Thursday, April 09, 2009

78. சூரியன் அட்டகாசம் தாங்க முடியவில்லை..

என் பொண்ணு சூர்யாவுக்கு 6 வயசு ஆகுது. வீட்டுல அவளுக்குன்னு ஒரு ரூம் இருக்கு. ரூமுக்குள்ள நுழையறதுக்கு அவள் ரூல்ஸ் எல்லாம் தெளிவா எழுதி பாஸ்வேர்ட் போட்டு வெச்சிட்டா. அதை ரூம் கதவுலயும் ஒட்டியாச்சு. யார் அவ ரூமுக்கு வர்றதாயிருந்தாலும் கதவுகிட்ட நின்னு பாஸ்வேர்ட் சொல்லிட்டுத்தான் நுழையணும்..




Soorya's Room

3 Basic Rules

  • No Punching
  • No Kicking
  • No Hitting
  1. First get a toy and when your finished put it back and get a new one.
  2. Clean up after your mess.
  3. Please say the password before you come at the door.

அங்கே தான் பிரச்சினையே. பாஸ்வேர்ட் ஒரு நாளைக்கு 8 தடவ மாத்திடுவா..

I changed my room's password. I can tell that to you only Daddy. Dont tell mami and Shanmuga..

இப்படி 10 நிமிஷத்துல எல்லார்கிட்டேயும் சொல்லிடுவா. பாஸ்வேர்ட் எல்லாம் strawberry pie, Sameeya is a good girl, Thanksgiving day, memorial day இப்படி ஜனரஞ்சகமாத்தான் இருக்கும்.

இதுவரைக்கும் ஒரு 100 தடவை பாஸ்வேர்ட் மாத்தியாச்சி..

போதாக்குறைக்கு என் ரூமுக்கும் ரூல்ஸ் எழுதி ஒட்டி பாஸ்வேர்ட் போட்டாச்சி.. இதுல பாருங்க ரூல்ஸ் எழுதின பேப்பர்ல தேதிபோட்டு அதுல டாடி கையெழுத்தும் வாங்கிட்டா. அதை கதவுலயும் ஒட்டிட்டா. யாரும் ”எனக்குத் தெரியாதே” ந்னு சொல்லித் தப்பிக்க முடியாது...



Daddy's Room

4 Basic Rules

  • No Hitting
  • No Punching
  • No Crying
  • No Kicking

Rules Include:

  1. Take 1 book at a time and after you finish put it back!
  2. Don't touch things that are on the office table. They are IMPORTANT
  3. Give a hug to him before you leave his room

என் ரூம் பாஸ்வேர்ட் இப்போ “சரணம் சரணம் சண்முகா சரணம்”.. நீங்க வர்றதுக்குள்ள மாறிடும்.


என் ரூம் ரூல்ஸ்-ல ஒண்ணு.. ”Give him a hug before you leave the room".


பக்கத்து வீட்டு கன்னட மாமி ரூமுக்குள்ள வந்துட்டு திணறிட்டாங்க. அவங்க வீட்டுக்காரை கோச்சுக்காம எனக்கு Hug தர முடியாதுங்கிறதால அவங்களுக்காக 10 வினாடிகள் ரூல்ஸ் தளர்த்தப்பட்டது..


இன்னும் கொஞ்ச நாள்ல வீடு கோட்டை மாதிரி பாதுகாப்பா இருக்கும். திருட்டுப் பய உள்ள நுழைய முடியாது.. அவனுக்குத்தான் பாஸ்வேர்ட் தெரியாதே...


நீங்களும் உங்க ரூமுக்கு ஒரு பாஸ்வேர்ட் வெச்சிருங்க...

23 comments:

பழமைபேசி said...

அஃகஃகா! அறிவாளிகளுக்கு அறிவாளிகதானே சரிவரும்?!

குடுகுடுப்பை said...

பக்கத்து வீட்டு கன்னட மாமி ரூமுக்குள்ள வந்துட்டு திணறிட்டாங்க. அவங்க வீட்டுக்காரை கோச்சுக்காம எனக்கு Hug தர முடியாதுங்கிறதால அவங்களுக்காக 10 வினாடிகள் ரூல்ஸ் தளர்த்தப்பட்டது..

..

ஆஹாஆஆஆஆஆஆ

குடுகுடுப்பை said...

பொண்ணு அறிவாளிதான், என் பொண்ணுக்கு 5 வயசு ஆகுது, அவளுடைய அறைக்கு விளையாட மட்டும்தான், தூக்கம் எங்க கூடத்தான்.

அபிஅப்பா said...

\\பக்கத்து வீட்டு கன்னட மாமி ரூமுக்குள்ள வந்துட்டு திணறிட்டாங்க. அவங்க வீட்டுக்காரை கோச்சுக்காம எனக்கு Hug தர முடியாதுங்கிறதால அவங்களுக்காக 10 வினாடிகள் ரூல்ஸ் தளர்த்தப்பட்டது..\\

நோ நோ ரூல்ஸ்ன்னா ரூல்ஸ் தான்:-)) தளர்த்த படாது!

