Thursday, February 19, 2009

72. இவனெல்லாம் ஒரு வக்கீலா?

நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுப்ரமணியசாமிக்கு நேர்ந்ததைப் படிக்கும் போது ஒரு இந்தியக் குடிமகனாக வெட்கப்படுகிறேன்..

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் முன்பாகவே ஒரு மனுதாரர் (ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும் கூட) அவமானப்படுத்தப்பட்டார் என்பதை நினைக்கும் போது ஒரு சாதாரணக் குடிமகனாக, சட்டம் ஒழுங்கை நினைத்து கவலை வருகிறது

கீழே உள்ள படத்தில் பாருங்கள். ஒரு வக்கீல் ஒரு அரைச் செங்கல்லை ஆயுதமாக வைத்து செய்யும் அநியாயத்தை. இந்தச் செங்கல், இவர் வீசும் வேகத்தில் ஒரு மனிதர் (அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டுமே !!) மேல் பட்டால் அவர் ஆயுளுக்கும் முடமாக மாட்டாரா? அவரை நம்பிப் பிழைக்கும் குடும்பத்துக்கும் ஆயுளுக்கும் கவலையளிக்கும் நிலை ஏற்படாதா?
ஒரு தனிப்பட்ட மனிதரின்.. குடும்பத்தின் வேதனையை இவர் நேரில் பார்த்திருக்க மாட்டாரா? எத்தனன எத்தனை விதமான் நோய்கள் !! எத்தனை விதமான உடல் ஊனங்கள் !! அவர்கள் ஒவ்வொரு நாளையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தள்ளுகிறார்கள் என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா?


இந்த செங்கல் .. இவர் மனைவியின் தலையையோ அல்லது குழந்தையின் தலையையோ (ஆண்டவரே மன்னியும் !!) பதம் பார்த்தால் இவர் எவ்வளவு வேதனையில் துடிப்பார்?

இங்கே என்ன மாங்காயா அடிக்கிறார்கள்? இவரையெல்லாம் சட்டம் படிக்க வைத்தது இதுக்குத்தானா?

இவ்வளவும் செய்துவிட்டு சுப்ரமணியசாமி மேலே தீண்டாமை பாதுகாப்பு குற்றச்சாட்டு வேறு பதிகின்றனராம்?

இவனெல்லாம் ஒரு வழக்கறிஞர் !

இவரும் இவர் வழி வந்தவர்களும் நாளைய சமுதாயத்தில் முன்னேறுவதற்காக, ரிசர்வேஷனும் ஏற்படுத்தி, அவருக்கு படிக்கும் போது உதவித்தொகையும் அளித்து, தங்குவதற்கு இடமும் வசதிகளும் படிப்பும் அரசாங்க செலவில் அளித்து, அவரை ஒரு வழக்கறிஞ்ர் ஆக்கினால்....

இவர் என்ன செய்யவேண்டும்? இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு நன்றிக்கடன் செலுத்த வேண்டும?எந்த அரசாங்கம் இவர் முன்னேறுவதற்காக உழைத்ததோ.. எந்த மக்களின் வரிப்ப்ணம் இவரின் படிப்புக்கும் வசதிக்கும் செலவழிக்கப்பட்டதோ.. அவர்களின் சொத்துக்களுக்கு இவர் கோபத்திற்காக இவர் தீ வைத்து நாசமாக்குவாராம்..


அறிவில்லையாடா உனக்கு?

நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். இந்த காரியம் மன்னிக்கப்பட முடியாதது !!!

இதுவா நாங்கள் விரும்பிய சமுதாய முன்னேற்றம். இதற்காகவா, நீங்கள் முன்னேறவேண்டும் என்று நாங்களெல்லாம் கனவு கண்டோம் !!

