Monday, July 13, 2009

82. விஞ்ஞானமும் தேரோட்டமும்

மயிலாடன் என்பவர் விடுதலை இதழில் எழுதிய “விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி!” என்ற வரி ரொம்ப யோசிக்க வைத்தது. மயிலாடன் எவ்வளவு பெரிய்ய விஞ்ஞானி என்பது தெரியாது. எல்லாவற்றையும் (அவர் பகுத்தறிவு கொண்டு பார்க்க விரும்பாததைத் தவிர்த்து) அவர் கொள்கையில் பார்ப்பவர் என்பது மட்டும் புரிகிறது.

oOo

எதையுமே ஆழ்ந்து கற்றவர்க்குத்தான் தெரியும் அவர் இன்னும் கற்க வேண்டியது உலகளவு என்பது. படிக்கப் படிக்கத் தான் வரும் நமக்குத் தெரியாதது நிறைய என்ற பயம். அந்த பயம் வரவில்லையென்றால் போதுமான அளவு கற்கவிலை என்று பொருள்.


இரண்டாம் வகுப்பு படிக்கும் பையனிடம் கேளுங்கள் “6 ல் 4 போனால் எவ்வளவு?” என்று? உடனேயே சொல்லிவிடுவான் “2” என்று. அவனிடமே “4ல் 6 போனால் எவ்வளவு?” என்று கேட்டுப்பாருங்கள். “போகவே போகாது .. உனக்கு கணக்கே தெரியவில்லை” என்று சொல்லிவிடுவான். அவனளவுக்கு அது தான் சரி

அது போல எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து உலகம் நகைக்கும். நீங்கள் படித்தது வெறும் இரண்டாம் வகுப்பு தான் என்றால் உங்களுக்குப் பாராட்டு நிச்சயம். அந்தப் பாராட்டு மட்டுமே உங்களை அறிவாளி ஆக்கிவிடாது. அதிக பட்சம் 3ம் வகுப்புக்கு பாஸ் செய்யப் படுவீர்கள். அது தான் தகுதி “உலகை வென்றுவிட்டோம்” என்று நினைத்தால் ஆபத்துதான்..


விஞ்ஞானம் என்பது இன்றும் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் துறை மட்டுமே. அதனால் தான் இன்னும் ஆராய்ச்சிக்கென்று பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப் படுகிறது. இன்னும் கண்டுபிடிக்கப் படவேண்டியது எவ்வளவோ. இன்னும் நம்மால் செயற்கை இரத்தம் கண்டுபிடிக்கப் படவில்லை. மரணம் என்பதை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இது தான் மரணம் என்று சொல்லிவிட்டால்.. மரணம் வராமலிருக்க வழி கண்டுபிடித்து விடலாம். இன்னும் சொல்லத் தெரியவில்லை. மரணத்தின் விளைவுகள் மட்டுமே விவரிக்க முடிகிறது. எவ்வளவோ சொல்லலாம்.

கடலுக்கடியில் நாற்பதாயிரம் அடியில் தொலைந்துவிட்ட விமானத்தின் கையகல கருப்புப் பெட்டியை கண்டிபிடிக்க முடியும் என்று 10 நீர்மூழ்கிக் கப்பல்களையும் துடைப்பைக்கட்டை அளவு மானியையும் வைத்துக்கொண்டு கடலையே அளந்து தேடியவர்களைக் கேளுங்கள்..” இந்தப் பெட்டி கிடைக்க வேண்டுமென்று ஆண்டவனை எப்படியெல்லாம் பிரார்த்தித்தார்களென்று”.. அவர்களுக்குத் தெரியும் ஆண்டவன் அருளில்லாமல் அது கிடைக்காதென்று. முடிந்த அளவு முயற்சி செய்யவும், முயற்சி திருவினையாக்கும் என்று நம்பவும் மட்டுமே முடியும். ஆழ்கடலில் தேடிய அனுபவம் மட்டுமே கிடைக்கும். நம் எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் விட ஆண்டவன் படைத்த இயற்கை எவ்வளவு பெரியதென்ற ஞானம் மட்டுமே மிச்சம்.


