Wednesday, March 24, 2010

93. இந்த அனுபவம் தனியொரு விதம் ..

பள்ளி வாழ்க்கையிலும் அதற்குப் பின்னான என்னை ஆளாக்கிய என் பள்ளிகளின் தொடர்பிலும் பல முன்னாள், இந்நாள் மாணவர்களைச் சந்தித்ததுண்டு. நல்லவிதமாக தன்னைப் பயிற்றுவித ஆசிரியர்களை நினைவு கூறாத மாணவரே இருக்க மு்டியாது.

ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாக ஒ்ன்றோ அல்லது பலவோ ஆசிரியர்கள். மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றில் உள்ள மிகப்பெரிய வங்கியில் முதன்மைத் தனி அதிகாரியாக இருக்கும் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு ஆர். சீத்தாராமன் தன் ஆசிரியரைச் சந்தித்ததும் அதற்குப் பின் நடந்ததும் ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

  • தன்னை உயர்த்திய பள்ளியையும் ஆசிரியரையும் பெருமையாய் நினைக்கும் மாணவரையும்,
  • தன்னலம் கருதாத ஆசிரியரையும்,
  • தன் மாணவனைப் பெருமையாக மடியில் ஏந்திய பள்ளியும்,
  • தன் மகன் அவரின் தந்தை பெயரில் செய்த நற்கொடையைப் பெருமையாகத் திறந்து வைக்கும் தாயையும்,
  • எல்லாரும் வணங்கியே பார்த்திருந்த தன் தந்தை, ஒரு பெரிய வங்கியின் CEO ஆன தன் தந்தையே பொதுமேடையில் காலில் விழுந்து பெருமையுடன் வணங்கும் ஒரு எளிமையான ஆசிரியரைப் பார்த்த மகளும், மகனும்..
  • இவரெல்லாம் நம்ம ஸ்கூலில் படிச்சாரா.. நாமளும் நல்லாப் படிச்சா இவர் மாதிரி கோட் போட்டுக்கிட்டு வந்து நம்ம வாத்யாரைப் பார்க்கலாமா” என ஆச்சரியம் பொங்க பார்க்கும் இந்நாள் மாணவர்களும்..

ஒருசேரக் காணக்கிடைப்பது அரிதினும் அரிது..

பணியுமாம் என்றும் பெருமை !!!


எங்கள் பள்ளிப் பதிவில் இடப்பட்டுள்ள இந்த இடுகையை நான் விவரித்த உணர்ச்சி குறையாமல் தனது தீந்தமிழில் எழுதிக்கொடுத்த அன்பு அண்ணன், கொங்கு மைந்தன், என் இனிய தோழர் பதிவர் பழமைபேசிக்கு நன்றி் !!

இனி தொடர்ந்து கீழுள்ள சுட்டியைக் கிளிக்கி எங்கள் பள்ளியின் பதிவில் படியுங்க
From DBTR-Seetharaman-Visit082009

15 comments:

பழமைபேசி said...

அண்ணே, நான் என்னைக் காண்பிச்சிக்க வேண்டாம்னல்ல சொன்னேன்... அவ்வ்வ்.......

பழமைபேசி said...

//எழுதிக்கொடுத்த அன்பு அண்ணன்//

அவ்வ்வ்வ்வ்....

sriram said...

அற்புதம் வாசன், அனைவருக்கும் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கபீஷ் said...

நெகிழ்ச்சியான பதிவு சீமாச்சு அண்ணா
இதே மாதிரியான பதிவுகளை அடிக்கடி போடுமாறு மிரட்டிக் கேக்க முடியாததால
எப்படியோ கேட்டுக்கறேன் :-)

Seemachu said...

//பழமைபேசி said...
அண்ணே, நான் என்னைக் காண்பிச்சிக்க வேண்டாம்னல்ல சொன்னேன்... அவ்வ்வ்.......//

அதனால என்னங்க. நல்லாத்தானே எழுதியிருக்கீங்க.. பரவாயில்லீங்...

Jawahar said...

அதென்னமோ தெரியலை, மாயவரம் பள்ளிக்கூடத்துக்கு மட்டும் இவ்வளவு சக்தி! எத்தனை உயர்வான, பணிவான, சேவை நோக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கி இருக்கிறது! இந்தப் பள்ளிக்கூடங்களின் வாஸ்த்துவை ஆராய வேண்டும்.

யதா ராஜா ததா பிரஜா என்று சொல்வார்கள்.

ஒரு அமைப்பின் தலைவரின் பண்புதான் அந்த அமைப்பின் பண்பாக பரவும். ஆனால், தலைவர்கள் மாற மாற பண்புகளும் மாறிக் கொண்டே வருவது இயல்பு. அப்படி மாறாமல் நூறு வருஷத்துக்குப் பின்னும் அப்படியே இருந்தால், அந்த முதல் தலைவர் எப்படிப்பட்ட ஆளுமை நிறைந்த தலைவராக இருந்திருக்க வேண்டும்?

முதல் தலைமை ஆசிரியர் குறித்து தகவல்கள் இருந்தால் அதைப் பகிருங்கள் வாசன். உபயோகமாக இருக்கும்.


http://kgjawarlal.wordpress.com

Seemachu said...

