Saturday, June 28, 2008

62. எனக்கே ஸ்பீடிங் டிக்கெட் கொடுத்துட்டாங்கோ !!!

***** 29 July 2008 அன்று சேர்க்கப்பட்ட பகுதி...
கோர்ட்டுக்குச் செல்லவில்லை. ஓரு நல்ல (?) அட்டர்னி பிடித்து அவரிடம் கேஸை ஒப்படைத்தேன்.. ஆபீஸ் நேரத்தில் கோர்ட் படி ஏற விரும்பவில்லை... தட்சணை $150/-

அவர் எனக்காக கோர்ட்டுக்குச் சென்று வாதாடி (?) என் ஸ்பீடு டிக்கெட்டை 83 மைல் என்பதை 65 மைல்களாகக் குறைத்து விட்டார்..

கோர்ட்டுக்கு தண்டம் $135/-

மொத்த தண்டம் இதுவரை $285/-

என் ட்ரைவிங் ரிக்கார்டில் 3 பாயிண்டுடன் கணக்கு இனிதே தொடங்கப்பட்டது... இன்சூரன்ஸ்காரன் தண்டம் ஒரு தொடர்கதை..


நீதி: ஓவர் ஸ்பீடு போகாதே.. போனாலும் மாட்டிக் கொள்வது மாதிரி போகாதே !!!

என்க்கு ஆர்வத்துடன் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி..

வக்கீல் முகவரியும் போனும் தந்த நண்பர் விஜய்பாபு கண்ணனுக்கு நன்றி...


**** சேர்க்கப்பட்ட ப்குதி நிறைவுற்றது *************


நாலு நாளைக்கு முன்னாடிதான் யூ ட்யூபில் மேயந்து கொண்டிருந்த போது இந்தியன் படத்தின் இந்த சீனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா ஒரு ட்ராபிக்க் சார்ஜெண்ட் -ஐ மடக்கும் காட்சி... இந்தியாவிலே இப்படியெல்லாம் இருக்கே-ன்னு கவலைப் பட்டுகொண்டிருந்தேன்.. இது நடந்தது சென்ற செவ்வாய் இரவில்...








வியாழக்கிழமை காலை..வழக்கம் போல அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.. இரண்டு வருஷங்களாக சென்று கொண்டிருக்கும் பாதை தான்.. ட்ராபிக் கொஞ்சம் குறைச்சலாக இருக்கவே.. ஆக்ஸிலேட்டரை ஒரு அழுத்து அழுத்தி விட்டேன் போலேயிருக்கு.,.

பின்னாலிருந்து சத்தம்.. ரியர் வியூ க்ண்ணாடியில் நீலக் கலர் பல்பு.. நன்கு பார்த்தால் .. டூ-வீலரில் ஒரு போலீஸ் அதிகாரி... இளம் வயது ஆப்ரிக்கன் அமெரிக்கன்..

"அண்ணே உங்களைத்தான்.. கொஞ்சம் வண்டியை ஓரம் கட்டுறீங்களா?"

தலைவிதியே என்று ஓரம் கட்ட வேண்டியதாகிவிட்டது..

அவரும் வண்டியை என் பின்னால் நிறுத்திவிட்டு அருகில் வந்து கண்ணாடியை இறக்கச் சொன்னார்..

"இங்க ஸ்பீடு லிமிட் என்ன-ன்னு உங்களுக்குத் தெரியுமா சார்?"

"55 சார்" - இது நான்..

"I have locked you down at 83 Sir .. Can I get your papers please.."



நான் மணிக்கு 55 மைல் வேகத்தில் போக வேண்டிய ஹைவேயில்.. 83 மைல் வேகத்தில் சென்றிருக்கிறேன்..


வேணும் தான்.,..

வண்டிக்குத் திரும்பிப் போய் ..முழ நீளத்தில் பிங்க் கலரில் டிக்கெட் கொண்டு வந்து கொடுத்தார்.




கஷ்டகாலமே--யென்று..

"எவ்வளவு சார் ஃபைன்? " என்று கேட்டதற்கு..