விஞ்ஞானம் இன்னும் யுகங்களுக்கு முழு வளர்ச்சி அடையாது. அதுவரை காத்திருக்கவும் நம்க்கு வாழ்க்கை இருக்காது. அதுவரை ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து.. ஆக்க பூர்வமான சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. ”மக்கள் சேர்ந்து தேர் ஓட்டுகிறார்களா” அவர்கள் உணர்வுகளை மதித்து அவர்களுடன் சேர்ந்து தேர் இழுங்கள். இல்லையேல், ஒதுங்கியிருந்து உங்கள் வேலையைப் பாருங்கள். இது தவிர்த்து விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்தால் விஞ்ஞானியாகத் தேர்ந்து ஏதாவது முயற்சி செய்யுங்கள். அரைகுறையாகப் பேசுவது நம் அறியாமையையே வெளிச்சம் போட்டுக்காட்டும்.


திருவிழாக்கள் எல்லாமே ஒரு team development activity தான். ஒரு குழு மனப்பான்மையை வளர்க்கும் ஒரு விஷயம்தான். அதை எல்லாரும் சேர்ந்து செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. அதனால் தான் “ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றார்கள். எந்தப் பணக்காரனும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தேரிழுக்கப் போகிறேன் என்று சொன்னதில்லை. அவன் ஒருவனால் மட்டுமே இழுக்கப் பட முடியக்கூடாதென்பதால்தான் தேர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.
“கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னது கூட... அந்த ஊரில் உள்ளவர்களிடம் ஒற்றுமையிருக்காதென்று சொல்லத்தான். ஊர் ஒற்றுமையாக இருந்தால் கோவில், தேரோட்டம், சமூகப் பணிகளில் நாட்டம் இவற்றைக் குறிப்பதாகவே நினைத்தார்கள் அந்தக் காலத்தில். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற எண்ணங்களை வளர்ப்பதற்காகவே இவையெல்லாம் வந்திருக்க வேண்டும்.
இறைபக்தி என்பது ஒரு moral driving force. அது இல்லாவிட்டால் உலகம் சுடுகாடாகிவிடும்.


கட்டுடைப்பதென்பது வெகு எளிது.. கோணல் மாணலான சிந்தனைகளே போதும். மனநோயாளிகளெல்லாமே தீவிரமான கட்டுடைப்பாளர்கள் தான். உண்மையான சோதனையென்பதே கட்டமைப்பதில் தான் இருக்கிறது.கலைஞரைக் கேளுங்கள், திமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் உள்ள சிரமங்களை. முடிந்தால் அது போன்று ஒரு கட்சியைத் தொடங்கி நாட்டுக்கு நல்ல ஆட்சியைத் தர முயற்சி செய்யுங்கள். அதற்கு ஒருவரின் வாழ்நாள் போதும் என்று தோன்றவில்லை. முடியலாம்..எல்லா சக்திகளும் உங்கள் அருகில் இருந்தால்..


கோவம் கொண்ட ச்சின்னக் குழந்தையைப் போல எல்லாவற்றையும் கட்டுடைக்கப் போகிறேன் என்று சமுதாய சீர்குலைவுக்கு வழி பார்க்காதீர்கள்..


விஞ்ஞானம் ஒரு மிகப் பயனுள்ள துறை, அது வளரவேண்டியது அவசியம். அது வளர்ந்தால் உலகத்தில் வறுமையை ஒழிக்க முடியும். எல்லோரும் நலமாக வாழ முடியும். அந்த அளவு முழு வளர்ச்சி பெற வேண்டுமென்பது தான் எல்லா விஞ்ஞானிகளும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். அப்துல் கலாமைக் கேளுங்கள். இதையேதான் சொல்வார். ஆண்டவன் சக்தியை விஞ்ஞானம் வென்றுவிட்டதென்ற வெற்றுவாதங்கள் விஞ்ஞானத்தை வளர்க்காது..

