Saturday, October 31, 2009

86. ஸ்டைலு ஸ்டைலு தான் !!


போன வாரம் மயிலாடுதுறை சென்றிருந்த பொழுது ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பவர் குடும்பத்துப் பையனைக் கிளிக்கிய போது..

“எறும்பு கிறும்பு கடிச்சிரும்... ஜட்டியப் போடுறா “ ந்னு நான் சொன்னதை ரொம்ப உன்னிப்பாக் கேட்டுக்கிட்டான்..

oOo

தீபாவளிக்கு மறுநாள் கோவை செண்ட்ரல் தியேட்டரில் இரவுக்காட்சி ஆதவன் பார்க்க சென்றிருந்தேன். தியேட்டர் ஆடிட்டர் மூலமாக வாங்கியதில் 80 ரூபாய் டிக்கெட் எண்பதுக்கே எங்களுக்குக் கிடைத்தது. மற்றவர்களுக்கு எப்படியும் அதிக விலைக்கு விற்றிருப்பார்கள்.. இருந்தாலும் காட்சி “ஹவுஸ்ஃபுல்”.. இருக்கிற விலைவாசியில் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ


oOo

ஒரு நாள் காலை எழுந்த வுடனேயே ஷாக் !!

காலை 4 மணிக்கு எழுந்த போது பால்காரர் இன்னும் வந்திருக்கவில்லை. அவர் எப்பொழுதும் 5 மணிக்கு மேல் தான் வருவாராம்..

காபி குடிக்கும் ஆசையை அடக்க முடியவில்லையாதலால் என்ன செய்யறது என்ற கேள்விக்கு ..”சட்ட்டையைப் போட்டுக்கிட்டு இப்படியே.. இரட்டைத் தெரு முனை வரைக்கும் போயிட்ட்டு.. அங்க இருக்குற கடையிலே பால் (ஐஸ் பால் தான்) வாங்கிட்டு வந்துரு” என்று யோசனை சொன்னார் அப்பா..

கைலியுடனும் நேத்துக் கழட்டிப் போட்ட சட்டையில் இருபது ரூபாய் (ஒரு லிட்டர் தானே வாங்கப் போறோம் .. இதுவே அதிகம் என்ற நினைப்பில்...) வைத்துக் கொண்டு கடைக்குச் சென்றால்.. அவன் சொன்னது...”அண்ணே ..இப்பல்லாம் பால் லிட்டர் 28 ரூபாய்ணே...”


”அடப்பாவி.. போன தடவை வந்த போது 10 ரூபாயோ.. 12 ரூபாயோ சொன்னியே ராஜா”

“ஆமாண்ணே.. சொன்னேன்.. அது அரை லிட்டர் விலைண்ணே....”

காலை 4:30 மணிக்கு இது எனக்கு பெரீய்ய ஷாக் தான்..

நான் கடைக்கெல்லாம் போயி எதுவும் வாங்குறதில்லை.. அப்படியே வாங்கினாலும் “நீங்க எடுத்துட்டுப் போங்கண்ணே.. நான் அப்புறம் அண்ணன் கிட்டே பணம் வாங்கிக்கிறேன்” என்று அனுப்பி விடுவார்களாதலால் எதுவும் காசு விவரம் கேட்டுக் கொள்வதில்லை.. நமக்குத் தெரிஞ்ச ஒரே விலை வாசி நிலவரம் “கோல்ட் ப்ளேக் கிங்ஸ் ரூ 4.50 மட்டும் தான்” (இதுக்கெல்லாம் போயி அண்ணன் கிட்டே காசு கேக்காதே ராஜா.. நானே தர்றேன்.. வாங்கிக்க என்று சொல்லிக் கொடுத்து விடுவதால்..)


இந்த விலைவாசியிலே மக்களெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ...

oOo

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவில் .. நம்ம ஊரிலேயே ஒரு படம் பார்க்கலாமென்று ஊரில் உள்ள ஒரு பிரபல தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கூட வந்தவர் மயிலாடுதுறையிலேயே உள்ள பிரபல அரசியல் பிரமுகர். ரொம்ப பழக்கமானவராதலால்.. “படம் போட்டிருப்பான்.. பரவாயில்ல வாங்க தம்பி..” என்று அன்புடன் அழைத்துப் போனார்.

