Saturday, March 29, 2008

59. தரை தொட்டதுமே ஒரு உதவி....

சென்ற மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து... அவசரமாக மயிலாடுதுறை செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. மிகக் குறுகிய காலத்தில் டிக்கெட் எடுத்து.. அவசர அவசரமாக வேலையில் லீவு சொல்லிவிட்டு உடனேயே ஜெட் ஏர்வேஸில் பயணம்.

ஜெட் என்னவோ நல்ல வசதியாய்த்தான் இருந்தது. Charlotte to Newark NJ to Brussels Belgium to Chennai India. சென்ற முறை எமிரேட்ஸில் சென்றுவிட்டு அதன் வசதிகளைச் சிலாகித்துவிட்டு.. அது போல் இன்னொரு ஏர்லைன்ஸ் வருவது கடினம் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, ஜெட் அதன் மிக அருகாமையில் வந்தது மிக்க மகிழ்ச்சி.. என்ன இருந்தாலும் நம்ம் நாட்டுக்காரர்களாயிற்றே...


பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியத்தில் ஏறியதுமே.. பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த இளம் (ரொம்ப இளம் 15 முதல் 18 வயதுதான் இருக்கும்...) ஐரோப்பிய ஜோடி கண்ணைக் கவர்ந்த்து.. இவ்வளவு ச்சின்ன பையன் + பொண்ணாயிருக்காங்களே.. கூட யாரும் துணைக்கு வரலை போல இருக்கே.. சென்னை தான் வருகின்றார்க்ளோ அல்லது சென்னை வழியாக சிங்கப்பூர், மலேசியா.. ஆஸ்திரேலியா செல்பவர்களாக இருக்குமோ என்று நினைத்தேன்..


அப்ப அப்ப பார்த்ததில் பள்ளிக்கூட மாணவர்களாகத்தான் பட்டது. ஒருவர் விரல் கூட மற்றொருவர் மீது படவில்லை.. ஒரு வேளை சகோதர சகோதரிகளாக் இருக்கும் என்று கூட நினைத்தேன்..

அப்புறம் அவர்கள் பற்றி யோசிக்க முடியவில்லை.. சொந்தக் கவலைகள் வாட்டியது...

விமானம் தரையிறங்கியதுமே.. இறங்க வேண்டிய அவசரத்தில் கவனித்தது.. ஜோடி.. பாண்டிச்சேரிக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. மற்றவர் பேசிக் கொண்டிருந்ததில் கேட்டது.. இரவு 1:15 க்கு விமானம் தரையிறங்கியதுமே.. சென்னை செண்ட்ரல் சென்று அங்கு ஒர் லாட்ஜில் மீதி இரவைக் கழித்து இளைப்பாறிவிட்டு.. மறு நாள் காலையில் பஸ் பிடித்து பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்று சொன்னது காதில் விழுந்தது..

நமக்கென்ன.. என்று விட்டு விட்டாலும்...தமிழ் தெரிந்த நாமே சென்னையில் இந்தப் பாடு படும் போது.. இந்தக் குழந்தைகளை யாராவது ஏமாற்றி விட்டால் என்ன பண்ணுவது என்று உறுத்திக் கொண்டேயிருந்தது.. அவர்களைப் பொறுத்த மட்டில் பாண்டிச்சேரியில் தான் அவர்களின் நண்பர்கள் சந்திக்க முடியும்..

Immigration-ல் நின்று கொண்டிருக்கும் போதும் அவர்கள் கண்ணில் பட்ட போதும் .. நம்மால் என்ன செய்ய முடியும் என்று தான் நினைத்தேன்.. அப்புறம் தான் தோன்றியது... நமக்குத்தான் மயிலாடுதுறையிலிருந்து வண்டி வந்திருக்குமே.. அவர்களை போகும் வழியில் பாண்டியில் இறக்கி விடலாமேயென்று தோன்றியது....


அவர்களைத் தனியே சந்தித்து... "என்னிடம் வாகனமிருக்கிறது.. நீங்கள் பஸ்ஸிலெல்லாம் செல்ல வேண்டாம்.. உங்களை பாண்டிச்சேரியிலேயே இறக்கி விடுகிறேன்.." என்று சொல்லிவிட்டேன்.


