Tuesday, November 28, 2006

37. தமிழ் C தெரியுமா உங்களுக்கு...?

தேன்கூடு நடத்திய போட்டியில் நண்பர் சிறில் அலெக்ஸ் முதல் பரிசு பெற்றிருக்கிறார்..


அவர் கதையை முதல் முறை படித்துச் சிரித்து பின்னர் என் மனைவிக்கும் வாய் விட்டுப் படித்துக் காட்டினேன்.

நன்றாக வந்திருந்தது.. வாழ்த்துகள் சிறில்.

பக்கத்தில் நின்றிருந்த என் 4 வயது மகள் திடீரென்று

"Daddy.. Now I know how to put Tamil C"


4 வயசு தானே.. இப்பத்தான் 1.2..3.. 100 வரையும் .. ABCD யும் எழுதுகிறாள்..


அதற்கே தடுமாறுகிறது இதில் தமிழ் C யாம்.. "சி" எல்லாம் எப்படி போடுவாள்... எனக்கே சந்தேகம் தான்...


"எங்கே போடு பார்ப்போம்?"




என் தோளைக் கட்டிக் கொண்டு.. அவள் போட்டது..



ஆங்கில C மேலேயும் கீழேயும் வட்டங்களுடன்..



சிறிலின் பக்கத்திலுள்ள தேன் தலைப்பிலிருந்த தமிழ் இரட்டைக் கொம்பை.. அவள் தமிழ் C என்று புரிந்து கொண்டு விட்டாள்..




4 comments:

சேதுக்கரசி said...

க்யூட் :)

சீமாச்சு.. said...

நன்றி சேதுக்கரசி...
ஹை.. உங்கள் பெயரிலும் ஒரு "தமிழ் C".

உங்களைப் பற்றி மரவண்டு கணேஷ் அதிக முறை கூறியுள்ளார். பேச வேண்டும் என்று நினைத்துக் கொள்வதுதான்.. வாய்ப்புக்கள் இன்னும் வரவில்லை..

அன்புடன்,
சீமாச்சு...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிறில் செய்யும் தமிழ் C தொண்டு வாழ்க! :-)

குழந்தைக்கு வாழ்த்துக்கள்! அழகான, வித்தியாசமான நோக்கு!
இப்படி அவள் கண்டுபிடிப்பதை எல்லாம் உடனே எழுதுங்கள்!

சிறில் அலெக்ஸ் said...

உசீமாச்சு,
இப்பதாங் உங்க பதிவ பார்த்தேன்.
பாராட்டுக்கு நன்றி.

சொர்க்கங்கள் போல நாமெல்லமும் இணைஞ்சிருந்தா இன்னும் நல்லா இருக்குமில்ல?

உங்க குழந்தைக்கு (தப்பா) தமிழ் சொல்லித் தருவது நானா நீங்களா?

:)

கண்ணபிரான் தமிழ் C தொண்டா..?
கொஞ்சம் ஓவருங்க :)