ஒரு சமுதாய ஊழியனாக.. என் சொந்த முயற்சியிலும் என் சொந்த பணத்திலும் ..என் தனிப்பட்ட உழைப்பிலும்...என் குடும்பத்தின் உழைப்பிலும் என் சொந்த விருப்பத்தினாலும், ஆத்மார்த்தமாக இவர் சார்ந்த சமூக மக்க்ளை காத்து அவர்களுக்கு கல்வியும் செல்வமும் பெற ஒரு சமூக ஊழியனாக உழைப்பவன் என்ற என் பொறுப்பில்... இந்த வழக்கறிஞரின் செயலைப் பார்த்து...

நான் வெட்கப்படுகிறேன் !! நான் தலை குனிகிறேன் !!!

13 comments:

Anonymous said...

vetkapattal thukumattinkkinu savu

Anonymous said...

nayai kuluppati naduveetla vachha adu yenna pannumo adaithan andha sengal yedutha vakeelum pannikitirukkan.

கோவி.கண்ணன் said...

கண்டிக்கத்தக்கது தான் !

***

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சட்ட ஆயுதம் ஏந்துவதும் தவறு. மனிதாபிமானமா ? நீதியா ?
மனிதாபிமானமே வெல்லவேண்டும். நீதி என்பது மனிதன் போட்ட சட்டத்திற்கு வெறும் காவல் மட்டுமே.

Anonymous said...

Hello!!! He is doing worst thing !!!? Why he is doing like this?
what is your comments about" Killing Tamils by SLA.
i think your whitebelt brain ask u to think like this.
If ur rite person. please be HUMAN being in all aspects.

Anonymous said...

//இதுவா நாங்கள் விரும்பிய சமுதாய முன்னேற்றம்.//

எந்த சமுதாய முன்னேற்றத்தை சுப்பிரமணியசாமி விரும்பியிருக்கின்றார்? இதே ஆசாமியின் குள்ளநரித்தனத்தால் ஆட்சிக்கலைப்பு நடந்திருக்கின்றது. மறுதேர்தல்களுக்காக பல நூறு கோடிகள் செலவாகியிருக்கு. அதுவும் மக்கள் வரிப்பணம் தான்.

மக்களின் உணர்வை மதிக்கத் தெரியாத ஒருவனின் அதிகாரத் திமிரே வன்முறைக்கு வித்திடுகின்றது. இதே சுப்பிரமணியசாமி எத்தனை தடவை மக்களின் உணர்வுகளை கேவலப்படுத்தியிருக்கின்றார். வன்முறை நடந்த பின்னர் வாய் கிழிய கத்துவதில் என்ன நடக்கப்போகின்றது? வன்முறைக்கு எது காரணம் என்று தேடுங்கள். முதலாவதாக சுப்பிரமணியசாமி மாட்டுவார்.

Anonymous said...

//Hello!!! He is doing worst thing !!!? Why he is doing like this?
what is your comments about" Killing Tamils by SLA.
i think your whitebelt brain ask u to think like this.
If ur rite person. please be HUMAN being in all aspects.
//
பக்கத்து வூட்டுக்காரன் அவங்க வீட்டு நாயை அடிச்சா உன் வீட்டு நாய் உன்னைக் கடிக்கலாமா?

தைரியமிருந்தா பக்கத்து வூட்டுக்காரனை கடிச்சிட்டு ரோட்டு மேல போகட்டும் இங்க வூட்டுக்குள்ள வரக்குடாது

மு.மயூரன் said...

நீங்கள் அநீதி என்று கருதும் ஒன்றினை கண்டித்துக் குரல்கொடுக்கும் உங்கள் சமூக அக்கறை வரவேற்கத்தக்கது.

ஆனால் உண்மையான பெரிய கோரமான அநீதிகளை எல்லாம் உங்களிடமிருந்து மறைத்துவிட்டு, அநீதிக்கெதிரான போராட்டங்களை மட்டும் பெரிய பயங்கரவாதமாக பூதாகரப்படுத்தி உங்களுக்கு காண்பிக்கும் "தேசியம்" உங்களைச் சுயமாக சிந்திக்க விடுவதில்லை.

