Tuesday, November 14, 2006

35. ஜக்கம்மா நல்ல சேதி சொல்றா.....



சாமியோவ்... அம்மோவ்..

நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..

ஊருல கூடிய சீக்கிரம் ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது..

எங்க ஊரைச் சேர்ந்த (மயிலாடுதுறை) ஒரு பிரபலமான வலைப்பதிவருக்கு

தை பிறந்தவுடன் வழி பிறக்கப் போகுதாம்...

எல்லாம் முடிவாயிடிச்சாம். ...

இனிமேல் கடற்கரையில மணலை எண்ணிக்கிட்டுத் தனியா நடக்க வேண்டாமாம்.. கூட துணைக்கு அவுங்களும் வருவாங்களாமாம்....

எங்க இயக்கக் கொள்கைப் படி வரதட்சணையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாராம்!!!



ஆண்டவன் அருளில் கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வச்சிடுவாராம்..

அய்யா... அம்மா எல்லாரும் மாயவரத்துக்கு அவசியம் வரணுமுங்கோ....


ராஜா.. என் வாழ்த்தே முதல் வாழ்த்தாக இருக்கட்டும்....
எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ செல்வ முத்துக் குமரசுவாமி அருளுவார்...

உன் மனசுக்கும்.. தர்மங்களுக்கும் பெரிய வாழ்வு கிடைக்கும் ராஜா.....

வாழ்த்துக்கள்!!!!

4 comments:

துளசி கோபால் said...

எங்க வாழ்த்து(க்)களையும் சேர்த்துக்குங்க.
எல்லாம் நல்லதே நடக்கட்டும்.

வடுவூர் குமார் said...

ராசா,இப்பதான் கல்யாணம் பண்ணுகிறீர்கள் என்பதால் என்னில் சிறியவராக இருப்பீர்கள் என்ற எண்ணத்துடன்
"எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்"
சீமாச்சு, அவர் படம் போட்டிருந்தா நல்லா இருந்திருக்குமே??

ramachandranusha(உஷா) said...

சீமாச்சு, "இவரு "கல்யாணத்துக்கு
"அவுரு" வருவாரா ;-)))))))

சீமாச்சு.. said...

அன்பு துளசி.. உங்க வாழ்த்துகள் இல்லாமயா.. அவர் கிட்ட சொல்லிட்டேன்..

வடுவூர் குமார்.. உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி... அவர் படம் போட்டிருக்கலாம் தான்.. செய்தியையே சிட்டுக்குருவி லெவல்-ல எழுதிட்டு அவர் படம் போடவேணாமேன்னுதான்...

அன்பு உஷா..
"இவுரு" கல்யாணத்துக்கு "அவுரு" வரேண்ணுதான் சொல்லியிர்க்காராம்.. நானே "இவுரு".. "அவுரோட" ச்சின்னப் பொண்ணைக் கட்டினாலும் கட்டுவாருன்னு யோசிச்சிக் கிட்டிருந்தேன்.. "இவுரு" தான் கொஞ்சம் பக்திப் பரவசத்தோட.. கோவில்பட்டி பக்கம் பாஞ்சுட்டாராம்... விபூதிப் பட்டி இல்லாம வெளியே வராதவரு கோவில்பட்டிப் பக்கம் சா(பா)ஞ்சதுல ஒண்ணும் அதிசயம் இல்லதான்..!!!

என்ன நாஞ் சொல்றது??

அன்புடன்
சீமாச்சு..