படம் ஆரம்பமாகியிருந்தது.. தியேட்டர் கதவுகளும் மூடியிருந்தன... வாசலில் “பேராண்மை” போஸ்டர் ஒட்டியிருந்தது.. மணி எப்படியும் இரவு 10:30 கிட்டே இருக்கும்...

எங்களை ’கேட்’ டருகில் பார்த்தவுடன்... மானேஜர் ரூமிலிருந்து ஆள் வந்து திறந்து விட்டார்..

“டிக்கெட் எல்லாம் ஒண்ணும் வேணாம் சார்.. எங்க வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து பாருங்க சார்..”

என்றவரை வற்புறுத்தி டிக்கெட்டு கிழிக்கச் சொன்னதுக்கு.. ரொம்ப குறைந்த விலைக்குச் சொல்லி பவ்யமாக வாங்கிக்கொண்டார்..

“படம் வேணும்னா.. ஆரம்பத்துலேருந்து போடச் சொல்லட்டுமா சார்..” என்றவரிடம்,

“அதெல்லாம் வேண்டாம்” என்று அன்பாக மறுத்துவிட்டு..

தியேட்டருக்குள் சென்றால்.. உள்ளே எங்களையும் சேர்த்து மொத்தம் 25 பேர்தான்.

படம் “பேராண்மை” இல்லை என்று புரிந்தாலும் .. இடைவேளையில் பேர் கேட்டுக்கொண்டேன் .. “ஈரம்”. பட்ம் நல்லாருந்தது..


நல்ல படம்.. தியேட்டரில் இன்னும் கூட்டம் வந்திருக்கலாம்.. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டாமா?

oOo

திரும்பி ஊருக்குப் போகக் கிளம்பி சென்னை வந்த பொழுது.. நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.. உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தவர் முகம் பரிச்சயமாகத் தெரிஞ்சது..

“உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்களே...”

“ஆமாம் சார்.. பேரு விஜயசாரதி.. சன் டீவீயிலே நீங்கள் கேட்டவை ந்னு ப்ரொகிராமெல்லாம் பண்றேன் சார்” அப்படீன்னார்..

”அப்படிங்களா.. ரொம்ப சந்தோஷம்.. இப்ப நினைவுக்கு வந்திடிச்சி”

"...."

”நீங்க கூட ஏதோ படத்துல ஹீரோவா நடிச்சீங்க போலருக்கே.. இருங்க பேர் சொல்றேன்” என்று 5 வினாடிகள் யோசிச்சு.. “ஹாங்... பவளகொடி தானுங்களே..”

அப்படீன்னு ஒரு போடு போட்டதில்.. அவரே அசந்திட்டார்...

”எப்படிங்க உங்களுக்கு நான் நடிச்ச படம் தெரிஞ்சுது? அந்தப் படம் ஒண்ணும் பெரிசா ஓடலீங்களே” என்று ஆச்சர்யமாகக் கேட்டவரிடம்..

“ஒண்ணுமில்லீங்க .. அதைத் தயாரிச்சி டைரக்ட் செஞ்ச சரவணன் நமக்கு ரொம்ப நண்பருங்க” என்று சொன்னதில் ஆசுவாசமடைந்து அப்புறம் 30 நிமிடங்கள் நிறைவாகப் பேசிக்கொண்டிருந்தார்..






39 comments:

sriram said...

Welcome back தல, நினைத்துப் போனவை எல்லாம் நல்ல படியா நடந்ததா? எப்போ பேசலாமுன்னு சொல்லுங்க, ஊருக்கு போறதுக்கு முன்னாலேருந்து ட்ரை பண்றேன் பேசறதுக்கு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சீமாச்சு.. said...

