ஊழலுக்கு எதிராக, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு, நாட்டின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே, மூன்றாம் நாளான நேற்று, தனது போராட்டத்தை படுத்தபடி தொடர்ந்தார்.
ஐயா, இந்த ஊழல்வாதிகள் மிகவும் பயங்கரமானவர்கள். மனிதாபிமானமில்லாதவர்கள்.. “உண்ணாவிரதத்தை முடியுங்கள்.. நாங்கள் யோசிக்கிறோம்” அப்படீன்னென்ல்லாம் சொல்லுவாங்க.. அதுக்காக நீங்க உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டாம்.. சாகும் வரை தொடருங்கள்.
நாங்கெளெல்லாம் உங்கள் பக்கத்தில்.. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டீர்கள். இது போன்ற தொண்டுகளுக்கு இந்தியாவில் உங்களையும், எங்கள் ட்ராபிக் இராமசாமி ஐயா போன்றோரையும் விட்டால் எங்களுக்கு வேறு நல்ல தலைமை இல்லை.. எங்களுக்கு நீங்கள் அவசியம் வேண்டும்...
அதனால் நாங்களெல்லாம் கேட்கிறோம்..
“நீங்கள் இன்னும் நீண்ட நாள் உயிர் வாழவேண்டும்..
எனக்காகவாவது கொஞ்சம் சாப்பிடுங்க ஐயா !! “

6 comments:
என் அன்புக் கோரிக்கையை ஏற்று தனது உண்ணாவிரத்ததை முடித்துக் கொண்ட அன்புத்தலைவர் அன்னா அவர்களுக்கு நன்றி !! நன்றி !! நன்றி !!
உங்கள் கோரிக்கைகளுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு !!!
http://www.annahazare.org/
ஒரு மாபெரும் தலைவன்
நடக்கட்டும் நடக்கட்டும்
நல்ல பதிவுங்க. அண்ணா ஹசாரேவின் படுத்திருக்கும் படத்தோடு போட்டிருக்கீங்க, அவர் தான் எழுந்தாச்சே! தெளிவான பதிவு, நன்றி.
டிராபிக் ராமசாமி மட்டுமில்லை. 5th Pillar தொடங்கிய விஜய் ஆனந்த், திருச்சி REC முன்னாள் முதல்வர் / Bharathiar Univ Former VC திரு.இளங்கோ போன்று பலரும் அரசியலில் ஆர்வமா ஊழல்/லஞ்சத்தை எதிர்த்து, மக்கள் சக்தி இயக்கத்தை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடுகிறாங்க: என் பதிவு இங்கே: http://kekkepikkuni.blogspot.com/2011/04/blog-post.html
கவலைப்படாதீங்க அண்ணே! அதான் தமிழ்நாட்டுக்கு நம்ம கலைஞர் இருக்காரே! கலைஞர் ஒரு தமிழ்நாட்டு அன்னாஹசாரே! அன்னாஹசாரே ஒரு வடநாட்டு கலைஞர்! கூல் கூல்!
Post a Comment