Tuesday, February 16, 2010

90. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு

சமீபத்தில் சக பதிவர் ஜவகர்லால் மயிலாடுதுறைக்குச் சென்றிருந்தார். என் கனவுத்திட்டங்களில் ஒன்றான் யங் இந்தியாவையும், அதன் சார்பான சில செயல்பாடுகளிலும் அவ்ரை ஈடுபடுத்தி எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்குச் பல்லாற்றல் வழிகளிலே பயிற்சி தருவது குறித்து அவரை ஈடுபடுத்த வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு அவரைப் பயன்படுத்த வேண்டுமென்ற என் என்ணங்களின் முதல் படியாக அவரை மயிலாடுதுறை வரச் சொல்லியிருந்தேன்.. அவர் வருவது பற்றி முன்னரே எங்கள் பள்ளி ஆசிரியர்களிடமும், மூர்த்தி அண்ணனிடமும் சொல்லி அவரைச் சிறப்பாக கவனிக்க வைத்ததன் பயன் ஒரு அருமையான் இடுகை.. நான் படிச்ச் ஸ்கூலைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருந்தார்.. காக்கா கறியும் கருவாடும் சைவர்களும் என்று வித்தியாசமான தலைப்பிட்ட அந்த இடுகை இதோ

oOo oOo
பள்ளி நாட்களின் சோகம் என்று சொன்னால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியர் இறப்பது ஒன்று. ஜவஹர் சென்றிருந்த போது வியாழக்கிழமை அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர் ரவிக்குமார் (வயது 52) இரண்டு நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர மாரடைப்பால் மறைந்துவிட்டார்.. எங்கள் பள்ளியின் மேல்நிலை வகுப்புக்களுக்கான பொருளியல் ஆசிரியர் அவர். மாணவர்களிடையே (அதுவும் III Group மாணவர்களிடையே) நல்ல ஆசிரியர் என்று பெயரெடுப்பது ரொம்ப கடினம். பத்தாவது வகுப்பில் மார்க் குறைந்து மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களின் பெரும்பான்மையர் பொருளியல் வகுப்பில் சேருவர். அவர்களிடையே நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிலை என்பது மிகக் கடினம். அந்த மாணவர்களிடையே பாசமாகவும், ந்ல்ல ஒரு ஆசிரியராக்வும் போதித்து நல்லன்பைப் பெற்ற திரு ரவிக்குமார் இப்பொழுது எங்களிடையே இல்லை என்பது மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. அவரது ஒரே மகளுக்கு முதல் குழந்தை பிறந்து இன்றுடன் 10 நாட்கள் தான் ஆகிறது. பிறப்ப்பையும் இறப்பையும் ஒரு சேர சந்தித்த் அந்த ஆசிரியர் குடும்பம் மன நிம்மதியை விரைவில் அடைய பிரார்த்திக்கிறேன்..


பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் திரு ரவிக்குமாரின் மாணவர்கள் மிகவும் வருத்த்த்திலிருக்கிறார்கள்,. இந்த சொந்த சோகத்தையும் மீறி அவர்கள் தேர்வில் நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யவேண்டும்..



இதேபோல் 1980 ஆம் ஆண்டு நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு வேதியியல் போதித்த் திரு மஹாதேவய்யர் என்ற ஆசிரியர் கல்வியாண்டின் இடையில் டிசம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். எனக்கு ரொம்ப சோகமாக இருந்தது. அவர் இறப்பு செய்தி கேள்விப்பட்டதில் இருந்து 3 நாட்கள் அவர் வீட்டு வாசலில் தான் நாங்கள் 500 மாணவர்களும் இருந்தோம்.. அவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற போது பெய்த் மெல்லிய மழைத் தூறலில் நாங்கள் எல்லா மாணவர்களும் அவருடனேயே சென்று அவரை வழியனுப்பி வைத்தது மற்க்க முடியாதத்து..

இந்த பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருந்ததென்றால்.. நான் படித்த இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு நான் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்ட்டம் (படங்கள் ஜவஹர் பதிவில்) கட்டிக் கொடுத்த் போது கட்டடத்துக்கு பெயர் வைக்கும் நேரம் வந்த போது நான் எழுதிக்கொடுத்த பெயர் "ஸ்ரீ மஹாதேவய்யர் நினைவரங்கம்" என்பது. அந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அவரது மகனை அழைத்து கௌரவித்தது மறக்கவியலாதது. தன் கணவர் மறைந்து 22 வ்ருடங்கள் கழித்து (எல்லோரும் அவரை மறந்து விட்டார்களோயென்று நினைத்த பொழுது) அவர் பெயரில் அவர் மாணவர் ஒரு கட்டடம் திறந்து வைத்தது நினைத்து அவ்ரது மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
oOo oOo