// எப்போ பேசலாமுன்னு சொல்லுங்க, ஊருக்கு போறதுக்கு முன்னாலேருந்து ட்ரை பண்றேன் பேசறதுக்கு//

ராஜா, இந்த வாரம் அவசியம் பேசறேன்.. ஊருக்குக் கெளம்பின அவசரத்துல உங்களைக் கூப்பிட முடியலை..

ரொம்ப சந்தோஷம் ராஜா..

நிகழ்காலத்தில்... said...

சின்ன பையன் போஸ் நல்லா இருக்கு..

அடிக்கடி எழுதுங்க சீமாச்சு

வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

அண்ணா ஊருக்கு போய்வந்தாச்சா?


//அடிக்கடி எழுதுங்க//

அதே! :)

இலவசக்கொத்தனார் said...

இம்புட்டுதானா? இல்லைப் பயணக்கட்டுரை உண்டா?

அப்பாவி முரு said...

எல்லாம் சரி, கடைசியில் விஜய சாரதியை ரொம்ப சங்கட படுத்தீட்டீங்க போலிருக்கு.


சன் டீவியில் பல வருடம் இருந்தவரு,அவருக்கு நிறைய முடி கொட்டிப்போயிருச்சுன்னு கேள்வி, அதனாலையோ?

வீட்டுல சூரியா, நலமா? வாழ்த்துகளைக் கூறவும்!

:)

மாயவரத்தான் said...

அந்த கடைசி பாரா ஒரே கன்ப்யூசன். விஜய சாரதி உங்களை நீங்க ஹீரோவா நடிச்சீங்க தானேன்னு கேட்டதா புரிஞ்சு பயந்திட்டேன்!.

அது சரி, அது யாரு அந்த பிரபல அரசியல்வாதி?!

அதுவும் படத்தை திரும்ப ஆரம்பத்தில இருந்து போட வெக்கிற அளவுக்கு செல்வாக்குள்ளவரு? ஊங்க ரெண்டு பேரையும் வெச்சு தியேட்டர்காரங்க காமெடி கீமெடி பண்ணலயே?

விஜயசாரதி இப்போ மெகா சீரியல்ல எல்லாம் நடிக்கிறாரே. தலையில முடி எல்லாம் இருக்கத்தானே செய்யுது?

சீமாச்சு.. said...

//அது சரி, அது யாரு அந்த பிரபல அரசியல்வாதி?!

அதுவும் படத்தை திரும்ப ஆரம்பத்தில இருந்து போட வெக்கிற அளவுக்கு செல்வாக்குள்ளவரு? ஊங்க ரெண்டு பேரையும் வெச்சு தியேட்டர்காரங்க காமெடி கீமெடி பண்ணலயே?//

வாங்க மாயவரத்தான்.. அவரு பெரிய்ய பிரபலம்தான்.. அவர் பேரை இங்க எழுத வேணாமேன்னுதான்..

தியேட்டர்ல படம் பாத்துக்கிட்டிருந்ததே மொத்தம் 20 பேர்தான்.. அந்த தைரியத்துல தான் கேட்டிருப்பாங்க..

ஒரு பிரபல அரசியல்வாதி வர்றாருன்னா.. நாங்க ரெண்டு பேர் மட்டுமாப் போயிருப்போம்.. கூட இன்னும் 3 பேர் வந்திருந்தாங்க.. அவங்களையும் சேர்த்துத்தான் மொத்தம் 20 பேரு..

நீங்கல்லாம் நம்ம பதிவுக்கு வர்றது ரொம்ப சந்தோஷம்..

சீமாச்சு.. said...

//விஜயசாரதி இப்போ மெகா சீரியல்ல எல்லாம் நடிக்கிறாரே. தலையில முடி எல்லாம் இருக்கத்தானே செய்யுது?
//

விஜயசாரதி பிரபலம்தான். தலையில முடி நிறையவே வெச்சிருக்காரு.. அதெல்லாம் குறையவேயில்லை..