ஃபைன் எல்லாம் .. 15 மைல் அதிகம் செல்பவர்களுக்குத்தானாம்.. நான் 28 மைல் அதிகம் சென்றிருப்பதால்.. (Mandatory Court Appearance) அவசியம் கோர்ட்டுக்கு சென்று நீதிபதியைச் சந்திக்க வேண்டுமாம.. ஜூலை 28 அன்று காலை 9 மணிக்கு செல்ல வேண்டும்..



குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. 30 நாட்கள் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்வார்களாம்.. கஷடம் தான்..

இது முதல் தடவை என்பதால்.. பாதுகாப்பு பற்றிய வகுப்பில் சேர்ந்தால்.. மன்னிக்கப் படலாம் என்று சொல்கிறார்கள்..

பார்ப்போம்...

ஆமாம்.. உங்களுக்கு யாருக்காவது.. இங்க MLA .. MP .. யாரையாவது.. தெரியுமா???

28 comments:

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, முதலில் இதுக்கு பாயிண்ட் உண்டு. (இங்க உண்டு, உங்க புது ஊரில் உண்டான்னு தெரியலை.) நீங்க சொல்லும் தற்காப்பு வகுப்பிற்குச் சென்றால் இந்த பாயிண்டுகளை இல்லாமல் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் முன் கோர்டில் நீங்கள் பப்ளிக் பிராசிக்யூட்டருடன் பேசி, பாயிண்ட் இல்லாமல் அதிக அபராதத்துடன் இது முடியப் பேசிப் பார்க்கலாம். அப்படி முடிந்ததென்றால் அபராதத்தோடு முடிந்தது பாயிண்டுகள் இல்லை.

(இதெல்லாம் பட்டறிவு இல்லை. பட்டவர் கூட இருந்ததால் வந்த அறிவு!)

வடுவூர் குமார் said...

எனக்கு இந்தியன் தாத்தாவை தெரியும். :-))

jeevagv said...

:-)
அச்சச்சோ, சீமாச்சு, உங்களுக்கேவா?!
அந்த ஆபீசரிடம், எனக்கு செனட் உறுப்பினரைத் தெரியும் என்றெல்லாம் பிட் போடவில்லையா?!;-)
Defensive driving Class எடுத்துக்கொண்டால், 28 மைலில் இருந்து 15 ஆக குறைத்து, அதற்கென ஃபைன் மட்டுமே கட்ட வேண்டி இருக்கும்.

ஆயில்யன் said...

//இங்க MLA .. MP .. யாரையாவது.. தெரியுமா???//


என்ன அண்ணே அவ்ளோ பெரிய ஆளுங்கள்லா வேணும் சும்மா யாராவது வட்டம் ஒன்றியத்தை புடிச்சு எஸ்ஸாகிட முடியாதா ???

:)))

சீமாச்சு.. said...

//நீங்க சொல்லும் தற்காப்பு வகுப்பிற்குச் சென்றால் இந்த பாயிண்டுகளை இல்லாமல் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் முன் கோர்டில் நீங்கள் பப்ளிக் பிராசிக்யூட்டருடன் பேசி, பாயிண்ட் இல்லாமல் அதிக அபராதத்துடன் இது முடியப் பேசிப் பார்க்கலாம். அப்படி முடிந்ததென்றால் அபராதத்தோடு முடிந்தது பாயிண்டுகள் இல்லை.
//
அன்பு கொத்ஸு,
அதான் பண்ணனும் போல இருக்கு.. நமக்கு இங்கெல்லாம் கோர்ட்டுக்குப் போய்ப் பழக்கமெல்லாம் கிடையாது..

ஒரு வாரம் முன்னாடி கோர்ட்டுக்கு ஒரு பார்வையாளராப் போயி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்-னு இருக்கேன்..

கைல கால்ல விழுந்துதான் பார்க்கனும்.. எப்படியும் ஒரு 200-300டாலராவது போகும்..

இந்தக் காசுல நம்ம ஊரு பள்ளிக்கூடத்துக்கு ஏதாவது செஞ்சிருக்கலாம்..!!

போன ஜென்மத்து கடன் போல இருக்கு !!

ஹூம்ம்..

சீமாச்சு.. said...

//எனக்கு இந்தியன் தாத்தாவை தெரியும். :-))
//

வடுவூர் குமாரு.. இந்தியன் தாத்தா கிட்ட சொல்லிடாதீங்க.. அவரு நம்மளைப் போட்டு காய்ச்சி எடுத்துதுவாரு...