வாலண்டைன்ஸ் நாளன்று ஒரு மயிலாடுதுறை "மாப்பிள்ளை" நண்பர் வீட்டில் பழமைபேசி ஐயாவுடன் விருந்து நடந்த்து. ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து உபசரித்த நண்பரின் குடுமப்த்தினரின் விருந்தோம்பல் மறக்க முடியாதது. நண்பர் ஒரு மருத்துவர். நரம்பியல் நிபுணர். அவரே அவர் கைப்பட சில பதார்த்தங்கள் செய்து சுடச்சுட பரிமாறினது மறக்க் முடியாத்தது..

எனக்க்கு சுரேஷ் என்ற சின்னாளப்பட்டிக்கார நண்பர் ஒருவர் உண்டு.. இரவு எத்த்னை மணிக்கு அவர் வீட்டுக் கதவு தட்டினாலும்.. அவர் கேட்கும் முதல் வார்த்தை "சாப்பிட்டியா மச்சி.. ஏதாவது சாப்பிடறியா?" என்பது தான். "பசிக்குது என்று சொல்லிவிட்டால்" உடனே அடுப்பு மூட்டி சமைத்துப் போட்டு பக்கத்தில் இருந்து பரிமாறிவிட்டுத் தான் அடுத்த காரியமே..

மயிலாடுதுறையாகட்டும், சவுதி அரேபியாவாகட்டும்.. நியூ ஜெர்ஸியோ, சார்லெட்டோ எந்த இடமாக இருந்தாலும் என்னைச் சுற்றி நல்ல நண்பர்களைத் தந்த அந்த இறைவனுக்கு நன்றி..
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு !!

20 comments:

ஆயில்யன் said...

வருத்தமான செய்தி :( (ரவிக்குமார் சார் ஹைட்டா பெரிய மீசை வைச்சுக்கிட்டு பெரும்பாலும் ஒயிட் டிரெஸ்ல வருவாங்களே அவுங்கதானே?)

ஆயில்யன் said...

//வாலண்டைன்ஸ் நாளன்று ஒரு மயிலாடுதுறை "மாப்பிள்ளை///


யார் அது யார் அது மன்னம்பந்தல் ஏரியா மாப்பிள்ளையா? :)

அப்பாவி முரு said...

//சின்னாளப்பட்டிக்கார நண்பர் ஒருவர் உண்டு//

ஒருவர் இல்லை இருவர்...

கபீஷ் said...

ஆசிரியருக்கு அஞ்சலி.:-(

ஜவஹர் அண்ணா நல்லபடியா பண்ணிடுவார்.

சின்னாளப்பட்டி அண்ணா intro கொடுத்தா நல்லாருக்கும், உங்ககூட வந்தாதான் சாப்பாடு கிடைக்கும்னா, intro வேண்டாம் :-)

நரம்பியல் டாக்டர் வீட்டு சாப்பாடு படத்துல நல்லாருந்துச்சு.(ப.பேசி உபயம்) அவியலப்பாத்து காதுல புகையாயிடுச்சு.

நீங்க நல்லவங்களா இருக்கறதால உங்களச் சுத்தியும் நல்லவங்களா இருக்காங்க. எளிதான cause and effect theory :-)

கபீஷ் said...

//தன் கணவர் மறைந்து 22 வ்ருடங்கள் கழித்து (எல்லோரும் அவரை மறந்து விட்டார்களோயென்று நினைத்த பொழுது) அவர் பெயரில் அவர் மாணவர் ஒரு கட்டடம் திறந்து வைத்தது நினைத்து அவ்ரது மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
//

ரொம்ப நல்ல காரியம். சந்தோஷமா இருக்கு.

Jawahar said...

ஐய்யா எனக்கொரு உம்ம தெரிஞ்சாகனும், எதுக்காக ஸ்னேஹா போட்டோ? (ஹி... ஹி....நல்லாத்தான் இருக்கு. இன்னும் ச்நேஹாவிலையே இருந்தா எப்டி, அதுக்கப்புறம் த்ரிஷா வந்து அப்புறம் ஸ்ரேயா வந்து இன்னைக்கு தமன்னா வந்தாச்சே... ஒரு அப்டேஷனே இல்லையா!)

http://kgjawarlal.wordpress.com

பழமைபேசி said...

ஆசிரியரை நினைச்சா வருத்தமா இருக்குங்க.... அவருக்கு எனது அஞ்சலிகள்!