//நெகிழ்ச்சியான பதிவு சீமாச்சு அண்ணா
இதே மாதிரியான பதிவுகளை அடிக்கடி போடுமாறு மிரட்டிக் கேக்க முடியாததால
எப்படியோ கேட்டுக்கறேன் :-)//

வாங்க கபீஷ்.. இந்த மாதிரி நிகழ்வுகள் என்னைச் சுற்றி அதிகம் நிகழ்கின்றன. அனைத்தையும் எழுதுகிறேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி !!

Seemachu said...

//அதென்னமோ தெரியலை, மாயவரம் பள்ளிக்கூடத்துக்கு மட்டும் இவ்வளவு சக்தி! எத்தனை உயர்வான, பணிவான, சேவை நோக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கி இருக்கிறது! இந்தப் பள்ளிக்கூடங்களின் வாஸ்த்துவை ஆராய வேண்டும்.//

ஜவஹர், உங்கள் கோணம் அசத்துகிறது. இப்பத்தான் ஸ்கூலைப் புதுசாக் கட்டலாம்னு இருக்கோம்..இப்ப இந்த வாஸ்து விஷயம் சொல்றீங்களே.. முதல்ல புது கட்டிட்மா இல்ல வாஸ்து ஆராய்ச்சியா ந்னு யோசிக்கணும் போலருக்கே..

Seemachu said...

//முதல் தலைமை ஆசிரியர் குறித்து தகவல்கள் இருந்தால் அதைப் பகிருங்கள் வாசன். உபயோகமாக இருக்கும்.//

ஜவஹர், எங்கள் ஸ்கூல் தலைமையாசிரியர் ஒவ்வொருவரும் ரொம்ப பிரசித்தம். 1950 களில் வாஜபேயர், 1960 களில் MK நடராஜன், 1970 களில் SV கல்யாண சுந்தரம் பிறகு P ராமசாமி ஐயர், ஜேஆர் ஆர், புஷபவல்லி மேடம், இப்ப கேயார்னு ஒரு 7 தலைமுறை தலைமையாசிரியர்கள் பற்றி எனக்குத் தெரியும். ஒவ்வொருவரைப் பற்றிச் சொல்லும் போதும் எங்க பள்ளியின் பெருமை தனியாக விரியும்.

முதல் தலைமையாசிரியர் யாரென்று கேட்டுச் சொல்கிறேன். பள்ளியின் நிறுவனர் பெயர் கோமல் சீனிவாச ஐயங்கார். இவரது தியாகங்கள் பலப்பல.. அவற்றை எழுதுகிறேன்.

நன்றி

இயற்கை ராஜி said...

மிக அருமையான உணர்வுகள்.பள்ளியின் வலைப்பூவில் படித்த போதே அக்கணத்தின் அருமையை உணர்ந்தேன்.இங்கே மற்றொரு முறை. இது போன்ற முன்னாள் மாணவர்களின் பண்பு இந்நாள் மாணவர்களுக்கும் ஊக்கத்தையும்,ஆசிரியர்களுக்கு மனத் திருப்தியையும் கண்டிப்பாய்த் தரும்

வானம்பாடிகள் said...

/பழமைபேசி said...

அண்ணே, நான் என்னைக் காண்பிச்சிக்க வேண்டாம்னல்ல சொன்னேன்... அவ்வ்வ்.......//

நீங்க காண்பிச்சதாலதானே இந்த ஆராதனை படிக்க முடிஞ்சது:).

பழமைபேசி said...

// வானம்பாடிகள் said...
/பழமைபேசி said...

அண்ணே, நான் என்னைக் காண்பிச்சிக்க வேண்டாம்னல்ல சொன்னேன்... அவ்வ்வ்.......//

நீங்க காண்பிச்சதாலதானே இந்த ஆராதனை படிக்க முடிஞ்சது:).

4:58 PM, March 30, 2010//

அஃகஃகா! அது அப்பங்க பாலாண்ணே!

இது, இப்ப!! இஃகிஃகி!!

க.பாலாசி said...

இதுதாங்க பற்றுங்கறது.....

Vassan said...

சீமாச்சு

நல்ல செய்தி. 1.70 மில்லியன் ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் அதே மகாதானத்தெருவிலா.. அல்லது புதிய, நல்ல காற்றோட்டமான
இடத்திலா.. தற்போது தமிழகத்தில் தீ அபாயம், நுழைவுகள் - இத்தனை பேருக்கு, இத்தனை சதுர அடிகளுக்கு இத்தனை
ஜன்னல்கள்-கதவுகள் என்பன போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு கட்டப்படிருந்தால் நல்லது.

என்னுடைய மற்றும் பல நூறு சீர்காழி பள்ளி மாணவர்களுக்கு தனி ஆசிரியராகவிருந்த அமரர் - வீ.கே.பாலசுப்ரமணீயன் (முன்னாள் கணித
பேராசிரியர்/ புத்தூர் தொ.நு.க) சில வருடங்கள் பணிபுரிந்த பெருமை ம.துறை நேஷனல் பள்ளிக்கு உண்டு.

வாழ்த்துகள்.

natpu valai said...

நமஸ்காரம். நானும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி. மிகவும் அற்புதமான பணிகளை மேற்க்கொண்டுள்ளிர்கள் என கேள்விப்பட்டேன். உங்கள் பணிகள் தொடர என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.