நித்யானந்தர்
வீடாவது அருகில் இருந்திருந்தால் சட்டென்று வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்து விடலாம். வீட்டுக்காரம்மாவுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லலாமென்றால்.. அம்மையார் வீடியோவை உடனே பார்த்து விடுவார். அப்புறம் சுவாரசியமாகப் பேச விஷயம் இருக்காது. சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது நியூஸ் ஆறிப்போய்விடும். 6 மணி நேரம் நெருப்பில் உட்கார்ந்திருந்தது மாதிரி யிருந்தது.
எப்படி இப்படி ஒரு சோதனை வைத்தாய் இறைவா? வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு வீடியோ இப்பத்தான் பார்த்தேன். உடனே இந்த இடுகையை எழுதி இலக்கியசேவை ஆற்ற நினைக்கும் என் முயற்சிகள் என்னையே பிரமிக்க வைக்கின்றன். இதை எழுதி முடிக்கும் போது இப்பொழுது மணி அதிகாலை மூன்று.. (ஒரு பிரபல எழுத்தாளர் எழுதுவதன் சாயல் அடிப்பது போலிருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !!). எழுதி முடித்து ஒரு நீண்ட தூரம் நடக்க வேண்டும் போலிருந்தது. தெரு நாய்கள் துரத்தும் அபாயமிருப்பதால் அதைப் பிறகு பார்த்துக்க் கொள்ளலாம்..நிறைய கோபங்கள்..
1. உடனிருப்பது ரஞ்சிதாவா, ராகசுதாவா? ரஞ்சிதாவாக இருக்கக் கூடாது என்று வேண்டாத தெய்வமில்லை. "மலரே மௌனமா.." பாட்டுக் கேட்டு ஒரு இரண்டு நாள் சினேகாவை மறந்துவிட்டு ரஞ்சிதா ரசிகனாக இருந்த நன்றிக்காவது ரஞ்சிதா மாட்டியிருக்கக்கூடாது.. ராகசுதாவாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும. அந்த அம்மா யாரென்று கூட எனக்குத் தெரியாது.
2. இந்த வீடியோவை தமிழ் நாட்டில் டீவீயில் போட்டார்களா? குழந்தைகள் பார்த்திருந்தால் என்னாவது? கொஞ்சம் கூட ஒரு பொறுப்புணர்ச்சியில்லையே இந்த சன் டீவீ காரங்களுக்கு. பரபரப்புக்காக என்ன வேணா செய்வாங்களா?
3. என்னதான் சாமியாராக இருந்தாலும் அவரின் படுக்கையறையைப் படமெடுத்தது தவறல்லவா? எனக்கு அவர் மேல் பெரிய நம்பிக்க்கையெல்லாம் இருந்ததில்லை.. இருந்தாலும் அவர் மீது வருத்தம் தான். அவர் சொன்ன விஷயங்கள் (கதவைத் திற்.. காற்று வரட்டும்... இன்னும் பல..) இதற்காக பொயத்துப் போகப்போவதில்லை. அந்தந்த விஷயங்கள் நமக்குப் உபயோகப்பட்டால் பயன் படுத்திக்கொள்ள வேண்டியதுதான். பொது வாழ்வில் இருப்ப்வர்களிடம் தனி மனித ஒழுக்கத்தை எதிர் பார்பப்தென்பது நம் தவறுதான்..காலம் கெட்டுக்கிடக்கு..
4. என் நண்பரும் அவர் மனைவியும் நித்யானந்தரிடம் தீட்சை எடுத்துக் கொண்டவர்கள் இருவரும் கழுத்திலும் நல்ல ஓரளவுக்குப் பெரிய ருத்திராட்ச மாலை இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருக்கும்... எப்பொழுதும். அதையும் உடுப்புக்களுக்கும் வெளியில் தெரியும் படி அணிந்திருப்பார்கள். வீட்டிலேயே தியான மையம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மயிலாடுதுறையில் எங்கள் பள்ளி வளாகத்தில் தியான மையம் நடத்திக் கொள்ள நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத் தர என்னிடம் மிகவும் கேட்டுக் கொண்டார்கள்.. நானே ஒப்புமையில்லாத ஒரு விஷயத்திற்கு பள்ளி நிர்வாகத்தை வற்புறுத்த எனக்கு மனது இடம் தரவில்லை. நல்ல வேளை நான் அதை முயற்சிக்கவில்லை. இந்த விஷயத்தால் எனக்கும் எங்கள் பள்ளிக்கும் பெயர் வீணாப் போயிருக்கும்.