குடி போன ஊரில.. ஜாக்கிரதையா..சட்டத்தை மதிச்சு நடக்க வேணாமா-ன்னு நம்மளைத்தான் போட்டுத் தாக்குவாரு..

யாராவது அமெரிக்கன் தாத்தா தெரிஞ்சா சொல்லுங்க..

சீமாச்சு.. said...

ஜீவா..
//அச்சச்சோ, சீமாச்சு, உங்களுக்கேவா?!
அந்த ஆபீசரிடம், எனக்கு செனட் உறுப்பினரைத் தெரியும் என்றெல்லாம் பிட் போடவில்லையா?!;-)
//

எனக்கே தான் கொடுத்துட்டாங்க.. எவ்வளவு நல்லவன் நான்.. ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருப்ப்பேனா எப்பவாவது.. எவ்வளவு யோக்கியமான குடிமகன் நான்..

என்னவோ என்னத் தவிர எல்லாம் ரொம்ப அடக்கமான ஸ்பீடுல போற மாதிரி என்னைப் பிடிச்சிட்டாங்க...

ரோட்டுல போகும் போது மத்தவங்களைப் பிடிச்சிப் பாத்திருக்கேன்..

என்னமோ இன்னிக்கு என் நேரம்..

சீமாச்சு.. said...

தம்பி ஆயில்யா..

//என்ன அண்ணே அவ்ளோ பெரிய ஆளுங்கள்லா வேணும் சும்மா யாராவது வட்டம் ஒன்றியத்தை புடிச்சு எஸ்ஸாகிட முடியாதா ???
//

ஆமாம் இல்ல.. ஒரு வட்டம் ஒன்றியம் தெரிஞ்சா நல்லாயிருக்குமில்லே...

கேட்டுப் பார்ப்போம்...

எப்படியும் ஒரு 200-300 டாலர் பழுத்துரும்..

எல்லாம் போக.. என் புள்ளைங்க கேட்டா என்ன சொல்றதுன்னு தான் கவலையா இருக்கு...

என் பெரிய பொண்ணு எப்போதும் "Dont go over the speed limit Daddy" -ன்னு அறிவுரை சொல்லுவா.. அவளுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்..

என் தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு அவள் கிட்ட ஒரு 10 நிமிஷம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும்...

மருதநாயகம் said...

அண்ணே நல்லா இருக்கீங்களா. நீங்க ஒரு ஸ்டைலா வண்டி ஓட்டும் போதே நெனச்சேன்

Sundar Padmanaban said...

சீமாச்சு

'எம்பத்து மூணு கிலோமீட்டர் வேகத்துல போறேன்னு தப்பா நெனச்சுட்டேன்'

இல்லாட்டி

'நீங்க வேற எதோ எமர்ஜென்ஸிக்குப் போறீங்கன்னு நெனச்சு ஒதுங்கி வழி விடறதுக்காக ஒரு அழுத்து அழுத்திட்டேன்'

இந்த மாதிரி எதையாச்சும் சொல்லி சமாளிச்சுருக்கலாமே? :)

//என் பெரிய பொண்ணு எப்போதும் "Dont go over the speed limit Daddy" -ன்னு அறிவுரை சொல்லுவா.. அவளுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்..
//

ஓஹோ ரொம்ப நாளா மாட்டாம இருந்திருக்கீங்க போலருக்கே! :) அப்பா இப்படில்லாம் பண்ணி மாட்டிக்குவார்னு அவளுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கு போல! நீங்க அவ சொன்னதைக் கேட்ருக்கணும்.

Vijay said...

பைனை மட்டும் கட்டி பாய்ண்டுகளை தவிர்க்க பாருங்கள். ஆனா பைன் கட்டுவதிலும் ஒரு நன்மை இருக்குங்க. செகண்ட் டைம் ரொம்ப ஜாக்கிறதையா இருப்போம். ஒரு ரிப்ளக்ஸ் மாதிரி ஆகிடும்.

Vijay said...

இயன்றவரை cruise control உபயோகிக்கவும்.ஸ்பீட் நமக்கு தெரியாம ஏறாது.