//நீங்க நல்லவங்களா இருக்கறதால உங்களச் சுத்தியும் நல்லவங்களா இருக்காங்க. //

அய்ய்.... சீமாட்டி சொல்ட்டாங்க.... நான் நல்லவன், நான் நல்லவன்...

சீமாச்சு.. said...

//வருத்தமான செய்தி :( (ரவிக்குமார் சார் ஹைட்டா பெரிய மீசை வைச்சுக்கிட்டு பெரும்பாலும் ஒயிட் டிரெஸ்ல வருவாங்களே அவுங்கதானே?)//

ஆயில்ஸ் .. அவரேதான்.. முதலில் நம்ம ஸ்கூலில் P.E.T ஆக இருந்து முதுகலைப் பொருளியல் ஆசிரியரானவர்..

நல்ல நட்புடன் பேசக்கூடியவர்.. நான் எப்பொழுது சென்றாலும் பள்ளியின் வாசல் வரை வந்து வரவேற்பவர்.. இனிய ஆசிரியர்..

சீமாச்சு.. said...

//ஒருவர் இல்லை இருவர்..//

அப்பாவி முரு.. ஆமாம் நீங்களும் ச்சின்னாளப்பட்டி தானே..

மன்னிச்சுக்குங்க மறந்திடிச்சே...

சீமாச்சு.. said...

//சின்னாளப்பட்டி அண்ணா intro கொடுத்தா நல்லாருக்கும், உங்ககூட வந்தாதான் சாப்பாடு கிடைக்கும்னா, intro வேண்டாம் :-)//

கபீஷ், நிச்சயம் தருகிறேன்.. நான் கூட வரவேண்டாம்.. அவரிடம் சென்று என் பெயர் சொன்னாலே.. உங்களுக்கு நல்ல உபசரிப்பு கிடைக்கும்.. அவர் 20 ஆண்டுகால நண்பர்..

சீமாச்சு.. said...

//நீங்க நல்லவங்களா இருக்கறதால உங்களச் சுத்தியும் நல்லவங்களா இருக்காங்க. //

நான் நல்லவனாயிருக்கேன்னு மத்தவங்களை நினைக்க வைத்ததற்கே ஆண்டவனுக்கு நன்றி சொல்லியாகணுமே..

சீமாச்சு.. said...

//ஐய்யா எனக்கொரு உம்ம தெரிஞ்சாகனும், எதுக்காக ஸ்னேஹா போட்டோ? (ஹி... ஹி....நல்லாத்தான் இருக்கு. இன்னும் ச்நேஹாவிலையே இருந்தா எப்டி, அதுக்கப்புறம் த்ரிஷா வந்து அப்புறம் ஸ்ரேயா வந்து இன்னைக்கு தமன்னா வந்தாச்சே... ஒரு அப்டேஷனே இல்லையா!)//

ஐயகோ ! தமிழர்களுக்கு இனமானம் குறைந்து கொண்டு வருகிறதே..

வயதானாலும்.. சினேகா ஒரு பச்சைத் தமிழச்சியாயிற்றே..

அவரைத் தவிர்த்து மலையாள (த்ரிஷா)மங்கையரையும் குஜராத் குதிரைகளையும் (ஸ்ரியா).. பஞ்சாப் பைங்கிளிகளையும் (தமன்னா) தொடருகிறேன் என்கிறாரே.. இந்த சவகர் ஐயா..

நாங்களெல்லாம்..”உடல் மண்ணுக்கு ..உயிர் சினேகாவிற்கு “ என்ற தாரக மந்திரத்தில் வாழ்பவர்கள்.. எங்களைத் தடம் மாற்ற யாராலும் இயலாது என்று அறுதியிட்டுச் சொல்கிறேன் என்று இங்கு கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் !!

சீமாச்சு.. said...

//அய்ய்.... சீமாட்டி சொல்ட்டாங்க.... நான் நல்லவன், நான் நல்லவன்.//

வாங்க பழமைபேசி ஐயா.. நீங்க நெஜமாலுமே நல்லவர்தான்.. சீமாட்டி சொல்றதுக்கு முன்னாடி இந்த சீமாச்சுவும் சொல்லிக்கிறேன்..

Kalai said...

I am reading your blog from last week. How is your friend Gurunathan?

அரசூரான் said...

வருத்தமான செய்தி...ரவி சார் குடும்பத்தினர் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர இறவனை வேண்டுவோம். தகவலுக்கு நன்றி.

sriram said...

எனக்குக் கூட இப்படி ஒருத்தரைத் தெரியும்.