27 comments:

கோவி.கண்ணன் said...

//கோவம் கொண்ட ச்சின்னக் குழந்தையைப் போல எல்லாவற்றையும் கட்டுடைக்கப் போகிறேன் என்று சமுதாய சீர்குலைவுக்கு வழி பார்க்காதீர்கள்..//

சீமாச்சு அண்ணா,

அறச்சீற்றம் ... அருமை !

எல்லாவற்றையும் அறிவியல் கொண்டு பார்க்கக் கூடாது என்பது போலவே, பழமை வாதங்கள் அனைத்தும் நம் நன்மைக்கு என்று விட்டு வைத்திருப்பதும் ஆபத்தானது தான்.

Seemachu said...

//பழமை வாதங்கள் அனைத்தும் நம் நன்மைக்கு என்று விட்டு வைத்திருப்பதும் ஆபத்தானது தான்.
//

கோவியாரே.. வாங்க.. பழமைவாதங்கள் அனைத்தும் நம் நன்மைக்கென்று விட்டு வைக்கச் சொல்லவில்லை. அதனால் ஏதாவது சிறு நன்மைகள் இருக்கலாம். அதை விட பெரிய நன்மையை சமுதாயத்துக்குத் தரும் இன்னொரு புதுமைவாதத்தைக் கட்டமையுங்கள். வரவேற்கிறேன்.. சமுதாயம் உங்கள் புதுமையை வரவேற்கும் போது பழமைவாதங்கள் தாமாகவே கட்டுடைக்கப் பட்டுவிடும்..

புதுசாக் கார் வாங்கலாமென்று இருக்கிற காரைக் கொளுத்திவிட்டால் அப்புறம் நடராஜா சர்வீஸ்தான். அதுவரை நம் கார் ஒரு பழைய லொடலொடா தான் என்ற எண்ணத்துடன் புதுமைகான தேடலைத் துவக்குங்கள்..

வழி தானாகப் பிறக்கும்..!!!

நாகை சிவா said...

கலக்கல் அண்ணாச்சி

வால்பையன் said...

//இறைபக்தி என்பது ஒரு moral driving force. அது இல்லாவிட்டால் உலகம் சுடுகாடாகிவிடும்.//

இப்போது என்னவோ இறைபக்தியால் தான் உலகம் சுடுகாடாகி கொண்டிருக்கிறது!


தோர் விஞானத்துல ஓடுதோ, பக்தியில ஓடுதோ தெரியல ஆனா ஆன்மீகவாதிகளின் பொழப்பு நல்லா ஓடுது!

பழமைபேசி said...

//அதனால் தான் “ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றார்கள். எந்தப் பணக்காரனும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தேரிழுக்கப் போகிறேன் என்று சொன்னதில்லை. அவன் ஒருவனால் மட்டுமே இழுக்கப் பட முடியக்கூடாதென்பதால்தான் தேர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது//

மனசைத் தொட்டீங்க...

வால்பையன் said...

//பழமைபேசி said...

//அதனால் தான் “ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றார்கள். எந்தப் பணக்காரனும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தேரிழுக்கப் போகிறேன் என்று சொன்னதில்லை. அவன் ஒருவனால் மட்டுமே இழுக்கப் பட முடியக்கூடாதென்பதால்தான் தேர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது//

மனசைத் தொட்டீங்க..//


தொட்டதை சொன்னிங்க, ஏன் விட்டதை விட்டிங்க, சுதானமா பணக்காரனை தொட்டவர், உயர்சாதிகளை விட்டது ஏன்?

மதத்தின் வண்டவாளம், தண்டவாளம் ஏறிரும்னு தானே!

தமிழ் ஓவியா said...

உங்க தேர் தாழ்த்தபட்டவர்களின் வீதிக்கு மட்டும் வர மறுப்பது ஏன்?

