Tuesday, April 07, 2009

77. கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாத் தப்பில்லை ..

இப்ப இருக்குற புள்ளைங்களப் பாத்தா நானெல்லா அம்மாஞ்சியாவே வளர்ந்துட்டேனோன்னு தோணுது. கீழே இருக்குற குழந்தையைப் பாருங்க. எவ்வளவு வெவரமா படிச்சுப் பாக்குது...

யாரெல்லாம் நமக்கு பர்த் டே கிஃப்ட் கொடுத்திருக்காங்க.. இன்னும் வரவேண்டியது பாக்கி எவ்வளவு இருக்கு எல்லாம் பாத்தே தெரிஞ்சுக்கிடுவாங்க !!!

எதா இருந்தாலும் படிச்சாவது கேட்டாவது தெரிஞ்சுக்கணும்னு நெனக்குதுங்க..

நானெல்லாம் 9ம் கிளாஸ் படிக்கிற வரைக்கும் ஃபோன்லயே பேசினதில்லை. மயிலாடுதுறையிலேயே எனக்குத் தெரிஞ்ச 4 - 5 வீடுகள்-ல தான் போன் இருந்திச்சி. அதுல 2 பேர் Telephones ல Junior Engineer ஒண்ணு மளிகைக்கடை, 2 டாக்டர்கள். அப்ப மயிலாடுதுறை போன் நம்பரெல்லாம் வெறும் 3 இலக்கங்கள் தான். இப்பத்தான் முன்னாடி 3 தடவை 2 சேர்த்து 6 இலக்கமாயிருக்கு. எங்க ஊரு பெரிய்ய சிட்டி மாதிரி (!!). இதுக்கு மேலே எங்க ஊரை நான் கிண்டல் பண்ணி எழுதினா அபிஅப்பா அடிக்க
வந்துடுவாரு..

வீட்டுல ஒரு தடவை சமையலறை கேஸ் தீர்ந்துப் போச்சி. கேஸ் வாங்கணுமுன்னா, அப்ப கூறைநாட்டுல (வீட்டுலேருந்து 2 கிலோமீட்டர்) இருந்த சிவசக்தி கேஸ் ஏஜென்ஸியில் ரிஜிஸ்டர் பண்ணணும். எனக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாது. நடந்து போகணும் இல்லேன்னா யாராவது (சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச) பிரெண்ட்டுக்கு ஐஸ் வெச்சி சைக்கிள்ல டபுள்ஸ் போயிட்டு வரணும். அப்பதான் JE வீட்டு நடராஜ் புண்ணியத்துல
முதன் முதலில் ஃபோன்ல பேசினேன். அதையும் என் அம்மா நம்பாமல் என்னை பொடிநடையா இன்னொரு தடவ நடக்க விட்டுட்டாங்க.. (எங்க அம்மாவுக்கு அப்பல்லாம் ஃபோன்ல நம்பிக்கை கிடையாது). நேரில போய்ச் சொன்னாலும “கார்டை எடுத்து வெச்சுக்கிட்டானா? நீ கண்ணால பாத்தியா? அது நம்ம கார்ட் தானா?” அப்படீன்னு மூணு கேள்விக்கும் பதில் சொல்லணும்.


காலேஜ் படிச்சி முடிக்கும் வரை மொத்தமா 10 தடவை போனில் பேசியிருந்தால் பெரிய்ய்ய விஷயம் இப்போ என் மூணாவது பொண்ணு பொறந்து 2 மாசத்துல செல் போனில் “முகுந்தா முகுந்தா பாட்டு போட்டாத்தான் பால் குடிக்கிறா !!”


அத விடுங்க...

இப்ப போனவாரம் என் 6 வயசு பொண்ணு சூர்யா கூட பேசிக்கிட்டிருந்தேன்.. ரொம்ப சுவாரசியமா போன் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்..

“Daddy... Mommy has a phone number, you have one, thatha and Patti also have phone numbers..

Does GOD give us all phone numbers when we are born?

