Wednesday, July 29, 2009

85. நாம இந்த யோசனை சொன்னா விகடன் கேக்குமா?

இந்த மினிஸ்டர் ராஜா கூட பெரிய்ய ரோதனையாப் போச்சி.. அந்த ஆளூ எல்லா ஊழலும பண்ணுவாராம் ஆனால் அதை விகடன் மாதிரி பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாதாம்.

நியாயமான ஆளா இருந்தால் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டையும் நியாயமான முறையில் எதிர்த்து வெளியில வரணும். அப்படியில்லியா, பொது எம்.பி பதவியையே ராஜினாமா பண்ணிட்டு குடும்பத்தோட எங்கியாவது போய் செட்டிலாயிடணும். ரெண்டும் இல்லாமல் கோர்ட்டுக்குப் போயி “என்னக் கிள்ளீட்டான் சார்...” ரேஞ்சுக்குப் போயி தடை வாங்கறது அழுகுணி ஆட்டம். இதெல்லாம் ஒரு delay tactics தான். எப்படியும் தீர்ப்பு வர ஒரு ஆறு மாசமாச்சும் நிச்சயமா ஆகும். அது வரைக்கும் விகடன் வாயைக் கட்டி வெச்ச மாதிரி ஆச்சி. அப்படியே தீர்ப்பு பாதகமா வந்தால் மேல் முறையீடு இருக்கவே இருக்கு... ஒரு 5 வருஷம் இப்படி ஓட்ட முடியாதா என்ன?

இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளை விகடன் தோலுரிப்பதை ஒரு சராசரி பொதுஜனமாக நான் வரவேற்கிறேன்..

இராஜா இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால், சட்டத்துக்கும் நீதிக்கும் பங்கம் வராமல் விகடன் அதை எப்ப்டி எதிர் கொண்டு ராஜா பற்றிய ஊழல்களைப் தொடர்ந்து மக்களுக்குத் தருவது? அதுக்குத் தான் இந்த ஐடியா !!

இப்போ குங்குமம் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க அதனுடன் இலவச இணைப்பாக மஞ்சள் பொடி, மசாலாத் தூள், சிந்தால் சோப்பு, நகப் பாலீஷ் போன்ற பொருட்கள் தரவில்லையா? இது போன்று மற்றொரு தயாரிப்பாளர் தயாரிக்கும் பொருட்களை ஒரு பத்திரிக்கை இலவசமாகக் கொடுக்கும் போது அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்காது. ஏனென்றால் அது அவர்கள் தயாரிப்பே இல்லை. மற்றபடி அது இலவசமாகவே கொடுக்கப் பட்டது. அதனால் no liability.

அது போல வேறொரு பதிப்பகம் (இந்தப் பதிப்பகம் தமிழ்நாட்டிலென்ன.. இந்தியாவிலேயே கூட இருக்க வேண்டாம்.. ஏதாவது வெளிநாட்டில் இருக்கலாம். அதனால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாது )தொடங்கி ராஜாவின் ஊழல்களை அந்த புத்தகத்திலே (ரொம்ப பெரிசு வேண்டாம்.. ஜூவியிலே ஒரு 4 பக்கம் வர்ற மாதிரி ஒரு மினி புத்தகமாகக் கூடப் போடலாம்.. நம்ம கிழக்குப் பதிப்பகம் பத்ரியைக் கேட்டால் நிறைய ஐடியா தருவாரு!!) பிரசுரிச்சி அதை நம்ம ஜூனியர் விகடனுடன் இலவசமாகவே தரலாம்.


அது நம்ம ராஜா வாங்கியிருக்கிற தடைக்கு எதிராக வராது. ஏனென்றால் அந்தப் இலவச இணைப்பு விகடன் பிரசுரமே இல்லை... அது இலவச மசாலாப் பொடி மாதிரிதான்.. அதனுள் இருக்கும் செய்திகளுக்கு விகடன் பொறுப்பாகாது.. சட்டத்தை மதித்த் மாதிரியும் இருக்கும் .. சமுதாயக் கடமை ஆற்றிய மாதிரியும் இருக்கும்...

அதிக பட்சம் அந்த பதிப்பகம் அல்லது புத்தகத்தைத் தடை செய்வாங்க. அதுக்கு ஒரு ஆறு மாசம் ஆகும். நாமளும் சட்டத்தை மதிச்சி வேறு பதிப்பகம் வேறு நாட்டில் தொடங்கி வேற புத்தகம் போட்டு இலவச இணைப்பாத் தந்தாப் போச்சி.. எல்லாம் இராஜா கத்துக் கொடுத்த வழிதான்.. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும் !!


எப்பூடி???