வீதிக்கே வர மறுக்கும் போது தாழ்த்தப் பட்டவனும் ஒடுக்கப்பட்டவனும் எங்கே தேரை வடம் பிடித்து இழுப்பது?

கண்டதேவியில் நடக்கும் கூத்துக்களை அறிவீரா சீமாச்சு. சும்மா கிச்சுகிச்சு மூட்டாதீங்க சீமாச்சு.

//“கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னது கூட... அந்த ஊரில் உள்ளவர்களிடம் ஒற்றுமையிருக்காதென்று சொல்லத்தான்.//

பல ஊரில் வெட்டுக் குத்து நடப்பதற்கு காரணமே கோயில் தான் சீமாச்சு

//எல்லா விஞ்ஞானிகளும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றார்கள்.//

அவன் விஞ்ஞானி அல்ல சீமாச்சு அஞ்ஞானி

நாங்க இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனாலும் உங்க அளவுக்கு எங்களால் முடியாது சீமாச்சு.

அப்பாவி முரு said...

கண்மூடித் தன்மான கடவுள் நம்பிக்கையும் தப்பு,

கண்மூடித் தனமாக கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பதும் தப்புதான்.

ரெண்டையுமே எளிமைப்படுத்தி சாதாரண மக்களுக்கும்(என்னையும் சேர்த்துதான்)புரியும்படி சொல்லுதன் நலம்.

அப்படி இல்லாத பட்சத்தில் கடவுளும் - பெரியாரும் ஒரே தூரம் தான்.

அப்பாவி முரு said...

சீமாச்சு அண்ணனை பலநாளாப் படிச்சும், இன்னிக்குத் தான் பின்னூட்டமிடும் புண்ணியம் பெற்றேன்.(சோம்பேறித்தனம் தான்)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி!//

உண்மை தானே சீமாச்சு அண்ணா!
அதுக்கு எதுக்கு இம்புட்டு கோவம் வந்துரிச்சி உங்களுக்கு? :))

ஏன், விஞ்ஞானத்தை ஆன்மீகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது-ன்னு எதுனா விஞ்ஞான விதி இருக்கா என்ன? இல்லீன்னா விஞ்ஞானம் எங்களுக்கு மட்டுமே சொந்தம்-ன்னு உரிமை கொண்டாடிக்க முடியுமா?

காலம் காலமாத் தேரை விஞ்ஞானத்தைக் கொண்டு தான் ஓட்டுறாங்க! தேர் சக்கரம் திருப்பவும், நிறுத்தவும் கந்து/ஆப்பு-ன்னு எல்லாம் கருவிகள் வச்சிருந்தாங்களே ஆயிரம் வருசம் முன்னாலேயே!

விஞ்ஞானம் தேரை இயக்க,
தேரை மக்கள் இயக்க,
அனைத்தையும் இறைவன் இயக்கறான்!
:)

இதைத் தேர்ந்து கொண்டால் தேர் ஓட்டலாம்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தேர் தாழ்த்தப்பட்டவர்கள் வீதிக்கும் வந்திருக்கு!
இன்றைக்கும் பெண்கள் மட்டுமே இயக்கும் தேர்களும் உண்டு!

பள்ளி வாசலில் நிறுத்தி, குரான் ஓதி, பச்சைப் பட்டுத் துணி கட்டிக் கொள்ளும் பெருமாளும் உண்டு!
தலித் குடியிருப்புகளைத் தேடிச் சென்று தேர் ஓட்டி விழா காணும் தலித கோவிந்தம் போன்ற விழாக்களும் உண்டு!

கண்டதேவி ஒரு தனிப்பட்ட ஊரின் அவமானம்! அதைப் பகுத்தறிவுச் சூரியன்களால் கூடச் சுட்டெரிக்க முடியாமல், இன்றும் அரசியலால் திண்டாடுகிறது! அரசும், மாவட்ட ஆட்சியாளரும் கூட நடத்தித் தர முடியாத வெட்கக் கேடு!

