Wednesday, October 06, 2010

105. அமைச்சரும் கலெக்டரும்

அமைச்சர் துரைமுருகன் ஒரு நேர்முகத்தில்..

'நீங்கள் எப்படியும் அன்புமணிக்கு ஸீட் கொடுப்பீர்கள் என நம்பித்தானே சட்டமன்றத்தில் ஆளும் கட்சி கொண்டுவந்த மேலவைத் தீர்மானத்தை பா.ம.க. ஆதரித்தது?''

''சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள் என்றால், அது மக்களை பாதிக்குமா... இல்லை மக்களுக்கு சாதகமான விஷயம்தானா என்பதை ஆராய்ந்துதான் ஒரு கட்சித் தலைமை முடிவெடுக்க வேண்டும். மேலவை முடிவு மக்களுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை... தன் மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்தால் சரி என ராமதாஸ் நினைப்பதை என்னவென்று சொல்வது? 'தி.மு.க. துரோகம் செய்யும் என நினைத்திருந்தால், மேலவைத் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்பே அவர்களிடம் எழுதி வாங்கி இருப்பேன்!' என ராமதாஸ் சொல்லி இருக்கிறார். மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கொடுத்தால் சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் கொண்டுவந்தாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு அவர் ஆதரிக்கத் தயாராக இருக்கிறாரா? 'தமிழகத்திலேயே கொள்கையும் லட்சியமும்கொண்ட கட்சி பா.ம.க-தான்!' என கூட்டத்துக்குக் கூட்டம் முழங்கும் ராமதாஸ், மகனுக்கு ஸீட் வாங்குவதை மட்டும்தான் கொள்கையும் லட்சியமுமாகச் சொல்கிறாரா?!''


படத்தில் இருப்பது எங்க ஊரு மயிலாடுதுறை Downtown !!




கடந்த வாரத்தில் வெளியான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்ற அறிவிப்பில் நாமக்கல் கலெக்டர் சகாயத்தின் பெயரும் இருந்தது. ஆனால், அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

சகாயத்தின் மாறுதல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கலெக்டரின் மாறுதல் உத்தரவை திரும்பப் பெறக் கோரி மாவட்டம் முழுக்கப் பொதுமக்கள் தினம் தினம் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இது ஒரு பக்கம்னா... மாவட்டம் முழுக்க இருக்கும் வி.ஏ.ஓ-க்கள், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குறதுக்கு கலெக்டர் ரொம்பவே இடையூறா இருந்தார். வி.ஏ.ஓ-க்கள் ஒன்று கூடி கலெக்டருக்கு எதிராப் போராட்டம் நடத்தினாங்க. இப்போ அதிகார மையத்துக்காரரும் இதில் சேர்ந்துக்கிட்டாரு...'' என்று சொன்னார். ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளில் இவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி முதல்வருக்கு அனுப்ப இருக்கிறார்களாம்



செய்திகள்: நன்றி ஜூனியர் விகடன்..


ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதில் உறுதியாக இருக்கும் கலெக்டர் சகாயம் அவர்களுக்கு என் ஆதரவுகள்.. நாமக்கல் மாவட்டத்தில் இந்த நேர்மையாளரின் பொறுப்புக்கள் இன்னும் தேவைப்படும் நேரத்தில் அரசியல் உள்நோக்கங்களுக்காக அவரை பொறுப்பிலிருந்து மாற்றிய தமிழக அரசை நாமக்கல் மக்கள் சார்பில் நானும் கண்டிக்கிறேன் !!






3 comments:

பழமைபேசி said...

நானும்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சீமாச்சு அண்ணா
ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும் போதெல்லாம், நாம் கண்டித்து மட்டும் விட்டு கழண்டு விடுகிறோம்! VAO-க்களுக்கு எதிரணியில் திரண்டு போராட்டம் செய்யறது எல்லாம் முடியாத காரியம்!

ஆனால் இதை அடிப்படையாக வைத்து, ஒரு சிறந்த வெளிநாட்டு ஊடகத்தில், ஒரு கட்டுரையோ, கருத்துருவாக்கமோ செய்யலாம் அல்லவா? இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு எப்படி-ன்னு அந்த இதழின் வாசகர்களும் விவாதிக்கலாம்! ஆட்சியாளர்களும் மானம் போகிறதே என்று கண் துடைப்புக்காவது, கொஞ்சம் நிறுத்தி வைப்பார்கள்! அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பதை அறிந்த அரசு! :)

சும்மா ஒரு யோசனை தான்!

Anbunesan said...

padathula irukkuradhu "Pattamangala theru" dhaana?