...

உலக நடப்பை தெரிஞ்சிக்கிறாங்களேன்னு சந்தோசமே எனக்கு. உலகம் தெரியத் தெரிய குழந்தைத்தனம் போய்விடும்ங்கிறதுதான் கவலை. மத்தபடி நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும். 10 வாரம் ஊர் சுத்தலாங்களாண்ணா?

Seemachu said...

//:-(

சிறுகுழந்தைகளின் மனத்தில் பயத்தை விதைப்பது மிகவும் கொடியது!

//
வாங்க சென்ஷி. அதாங்க கவலையா இருக்கு.. சூர்யா அதைச் சொல்லும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி

Seemachu said...

//நீங்களாச்சும் பரவாயில்ல நானெல்லாம் 6 வதுக்கு அப்புறம்தான் வானத்துல அண்ணாந்து,ஹெலிகாப்ப்டர்ரை பார்த்தேனாக்கும் :))
//

வா ராஜா ஆயில்யா, நம்ம ஊருல அந்தக் காலத்துல ஹெலிகாப்டரும் ஏரோப்ளேனும் ஒண்ணுதான்..

நானும் ஹெலிகாப்டர் தான் பாத்திருப்பேனாக்கும்.. அப்பத்திய வயசில் எனக்கு வித்தியாசம் தெரிந்திருக்காது !!

Seemachu said...

// 10 வாரம் ஊர் சுத்தலாங்களாண்ணா?
//
இளா தம்பி .. 10 வாரம் மட்டுமா.. நம்ம தொழிலே ஊர் சுத்தறதுதானே !!

கூடிய விரைவில் நியூ ஜெர்ஸி வந்து விடுகிறேன்.. அடிக்கடி சந்திக்கலாம்

Seemachu said...

//டாய் முத்தம்மா! சின்னப் பொண்ணு என்னென்னமோ நினைச்சிக்குது பாரு! ஒழுங்கு மருவாதியா அதுக்கு உற்சாகப் பயண வேடிக்கை காட்டு! இல்ல என் மயிலாரை அனுப்பி கொத்தச் சொல்வேன்! :)
//
கேயாரெஸ்.. முத்தம்மாவை அப்படியெல்லாம் திட்டக்கூடாது.. அவரு பாவம்.. நாமளும் அப்படித் திட்ட ஆரம்பிச்சிட்டா அவர் எங்கே போவாராம்..

கண் கண்ட தெய்வமய்யா அவர்.. நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க-ன்னு நம்புகிறேன்..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Seemachu said...
கேயாரெஸ்.. முத்தம்மாவை அப்படியெல்லாம் திட்டக்கூடாது.. அவரு பாவம்.. நாமளும் அப்படித் திட்ட ஆரம்பிச்சிட்டா அவர் எங்கே போவாராம்..//

வேற எங்கே போவான்? என் கிட்ட தான் வருவான் என் முருகன்! :)

//கண் கண்ட தெய்வமய்யா அவர்.. நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க-ன்னு நம்புகிறேன்..//

அதெல்லாம் தெரியாது! அவன் கண் கண்ட நண்பன்! தோளைப் பிடிச்சி இழுத்து டாய்-ன்னு திட்டுவேன்! டாய் செல்லமுத்து! :))

ராஜா | KVR said...

//91 வயசு அப்பாவுக்கு பேத்திகளுடன் விளையாட மகன் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக கடந்த 9 வருடங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்//

சீமாச்சு சார், மாமனாருக்கும் இந்த வாய்ப்பு உண்டா?

Seemachu said...

//சீமாச்சு சார், மாமனாருக்கும் இந்த வாய்ப்பு உண்டா?
//

கேவிஆர், வாங்க.. நியாயமான கேள்வி..

மாமனாருக்கு கொஞ்சம் வயசு கம்மி. 66 தான் ஆகுது. இதுவரை நிறைய முறை அமெரிக்கா வந்து பேத்திகளுடன் விளையாடியிருக்கார்.. அவருக்கு அதிக வாய்ப்புக்கள் தந்துள்ளேன்.

நானும் 3 பொண்ணு பெத்திருக்கேன். மாமனாருக்கான உரிமையை மறுப்பது எனக்கு ஒப்புமையில்லை..

அவருக்கு நிபந்தனையற்ற உரிமைகள் நிறைய தந்துள்ளேன்..

சிந்தனையைத் தூண்டியதற்கு நன்றி..