அதுக்கு மற்ற தேர்த் திருவிழாக்களைக் குற்றஞ் சொல்லுவது "அறிவியல் சிந்தனை" ஆகாது! அரசியல் சிந்தனை வேணும்ன்னா ஆகும்! :)

தமிழ் ஓவியா said...

//அனைத்தையும் இறைவன் இயக்கறான்!//

கண்டதேவி பிரச்சனையை இயக்குவதில் இறைவனுக்கு சம்பந்தமில்லையா?

இறைவனின் சக்தி அவ்வளவுதானா?

கபீஷ் said...

//எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து உலகம் நகைக்கும். //

:-) :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கண்டதேவி பிரச்சனையை இயக்குவதில் இறைவனுக்கு சம்பந்தமில்லையா?//

இல்லை!

//இறைவனின் சக்தி அவ்வளவுதானா?//

"இல்லாத இறைவனின்" சக்தியைப் பற்றி ஏன் கவலைப்படறீங்க? :)
இருக்கும் மனிதர்களின் வெறியைப் பற்றிக் கவலைப்படுங்களேன்!

கண்டதேவி இறைவனின் தேரோட்டம் அல்ல!
மனிதனின் ஆதிக்க வெறித் தேரோட்டம்!

சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் போற்றும்
பொன்னரங்கம்
"அடியார்கள் பணியாதார்" புலையர் தாமே!

பாதியாய் அழுகிய கால் கையரேனும்
பழிதொழிலும் (so called)இழிகுலமும் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பார் ஆகில்
அவர் கண்டீர் "நாம் வணங்கும் அடிகள் ஆவார்!"

sriram said...

அன்பின் வாசன்
இதை இதை இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நான் எழுதினால் இந்த அரை வேக்காட்டுத்தனமான கருத்துக்களுக்கு பதில் சொல்லணும், நான் கொஞ்சம் சூடு பார்ட்டி, மோதல்களை தவிர்க்கவே எழுதாமல் சில பல நல்ல பதிவர்களை படித்து வருகிறேன், நீங்கள், KRS, பழமை பேசி போன்ற level headed ஆட்கள் பதில் சொன்னால் தேவலாம்.

வால்பையன் : உங்கள் ஜாதி எதிர்ப்பு எனக்கும் உடன்பாடே, ஆனால் சும்மானாச்சும் எல்லாத்தையும் எதிக்க வேண்டாமே...

என்றும் அன்புடன்
Boston ஸ்ரீராம்

Seemachu said...

//நாகை சிவா said...
கலக்கல் அண்ணாச்சி
//

நன்றி நாகை சிவா !! பதிவைப் படித்துக் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி

Seemachu said...

//தோர் விஞானத்துல ஓடுதோ, பக்தியில ஓடுதோ தெரியல ஆனா ஆன்மீகவாதிகளின் பொழப்பு நல்லா ஓடுது!//

வால்பையன்.. வாங்க.. ஒரு வகையில நான் கூட ஒரு வால்பையன் தான்..

அரசியல்வாதிகளுக்கு பொழப்பு நல்லா ஓடலையா? சினிமாக்காரங்களுக்கு ஓடலையா? அது போல ஆன்மீகவாதிகளுக்கு பொழப்பு ஓடினா உங்களூக்கு என்ன பிரச்சினை.. உங்களை ஒண்ணும் அவங்க ஆன்மீகப் பாதைக்கு வாங்க அப்படீன்னு சொல்லலையே.. அப்புறம் ஏன் அவங்க பொழப்பை நீங்க கேள்விக்குறியாக்கணும்??

Seemachu said...

//மனசைத் தொட்டீங்க...
..//

பழமைபேசி ஐயா.. இப்பல்லாம் நீங்க ரொம்ப ‘பிரபல’ பதிவராயிட்டீங்க.. நீஙகளெல்லாம் நம்ம பதிவுக்கு வருகை தருவது மகிழ்ச்சியாக இருக்கு..