திட்டாதீங்கப்பா !! இந்த திராவிட கட்சிகளோட சேர்ந்து சேர்ந்து நமக்கும் பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி...பின் குறிப்பு: நம்ம கிட்டே இனிமேல சினேகா போட்டோ தீர்ந்து போச்சி. நம்ம அச்சமுண்டு அச்சமுண்டு டைரக்டர் அருண் வைத்தியநாதன் கிட்டே தான் கேக்கணும் போல இருக்கு.. நாகை சிவா, கோச்சிக்காதீங்க.. இந்தப் பொண்ணும் அசப்புல சினேகா மாதிரி தான் இருக்கு !! அடுத்த பதிவு வர்ற வரையில பொறுத்துக்கோங்க !!!!!

13 comments:

Anonymous said...

this is too much :-(

Anonymous said...

It is not good to comment without knowing the truth. Any politics behind this post?

sowri said...

:) Just fall in love with your sarcastic approach.

அப்பாவி முரு said...

அண்ணே படத்துல இருக்கிறது டாக்டர் பொண்ணுதானே :)

அப்பாவி முரு said...

//திட்டாதீங்கப்பா !! இந்த திராவிட கட்சிகளோட சேர்ந்து சேர்ந்து நமக்கும் பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி...//

கவனம், இந்த மாதிரி பகுத்தறிவாளர் கூட ரொம்ப சேர்ந்தா, ஏழாவது அறிவு, எட்டாவது அறிவெல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுரும்.

அப்புறம் அதே நமக்கு ஆபத்தாக்கும், ஆமாம்

Seemachu said...

//It is not good to comment without knowing the truth. Any politics behind this post?

//
உண்மை என்னன்னு தெரியாது. ஆனால் உண்மை என்னவாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் கொடுத்துள்ளது விகடன். அதை தெளிவாக்க வேண்டியது ராஜாவின்/மத்திய அரசின் பொறுப்பில்லையா. அதைச் செய்யாமல் தடை வாங்குவது பொறுப்பற்ற செயல் என்ற கோணத்திலேயே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!

Seemachu said...

//அப்பாவி முரு said...
அண்ணே படத்துல இருக்கிறது டாக்டர் பொண்ணுதானே :)

//
ராஜா.. அப்படியே நொச்சுனு அடிச்சிட்டீங்களே..

அது டாக்டர் பொண்ணுதான்.. படம் தினமலரிலிருந்து சுட்டதுதான்

Seemachu said...

//கவனம், இந்த மாதிரி பகுத்தறிவாளர் கூட ரொம்ப சேர்ந்தா, ஏழாவது அறிவு, எட்டாவது அறிவெல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுரும்.

அப்புறம் அதே நமக்கு ஆபத்தாக்கும், ஆமாம்
//

என்ன ராஜா பண்றது. இதுதான் பகுத்தறிவுன்னு அவங்க சொல்றாங்க.. அதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டியதாயிருக்கு !!

Seemachu said...

//sowri said...
:) Just fall in love with your sarcastic approach.

//

வாங்க சௌரி.. முதல் முறையா நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க..

வேற வழியில்லாதபோது இந்த மாதிரி sarcastic ஆ பேசி நம்ம இயலாமையை சாந்தப் படுத்திக்க வேண்டியதாயுள்ளது..

என்ன இருந்தாலும் நாம ஒரு ஜனநாயக நாடு இல்லியா !!

நாகை சிவா said...

:))

சதுக்க பூதம் said...

இந்த வாரம் விகடன் வெளியிட்டுள்ள வீடியோ அதாரம் மிகவும் அழுத்தமாகவே உள்ளது. அந்த ஆதாரம் தவறு என்றால் விகடன் தண்டிக்க பட வேண்டும்.உண்மை என்றால் ராஜா தண்டிக்கபட வேண்டும். இதை பத்தோடு பதினொரு செய்தியாக மறைந்து போய் விட கூடாது

kggouthaman said...

இது எல்லாம் சும்மா கீரி பாம்பு சண்டை சாமி!
விகடன் பத்திரிக்கையை இரு வர்ணக் கொடி கட்சி வாங்கி, பல மாதங்கள் ஆகிவிட்டன.
அவர்கள் பிலிம் காட்டுவதை எல்லாம்
நம்பினால், நம் காதில் முழம் முழமாகப் பூ சுற்றிவிடுவார்கள்.

Jawarlal said...

//ரெண்டும் இல்லாமல் கோர்ட்டுக்குப் போயி “என்னக் கிள்ளீட்டான் சார்...” ரேஞ்சுக்குப் போயி தடை வாங்கறது அழுகுணி ஆட்டம்.//

ரொம்ப ரசித்த வரிகள்.

ஏன் திரும்பத் திரும்ப ஸ்னேஹா? ஸ்ரேயா, தமன்னா எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்?

http://kgjawarlal.wordpress.com