நானே அமெரிக்கா வந்த புதுசு. என்னிய நம்பி ஒரு ஜீவன் வருது, நான் வீடு பாத்து கொடுப்பேன்னு நம்பி. நான் இருப்பதோ பாஸ்டன், வீடு தேவையோ நியூ ஜெர்சில, எவ்வளவோ பண்ணிட்டோம் இதயும் பண்ணமாட்டோமான்னு கெளம்பிட்டேன் நியூ ஜெர்சிக்கு தனியா.
அப்போ ஒரு நண்பர் தானும் ஜெர்சி செல்வதாகவும் நானும் அவருடன் வரலாம்னு சொன்னார். அவர் செல்வதோ நான் சொல்லும் இந்த நபர் (இப்போ நண்பர்) வீட்டுக்கு, தயக்கத்துடனே சென்றேன். முன்ன பின்ன தெரியாத என்ன வீட்டுக்குள்ள விட்டு, ராத்திரி 12 மணிக்கு சாப்பிட்டியா, ஏதாவது செய்யவான்னு கேட்டு பின்னரே படுக்கச் சென்றார்.
மறு நாள் கார் எடுத்துக் கொண்டு என்னுடன் வந்து வீடு பாத்துக் கொடுத்தார். உட்னே கிளம்ப இருந்த என்னை தடுத்து 2 நாள் இருந்தபின்னரே கிளம்ப விட்டார். அதுவரை செம கவனிப்பு. கூட வந்த என் நண்பர் ஒரு மீட்டிங்குக்கு சென்ற போதும் நான் ஒரு புது இடத்தில் இருந்த்தாக உணரவே இல்லை.

அது மட்டுமல்லாமல் நான் செய்யும் வேலையில் ஒரு Reference கொடுத்து எங்களுக்கு Direct Client ம் கொடுத்தார். இப்போ கூட யாராவது H1B பத்தி கேட்டா என்னத்தான் கை காட்டி விடுகிறார்.

காசிக்குப் போனாலும் பாவம் விடாதுன்னு சொல்றா மாதிரி, நண்பர் சார்லட்க்கு போன பின்னரும் அவர் வீட்டுப் போயி தொந்தரவு பண்ணேன்.
ஹோட்டலில் ரூம் போட்டிருந்த என்னை கட்டாயமாக வீட்டுக்கு கூட்டிப் போய் தங்க வைத்து உபசரித்தார்.

யாரைப் பத்தி சொல்றேன்னு தெரியுதா வாசன்??



இப்போ என்ன சொல்றீங்க..??

நான் அதிர்ஷடசாலியா நீங்க அதிர்ஷடசாலியா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சீமாச்சு.. said...

//இப்போ என்ன சொல்றீங்க..??

நான் அதிர்ஷடசாலியா நீங்க அதிர்ஷடசாலியா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

வாங்க ஸ்ரீராம்.. எப்போதும் போல நீங்க தாங்க அந்த அதிர்ஷ்டசாலி.. ரொம்ப நன்றி.. நம் உறவுகள் தொடர இறைவன் அருளட்டும்.

பெருசு said...

கண்டக்டரு

சார்லோட்டுக்கு ஒரு டிக்கிட்டு போடுங்க.

அங்கிட்டு நெறய நல்லவங்க,வல்லவங்க
பெண்டு எடுங்கறவங்க இருக்கற மாதிரி தெரியுது.

சீமாச்சு.. said...

//kalaiarasi said...
I am reading your blog from last week. How is your friend Gurunathan?//
கலையரசி, வாங்க.. ரொம்ப மகிழ்ச்சி நீங்க வந்தது..

குருநாதன் நிலைமை தான் கொஞ்சம் கவலைக்கிடமாப் போயிடிச்சி.. அவருடைய blood clot ன் ஒரு பகுதி அவரது இடது தொடையில் போய்த் தங்கி, அங்கிருந்து கீழே ரத்த ஓட்டத்தை நிறுத்திவிட்டது. தொடையின் கீழிருந்து அவரது இடது காலை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

கவலையாக இருக்கிறது. அவரது இரண்டு மகள்களுக்கு தந்தையாக அவர் உயிருடன் இருப்பதே மகிழ்ச்சி என நினைத்தாலும், ஆடி ஓடி செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் முக்கியமான வயதில் காலை இழப்பது கஷ்டமாக இருக்கிறது..

இன்று பிப்ரவரி 23 அவரது பிறந்தநாள்..

Anonymous said...

மயிலாடுதுறையாகட்டும், சவுதி அரேபியாவாகட்டும்.. நியூ ஜெர்ஸியோ, சார்லெட்டோ எந்த இடமாக இருந்தாலும் என்னைச் சுற்றி நல்ல நண்பர்களைத் தந்த அந்த இறைவனுக்கு நன்றி..

Come with a bodyguard before you come to Atlanta next time!