Boston Bala said...

---ஒரு வாரம் முன்னாடி கோர்ட்டுக்கு ஒரு பார்வையாளராப் போயி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்-னு இருக்கேன்---

இது முடியாதுன்னு நினைக்கிறேன். நிறையப் பேரு கூட்டமா இருந்தாலும், தனித்தனியாத்தான் ஜட்ஜு உள்ளே அழைச்சுண்டு போவாங்க

---எப்படியும் ஒரு 200-300 டாலர் பழுத்துரும்..---

இதுதான் முதல் தடவை என்றால், மன்னித்து விட வாய்ப்பு நிறையவே உண்டு.

குற்றத்தை ஒப்புக் கொண்டால் விட்டுவிடுவார்கள் (சொந்த அனுபவம்). நியாயங் கற்பித்தால் அபராதாம் (மட்டுமாவது) நிச்சயம் (கேள்வி அனுபவம் ;)

- பல முறை நீதிமன்ற வாசல் ஏறியவன் :)

Vassan said...

நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்கள்..?

பொதுவாக (என்னுடைய அரிசோனா,டெக்ஸஸ்,கலபோர்ன்யா மற்றும் நியு மெக்ஸிக்கோ மாநிலங்களில் ஓட்டி - "பட்டறிவின் அடிப்படையில்") "டிக்கெட் கொடுப்பதற்கு முன், நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா அல்லது இல்லை என நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதியை சந்திக்க விருப்பமா " என 2 ல் 1 ஐ தேர்ந்தெடுக்க, பொலிஸ் வாய்ப்பளிப்பார்.

கடந்த 10 வருடங்களில் நான் 2 டிக்கெட் வாங்கினேன். 2001 நவெம்பரில், கால்பந்து ஆட்ட வர்ணனையை கேட்டுக் கொண்டு, விருப்ப அணி மேலிருந்த கடுப்பை வேகத்தில் காண்பித்ததால் கிடைத்தது மாநில பொலீஸிடமிருந்து. தப்பு என்னுடையது என்பதால் காசோலையில் அபராதம் கட்டினேன். 3 மாதங்களுக்கு முன் உள்ளூரில் நிறுத்த வேண்டிய இடத்திலிருந்து 2 அடி தள்ளி நிறுத்தினேன் என டிக்கெட் கொடுத்தான் ஒரு எல் தட்டி பொலிஸ். 2 வாரம் கழித்து நீதிமன்றம் போய், 5 நிமிடங்களில், டிக்கெட் ஐ நீதிபதியின் செயலர் டிஸ்மிஸ் பண்ணி, நீ போகலாமே என்றாள்!

17 வருடங்கள்- வருடம் சராசரி 50000 மைல்கள் அமேரிக்க நெடுஞ்சாலைகளில் ஓட்டிய காலத்தில் வாங்கிய டிக்கெட்டுகள் கணக்கில் அடங்கும்! ஒரு 20 இருக்கலாம்! [1982-2000)

உங்களுடைய நீதிமன்ற அனுபவம் நன்றாக அமைய வாழ்த்துகள்.

Anonymous said...

I went in 90 when it was posted 65, and they cited "Reckless Driving" and paid $400 3 years ago in Virginia.

Good luck

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணாச்சி
பொறுமையின் சிகரம் உங்களுக்கேவா?
தசாவதாரம் ப்ளெட்சரும் கோயிந்தும் ஓட்டாத இஷ்பீடா? அவிங்க கிட்ட சொல்லி இருந்தீங்கன்னா 83ஐ 38 ஆஆஆ மாத்திக் காப்பாத்தி இருப்பாங்கல்ல! :-))

கோர்ட்டுக்குப் போகணுமேன்னு எல்லாம் அஞ்சாதீங்க! அங்கிட்டுப் போனாப் பெறவு தெரியும் எம்புட்டு காமெடி-ன்னு!
பப்ளிக் ப்ராசிக்யூட்டர் சொல்லுவாரு!
நாலு பாயிண்ட்டு, 200 ரூவா கட்டுனா ரெண்டா குறையும்! 400 கட்டினா ஒன்னுமில்லாம பண்ணிடறோம்-னு! All official no lanjams :-)

எதுக்கும் சும்மா வழக்கறிஞர் கிட்டயும் தொலைபேசுங்க! இந்நேரம் பல வழக்கறிஞர்கள் உங்க வீடு தேடி லெட்டர் போட்டிருப்பாங்களே!