நாந்தான் சன் டீவீ அதிகம் பார்த்ததில்லை. சன் எல்லாம் வருவதற்கு முன்னாடியே நான் NRI. டீவீ பார்க்கும் நேரம் என்பதே யார் வீட்டுக்காகவாவது போகும் நேரம் அங்கு டீவீ ஓடிக்கொண்டிருந்தால் மட்டும் தான்.

அவரைச் சங்கடப்படுத்திவிட்டோமே என்பதால் தான் அவர் நடிச்ச படம் பேரு சொல்லி சமாதானப் படுத்த வேண்டியதாச்சி..

சீமாச்சு.. said...

//அப்பாவி முரு said...
எல்லாம் சரி, கடைசியில் விஜய சாரதியை ரொம்ப சங்கட படுத்தீட்டீங்க போலிருக்கு.


சன் டீவியில் பல வருடம் இருந்தவரு,அவருக்கு நிறைய முடி கொட்டிப்போயிருச்சுன்னு கேள்வி, அதனாலையோ?

வீட்டுல சூரியா, நலமா? வாழ்த்துகளைக் கூறவும்!

:)//

வாங்க அப்பாவி முரு. விஜயசாரதியைச் சங்கடப்படுத்தும் நோக்கமெல்லாம் நமக்கு இல்லை.. நமக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்..

சூரியா நலம்.. நீங்கள் விசாரித்ததாக அவளிடம் சொல்லிவிடுகிறேன்..

இப்பத்தான் ஹேலோவீன் காஸ்ட்யூம் பார்ட்டியெல்லாம் போய்விட்டு வந்து தூங்குகிறாள்..

அடிக்கடி வாங்க..

சீமாச்சு.. said...

//இலவசக்கொத்தனார் said...
இம்புட்டுதானா? இல்லைப் பயணக்கட்டுரை உண்டா?//

நல்ல ஐடியாவா இருக்கே.. பயணக்க்கட்டுரை எழுதிட்டாப் போச்சி..

வருகைக்கு நன்றி !!

சீமாச்சு.. said...

//ஆயில்யன் said...
அண்ணா ஊருக்கு போய்வந்தாச்சா?


//அடிக்கடி எழுதுங்க////

ராஜா ஊருக்குப் போயி வந்தாச்சி... சொன்ன மாதிரியே முத்துக்குமரன் சன்னதியில் உங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டேன்..

சீமாச்சு.. said...

//நிகழ்காலத்தில்... said...
சின்ன பையன் போஸ் நல்லா இருக்கு..

அடிக்கடி எழுதுங்க சீமாச்சு//

வாங்க ’நிகழ்காலத்தில்’.. நிச்சயம் அடிக்கடி எழுதறேன்... இந்த வருஷ முடிவுக்குள்ள 100 பதிவு தொட்டுடணும்னு ஆசையிருக்கு.. பார்க்கலாம்.

நானும் ஐந்து வருஷத்துக்கு மேலே பதிவராயிருக்கேன் என்பதே பெருமையாயிருக்கே...

எத்தனை ரன் அடிச்சோம் அப்படீங்கறதை விட ..”நின்னு ஆடினான் பாரு..’ அப்படீன்னு ஒரு பேராவது கிடைக்காது?

ஆயில்யன் said...

//மாயவரத்தான்.... said...

அந்த கடைசி பாரா ஒரே கன்ப்யூசன். விஜய சாரதி உங்களை நீங்க ஹீரோவா நடிச்சீங்க தானேன்னு கேட்டதா புரிஞ்சு பயந்திட்டேன்!.//


LOL :))

மாயவரத்தான் ஸ்டைலு :)))))

ஆயில்யன் said...

//Seemachu said...

//ஆயில்யன் said...
அண்ணா ஊருக்கு போய்வந்தாச்சா?


//அடிக்கடி எழுதுங்க////

ராஜா ஊருக்குப் போயி வந்தாச்சி... சொன்ன மாதிரியே முத்துக்குமரன் சன்னதியில் உங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டேன்..///

நன்றி அண்ணா :)

முகமூடி said...

