Sunday, June 03, 2007

46. எங்க ஸ்கூல் பொண்ணூ.. மாநிலத்திலேயே III Rank

நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், ஐநூறுக்கு 488 மதிப்பெண்கள் மாநிலத்திலேயே மூன்றாவதாக வந்த எங்கள் பள்ளி (மயிலாடுதுறை தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப் பள்ளி) மாணவி, ஆர்த்திக்கு தமிழ் வலையுலக மயிலாடுதுறை மாஃபியா மன்ற சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்..


ஆர்த்தியின் அம்மா எங்கள் பள்ளியில் தமிழாசிரியையாக இருக்கிறார் என்பது மற்றுமொரு பெருமைக்குரிய செய்தி...

இந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாநில அளவில் எல்லா முதன்மை இடங்களையும் பெண்கள் கைப்பற்றியிருக்க, தனியொருவனாக மூன்றாம் இடத்தில் அமர்ந்து ஆண்கள் குலத்தின் மானம் காத்த கடலூர் கார்த்திகேயனுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்..


வருடாவருடம் தவறாமல் முதன்மையாளர்கள் பட்டியலை ஆர்வமாக கவனித்து வருபவன் நான். கவனிக்கத்தக்க வகையில், இந்த வருடம் ஐநூறுக்கு 489 மதிப்பண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற இஸ்லாமிய சகோதரி ஜமீமா சுலைகா வுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.. மதக் காரணங்களை முன்னிட்டோ அல்லது குடும்பக் காரணங்களாலோ இவர் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து படித்து நல்ல நிலையில் உயர்ந்து இஸ்லாமிய சமூகத்துக்கும் நம் நாட்டுக்கும் சேவையாற்றிட என் நல்லெண்ணங்களும் நல்லாசிகளும்.4 comments:

அபி அப்பா said...

சீமாச்சு அண்ணா! எனக்கு ஒரு வியர்டு, எப்ப ரிசல்ட் வந்தாலும் முதல்ல நம்ம ஸ்கூல் வந்திருக்கான்னு பார்ப்பேன். காரணம் நாம் வளர்க்கப்பட்டது உதாரணம் காட்டப்பட்டது எல்லாமே s.s.l.cயில் ஸ்டேட் பஸ்ட் வந்த நம் சீனியர் கணபதிராமன்-461/500 அவர்களை வைத்தே! சரியா, ரொம்ப சந்தோஷமான செய்தியை பகிர்ந்துகிட்டதுக்கு சந்தோஷம் அண்ணா! நான் இப்போதே புஷ்பவள்ளி டீச்சருக்கு போன் செய்கிறேன்!

ஞாபகம் இருக்கா! நாம் படித்த காலத்தில் தான் அபிதகுஜாம்பாள் டீச்சர் வேலைக்கு சேர்ந்தார்கள்!

அது போல விஜயலெஷ்மி-ராமனாதன் ஆசிரிய தம்பதியினர் மகன் தான் சென்ற வருஷம் +2வில் மாவட்ட முதலிடம்!!!

Seemachu said...

அன்பு அபி அப்பா,
இப்பத்தான் கவனிச்சீங்களா இதை.. நான் இரண்டு நாள் முன்னாடியே பார்த்துட்டேன்.. பதிவு போட்டது இப்ப்த்தான்.

//நாம் வளர்க்கப்பட்டது உதாரணம் காட்டப்பட்டது எல்லாமே s.s.l.cயில் ஸ்டேட் பஸ்ட் வந்த நம் சீனியர் கணபதிராமன்-461/500 அவர்களை வைத்தே!//

கணபதிராமன் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்..

அவர் போல மார்க் எடுக்க வேண்டும் என்று நான் கனவுகண்டது உண்டு.. நல்ல நேரத்தில் நினைவுப் படுத்தினீர்கள்..

//அது போல விஜயலெஷ்மி-ராமனாதன் ஆசிரிய தம்பதியினர் மகன் தான் சென்ற வருஷம் +2வில் மாவட்ட முதலிடம்!!!
//

சென்ற வருடம் மாவட்ட முதலிடம் வந்தது ராமனாதன் என்ற பெயருடைய இன்னொரு ஆசிரியரின் மகன். விஜயலஷ்மி + ராமனாதன் சார் பையனும் ஒருகாலத்தில் நல்ல ரேங்க் எடுத்தார் (1990 களில்) அவர் இப்பொழுது திருமணம் முடிந்து Seattle-ல் Microsoft -ல் வேலையிலிருக்கிறார். எனக்கு அவருடன் போன் , இமயில் தொடர்புகள் உண்டு.

(எப்போ ஊருக்குப் போறீங்க? அபிபாப்பாவுக்கு தம்பி பொறந்தாச்சா? நல்ல செய்திக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்)

அன்புடன்,
சீமாச்சு

Seemachu said...

//சீமாச்சு அண்ணா! எனக்கு ஒரு வியர்டு, எப்ப ரிசல்ட் வந்தாலும் முதல்ல நம்ம ஸ்கூல் வந்திருக்கான்னு பார்ப்பேன். //

அபி அப்பா,
நானும் எப்பொழுதும் இதை எதிர்பார்ப்பேன்.. என்னைய மாதிரியே இருக்கீங்க...

இந்த வருஷம் நம்ம ஸ்கூல் பேர் பார்த்ததுமே குஷி தான்..

என்ன மூன்றாமிடத்தில் வந்தாலும் பேப்பர்ல போட்டோ வந்து.. நம்ம ஸ்கூல் பேரு வர்றது ஒரு பெருமை தானே..

அன்புடன்,
சீமாச்சு

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமில்லை உங்களுக்கும்தான். இன்னமும் இவ்வளவு ஆர்வத்தோடு படித்த பள்ளி பற்றி பேசுகிறீர்களே!!