Do you have my phone number? "


என்னமோ ஆண்டவனே பொறக்கும் போது எல்லாருக்கும் ஃபோன் நம்பர்
கொடுத்துடுவார்-னு நெனச்சிக்கிட்டிருந்திருக்கா.. !!

நியாயமான சந்தேகம் தான்.. அடுத்த தடவ நம்ம பழமைபேசி மணிவாசகம் மாமா வீட்டுக்கு வந்தா கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் தான் இந்த ஆவிஅமுதா ரேஞ்சுல எல்லார் கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காரே !!!

18 comments:

அபி அப்பா said...

குழந்தை கொள்ளை அழகு! அதுக்கு முகுந்தா முகுந்தா கேக்குதா! குழந்தை போட்டோ பார்த்ததுமே பதிவின் மீது ஈர்பு வரலையே அண்ணா! ஆக உங்களை விட 100 மடங்கு வர போறா போல இருக்கு குழந்தை சாமியா!!!!!!!!

அபி அப்பா said...

இருந்தாலும் எங்க அண்ணாவை விட்டுடுவோமா? சிவசக்தி கேஸ் ல நம்ம 3270 தான் எடுத்து பதிஞ்சானான்னு நீ கண்ணால பார்த்தியான்னு அம்மா கேட்பது இன்னமும் காதில் இருக்கு!

RAMYA said...

//
Does GOD give us all phone numbers when we are born?
//

அருமையான கேள்வி
காலத்தின் கட்டாயம் இந்த கேள்வி
பதில் சொல்லவேண்டிய நிலையில் நீங்க
என்ன பதில் சொல்லபோறீங்க ?

சொல்லிட்டு எனக்கும் அந்த பதிலை சொல்லுங்க. ஆர்வத்துடன் இருக்கிறேன் தெரிந்து கொள்ள

அண்ணா ரொம்ப அறிவாளிப் பாப்பா!!

ஆயில்யன் said...

//பழமைபேசி மணிவாசகம் மாமா வீட்டுக்கு வந்தா கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் தான் இந்த ஆவிஅமுதா ரேஞ்சுல எல்லார் கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காரே !!!
///

:)))))))))))))))))))

பழமைபேசி said...

//“Daddy... Mommy has a phone number, you have one, thatha and Patti also have phone numbers..

Does GOD give us all phone numbers when we are born?

Do you have my phone number? "
//

So cute Surya!

பழமைபேசி said...

//பழமைபேசி மணிவாசகம் மாமா வீட்டுக்கு வந்தா கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் தான் இந்த ஆவிஅமுதா ரேஞ்சுல எல்லார் கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காரே !!!
///

ஆகா, சூரியன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதபடிக்கு, என்னை மாட்டிவுட்டுட்டீங்களே ஐயா?! அவ்வ்வ்.........

பழமைபேசி said...

நல்லா, அனுபவிச்சி எழுதியிருக்கீங்கண்ணே?! அவங்க வர்றேன்னு சொன்னாங்கன்னு சொன்னாலும், அவங்க சொன்னதைத் திரும்பவும் சொல்லி, அந்த வார்த்தைகள் அவங்க பேசக்கூடிய வார்த்தைகள்தானான்னு வேற சோதிப்பாங்க....

நாகை சிவா said...

:)))

மாயவுரம் சிட்டி இல்லையா??????

;))))

sriram said...

அது சரி, கருணாநிதியின் வாரிசுகள் இயல்பாகவே MLA/ MP/ Minister ஆவது போலவே உங்க மகள் அறிவாளி ஆக இருக்கிறாள்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston

Seemachu said...

//ஆகா, சூரியன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதபடிக்கு, என்னை மாட்டிவுட்டுட்டீங்களே ஐயா?! அவ்வ்வ்.........//

உங்களால பதில் சொல்ல முடியாத கேள்வின்னு ஒண்ணு உலகத்துல இருக்குங்கிறீங்க ? அதுவே ஆச்சர்யம் தானே..

பழமைபேசி said...

//உங்களால பதில் சொல்ல முடியாத கேள்வின்னு ஒண்ணு உலகத்துல இருக்குங்கிறீங்க ? அதுவே ஆச்சர்யம் தானே..//

அப்ப என்னை முடிச்சிக் கட்டுறதுன்னே முடிவு செய்துட்டீங்களா.... அவ்வ்....