நன்றி

Seemachu said...

//தொட்டதை சொன்னிங்க, ஏன் விட்டதை விட்டிங்க, சுதானமா பணக்காரனை தொட்டவர், உயர்சாதிகளை விட்டது ஏன்?

மதத்தின் வண்டவாளம், தண்டவாளம் ஏறிரும்னு தானே!//

வால்பையன்.. நல்ல கேள்வி.. சாதிகளைப் பற்றிப் பேசலாம்தான்.. அது எனக்கு ஒப்புமையில்லாத விஷயம். என் கல்யாணத்துக்குப் பெண் தேடி நான் Jan 21 1997 Hindu-ல் விளம்பரம் கொடுத்த போது நான் எழுதிய வாசகமே “No Dowry please. Caste Religion No bar"..

சாதியைப் பற்றி பேசுவதே அதை வளர்ப்பது ஆகும். நான் அது பற்றிப் பேச விரும்புவதில்லை. யாரிடமும் அவர் என்ன சாதி என்று கேட்டு நட்பின் தரத்தை நிர்ணயிப்பதில்லை..

Seemachu said...

// தமிழ் ஓவியா said...
உங்க தேர் தாழ்த்தபட்டவர்களின் வீதிக்கு மட்டும் வர மறுப்பது ஏன்?

//

தமிழ் ஓவியா.. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.. உங்கள் கேள்விக்கான கேயாரெஸ் அவர்களின் பதில்களோடு நான் ஒத்துப் போகிறேன்.

பதிவில் இரு தரப்பினரும் ஆரோக்கியமாக கருத்துக்கள் பரிமாறிக் கொள்வது மனதுக்கு இதமாக இருக்கிறது..

நேற்றைய பதிவை எழுதும் போது மிகக் கவனமாக உங்களைப் புண்படுத்தும் ப்டி எந்த வார்த்தையும் வந்துவிடாதபடி மிக சிரத்தையாக படித்துப் படித்து எழுதினேன்..

அது நல்ல முறையில் நம்மிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்தது மிக மகிழ்ச்சி..

எல்லாம் ஆண்டவன் செயல் !!

Seemachu said...

//சீமாச்சு அண்ணனை பலநாளாப் படிச்சும், இன்னிக்குத் தான் பின்னூட்டமிடும் புண்ணியம் பெற்றேன்.(சோம்பேறித்தனம் தான்)

//

அப்பாவி முரு... 82 பதிவு எழுதிய பின்னால் தான் உங்கள் பின்னூட்டம் பெறும் பாக்கியம் பெற்றேன் !!

என் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி !!

அன்புடன்,
சீமாச்சு...

Seemachu said...

//சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் போற்றும்
பொன்னரங்கம்
"அடியார்கள் பணியாதார்" புலையர் தாமே!
//

கேயாரெஸ்.. எப்படி இப்படியெல்லாம். ஆபீஸ்லேருந்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல இருக்கு.. அப்ப இதெல்லாம் மனப்பாடமா நினைவிலிருந்து எழுதினீங்களா..
எப்படி இப்படியெல்லாம்.. எல்லாம் அப்படியே வர்றது தானுங்களே..

உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

//வால்பையன் : உங்கள் ஜாதி எதிர்ப்பு எனக்கும் உடன்பாடே, ஆனால் சும்மானாச்சும் எல்லாத்தையும் எதிக்க வேண்டாமே...//

சாதி பிரச்சனைக்கும் அடிப்படையாக மதமே இருப்பதால் எதிர்க்க வேண்டியிருக்கிறது!

சும்மானாச்சுக்கும் சிலர் ஆதரிக்கும் போது சும்மானாச்சுக்கும் நான் எதிர்க்ககூடாதா? பாஸ்டன் பாலா சார்!

தமிழ் ஓவியா said...

