குழந்தையின் கை விரல்களில் கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விட்ட நகங்களை கவனித்துவிட்டு அதை வாராவாரம் வெட்டிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவள் நகங்களை வெட்டிக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
"ஏண்டா, கண்ணம்மா .. நகமெல்லாம் இவ்வளவு வள்ர்ந்திருக்கே.. அம்மா கிட்ட சொல்லி வெட்டிக்கக் கூடாதா? இங்க பாரு அப்பா மேல scratch பண்ணிட்டே பாரு.. அப்பாவுக்கு வலிக்காதா?"
"சாரி டாடி.. நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அது ஒரு ஆக்ஸிடெண்ட்... "
(என் கையில் கீறியிருந்த இடத்தில் ச்சின்னதாக ஒரு முத்தம் தந்தாள்.)
"இப்ப வலிக்கலைடா செல்லமே.. இனிமேல் நகத்தை சரியாக வெட்டிக்கோ..!"
"சரி டாடி.. என் டீச்சர் Jodi .. அவங்க கையில் பெரிய பெரிய நகங்கள் வளர்த்து இருக்காங்க.."
"அப்படியா... அப்ப அவங்க.. க்ளாஸில் உன்னைத் தொடும் போது எப்பவாவது உன்னை hurt பண்ணியிருக்காங்களா?"
(தகப்பனுக்கான ஜாக்கிரதை உணர்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது.. இதற்கு என் மகள் தந்த பதில் தான் என்னை யோசிக்க வைத்து விட்டது.. அவள் பதில் அவள் வார்த்தைகளிலேயே.. )
She is my TEACHER daddy... How can she HURT ME?
"She is my TEACHER" என்ற இடத்தில் ஒரு பெருமையின் பிரதிபலிப்பு... "How can she HURT me?" என்ற இடத்தில் நிச்சயமாக என் ஆசிரியர் என்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு அதீதமான நம்பிக்கை என்னை ஆச்சர்யப் படுத்தியது..
நாமெல்லாம் வளர்ந்த பொழுது "ஏதாவது விஷமம் பண்ணினால் .. வாத்யார் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்வேன்" என்று சொல்லித்தான் வளர்க்கப் பட்டோம். ஆசிரியர் என்பவரே ரொம்பக் கண்டிப்பானவர் என்று உருவகிக்கப் பட்டுத் தான் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் பட்டது.
இங்கு அமெரிக்காவில் என் மகள் படிக்கும் பொழுது அவளின் வார்த்தை ஒரு பெரிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்து விட்டது... என்றாவது நம் சமூகம் இது போன்ற அன்பான பாதுகாப்பான சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்பதற்கான சூழ்நிலைகள் நம் நாட்டில் தோன்றுமா?
இதற்கு நடுவில் "எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியரின் செக்ஸ் குறும்பு" போன்ற ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் டைப் தலைப்புக்கள் வந்து ... நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது..
எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?
9 comments:
//நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது.. எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?//
சீமாச்சு
நல்ல கேள்வி. பதில் தான் இல்லை.
ஆசிரியர் தந்தை போன்றவர். ஆனால் சில குடும்பங்களில் தந்தையே மகளை பலாத்காரம் செய்வது எல்லாம் நடக்கிறதல்லவா? அது மாதிரி முறைகெட்ட செய்கைதான் இங்கேயும் நடக்கிறது.
ஆசிரியருக்கு எதிக்ஸ் பயிற்சி கொடுப்பது, சகட்டுமேனிக்கு லஞ்சம் வாங்கி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது, மாணவிகளுக்கு செக்ஸ் கல்வி சொல்லித்தருவது, பள்ளிகளில் இதற்கென ஒரு செல்லை நியமிப்பது என பல முYஅர்சிகள் செய்து இதை குறைக்க முடியும்.
முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதுதான் வருத்தமான விசயம்
அமெரிக்காவில் சிறுமியை காமத் தொல்லை கொடுக்கும் ஆம்பளை சார் கிடையாதா சீமாச்சு?
சின்ன பையனோடு உறவு கொண்ட பொம்பளை டீச்சரை நோக்கு தெரியாதா? அந்த பையன் வளர்ந்து பெரிய ஆளாக்கி இப்போ கேஸ் கொடுத்து இருக்கானே? அதுகூட தெரியாதா? இல்லே தெரிஞ்சுக்க விருப்பம் இல்லியா?
//ஆசிரியர் தந்தை போன்றவர். ஆனால் சில குடும்பங்களில் தந்தையே மகளை பலாத்காரம் செய்வது எல்லாம் நடக்கிறதல்லவா? அது மாதிரி முறைகெட்ட செய்கைதான் இங்கேயும் நடக்கிறது.
//
செல்வன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... சமீப நாட்களில் இது கொஞ்சம் அதிகமாகிவிட்டதேயென்று தான் கவலையாக இருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த அரசு காட்டும் முயற்சிகளும் போதுமானவைகளாகத் தெரியவில்லை..
நீங்கள் சொன்ன வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் நன்றாகத்தானிருக்கும். பொறுப்பிலிருக்கும் அரசியல் வாதிகளையும் 'வெங்காயம்' மாதிரியான தொண்டர்களையும் நினைத்தால் அது இப்போதைக்கு நடக்காது என்பது மட்டும் புரிகிறது.
சீமாச்சு
வெங்காயம் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மிக நல்ல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி..
நான் அமெரிக்காவின் புகழ் பாட இந்தப் பதிவு எழுதவில்லை..
இது போன்ற நல்ல நிலைகள் நம் நாட்டிலும் வராதா என்ற ஏக்கத்தை மட்டுமே பிரதிபலித்தேன்..
அமெரிக்காவிலும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இல்லையென்று சொல்லவில்லை.. 'அமெரிக்க்காவிலேயேயும் தான் நடக்கிறது.. நம் நாட்டிலும் நடந்தால் ஒன்றும் தப்பில்லை' என்பது போன்ற சப்பைக் கட்டு சமாதானங்கள் பொறுப்பான சிந்தனைகளாக என்க்குத் தோன்றுவதில்லை.
நீங்கள் யாரை defend செய்து இந்த பின்னூட்டம் எழுதினீர்கள் என்பது புரியவில்லை? ஆளும் கட்சி உறுப்பினர்/ஆதரவாளர்/அனுதாபி என்ற முறையில் எழுதியிருக்க மாட்டீர்க்ளென நம்புகிறேன்.
சீமாச்சு
இப்படியெல்லாம் நாம் ஏன் மாறணும்? குருபக்தியும் கண்டிப்பும் நம் கலாச்சாரம். Besides, this one incident doesnt precisely reflect the entire landscape here in the US - remember, it's in the US where the Virginia Tech massacare happened (which is an isolated incident as well).. we dont want this kind of change in our culture either!
(continuing on my previous comments) ... oh by the way, your child's reaction could be construed as a result of good parenting by you and your wife ;-).
Likewise, there are good parents in our country that instill confidence in a child's upbringing AND there are bad teachers in the US that kill a child's confidence. Believe me I have seen both!
பல உதயமூர்த்திகள் உதயமானால்!
நல்லவை அனைத்தும் நடத்த
முடியும் தம்பி! தம்பி!!
சீமாச்சு வணக்கம். தங்களது வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. மெலட்டூர் நடராஜனுக்கு அறிமுகப்படுத்தியதற்மு மீண்டுமொருமுறை நன்றி.
மிக்க அன்புடன், செல்வேந்திரன்
போட்டியில் கலந்துகொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன். http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.html
Post a Comment