அண்ணா சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு!!!!!

அபிஅப்பா said...

சாமியா குட் கேர்ல்!!!!

பெண்டாஸ்டிக்!!! பாசம்ன்னா இந்த கால குழந்தைகள் கிட்ட கத்துகனும் அண்ணா!

ILA (a) இளா said...

சே, தனிநபரை முன்னிறுத்தும் போக்கை கண்டிக்கிறேன். காரணம் கடவுள்சொல் மாறிடுமே :(

துளசி கோபால் said...

கன்னடமாமி, சிட்டிங் ரூமை விட்டு எதுக்கு 'மத்த' ரூம்களுக்குப் போனாங்க?

வெல்டன் சூர்யா:-)

அன்புடன் அருணா said...

ரொம்பவும் ரசித்தேன்....சூர்யாவின் அட்டகாசத்தை..
அன்புடன் அருணா

KarthigaVasudevan said...

ஹா...ஹா..ஹா..சூர்யா பரவாயில்லை ;பாப்பு எங்க வீட்டு சுவர் முழுதும் எங்க பேமிலி போட்டோ ன்னு சொல்லிட்டு படமா போட்டு வச்சிருக்கா , சுவத்துல கிறுக்கக் கூடாதுன்னு சொன்னா கேட்கற வழியக் காணோம்.அவளோட டிராயிங் ஆர்வத்துக்கு நான் ஹெல்ப் பண்ணலைன்னு என் மேல புகார் வேற!!!

ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரியுது அவங்க நாம சொல்றதை கேட்கப் போறதில்லை.பேசாம குழந்தைங்க சொல்றதை நாம கேட்டுட்டுப் போய்ட வேண்டியது தான்!!!

ramachandranusha(உஷா) said...

ஏன் சீமாச்சு சார், பக்கத்து வீட்டு வெள்ளைக்கார மாமியை எல்லாம் வீட்டுக்கு கூப்பிடுவது இல்லையா :-)

சீமாச்சு.. said...

//பழமைபேசி said...
அஃகஃகா! அறிவாளிகளுக்கு அறிவாளிகதானே சரிவரும்?!

//
பழமைபேசி ஐயா.. வாங்க. உங்க அளவுக்குத் தமிழ்ல அறிவாளியா வரணுமுன்னு ஆசை இருக்கு. உங்க புண்ணியத்துல எங்க தமிழ் அறிவு வளந்துக்கிட்டிருக்கு. நீங்களெல்லாம் இருக்கும் போது அறிவை வளர்த்துக்க எங்களுக்குப் பஞ்சமில்லை என்பதே ஒரு பெரிய்ய வரம் தான் !!

சீமாச்சு.. said...

//பொண்ணு அறிவாளிதான், என் பொண்ணுக்கு 5 வயசு ஆகுது, அவளுடைய அறைக்கு விளையாட மட்டும்தான், தூக்கம் எங்க கூடத்தான்.//

குடுகுடுப்பையாரே..வருகைக்கு நன்றி !! ஒரு அப்பாவுக்கு பெண்பிள்ளைகள் தான் நெருக்கம். எனக்கு எப்போதும் எங்க அப்பா மேலே ஒரு கோவம் உண்டு. அவருக்கு ஏன் என் அக்காவையும் தங்கையையும் செல்லமா இருக்காங்க.. நான் மட்டும் செல்லமில்லை. இப்பத்தான் அதெல்லாம் புரியுது..

உங்க பொண்ணும் சூப்பரா வருவா. ரொம்ப ஃபோர்ஸ் பண்ணாமல் அவள் பாட்டுக்கு விட்டு அவளை ரசியுங்கள். சொர்க்கமே தெரியும்..

சீமாச்சு.. said...

//நோ நோ ரூல்ஸ்ன்னா ரூல்ஸ் தான்:-)) தளர்த்த படாது!

//
அபிஅப்பா..வாங்க. இதுக்குத்தான் உங்க மாதிரி தம்பியெல்லாம் பக்கத்துல வெச்சுக்க வேணும். வாய்ப்பு தவறிடிச்சி.. மறுபடியும் புடிச்சிருவோம்.. !!!

சீமாச்சு.. said...

//பெண்டாஸ்டிக்!!! பாசம்ன்னா இந்த கால குழந்தைகள் கிட்ட கத்துகனும் அண்ணா!//

அது என்னவோ ஷண்முகாவுக்கும் சூர்யாவுக்கும் சமீயா மேலே ரொம்ப பாசம். ரெண்டு பேரும் அவளுக்காக ரொம்ப உருகுவாங்க. எங்களையெல்லாம் விட்டுட்டு அவள் கோவையில வளர்வதில் எங்க எல்லார் மனசிலயும் ஒரு மெல்லிய சோகம் இருக்கத்தான் செய்யுது :(

சீமாச்சு.. said...