Anonymous said...

ப்ப்ப்பூஊஊஊ ... ஒரு டிக்கெட், ஒர்ரே ஒரு டிக்கெட், அதுக்கே ஒரு பதிவுன்னா நா ஒரு சோக நாவலேல்ல எழுதி இருக்கணும் !

அந்த வகைல நம்மள அடிச்சிக்க இந்த பதிவுலகத்துலயே, ஏன் நம்ம NRI மக்கள்ளயே யாரும் இருக்க முடியாதுன்னுதான் நெனக்கிறேன்.

அன்புடன்
முத்து

அகரம் அமுதா said...

என்னக் கொடுமை சீமாச்சி இதெல்லாம்?

இலவசக்கொத்தனார் said...

//இது முடியாதுன்னு நினைக்கிறேன். நிறையப் பேரு கூட்டமா இருந்தாலும், தனித்தனியாத்தான் ஜட்ஜு உள்ளே அழைச்சுண்டு போவாங்க//

அதெல்லாம் முடியும். நீதிபதி முன்னாடி ஒவ்வொருத்தாரா போய் நிக்கணும். ஆனா மத்தவங்க எல்லாம் அங்கேயேதானே இருப்பாங்க.

சரண் said...

இது டிக்கெட், கோர்ட்டோட முடியப்போறது இல்ல.. நாளைக்கு இன்சூரன்ஸ்-க்காரனும் இதயே சொல்லி காசு புடுங்கப் போறான் பாருங்க...

மங்களூர் சிவா said...

சீமாச்சு
:(


/
ப்ப்ப்பூஊஊஊ ... ஒரு டிக்கெட், ஒர்ரே ஒரு டிக்கெட், அதுக்கே ஒரு பதிவுன்னா நா ஒரு சோக நாவலேல்ல எழுதி இருக்கணும் !

அந்த வகைல நம்மள அடிச்சிக்க இந்த பதிவுலகத்துலயே, ஏன் நம்ம NRI மக்கள்ளயே யாரும் இருக்க முடியாதுன்னுதான் நெனக்கிறேன்.

அன்புடன்
முத்து
/

சீக்கிரம் ஒரு வலைப்பூல எழுத ஆரம்பிங்க முத்து!!

Muthu said...

வலைப்பூவா ? நானா ? அட போங்கப்பா !!

ஆனா என்னோட மொதல் டிக்கெட் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசை :

2000-ல் ஆஸ்டினில் இருந்தபோது :

எங்கள் குடியிருப்பின் வாசலில் ட்ராஃபிக் சிக்னல். அலுவலகம் செல்ல நான் வலப்பக்கம் திரும்பவேண்டும். அப்படித்தான் ஒருநாள் காலை, சிக்னல் சிவப்பாய் இருக்க, இடப்பக்கம் பார்த்தேன். சற்று தூரத்தில் பள்ளிப்பேரூந்து வந்துகொண்டிருந்தது. கணிசமான தூரம். நமக்குத்தான் right of way உள்ளதே என்ற எண்ணத்தில் சுவாதீனமாக திரும்பிப்போக சில விநாடிகளில் பின்னாலேயே பளீர்பளீரென்றபடி துரத்தி வந்து "ஓரங்கட்டேஏஏஏய்ய்ய்" என்றார்.

முதல் அனுபவம் !

மனம் படபடக்க, அப்போதெல்லாம் 'என்ன கொடுமை சரவணன் இது' ப்ரயோகம் இல்லாததால் 'காலங்காத்தால இப்படி ஆயி போச்சே, அடச்சே' என்று நொந்துபோன மனதோடு, காத்திருக்க காவலர் வந்து கண்ணாடி கதவு தட்டி, நான் இறக்கவும்

"Do you know why I stopped you ?"