கே.ஆர்.எஸ் சொன்னது (முதலில்)

//விஞ்ஞானம் தேரை இயக்க,
தேரை மக்கள் இயக்க,
அனைத்தையும் இறைவன் இயக்கறான்!//

கே.ஆர்.எஸ் சொன்னது (இரண்டாவதாக)

//"இல்லாத இறைவனின்" சக்தியைப் பற்றி ஏன் கவலைப்படறீங்க?//

நன்றி கே.ஆர்.எஸ்

//இருக்கும் மனிதர்களின் வெறியைப் பற்றிக் கவலைப்படுங்களேன்! //

மனிதர்களுக்கு வெறியை ஊட்டுவதே கடவுள். மதம், ஜாதி, இதற்கு ஊற்றுக்கண்ணாக செயல்படுவது பார்ப்பனியச் சிந்தனைகள்.

மனிதனின் செயற்கையான வெறியை அடக்கி மனிதநேயனாக ஆக்க மேற்கண்டவைகளை ஒழிக்க வேண்டியது அவசியமான பணி கே.ஆர்.எஸ்.

----------தொடர்வோம்.

sriram said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் - என் பின்னோட்டங்களுக்கு மட்டும் தொடர்ந்து பாரா முகம் காட்டுவது ஏனோ வாசன்?

வால் பையன் : நான் பாஸ்டன் பாலா அல்ல, பாஸ்டன் ஸ்ரீராம். என் கருத்துக்களுக்கு பிரபல பதிவர் பாலாவை பொறுப்பாக்க வேண்டாம்.

"சாதி பிரச்சனைக்கும் அடிப்படையாக மதமே இருப்பதால் எதிர்க்க வேண்டியிருக்கிறது" --- கண்டிப்பாக இல்லை, சாதி பிரச்சனைகள் அனைத்தும்
ஒரு மதத்திற்கு உள்ளேதான். (இந்து மதத்தில் பல, இஸ்லாத்தில் shia vs sunny, கிருஸ்தவ மதத்தில் catholic vs protastant), தொடர்ந்து இங்கேயோ அல்லது வேறொரு தளத்திலோ பேசலாம்.

"சும்மானாச்சுக்கும் சிலர் ஆதரிக்கும் போது சும்மானாச்சுக்கும் நான் எதிர்க்ககூடாதா"
காரணம் இல்லாமல் கண்மூடித்தனமான ஆதரவை (ex ஜாதி பற்று) நானும் எதிர்க்கிறேன், வாசன் அவர்களும் அதற்கு ஆதரவில்லை என்று ஒரு பதிலில் சொல்லி இருக்கிறார். மடையன் மடையனாகவே இருக்கட்டும், நாமாவது ஆதரவிலும் எதிர்க்கும் போதும் லாஜிக்கோடு இருப்போம், இப்போவாவது சும்மனாச்சுக்கும் எதிர்க்க மாட்டேன் என்று கூறுவீர்களா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எப்படி இப்படியெல்லாம்.. எல்லாம் அப்படியே வர்றது தானுங்களே..
உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள்..//

ஹிஹி! சீமாச்சு அண்ணே! வேணாம் குறும்பு! அடியேன் சித்தெறும்பு! :)
அது பாசுரம்! சாதி சமய வேறுபாடு காட்டி அடியார்களைப் பணியாதவர்களை அப்படிச் சாடுறாரு! :)

கண்டதேவி கோயில் தேரைப் பற்றியோ, அங்குள்ள இறைவன் பேரோ பெரும்பான்மையான பொது மக்களுக்கு ஏதாச்சும் தெரியுதா? இல்லை!

ஏன்னா அங்கு தேரிலே இறைவனை ஏற்றுவதில்லை!
தங்கள் மேலாதிக்க மனப்பான்மையை ஏற்றி ஓட்டுகிறார்கள்!

அது நெடுநாள் மக்கள் மனதில் நிற்காது! பக்தியை விட பயம் தான் வரும்! ஆனாலும் ஒப்புக்கு ஓட்டணும்-ன்னு ஓட்டறாங்க!

