நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த தேர்வில் (Financial Risk Manager from http://www.garp.com) முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று விட்டேன். நண்பர்களின் நல்லெண்ணங்களும் ஊக்குவிப்பும் எனக்கு மிக உதவியாக இருந்தன...
என் பெயருக்குப் பின்னால் இப்பொழுது FRM எனறு போட்டுக் கொள்ளலாம். வெற்றி தந்த ஊக்கத்தில் இன்னும் 3 தேர்வுகளுக்கும் பதிவு செய்து விட்டேன்...
- Chartered Alternate Investment Analyst (CAIA) இரண்டு தேர்வுகள். March 2008 and September 2008
- Certified in Investment Performance Measurement (CIPM) இரண்டு தேர்வுகள்..April 2008 and October 2008
- Chartered Financial Analyst (CFA) மூன்று தேர்வுகள்.. June 2008, June 2009, June 2010
மூன்றிற்கும் படிப்பு இப்பொழுது முழு வேகத்தில் செல்கிறது..
நாமெல்லாம் ஐ.டி துறையில் சாதித்ததைப் போன்று Financial Industry-யிலும் சாதிக்க வேண்டும். ஒரு விக்ரம் பண்டிட் (Citigroup CEO) மட்டும் போதாது.. நம்மில் நிறைய பேர் வர வேண்டும்.. இந்தத் துறையில் நான் நிறைய சீனர்களையும், யூதர்களையுமே பார்க்கிறேன்.
இதிலும் நம் இந்தியர்கள் வர வேண்டுமென்பதே என் அவா..
இந்தத் தேர்வுகள் எழுதுவதற்கோ.. இதில் வரும் வேலை வாய்ப்புகள் குறித்தோ அறிந்து கொள்ள விரும்புபவர்கள், தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும். என்னாலான, என்னிடமுள்ள எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
5 comments:
நல்ல விஷயம். வாழ்த்துகள் சீமாச்சு. இனிமேல்தான் உங்களுடைய முந்தைய பதிவை படிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்,சீமாச்சு.
எப்பாஆஆ! வாழ்த்துகள் :)
Well done, Congratulations Seemachu!
வணக்கம் நண்பரே,
இந்த தேர்வுகளில் உங்கள் வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி . ஆடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு எந்த துறை மேலொங்கியும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நீங்கள் கணிக்கிறீர்கள்? ஒரு 10வது படிக்கும் பெண்ணிற்க்கும் 8வது படிக்கும் பையனுக்கும் தகப்பனாக நான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்க விரும்புகிறேன் .
Post a Comment