"No Sir"

"You've not stopped for the School Bus"

அது கணிசமான தூரத்தே வந்துகொண்டிருந்ததாக சொல்லியும், பள்ளிப்பேரூந்துக்கே முன்னுரிமை என்றபடியால் 'புட்சுக்கோ டிக்கட்டை, கட்டிடு ஃபைனை' என்று கிழித்து நீட்டினார். என் பால் வடியும் முகம் கண்ணுற்று, துணுக்குற்று (டாஆஆஆய்ய்ய்ய் !!) 'இதுதான் முதல் அனுபவமா ?' என்று பொதுவில் கேட்டுவைக்க, 'ஆமாம் இதுவே முதல் டிக்கெட்' என்று நான் குறிப்பாய் 'பாவம் பொடியன்' ரேஞ்சுக்கு சொல்லவும், சற்றே அங்குமிங்கும் பார்த்தபடி நிதானித்துவிட்டு அடுத்து செய்ததுதான் கொஞ்சமும் நம்பவியலாத திகைப்பில் என்னை ஆழ்த்தி அன்று முழுதும் ஆச்சர்யத்தில் திக்குமுக்காட வைத்தது.

Muthu said...

தலைவர் உயர்ந்த மனிதனாகையால் (உயரத்திலும்தான்) காரிருக்கை உயரத்திற்கு வாட்டமாக வேண்டி, சாலையில் என் கதவுக்குப்பக்கத்தில் மண்டியிட்டு (ஆம் ஐயா, சாலையில் மண்டியிட்டு) ஒரு ஐந்து நிமிடம் defensive driving course என்றால் என்ன, அதை எங்கே படிப்பது, எப்படி கோர்ட்டில் அதை காட்டினால் driving history-ல் சம்பவம் பதிவாகாமல் வெறும் ஃபைனோடு போகும் என்றெல்லாம் விளக்கிவிட்டு "Wish you a safe driving" என்று புன்னகையோடு விலகிச்சென்றார்.

பெருமூச்சோடு இருவருடங்கள் முன்பாக சென்னையில் நண்பர்களோடு மாட்டின அனுபவத்தை ஒப்பிட்டுப்பார்த்தபடி காரை நகர்த்தினேன்.

அப்புறம் வேலை பார்த்த/பார்க்காத மாநிலங்களிலெல்லாம் இடத்திற்கொன்றாக வாங்கி வாங்கி சிவந்த கரங்கள் ஐயா என்னுடையவை.

சுஜாதா பாணியில் சொல்லவேண்டுமெனில் ...

I provide an easy target !!!

Vassan said...

வணக்கம் முத்துகுமார்.

ம.துறையில், கேல்டெக்ஸ் எரிபொருள் விற்பனை தாண்டி, பூம்புகார் போகிற சாலையில்தானே உங்கள் வீடு ;)

நான் Smokey களிடமிருந்து வாங்கின அபராத டிக்கெட்டுகள் பற்றி குறுநாவலே எழுதலாம். ஆனால் மாட்டேன்! சுயமா
சாயம் வெளுக்க வேண்டாமென்றுதான். மாதிரிக்கு ஒன்றே ஒன்று மட்டும்!

1985 வாக்கில், கையில் கொஞ்சமாய் காசு புரள ஆரம்பித்த காலம். 1984 நீஸான் 200 SX ஐ வாங்கியிருந்தேன்.
4 Speed, Manual.

அப்போதெல்லாம் 55 மைல் தான் அதிகபட்ச வேகம். க்ரேண்ட் கேன்யனுக்கு பக்கத்து ஊரான (உ)வில்லியம்ஸ்,அரிசோனாவில்
ஒரு வாடிக்கையாளர். நேரம் தவறினால்-வாடிக்கையாளரின் மனம் புண்படலாம் என்றொரு தன்னம்பிக்கையின்மை. 68 மைல்
கணக்கில் அவரை காண விரைந்த போது, 2 நீண்டுயர்ந்த ஓக் மரங்களுக்கு இடையிலிருந்து வந்தார் ஒரு அரிசோனா மாநில காவலர்!
மிகவும் நட்பாக பேசினார்; என்ன "ஏதாவது மோட்டேல் (Motel!) வாங்குகிற அவசரமா" என நகைச்சுவை அடித்துவிட்டு,
டிக்கெட் ஐ மறக்காமல் கொடுத்துச் சென்றார்! இது ஞாபகத்தில் வரும் முதல் டிக்கெட் அல்லது 2,3,4....

