Thursday, April 07, 2011

116. அன்னா ஐயா, தயவு செஞ்சி சாப்பிடுங்க !!







ஊழலுக்கு எதிராக, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு, நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே, மூன்றாம் நாளான நேற்று, தனது போராட்டத்தை படுத்தபடி தொடர்ந்தார்.


ஐயா, இந்த ஊழல்வாதிகள் மிகவும் பயங்கரமானவர்கள். மனிதாபிமானமில்லாதவர்கள்.. “உண்ணாவிரதத்தை முடியுங்கள்.. நாங்கள் யோசிக்கிறோம்” அப்படீன்னென்ல்லாம் சொல்லுவாங்க.. அதுக்காக நீங்க உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டாம்.. சாகும் வரை தொடருங்கள்.

நாங்கெளெல்லாம் உங்கள் பக்கத்தில்.. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டீர்கள். இது போன்ற தொண்டுகளுக்கு இந்தியாவில் உங்களையும், எங்கள் ட்ராபிக் இராமசாமி ஐயா போன்றோரையும் விட்டால் எங்களுக்கு வேறு நல்ல தலைமை இல்லை.. எங்களுக்கு நீங்கள் அவசியம் வேண்டும்...

அதனால் நாங்களெல்லாம் கேட்கிறோம்..

“நீங்கள் இன்னும் நீண்ட நாள் உயிர் வாழவேண்டும்..

எனக்காகவாவது கொஞ்சம் சாப்பிடுங்க ஐயா !! “