இடையில் என்னை அழைக்க வண்டி கொண்டு வந்த மூர்த்தி அண்ணனிடமும் கேட்டுக் கொண்டு விட்டேன்.. "பரவாயில்லை சீனா.. அழைச்சிட்டு வந்திடு.. கார்ல இடம் இருக்கு.. பாண்டில தானே... விட்டுடலாமே...."


அவர்களை நயமாகப் பேசி.. வ்ண்டியில் ஏற்றி பாண்டியில் அவர்கள் நண்பர்களிடம் இறக்கி விட்டு விட்டுத்தான் போனோம்.. (கீழே படத்தில் நான் அவர்களுடன்..)





பெண் (Mirha) ஜெர்மன் பெண்.. பையன் (Felix) ப்ரான்ஸைச் சேர்ந்தவர். இருவரும் வகுப்புத் தோழர்கள்.. இந்தியாவில் சமூக நலப் பணி செய்வதற்காக மூன்று மாத விடுப்பில் வந்திருக்கிறார்கள்..

ஜெர்மன், ப்ரெஞ்ச் பேசுபவர்கள் என்று சொன்னதுமே.. நம்ம டோண்டு மாமா நினைவு வந்து.. அவர் போன் நம்பரை அவர்களிடம் தந்துவிட்டேன்.. இந்த தமிழ்நாட்டில்.. உங்க மொழி பேசி நான் அறிந்த நபர் இவர்தான்.. ஏதாவது தேவையென்றால்.. அவருக்கு போன் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.. பண்ணினார்களா.. என்று தெரியவில்லை....

அப்புறம் தான் தோன்றியது... நாம் நினைக்குமளவுக்கு இந்தியா ஒண்ணும் அவ்வளவு மோசமாக இருக்காது.. இப்பொதெல்லாம்.. நிறைய வெளிநாட்டுக்க்காரர்கள்.. இங்கு பத்திரமாக நடமாடுகிறார்களே... நாம தான் ரொம்ப பயந்துட்டோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

நான்கு நாட்கள் கழித்து.. கோவாவில்.. மயக்க மருந்து கொடுத்து.. கற்பழித்து கொலையும் செய்யப்பட்ட இந்த Scarlett Keeling என்ற இந்த 15 வயது பிரிட்டன் தேச பெண்ணைப் பற்றிய செய்தியைக் கேட்கும் வரை...



ஸ்கார்லெட்.. உனக்கு நடந்த வன்முறை பற்றி கேள்விப்பட்டு மிக த்துயரடைந்தேன்... இந்தியா ஒன்றும் நீ நினைப்பது போல கொடூரமான நாடல்ல.. உனக்கு நேர்ந்தது வெறும் விபத்துதான்... இந்தியாவில் என்னைப் போன்ற பொறுப்பு மிக்க இளைஞர்களும் அதிகம்.. எங்களால் உன்னைப் போன்ற குழந்தைகள் பலர் காக்கப் பட்டிருக்கின்றார்கள்...

உன் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.. உனக்கு பாதகம் விளைவித்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும் .. ஆண்டவர் பிடியிலிருந்து தப்ப முடியாதென்று நம்புகிறோம்... இது தான் இந்தியா...

12 comments:

துளசி கோபால் said...

நல்லவேலை செஞ்சீங்க. நம்மால் ஆகக்கூடிய உதவியைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமப் போனபிறகு, மனம் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா....

அந்த இன்னொரு இளம்பெண்தான் பாவம்...... நல்லவர்கள் கண்ணில் படவில்லையேன்னு இருக்குப்பா(-:

வீட்டில் எல்லாரையும் கேட்டேன்னு சொல்லுங்க.

ILA (a) இளா said...

நல்லது செஞ்சு இருக்கீங்க. இப்படித்தான் நம் நாட்டோட பெயரை நிலைநாட்ட முடியும். பொறுப்புள்ள செயல்.

dondu(#11168674346665545885) said...

நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தால் மிர்ஹாவுக்கும் ஃபெலீஸுக்கும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன். ஆனால் இருவரு ஆங்கிலம் பேசுகிறார்கள் போல இருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீமாச்சு.. said...

//நன்றி சீமாச்சு. ஃபோன் ஏதும் இதுவரை வரவில்லை. வந்தால் மிர்ஹாவுக்கும் ஃபெலீஸுக்கும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன். ஆனால் இருவரு ஆங்கிலம் பேசுகிறார்கள் போல இருக்கிறதே.
//

நன்றி டோண்டு சார்.. ச்சின்ன பிள்ளைகளாதலான்.. ஆங்கிலத்தில் அவ்வளவு சரளமில்லை..