தற்போது நீங்கள் என்ன ஊரில் வசிக்கிறீர்கள்..

ஜோசப் பால்ராஜ் said...

எனக்கு ஜார்ஜ் புஷ், ஒபாமா இரண்டு பேரயுமே தெரியும்....

Muthu said...

அன்புள்ள வாசன்,

பூம்புகார் சாலையில் சற்றே உள்ளே சென்றால் சமீபத்தைய மற்றும் சமீபத்துக்கு சற்று முந்தைய காலத்தில் தோன்றின இரண்டு நகர்களில் என் சகோதரிகள் வீடு. இன்னும் ஒரு 10 கி.மீ பயணித்தால் எங்கள் வீடு வந்துவிடும், ஹி...ஹி

இப்போது கனெக்டிகட்-டில் வசிக்கிறேன். மான்செஸ்டர் நகரம்.

நீங்கள் எங்கே ?

ஜோசப், எனக்குக்கூடத்தான் சீனியர் புஷ், ஆப்ரஹாம் லிங்கன்-லாம் தெரியும் (எத்தன புகைப்படங்கள்ள பாத்திருப்போம்) என்ன பிரயோஜனம் சொல்லுங்க ?

இங்கல்லாம் நா யாரு தெரியுமா, எங்க அப்பா மாவட்டம், வட்டம்-னு ஆரம்பிச்சா அமைதியா கொண்டுபோயி சதுரத்துக்குள்ள (அல்லது செவ்வகத்துக்குள்ள) அடைச்சிருவான்.

ஒங்களுக்குத்தெரிஞ்ச புஷ்ஷோட பொண்ணு பேர்லயே தண்ணில வண்டி ஓட்டினதா நடவடிக்கை எடுத்த தேசங்க இது.

என்ன செய்ய, பெருமூச்சுதான் மறுபடியும்.

அன்புடன்
முத்து

Santhosh said...

தல,
இதுக்கு நிறைய பாயிண்டு குடுப்பாங்க... அதற்கு ஏத்த மாதிரி உங்களின் இன்ஸ்யூரன்ஸ் உயரும். எனவே கொத்ஸ் சொன்ன மாதிரி பப்ளிக் பிராசிக்யூட்டருடன் நல்லவிதமாக பேசி, அய்யா இது தான் முதல் தடவை (இதே டயலாக்கை ஒரு நாலு ஜந்து முறை சொல்லி பைன் மட்டும் கட்டி எஸ்கேப் ஆயி இருக்கேன் நான்) அப்படி இப்படின்னு பேசி.. அபராதத்தை மட்டும் கட்டி விட்டு பாயிண்டு இல்லாமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

சீமாச்சு.. said...

***** 29 July 2008 அன்று சேர்க்கப்பட்ட பகுதி...
கோர்ட்டுக்குச் செல்லவில்லை. ஓரு நல்ல (?) அட்டர்னி பிடித்து அவரிடம் கேஸை ஒப்படைத்தேன்.. ஆபீஸ் நேரத்தில் கோர்ட் படி ஏற விரும்பவில்லை... தட்சணை $150/-

அவர் எனக்காக கோர்ட்டுக்குச் சென்று வாதாடி (?) என் ஸ்பீடு டிக்கெட்டை 83 மைல் என்பதை 65 மைல்களாகக் குறைத்து விட்டார்..

கோர்ட்டுக்கு தண்டம் $135/-

மொத்த தண்டம் இதுவரை $285/-

என் ட்ரைவிங் ரிக்கார்டில் 3 பாயிண்டுடன் கணக்கு இனிதே தொடங்கப்பட்டது... இன்சூரன்ஸ்காரன் தண்டம் ஒரு தொடர்கதை..


நீதி: ஓவர் ஸ்பீடு போகாதே.. போனாலும் மாட்டிக் கொள்வது மாதிரி போகாதே !!!

என்க்கு ஆர்வத்துடன் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி..

வக்கீல் முகவரியும் போனும் தந்த நண்பர் விஜய்பாபு கண்ணனுக்கு நன்றி...


**** சேர்க்கப்பட்ட ப்குதி நிறைவுற்றது *************