புகைப்படத்துல பீச்சாங்கை பக்கம் வரப்புதானே? தொட்டாசிணுங்கி இருக்கான்னு உத்து பாத்தேன், சரியா தெரியல... பம்புசெட்டு தண்ணியா இல்ல வாய்க்கா தண்ணியா?

பையன் நல்ல அழகு.. அப்புறம் முடிஞ்சா இந்த போட்டோவ ஒரு ப்ரிண்டு எடுத்து அந்த பையன் குடும்பத்துகிட்ட (இன்னும் கொடுக்கலைன்னா) கொடுங்க.. அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க. முந்தியெல்லாம் ஊருக்கு போகும்போது போலராய்டு கேமிரா கொண்டு போவேன்.. இப்பத்தான் அதுக்கு பிலிம் தயாரிக்கிறதயே நிறுத்திட்டானுங்க..

அப்புறம் இந்த இடுகைக்கு தலைப்பு முதல் பாராவுக்கு மட்டும் போலருக்கே.. எல்லாரும் கைமா கொத்து பரோட்டா, ஊசிப்போன இட்லி சாம்பார்னு எழுதறாய்ங்க.. நீங்களும் இந்த மாதிரி கலவை பதிவுக்கு எம்பளத்தஞ்சி குறிப்புகள் மாதிரி எதுனா - ஒரு மண்வாசனைதான் - பேர் வைக்கலாமே?

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா இப்பத்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. பழம் பெரும் பதிவரே, இன்னும் 100 தொடலை அப்படின்னு இருக்கும் போது, நான் 100 தொட இன்னும் நாலு வருஷம் இருக்குப்பா.

இந்திய பிரயாணம் சுகமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். அதை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.

மாயவரம் காவேரியில் குளித்தீர்களா?

ஆயில்யன் said...

//இந்த மாதிரி கலவை பதிவுக்கு எம்பளத்தஞ்சி குறிப்புகள் மாதிரி எதுனா - ஒரு மண்வாசனைதான் - பேர் வைக்கலாமே?///


அட ஆமாம் இந்த எம்பளத்தஞ்சிய மறந்துட்டோம்ல :)))

மாயவரத்தான் said...

முகமூடி அண்ணாத்தே லெப்ட் ஹேண்டால சாப்பிடுவாரோ? பீச்சாங்கைன்னு சோத்தாங்கை பக்கத்த சொல்லிருக்காரு.

அது சரி.. பீச்சாங்கை பக்கத்தில துக்ளக் அம்போன்னு கெடக்குதே.. என்னா மேட்டரு?!

மாயவரத்தான் said...

ஊரிலே பொரி,கடலை கடையே கம்மியாயிடிச்சி கவனிச்சீங்களா?!

மாயவரத்தான் said...

மாயவரம் காவிரியில குளிக்க அவரு என்ன 'முனிசிபாலிடி யானையா'ன்னு என் பிரண்டு ஒருத்தன் நைஜீரியா அதிபரை கேக்க சொன்னான்.

பழமைபேசி said...

//உங்களை எங்கியோ பார்த்த மாதிரி //

இது உச்சகட்ட அவமானம்!

பழமைபேசி said...

//“ஒண்ணுமில்லீங்க .. அதைத் தயாரிச்சி டைரக்ட் செஞ்ச சரவணன் நமக்கு ரொம்ப நண்பருங்க//

அதுக்கு, நொந்துபோன சரவணன் உங்களைப் பத்தி சொல்லி இருக்கார்னே சொல்லி இருக்கலாம்! இஃகிஃகி!!

சீமாச்சு.. said...

//புகைப்படத்துல பீச்சாங்கை பக்கம் வரப்புதானே? தொட்டாசிணுங்கி இருக்கான்னு உத்து பாத்தேன், சரியா தெரியல... பம்புசெட்டு தண்ணியா இல்ல வாய்க்கா தண்ணியா? //

முகமூடியண்ணா, வாங்க.. பம்புசெட்டு தண்ணிதான். இலவச மின்சாரம் என்பதால் பொழுதன்னிக்கும் ஓடுது. நல்ல விளைச்சல்.


