வழக்கமாக நான் சென்ற எல்லா இந்திய உணவகங்களிலும் பெரும்பாலும் இந்தியாவைப் பற்றிய சுவர்ச் சித்திரங்கள் இருக்கும்.
எல்லாமே..ஒட்டகமாகவும், பாலைவனத்து காட்சிகளாகவும், ஒரு மொகலாயர் சில மாதுக்கள் புடைசூழ மது அருந்தும் காட்சிகளாகவோ இருக்கும்.
என்னடா இது... நம் நாட்டைப் பற்றிக் காட்ட இந்தச் சித்திரங்கள் தானா கிடைத்தது என்று வருத்தப் பட்டதுண்டு..
இந்த முறை இந்தியா சென்ற போது கோவை அன்னபூர்ணா உணவகத்தில் உணவருந்திய போது சுவரில் எல்லா சித்திரங்களும் நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சுட்டியதாக இருந்த்து. ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா வற்றையும் என் கேமராவில் நிரப்பிக் கொண்டேன். என் ஆர்வம் பார்த்து அந்த உணவக மேலாளர்.. மற்ற தளத்தில் இருந்த சுவர் சித்திரங்களையும் காண்பித்தார்.. வயிற்றுக்கும் மனதுக்கும் உணவளித்த கோவை அன்னபூர்ணாவுக்கு நன்றி..
நான் கண்டு களித்த சில சித்திரங்கள் உங்கள் பார்வைக்கு... இன்னும் 40 இருக்கிறது...
Tuesday, February 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
சௌக்கியமா சீமாச்சு? உங்க வலைத்தளத்துக்கு இப்ப்போதான் வருகை தரேன். ஹோட்டலில் பார்த்ததை புகைப்படம் எடுத்துஇங்கே அளிக்கவும், அடுத்தமுறை கோவைபோகிறபோது அதை எனக்கும் பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது. இது ரொம்ப வித்தியாசமான நல்ல ஏற்பாடு அல்லவா? தேசத்தலைவர்க்ளை அடையாளம் காட்டி அவர்களின் தியாகவரலாறினை குழந்தைகளுக்கு நாம் சொல்லலாம்.நன்றி தகவலுக்கு.
ஷைலஜா
நான் பல தடவை இங்க போயி சாப்பிட்டு இருக்கேன் சீமாச்சு அண்ணா. நல்ல அழகா செஞ்சு இருக்காங்க இல்லையா?!
சாப்பாட்டு தளத்தைத் தவிர மத்த இடங்களில் உள்ள படங்களைப் பார்த்தது இல்லை.
R.S. Puram Annapoorna?
அட! நல்ல சித்திரங்களா இருக்கே!
திநகர் ஜி என் (செட்டி) ரோடில் ஒரு ச்செட்டிநாட்டு உணவகம்( பேர் மீனாட்சி பவன்னு ஞாபகம்)
அங்கே மகாத்மா காந்தியின் பல படங்களைப் பார்த்தேன். உப்பு சத்தியாகிரகம், இன்னும் மற்ற
தேசத்தலைவர்களோடுன்னு அருமையா வச்சிருக்காங்க.
அன்பின் ஷைலஜா,
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றி. 2005 ஜூலையில் பங்களூரூ வந்திருந்தபோது உங்களைச் சந்திக்க நினைத்தேன். அன்று தான் நீங்கள் சென்னை சென்றதாக ஐயப்பன் சொன்னார்.
அந்த சித்திரங்களைப் பார்த்த போது ஆனந்தமாக இருந்தது. என் குழ்ந்தைகளுக்குக் காட்டுவதற்காகத்தான் படம் பிடித்தேன். நிச்சய்ம ஒருமுறையாவது அங்கு சென்று வாருங்கள்..
அன்புடன்,
சீமாச்சு...
அன்பு இ.கொ.
ஒரு நாள் நாம நியூஜெர்சியில சந்திப்போமே..
இங்க பக்கத்துல இருந்தே உங்களைப் பார்க்க முடியவில்லையே..
அன்புடன்,
சீமாச்சு
அன்பு பி.கே.எஸ் அண்ணா... கோயம்புத்தூர் காரருக்கு அட்ரஸ் சொல்லி மாளாது..ஆர். எஸ். புரம்-னு தான் நினைக்கிறேன்..
இல்லேன்னா..எங்க மாமனார் கார்ல ஏறி உக்கார்ந்து..'உங்க மாப்ளை சாப்பிட்ட அன்னபூர்ணாவுக்கு அழச்சிட்டுப் போங்க' ன்னு சொன்னா.. கார் தானாகவே அங்கே கொண்டு விட்டுவிடும்.. :)
அன்புடன்,
சீமாச்சு..
அன்பு துளசியக்கா..
இந்த மாதிரி தேசிய உணர்வுகளையும்.. எந்தவித வியாபார நோக்கமில்லாது..அளிக்கும் அன்னபூர்ணா போன்ற உணவகங்கள் என்றுமே பாராட்டுக்குரியன.
நான் ஆர்வமாக எல்லாவற்றையும் படமெடுத்து பாராட்டிவிட்டு வந்ததில் அந்த மேலாளர்/உரிமையாளருக்கு மிக மகிழ்ச்சி. இது போன்று இன்னும் பலப்பல அவர் தன் மற்ற கிளைகளிலும் செய்ய இது போன்ற பாராட்டுக்கள் உரமாக வேண்டும்.
முடிந்தால் அங்கு ஒரு முறை சென்று வாருங்கள்..
அன்புடன்
சீமாச்சு...
இந்தப்படங்கள் அன்னபூர்ணா பீப்பிள் பார்க் உண்வகத்தில்.... கோவை கோர்ட்டுக்குப் பக்கத்தில் ... உள்ளது. உரிமையாளர் திரு தாமோதரசாமி அவர்கள் ஒரு சிறு ஹோட்டல் கேண்டீனில் தனது வாழ்க்கையைத் துவக்கினார். இன்று கோவையில் பல்வேறு இடங்களில் அவரது உண்வகங்கள் உள்ளன. மிகவும் சுகாதார முறைப்படி உணவு செய்யப்படுகிறது. centralized Kitchen முதல் SAP வரை நவீனப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அவருக்கு "அமுதச் செல்வர்" என்ற பட்டமும் கோவை மக்களால் வழங்கப் பட்டது. சமீபத்தில் தான் அவர் மறைந்தார்.
அட்ரா சக்கை
---இன்னும் 40 இருக்கிறது...---
ஒவ்வொன்றாக ஆட்டத்திற்குள் இறக்கவும் : )
அட்ரா சக்கை
---இன்னும் 40 இருக்கிறது...---
ஒவ்வொன்றாக ஆட்டத்திற்குள் இறக்கவும் : )
nalla irundhadhu ..oru sila unvagangal than ippadi customer car oda nadhukaraga ..maravari ellam thutu thuttu thutt
நல்ல பதிவு .
இப்போதுதான் பார்த்தேன்.
Post a Comment