பாண்டியில் ப்ரெஞ்ச் பேசுபவர்கள் நிறைய இருந்தாலும்.. சென்னையில் உதவி தேவைப்பட்டால் என்ன செய்வார்களோ.. என்றுதான்.. உங்கள் தொலைபேசி எண் தந்தேன்..

உங்களுக்கும் உடனேயே போன் செய்ய வேண்டுமென்றுதான் நினைத்தேன்.. காலையில் அவர்களைப் பாண்டியில் இறக்கி விடும் போது மணி அதிகாலை 5:30. உங்களை அந்தக் காலை வேளையில் எழுப்ப வேண்டாமென்றுதான் கூப்பிடவில்லை..

உங்களை இந்த முறை சந்தித்திருக்கலாம்.. வந்த நேரம் அப்படி..

அன்புடன்
சீமாச்சு..

வடுவூர் குமார் said...

என்னைப் போன்ற பொறுப்பு மிக்க இளைஞர்களும
இப்படி சந்துல சிந்து பாடினா கண்டுபிடிக்கமுடியாது என்ற நினைப்பா??
:-))))
சரியான உதவி தான் சீமாச்சு.

சீமாச்சு.. said...

அன்பு இளா..
ரொம்ப நாளாச்சு சந்திச்சு.. மறுபடியும் சந்திப்போம்..

//நல்லது செஞ்சு இருக்கீங்க. இப்படித்தான் நம் நாட்டோட பெயரை நிலைநாட்ட முடியும். பொறுப்புள்ள செயல்.

//

நம்ம நாட்டு பெயரைக் காப்பாற்ற நம்மளால ஏதோ முடிஞ்சது...

அன்புடன்,
சீமாச்சு..

சீமாச்சு.. said...

அன்பு குமார்..

//என்னைப் போன்ற பொறுப்பு மிக்க இளைஞர்களும
இப்படி சந்துல சிந்து பாடினா கண்டுபிடிக்கமுடியாது என்ற நினைப்பா??//

என்ன பண்றது.. நான் மட்டும் தனியாளு இல்லை என்ற நம்பிக்கை தான் நம்மளை வாழ வைக்குது... நாம மட்டும் எங்கே கத்துக்கிட்டோம்.. அங்க இருந்த.. இருக்கிற.. எல்லா நல்லவங்களையும் பார்த்துத் தானே..

நமக்கெல்லாம்..நாட்டைக் காப்பாத்தற..பொறுப்பு இருக்குன்னு நம்புறதே ஒரு முதல் படிதானே...

அன்புடன்
சீமாச்சு...

சீமாச்சு.. said...

துளசியக்கா..

//
அந்த இன்னொரு இளம்பெண்தான் பாவம்...... நல்லவர்கள் கண்ணில் படவில்லையேன்னு இருக்குப்பா(-:
//

இன்னும் நிறைய பேர் வேண்டும் நம் நாட்டைக் காக்க்....

அனைவரும நலம்.. இந்த பயணத்தில் ஆசிரியரையும் சந்தித்தேன்.. அடுத்த பதிவு அவரைப் பற்றித்தான்...

அன்புடன்,
சீமாச்சு..

ஆயில்யன் said...

//அனைவரும நலம்.. இந்த பயணத்தில் ஆசிரியரையும் சந்தித்தேன்.. அடுத்த பதிவு அவரைப் பற்றித்தான்...///

நாங்க வெயீட்டீஸ்ஸ்..........!!!!


சில நேரங்களில் விமான நிலைய பயணபேரங்களில் வெளிநாட்டவர்கள் அலைக்கழிக்கப்படும் போது
தோன்றும் எண்ணம் :)

செயல்படுத்தப்பட்ட செய்தி மனதில் இனிய சந்தேஷத்தை அள்ளிக்கொண்டுவந்தது!

Muthu said...

Namma oor-kaarar-ngiradhila romba perumai-yaa irukku Seemaachu.

I too travelled in Jet Airways only, in Jan, when our family went on 3 weeks vaccation. They do very nice service. Also I got the tickets for a very good price too.

Again, I too missed to meet my friends, :(

Anbudan
Muthu

Vetirmagal said...

Well done. We are proud of you young Indian.

God bless you.

இலவசக்கொத்தனார் said...

நல்ல வேலை செய்தீர்கள் அண்ணா.