மக்கள் வரிப்பணத்தை நாசமாக்கினார்கள் என்ற வாதத்தை எடுத்துக்கொள்வோம்.

காலகாலமாக உரிமைகளை இழந்து அரச ஒடுக்குமுறைக்கு பலியாகி, தற்போது அன்றாடம் நூற்றுக்கணக்கில் ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் தலைகளில் போட இலங்கை அரசுக்கு கிடைக்கும் நவீன குண்டுகளும் ஆயுதங்களும் உங்கள் வரிப்பணத்திலிருந்து பெறப்பட்டுத்தான் இந்திய அரசால் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்திய அரசு உங்கள் வரிப்பணத்தில் வாங்கிக்கொடுத்த, நிரந்த ஊனமாக்கும், மனநிலையை பாதிக்கும், வெந்து சாகவைக்கும் பொஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகளை விட அந்த அரைச்செங்கல்தான் உங்களுக்கு பெரிய ஆயுதமாகப்படுகிறதா?

அஸ்ஸாமில், குஜராத்தில், காஷ்மீரில், பழைய மன்னர் நேபாளத்திலும் மக்களின் உரிமைக்குரல்களை நசுக்க, மனிதை சித்திரவதை செய்து கொல்ல, ஒருசிலர் நன்றாக வாழ்வதற்காக ,ஒடுக்கப்பட்ட மக்களை தினம் தினம் பலியெடுக்கப்பயன்பட்ட ஆயுதங்களும், புலனாய்வு மூளையும் அதற்கான தொழிநுட்பங்களும் இதே இந்திய அரசு தன் மக்களிடம் பெற்ற வரிப்பணத்தில் உருவானதுதான் என்பது உங்களுக்கு புரியாதா?

எண்பதுகளில் ஈழத்தில் உயிரோடு தமிழர்களை படுக்கவைத்து புல்டோசரை ஏற்றிக்கொன்ற, ஆயிரக்கணக்கில் தமிழரைப்பலியெடுத்த, எங்கள் பெண்களின் மீது பாலியல்தாக்குதல்களை வகை தொகையின்றிச்செய்த இந்திய ராணுவத்திற்கு சம்பளம் எங்கேயிருந்து வந்தது? அந்த ராணுவத்துக்கு கொலைக்கட்டளை இட்டுக்கொண்டிருந்த உங்கள் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்திக்கு சம்பளம் யார் கொடுத்தது?

இந்த சுப்பிரம்ணிய சுவாமி யார்?

அதிகாரவர்க்க நலன்களுக்கு துணைபோகும், மற்றைய ஒடுக்கப்பட்ட மக்களை ஒழித்துக்கட்டும் வேலைகளை வெள்ளை வேஷ்டி சட்டை போட்டு மறைத்தவாறு உள்ளே பணம் அழுகி ஒழுகும் கோர முகத்தைக்கொண்ட அரக்கன்.

மக்களைக்கொல்லும் இந்திய அரசை, அதன் அதிகார வர்க்கத்தை, அதற்கு துணை நிற்கும் சுப்பிரமணிய சுவாமி போன்ற அரக்கர்களை மவுன விரதமிருந்து திருத்தலாம் என்கிறீர்களா?

ரஜீவ் காந்தி தமிழரைக் கொலைசெய்வதை நிறுத்தக்கோரி உண்ணாவிரதமிருந்த திலீபன் சாகவிடப்பட்டான்.

உலகம் பூராகவும் அமைதியாக உரிமைக்குரல்கொடுக்கிறார்கள் லட்சக்கணக்காண ஈழத்தமிழர்கள். என்ன நடந்தது?

தமிழ் நாட்டில் மிக அமைதியாகத்தானே எல்லாம் அரம்பித்தது?

என்ன கேட்டார்கள் மக்கள்?

[பக்கத்து நாட்டு அரசு தமிழர் மீது கொலைக்கருவிகளை ஏவி விட்டிருக்கிறது அந்த நாட்டுக்கு கொலைக்கு உதவுவதை நிறுத்தச்சொல்லித்தானே?