// ILA said...
சே, தனிநபரை முன்னிறுத்தும் போக்கை கண்டிக்கிறேன். காரணம் கடவுள்சொல் மாறிடுமே :(

//

அன்புத்தம்பி இளா.. உண்மையாவே இந்தப் பின்னூட்டம் எனக்குப்புரியல.. அபிஅப்பா கிட்டேயும் “இளா தம்பி என்ன சொல்லுதுன்னு புரியுதா?” ந்னு கேட்டேன். கொஞ்சம் வந்து விளக்கிச் சொல்லு ராஜா..

சீமாச்சு.. said...

//கன்னடமாமி, சிட்டிங் ரூமை விட்டு எதுக்கு 'மத்த' ரூம்களுக்குப் போனாங்க?

வெல்டன் சூர்யா:-)

//
துளசியக்கா.. நான் எப்ப பதிவிட்டாலும் உங்க பின்னூட்டம் எதிர்பார்க்கிறதுதான்.. நல்ல கேள்வி கேட்டீங்க.. கன்னட மாமி அவங்க பொண்ணுங்களத் துரத்திக்கிட்டு நம்ம ரூமுக்குள்ள வந்திட்டாங்க. பாவம்..

சீமாச்சு.. said...

//ரொம்பவும் ரசித்தேன்....சூர்யாவின் அட்டகாசத்தை..//

அருணா வாங்க. வருகைக்கு நன்றி. சூர்யா ஒரு கடைந்தெடுத்த அப்பா பெண். என்னை எப்பொழுதும் அவள் குழந்தை மாதிரி தான் நேசிப்பாள். ஷண்முகாவும் அப்படித்தான். சமீயாவுக்கு இப்பத்தான் 1 வயசு ஆகுது.

சீமாச்சு.. said...

//மிஸஸ்.தேவ் said...
ஹா...ஹா..ஹா..சூர்யா பரவாயில்லை ;பாப்பு எங்க வீட்டு சுவர் முழுதும் எங்க பேமிலி போட்டோ ன்னு சொல்லிட்டு படமா போட்டு வச்சிருக்கா , சுவத்துல கிறுக்கக் கூடாதுன்னு சொன்னா கேட்கற வழியக் காணோம்.அவளோட டிராயிங் ஆர்வத்துக்கு நான் ஹெல்ப் பண்ணலைன்னு என் மேல புகார் வேற!!!

ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரியுது அவங்க நாம சொல்றதை கேட்கப் போறதில்லை.பேசாம குழந்தைங்க சொல்றதை நாம கேட்டுட்டுப் போய்ட வேண்டியது தான்!!!

//

மிஸஸ். தேவ், வாங்க. பாப்பு பண்ணற் அட்டகாசங்களை ரசியுங்க. சுவர் தானே. மறுபடியும் பெயிண்ட் அடிச்சிட்டாப் போச்சி..

குழந்தைகளைப் பொறுத்த வரை உங்கள் அனுமானங்கள் சரிதான்.

சீமாச்சு.. said...

// ramachandranusha(உஷா) said...
ஏன் சீமாச்சு சார், பக்கத்து வீட்டு வெள்ளைக்கார மாமியை எல்லாம் வீட்டுக்கு கூப்பிடுவது இல்லையா :-)

//
உஷா... வாங்க. திருவழந்தூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் போனீங்களா?

வெள்ளைக்காரமாமியெல்லாம் கூப்பிடலாம்தான். நம்ம பொண்ணுங்களெல்லாம் அம்மாவுக்கு ரொம்ப ஆதரவு. நம்க்கு மெஜாரிட்டி இல்லை. குடும்பத்துல ஓட்டுரிமையும் கிடையாது. நான் இங்க ஒரு மைனாரிட்டி :(

ஆயில்யன் said...

ஆஹா !


எம்புட்டு பாஸ்வேர்டு

எல்லாம் பிளாக் டைட்டிலுக்கு சூப்பரா யூஸ் பண்ணிக்கலாம் போல :)))))

அண்ணே உங்க ரூமுக்கு பாஸ்வேர்டுதான் இன்னும் கலக்கலா இருக்கு :)))

ஆயில்யன் said...

//இப்படி 10 நிமிஷத்துல எல்லார்கிட்டேயும் சொல்லிடுவா//

அட...! இதுல நம்ம ஊர்வாசம் வருதே!

அபி அப்பா உங்களுக்கு தெரியுதா ???

:))))))))

ராமலக்ஷ்மி said...

அட்டகாசம்:)!

hayyram said...

gud gud.

ram

www.hayyram.blogspot.com