குடுகுடுப்பை said...

பழமையார இப்படி ஆவின்னு சொல்லிட்டீங்களே.

நான் அமெரிக்கா ஒரு வருசம் கழிச்சுதான் எங்க வீட்டுக்கு போன் வந்துச்சு.

Anonymous said...

//அப்ப என்னை முடிச்சிக் கட்டுறதுன்னே முடிவு செய்துட்டீங்களா//

நாங்களெல்லாம் கோனார் நோட்ஸ் படிச்சித்தான் வளர்ந்தோம்.. உங்களுக்கு கோனாரே கனவுல வந்து பாடம் நடத்தினாங்க-ன்ன்னு என் பாட்டி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன் !!!

அவ்வலவு பெரிய வித்தகர் நீங்க.. உங்களை மாட்டி விட முடியுமா..


இப்போ கனவுலயும் பிஸியா எல்லார் கிட்டேயும் பேசி வேலை பாத்துக்கிட்டிருக்குற ஆள் உலகத்துலேயே 2 பேர் தான்..

ஒண்ணு நீங்க...

இன்னொன்னு...
யாரு.. நம்ம திமிங்கிலம் ஐயா கலிஞரு தான்.. அவர் தான் இன்னும் அண்ணா, பெரியார், எம்ஜியார், காயிதேமில்லத், இந்திராகாந்தி, ராஜீவ் ந்னு எல்லார் கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காரு..

உங்க 2 பேரையும் யாராலயும் மாட்டிவிடமுடியாது

சீமாச்சு..

Anonymous said...

//பழமையார இப்படி ஆவின்னு சொல்லிட்டீங்களே.

நான் அமெரிக்கா ஒரு வருசம் கழிச்சுதான் எங்க வீட்டுக்கு போன் வந்துச்சு.//
வாங்க குடுகுடுப்பையாரே..

பழமையாரை “ஆவிஅமுதா” ந்னு தானே சொன்னேன்.. அவரு ஒரு “மீடியமான” ஆளு தலைவா..!!!

நாங்க ரெண்டுபேரும் ரொம்ப குளோஸாக்கும்.. இப்படித்தான் அடிக்கடி வாரிப்போம்..

இப்ப வேற “பாமா” பத்தி எழுதியிருக்கார்.. இன்னும் சுவாரசியமாப் போகும் நு நினைக்குறேன்..

சீமாச்சு...

ராமலக்ஷ்மி said...

’முகுந்தா முகுந்தா’ கேட்டு குழந்தை சொக்கிப் போகிறாள் என்றால், நாங்களோ அவள் அழகில். அவள் அக்காவின் அசர வைக்கும் கேள்விகளிலும்தான்:)!

Seemachu said...

//’முகுந்தா முகுந்தா’ கேட்டு குழந்தை சொக்கிப் போகிறாள் என்றால், நாங்களோ அவள் அழகில். அவள் அக்காவின் அசர வைக்கும் கேள்விகளிலும்தான்:)!//

வாங்க ராமலட்சுமி.. அது எனனவோ அவளுக்கு அந்தப் பாட்டுத்தான் புடிக்குது. நாங்களும் “நாக்க முக்க” போட்டுப் பாத்தோம். கண்டுக்கவேயில்லியே !!

நன்றி..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) போன் நம்பர் மட்டும் தானே கேட்டாள் ? போன் வாங்கித்தரச் சொல்லலையா.. ?

Seemachu said...

//:) போன் நம்பர் மட்டும் தானே கேட்டாள் ? போன் வாங்கித்தரச் சொல்லலையா.. ?

//

வாங்க முத்துலட்சுமி.. அவகிட்டே நிறைய்ய ஃபோன் இருக்கு. ஃபோன் நம்பர் மட்டும் ஆண்டவன் கொடுத்த ஐடெண்டிடி ந்னு நெனச்சிக்கிட்டிருக்கா !!

உங்கள் வருகைக்கு நன்றி..