நீங்க சொன்ன மாதிரி பையன் போட்டோ ப்ரிண்ட் பண்ணிக் கொடுத்துடறேன். அது எங்க த்தோட்டம் தான். சித்தர்க்காடு அருகில் இருக்கிறது.

நீங்க சொன்ன “எம்பளத்தஞ்சி” நல்ல மண்வாசனை. சமீபத்தில் கூட யாரோ அதைச் சொல்லக் கேட்டேன்.

நீங்க சொன்ன மாதிரி தலைப்பு யோசித்தேன். எல்லாவிதமான தலைப்புக்களும் மக்கள் வெச்சிட்டாங்க. எனக்குத்தான் அது மாதிரி கலவையா, கவர்ச்சியா ஒரு தலைப்பு கிடைக்க மாட்டேனென்கிறது..

சீமாச்சு.. said...

//இந்திய பிரயாணம் சுகமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். அதை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.

மாயவரம் காவேரியில் குளித்தீர்களா?//

நைஜீரியா ராகவன் வாங்க.. பிரயாணத்தில் நிறைய பேரைச் சந்தித்தேன். அவசியம் எழுதுகிறேன்.


ஐப்பசி மாதப் பிறப்புக்குக் காவேரியில் (மயிலாடுதுறையில்) நிறைய தண்ணீர் ஓடியது. குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோவை செல்லும் போது திருச்சி காவேரியில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது..

குளிக்க ஆசையிருந்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அடுத்த வருஷம் முயற்சிக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

சீமாச்சு.. said...

//அது சரி.. பீச்சாங்கை பக்கத்தில துக்ளக் அம்போன்னு கெடக்குதே.. என்னா மேட்டரு?!//

மாயவரத்தாரே.. இந்தமாதிரி நுண்ணிய கவனிப்பெல்லாம் நிருபரா இருந்தவருக்குத் தான் வரும்..

தோட்டத்துக்குப் போகும் போது வ்ழியில் துக்ளக் வாங்கிக்கிட்டுப் போனேன். அதை ஓரமா ஒரு தென்னை மரத்தடியில் போட்டுட்டு இளநி குடிச்சிட்டுப் ..இந்தப் பையன் கூட விளையாடிட்டு.. அவனுக்கு நிறைய்ய குச்சி ஐஸ் வாங்கித் தந்துட்டு வந்தேன்..

ஒரு குச்சி ஐஸ் விலை 4 ரூபாயாம் (சித்தர்க்காட்டுல !!) நானெல்லாம் 15 பைசாவுக்கு வாங்கித் தின்னிருக்கேன்..

சீமாச்சு.. said...

//ஊரிலே பொரி,கடலை கடையே கம்மியாயிடிச்சி கவனிச்சீங்களா?!//


ஆமாம் இல்லே.. நல்ல அவதானிப்பு.. பெரியக்கடைத்தெருவில் உள்ள அந்த பொரி கடலைக் கடையைத் தான் பார்த்தேன்.. முன்னெயெல்லாம் கடை உயரமாகவும் கடைக்காரர் உட்கார்ந்த இட்ம் என்னமோ ஒரு 8 அடி உயரத்துல இருக்குது மாதிரியும் தெரியும்.. இத்தனை வருஷத்துல ரோடு போட்டுப் போட்டு கடை ரொம்ப ச்சின்னதாத் தெரியுது..

சீமாச்சு.. said...

//மாயவரம் காவிரியில குளிக்க அவரு என்ன 'முனிசிபாலிடி யானையா'ன்னு என் பிரண்டு ஒருத்தன் நைஜீரியா அதிபரை கேக்க சொன்னான்.//


இந்த “முனிசிபாலிட்டி யானை” என்ற பிரயோகம் நம்ம ஊரில பன்றிகளைக் குறிக்க்த்த்தான் உபயோகிப்பாங்க..