5. நண்பரின், மற்றும் அவர் மனைவியின் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நித்யானந்தரை தெய்வத்துக்கு மேல் நினைத்திருந்தார்கள். வீடெங்கும் அவரின் ப்டங்கள் பெரிது பெரிதாக மாட்டியிருப்பார்கள். அவர்களின் இரண்டு குழந்தைகளும் பெங்களூரில் நித்யானந்தர் பள்ளியில் தான் படிக்கிறார்கள். என்ன செய்யப் போகிறார்களென்று விசாரிக்க வேண்டும். ஒரு சாமியாரை நம்பி குழந்தைகளை அங்கு படிக்க வைக்க வேண்டாம் என்று மன்றாடியும், "தமிழகத்திலுள்ள அத்தனை இஞ்சினீயரிங் கல்லூரிகளிலும் ஸ்வாமி கேட்டால் உடனே இடம் கிடைக்கும். என் பிள்ளைகளுக்கு ஸ்வாமி எப்படியும் இலவசமாக இஞ்சினீயரிங் சீட் வாங்கித் தருவார்" என நம்பிக்கையோடு சொன்னார்கள்.. ரொம்ப சிரமம். "ஒரு மனிதனின் நம்பிக்கையை எக்காரணம் கொண்டும் குலைக்காதீர்கள்.. சமயங்களில் அதுவே அவனது கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடும்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.. ஆண்டவா இது போன்ற நல்ல மனிதர்களை இந்த மாதிரி போலிச் சாமியார்களிடமிருந்து காப்பாற்று...
வைகோ
நல்ல ஒரு மனிதர். இவர் கட்சி ஆரம்பித்த் பொழுதில் திமுகவிலிருந்து விலகி மதிமுகவில் சேர்ந்து இவர் பின்னால் சுற்றித்திரிந்த என் சக கல்லூரித் தோழர்களைத் தெரியும்.. பின்னால் ஒன்றுக்கும் உதவாமல் இன்னும் திருமணம் கூட கூடாமல் பூக்கடையில் பூக் கட்டிக்கொடிருக்கிறார்கள். பூக் கட்டுவதென்பது நச்சு பிடித்த வேலை.. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும் நாள் முழுவதும் கட்டினால் கண்ணில் பூச்சி பறக்கும். நார் பிடித்துப் பிடித்து கை விரல்களெல்லாம் வலி எடுத்துவிடும். நாள் முழுவதும் பூ கட்டினால் (14 மணி நேரம்) தினக்கூலி 150 ரூபாய்.. "என்னடா சேகரா.... வைகோ என்ன சொல்றாரு" என்று போற போக்கில் விசாரித்தால் அவன் கண்ணில் கண்ணீர் வந்துவிடும்.. கேட்பதில்லை வைகோ பொதுக்கூட்டங்களில் உணர்ச்சி வசப்படுவது எனக்குப் பிடிக்காது. ஒரு தலைவன் உணர்ச்சி வசப் படக்கூடாதென்பது என் கொள்கை. அதை விடுங்கள் அவர் பாடு வைகோ பாடு.. நமக்கென்ன!!! மதிமுகவை வளர்ப்பதற்காகத் தமிழகம் முழுவதும் கிராமங்களுக்குச் சென்று 50000 (ஆமாம் ஐம்பதாயிரம் ) கொடிமரங்கள் நட்டு மதிமுக கொடியேற்றப் போகிறாராம்.. ஒன்றுக்குமே உதவாத ஒரு விஷயமென்றால் அது இந்த கட்சி க்கொடிக்கம்பங்கள் தான். மயிலாடுதுறையில் எங்கள் தெருவில் இரண்டு கோடிகளிலும் மொத்தம் 10 கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. எந்த கட்சிக்காரனும் எங்கள் தெருவுக்கு எதுவும் உருப்படியாப் பண்ணினதில்லை. 50 பேர் பெயர்களை கடப்பக் கல்லில் பொறித்து கொடி மட்டும் ஏற்றி விடுவார்கள்.. சில கம்பங்களில் கொடி காற்றில் கிழிந்து போய் வெறும் இரும்புக் கம்பி மட்டும் நிற்கிறது. வைகோ (நான் ஒருமுறை உங்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டு உங்களுக்கு விடை கொடுத்திருக்கிறேன்.. முகம் நினைவில்லாவிட்டால் பரவாயில்லை) உங்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.. தயவு செய்து கொடிக்கம்பங்கள் வேண்டாம். வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள்.. நீங்கள் ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்தீர்களென்றால் அப்புறம் மத்த கட்சிக்காரர்கள் அதை லட்சக்கணக்கில் ஏற்றி விடுவார்கள்.. பயமாயிருக்கிறது.. வேண்டாம்
மருத்துவர் இராமதாஸ்
பெண்ணாகரம் தொகுதி வாக்காளர்களிடம் இராமதாஸ் சொன்னாராம். "மனசாட்சிப் படி நடந்து ஒட்டுப் போடுங்கள் " என்று. இதைத் தானே ஐயா உங்கள் கட்சி ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்த போதும் உங்கள் மகன் மத்தியில் மந்திரியாக இருந்த போதும் உங்களிடம் வேண்டினோம். நீங்கள் மனசாட்சியுடன் நடந்திருந்தால் எங்கள் மனசாட்சிகள் எப்பொழுதுமே உங்கள் பின்னால் இருந்திருக்குமே...
சீமாச்சு..
சீமாச்சு..