பெரியார் இப்போது இருந்திருந்தால், கண்டதேவிக்கு வேற மாதிரி ஏதாச்சும் உருப்படியாப் பண்ணியிருப்பார். ஆனால் இப்போது அரசியலே அதிகம் இருப்பதால், அரசே கண்டதேவியை வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கு! அதான் கொடுமை! :(
*******************************

@தமிழ் ஓவியா
தங்கள் நோக்கமும் தாக்கமும் நியாயமானதே! சமயத்தை ஒரு அமைப்புக்குள் கட்டமைக்கும் போது, இப்படிப் பக்க விளைவுகள் வரத் தான் செய்கின்றன!
முற்றிலுமான களை ஒழிப்பு என்பது நெலத்துல கிடையவே கிடையாது! நெல்லு வெதைக்க வெதைக்க புல்லு பிடிங்கிட்டுத் தான் இருப்பாங்க!

பார்க்கப் போனால், பகுத்தறிவாளர்களும் புல்லைக் களையெடுத்து களையெடுத்து இறைத் தொண்டே செய்கிறார்கள்!

வெளியில் இருந்து களையெடுப்பதை விட, சமயத்துக்கு உள்ளிருந்தே களையெடுப்பது நெடு நாள் நிலைக்க வழி செய்யும்! இராமானுசர் ஆலயக் கருவறைகளில் தமிழ் கொண்டு வந்ததைப் போல!

"இல்லாத இறைவனின்" சக்தியைப் பற்றி ஏன் கவலைப்படறீங்க-ன்னு சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்டேன்! என்ன இருந்தாலும் அடியேன் முன்னாள் பெரியார் பாசறை அல்லவா? :)))

சொல்ல வந்தது என்னான்னா...
விஞ்ஞானத்தால் தேர் ஓடுவது என்பது நகைப்புக்குரிய விடயம் அல்ல!
என்னிக்குமே விஞ்ஞானத்தால் தான் அது ஓடியது! அன்னிக்கு கந்து/ஆப்பு-ன்னு simple machines and 1st order lever வச்சி ஓட்டினாங்க! இன்னிக்கு Hydraulics - 3rd order simple machine வச்சி ஓட்டறாங்க! அம்புட்டு தான்!

அறிவியலை ஆன்மீகத்தில் பயன்படுத்தறாங்களே-ன்னு கேலி பேச வேணாம் என்பது தான் நான் உங்களைக் கேட்டுக் கொள்வது! சொல்லப் போனால் அறிவியல் உள்ளே வர வர, சக்கை நீங்கும்! உங்கள் நோக்கமும் ஈடேறும்! விஞ்ஞானமும் மெய்ஞானமும் என்றுமே நண்பர்கள் தான்! :)

தங்கள் களையெடுப்பு தொடர அடியேன் வாழ்த்துக்கள்!
அதனால் பயன் பெறுவதும் நற் சமயமே என்பதால்! :)

அமர ஓர் அங்கம் ஆறும்
வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய
சாதி அந்தணர்கள் ஏலும்

நுமர்களைப் பழிப்பார் ஆகில்
நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
"அவர்கள் தாம் புலையர் போலும்
அரங்கமா நகருளானே"!

Seemachu said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் - என் பின்னோட்டங்களுக்கு மட்டும் தொடர்ந்து பாரா முகம் காட்டுவது ஏனோ வாசன்?
//

ராஜா.. இப்படியெல்லாம் அளுவக் கூடாது.. உங்க பின்னூட்டத்துக்கெல்லாம் பாரா முகமா? அப்படியெல்லாம் கிடையாது..

கொஞ்சம் பொறுத்து பதில் போட்டா.. தமிழ்மணத்துல இன்னும் கொஞ்ச நேரம் நிக்குமே ந்னு வெயிட் பண்ணினேன்.. அதுக்குள்ள மாமி போன் பண்ணினாங்களா.. பிஸி ஆகிட்டேன்..

மன்னிச்சிக்க ராஜா..