கேட்டதா இந்திய அரசு? கேட்டதா வல்லரசுக்கனவு? கேட்டதா அதிகார வர்க்கம்?

கொக்கரித்துக்கொண்டு, திரைமறைவில் லட்ச்சக்கணக்கில் மக்களைக்கொல்ல உடந்தையாய் அல்லவா இருந்தான் இந்த சு. சுவாமி?

இவர்கள் செய்யும் படைகளும், நவீன ஆயுதங்களும் கொண்ட வன்முறை எல்லாம் வன்முறை இல்லை. அதை தட்டிக்கேட்டால் வந்து பிடித்துப்போக அவர்களின் போலீஸ் இருக்கு.
அப்போ ஒடுக்கடும் மக்கள் எப்படித்தான் உரிமைகள் பெறுவது?

திருப்பி அடித்தால் தானே கேட்கிறார்கள்.

அதனால் தான் இருப்பி அடிக்க வேண்டியதாகிறது.

அப்படி அடித்தால் கூச்சல் போட்டு கண்ணீர் சிந்து கொலைகார அரசையும் கொலைகாரர்களையும் காப்பற்ற, அனுதாபம் தெரிவித்துப்பதிவு போட உங்களைப்போன்றவர்கள் இருக்கிறார்கள்.

Anonymous said...

லூசுப் பயலே சும்மா படத்தப் போட்டாச் சரியா? ஏன் எண்டு கேட்டியா? எல்லாருமே விளக்குப் பிடிக்கிறதிலேயே இருங்க. ஏன் ? எதுக்கு எண்ரு கேக்காதீங்க.

Anonymous said...

வீர வணக்கம் ! வீர வணக்கம் !

கல்லால அடிக்கும் வக்கீலுக்கு வீர வணக்கம் !

வீர வணக்கம் ! வீர வணக்கம் !

போலீஸ் ஸ்டேஷனை கொளுத்திய வக்கீலுக்கு வீர வணக்கம்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

ஏம்பா ஒரு சு...சாமியை அடிச்சா உங்களுக்கெல்லாம் எரியுதே,, ஏனாம். ஒரு சொறிநாயை இந்த அள்வுக்கு விட்டு வைத்திருப்பதே தமிழனுக்கெல்லாம் ஆபத்து. சட்டக் கல்லூரி கலவர் வந்த போதும் ”இவால்லாம் சட்டம் படிச்சா இப்படித்தாண்டா நடக்கும் அம்பீ” என்று கும்பி எரிந்த அம்பீக்களுக்கு வழக்கரிஞர்கள் கொடுத்த அடித்தான் நேற்று நடந்தது. தமிழனை கைவைத்தால் என்ன நடக்கும் என்பது இப்போ சு.சாமி கும்பலுக்கு தெரிந்திருக்கும்.

HS said...

Submit your blog to the Tamil Top Blogs directory http://kelvi.net/topblogs/

Anonymous said...

seemachu
onnu therichikkungo.ongalai maathri paaparnkalai intha tamil samuthayam ukaaravachi 2000 varusama soru pottu kiitu irruku.athukku kojnamavathu nanri yoda nadnthukkunga.neenga sollunga entha paapan engalodu vaylail irangi velai seithaan.sollunga ivlo pesuringale ellathil engaloda inam alikka pattukittu irruku.athai pathi oru vari elutha ongalukku mansu illai.neethi manram,kaaval nilayam ellam makalaal uruvakka pathavai.athai uruvakki kolla mudiyum.alinthu pona uyir kalai eppadi meetedukka mudiyum.summa engaloda vayitherichalli kotti kollathienga.unga subramniya smai,cho,jeyalaitha,hindu ram mathri
aduthu intha mottai thalayan cho vukkuthaan poosai
summa karuthu suthanthiram nnu solli unga arivu jeevithanantha yellam enga kitta kaatavendam
ungali vida naanga arivaligal nnu nirubichu rembo kaalam aguthu ambi kudim thalai ambi
varatuma
uma thailand