இந்த அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை.. இரண்டு மூன்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மயிலாடுதுறையில் என் வீட்டுக்குச் சென்று என்னுடைய பழைய கண்க்கு நோட்டு, அறிவியல் வரலாறு புவியியல் நோட்டெல்லாம் சுட்டுக்கிட்டு வந்துட்டாங்களாம். எங்க அப்பா திட்டறாரு.. ஏண்டா இப்படித் தொல்லை பண்றாங்கன்னு.. எனக்கென்ன்ன் தெரியும்? அவங்க பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் வைக்க என் நோட்ஸாக் கிடைச்சது.. எப்படியோப் பசங்களை பாஸ் போட்டாச் சரிதான்..
என்ன நான் சொல்றது?
17 comments:
மயிலாடுதுறை அகழ்வாராய்ச்சியில் அரிய/அறிய பல தகவகல்கள்-ன்னு (ஆமாம் அப்படி என்ன எழுதி வெச்சிருந்தீங்க அதுல.. ஸ்னேகாவுக்கு ஏதும் கடிதமா?!) சன் நியூஸல வருதாம் (உங்க புண்ணியத்துல சாமி தப்பிச்சுட்டார்)
அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கவும்...
சாமியாரின் காமக்கதை வீடியோ
nachinu nalu varthai
//ஒரு மனிதனின் நம்பிக்கையை எக்காரணம் கொண்டும் குலைக்காதீர்கள்.. சமயங்களில் அதுவே அவனது கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடும்"//
நச் வரிகள் !
நடிகையின் பெயர் பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டதால் அண்ணனுக்கு குளிர் காய்ச்சல்!
//எப்படி இப்படி ஒரு சோதனை வைத்தாய் இறைவா? வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு வீடியோ இப்பத்தான் பார்த்தேன்.//
ஆமா... எத்தனை தடவை??
// இதை எழுதி முடிக்கும் போது இப்பொழுது மணி அதிகாலை மூன்று..//
செல்லாது, செல்லாது! பார்த்து முடிக்கும் போதுன்னு வரணும்!!
adhu nithikum ranjithavukum nadantha menmayana oru anbu parimatram.yen en samugam kevalama sitharikiradhu?
கடேசி மேட்டர் மட்டும் புரியல, வெளக்கவும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//இரண்டு மூன்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மயிலாடுதுறையில் என் வீட்டுக்குச் சென்று என்னுடைய பழைய கண்க்கு நோட்டு, அறிவியல் வரலாறு புவியியல் நோட்டெல்லாம் சுட்டுக்கிட்டு வந்துட்டாங்களாம்.//
வாழ்த்துக்கள்!இப்படியெல்லாம் நடக்குமுன்னு அப்பவே ஞான திருஷ்டி இருந்ததால் பரிட்சை எழுதி பாஸ் ரிசல்ட் தெரிஞ்சதுமே பழைய கடைக்கு போட்டர்றது.அதையெல்லாம் திரும்ப வாங்கிப் படிச்சு எந்தக் குழந்தை எங்கே என்னவெல்லாம் பண்ணிகிட்டுருக்கோ:)
வை.கோ,ராமதாஸ் இரண்டு பேருக்கும் சேர்த்து ஒண்ணு சொல்லிடலாமே!தனி மனித ஈகோ பார்க்காம கூட்டாக இருந்திருந்தாலே ஓரளவுக்கு வெற்றி வாய்ப்புக்களை குவித்திருக்க முடியும்.கூடவே காசுக்கு விலை போகும் ஓட்டுக்கு முன்னால்....இந்தக் கலாச்சாரம் எங்கே போய் முடியுமின்னு தெரியல.பயமாயிருக்கு.
//வெளக்கவும்//
அய்ய்... நான் வந்தவிட்டு இதைப் படிச்சுக் காமிங்க என்ன?
// கடேசி மேட்டர் மட்டும் புரியல, வெளக்கவும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
ஸ்ரீராம், எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய ஜீரோ டிகிரி புத்தகம் கலிபோர்னியா யூனிவர்சிட்டியில் பாடமா செச்சிருக்கிறதா அவரு சொல்லிட்டிருக்காரு. அதுக்காக சீமாச்சு ஒரு பகடி எழுதியிருக்கிறதாத் தோணுது.
//கூடவே காசுக்கு விலை போகும் ஓட்டுக்கு முன்னால்....இந்தக் கலாச்சாரம் எங்கே போய் முடியுமின்னு //
ராஜ நடராஜன், வாங்க. உங்க கவலை நியாயமாத்தான் படுது. இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம். இவன், அரசியல்வாதி காசு அடிக்கிறானென்று மக்களுக்குத் தெரிந்து விட்டது. அதனால் மக்கள் பங்கு கேட்க ஆரம்பித்திருப்பது நல்ல முன்னேற்றமாத்தான் தெரியுது.
நச்நச்நச்
ஹிஹி :)
ஆமா மாயவரத்துல எந்த தெரு நீங்க...
அதெல்லாம் சரி,ஏன் சிநேகா ஆண்ட்டியைப் பதிவு முழுவதும் பரப்பி விட்டிருக்கீங்க..
ரஞ்சிதம் ரொம்ப மனச காயப்படுத்திட்டாங்களா என்ன?
Post a Comment