காவேரியிலே தண்ணி நல்லாத்தான் ஓடுது, அதுவும் தீபாவளியன்று ஐப்பசி மாதப் பிறப்பு வேற்.. நல்லா தண்ணியிருந்தது..

நைஜீரியா அதிபர் வந்து குளிப்பதென்றால் குளிக்கலாம்..

மாயவரத்தானும் வரலாம்.. ஆமாம்.. நீங்க எப்போ கடைசியா ஊருக்கு வந்தீங்க?

சீமாச்சு.. said...

//பழமைபேசி said...
//உங்களை எங்கியோ பார்த்த மாதிரி //

இது உச்சகட்ட அவமானம்!
//

வாங்க பழமைபேசி ஐயா.. அவரை அவமானப் படுத்த வேண்டுமென்று சொல்லவில்லை.. எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. என்ன பண்ண..?

சீமாச்சு.. said...

//அதுக்கு, நொந்துபோன சரவணன் உங்களைப் பத்தி சொல்லி இருக்கார்னே சொல்லி இருக்கலாம்! இஃகிஃகி!!
//

சரவணன் அதையும் சொன்னாருதான்.. இருந்தாலும் நான் அதைப் பத்தி விஜயசாரதிக்கிட்டே சொல்லிக்கிடலியே !!

தென்னவன். said...

நல்லா இருக்கீங்களா ஐயா?

ஒரு முழு நிர்வாண படத்தோட அசத்தலா ஆரம்பிச்சிடிங்க !!!

நன்றி
தென்னவன் ராமலிங்கம்.

இராகவன் நைஜிரியா said...

// மாயவரத்தான்.... said...
மாயவரம் காவிரியில குளிக்க அவரு என்ன 'முனிசிபாலிடி யானையா'ன்னு என் பிரண்டு ஒருத்தன் நைஜீரியா அதிபரை கேக்க சொன்னான். //

அண்ணே மாயவரத்தான் அண்ணே, நான் படிச்சதெல்லாம் கும்பகோணம்.

சந்திர கிருஷ்ணா said...

பையன் போட்டோவை நல்ல ஆங்கிள்ல எடுத்திருக்கீங்க பாஸு!

சீமாச்சு.. said...

//தென்னவன். said...
நல்லா இருக்கீங்களா ஐயா?

முழு நிர்வாண படத்தோட அசத்தலா ஆரம்பிச்சிடிங்க !!!

நன்றி
தென்னவன் ராமலிங்கம்//
வாங்க தென்னவன்... குழந்தைகளே ஒரு தனி அழகுதான். அந்தக் குழந்தையின் தேடல் நிறைந்த கண்களும் இயற்கையான சுதந்திரத்தை அவன் அனுபவிக்கும் விதமும் எனக்குப் பிடித்தது..

பழமைபேசி said...

//Seemachu said...
//பழமைபேசி said...
//உங்களை எங்கியோ பார்த்த மாதிரி //

இது உச்சகட்ட அவமானம்!
//

வாங்க பழமைபேசி ஐயா.. அவரை அவமானப் படுத்த வேண்டுமென்று சொல்லவில்லை.. எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. என்ன பண்ண..?
//

அய்ய, என்ன இது? நெம்ப சிரத்தையா, அதுக்கும் விளக்கம் குடுத்துகினு.... உங்களச் சும்மா வெறுப்பேத்தத்தான்!

கௌதமன் said...

நல்லா இருக்கு - உங்க அனுபவக் கட்டுரை.

கலகலப்ரியா said...

1st one superunga.. =))

ஆ! இதழ்கள் said...

என் கமெண்ட் வழி இங்கே வந்தேன். நல்ல அனுபவங்கள்>

Unknown said...

sitharkaadu "rathana" touring theaterla oru MGR padam paartha
niyaapagam.
maayuram rayiladi aanjeneyar nalaaa irukkaaraa?
vijaya theater ippavum irukkaa?
kaaliyakudi hotel kaapi ippavum famous thaanaa?
(http://vaarththai.wordpress.com)