Thursday, June 17, 2010

99. சீமாச்சுவின் தாம்பூலம் - 17 ஜூன் 2010

நித்யானந்தா ஜெயிலிலிருந்து வந்துவிட்டாராம். அவரை எதற்கு ஜெயிலில் போட்டார்களென்று தெரியவில்லை. சட்டத்தின் பார்வையில் அவர் எந்த ஒரு குற்றமும் பண்ணவில்லையென்றே நான் நம்புகிறேன். மீடியா கிளப்பிவிட்ட பரபரப்பின் உச்சியில் மக்களின் ஏமாற்றத்தத்தைத் தணிக்க, அவரின் பாதுகாப்புக்க்காகவும் தான் அவரை 44 நாட்கள் உள்ளே வெச்சிருந்தாங்க போலருக்கு. வெளியில் வந்த போது 44 நாட்கள் ஜெயிலில் இருந்த வாட்டமே முகத்தில் இல்லை. நானெல்லாம் இவ்வளவு நாள் உள்ளேயிருந்திருந்தால் வெளியில் வரும் போது முகம் எப்படியிருக்குமென்று ஊகிக்கவே பயமாயிருக்கு. சட்டப்படி தப்பு ஏதும் பண்ணாவிட்டாலும் குறைந்த பட்ச குற்ற உணர்ச்சியையாவது முகத்தில் காட்டியிருந்திருக்கலாம்.

வெளியில் வந்த பிறகும் நெருப்பின் நடுவில் தவம் செய்கிறேனென்ற ஸ்டெண்ட் அடிச்சிருக்க வேண்டாம். இவர் பிரச்சினை போதாதென்று பஞ்சாக்னி தபஸ் என்ற தூய்மையான ஒரு விஷயத்தை கேலிக்குள்ளாக்கிவிட்டார்.. போட்டோவுக்கு போஸ் தருவதற்காக 2 மணி நேரம் உக்கார்ந்திருந்தார் போல..

நீதிமன்றம் விதித்த தடையின்படி அவர் சில காலம் ஆன்மீகப் பிரச்சாரம் செய்யக்கூடாதாம். இதுவும் யாரைத் திருப்தி படுத்த என்று தெரியவில்லை. ஒரு தனி மனிதர் தன் மதத்தைப் பின்பற்றுவதிலோ, அல்லது பிரச்சாரம் செய்வதோ நம் நாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையென்று நம்புகிறேன். அதை நீதிமன்றம் ஒருவருக்கு மறுப்பதென்பது தவறாகவேப் படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் முழுவடிவத்தையும் நான் பார்த்து கருத்துச் சொல்வதற்குப் போதுமான சட்ட ஞானம் எனக்கு இல்லாதபடியால் இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்..

அவசியமான குறிப்பு : நான் நித்தியானந்தாவின் பக்தனில்லை. அதனால் யாரும் அது விஷயமாக என்னைத் திட்டிப் பின்னூட்டமிடவேண்டாம்..


oOo


தமிழ்நாட்டில், பழையூரில் ஒரு இடத்தில் தெருவிளக்கு எரிவதில்லையாம். அதனால் யாரோ ஒரு குறும்புக்காரை விளக்குக் கம்பத்தில் அரிக்கேன் விளக்கைக் கட்டி விட்டிருக்கிறார். நல்ல ஐடியா..

சில வருஷங்களுக்கு முன் 1980களில், மயிலாடுதுறை தலைமைத் அஞ்சல் அலுவலகம் அருகில், ரோடு மிக மோசமாக் இருந்தது. அப்பொழுது மழை வேறு சேர்ந்து கொண்டதால், அருகே நிறைய சேறும் சகதியுமாக ரொம்ப மோசமாக இருந்தது. அப்பொழுது பாரதீய ஜனதா கட்சியினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் அஞ்சல் அலுவலகம் அருகில் “நாற்று நடும் போராட்டம்” நடத்தி ரோட்டிலேயே நாற்று நட்டு விட்டார்கள்.. கொஞ்சம் புதுமையாக இருந்தது. அதற்குப் பலனாக அரசாங்கத்தில் உடனேயே ரோடு போட்டுக் கொடுத்து விட்டார்கள்.. அப்பொழுதெல்லாம் ஜெகவீரபாண்டியன் ரொம்ப ஒல்லியாகவும் பணக்காரராக இல்லாமலும் இருந்தார்.. பிறகு MLA ஆனபிறகு எல்லா விதத்திலும் வளர்ந்து விட்டார். அப்பொழுதெல்லாம் அவர் பெயரை எழுதும் போது ஜெகவீரபாண்டியன் M.A (Eco), M.A (Pub Adm), M.Phil, B.Ed. என்று அவர் படித்த படிப்பை முழம் நீட்டு எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம் ஜேவீ Ex. MLA. மட்டும் தானாம்.. ஹூம்ம்ம்ம்

oOo

இந்த வருடம் உறவினர் பையன் ஒருவருக்கு (சொல்லிக்கொள்ளும் படியான மதிப்பெண்களில்லை) கல்லூரியில் அட்மிஷன் வாங்க வேண்டியிருந்தது. ரொம்ப வேண்டிய பையன். எல்லோரும் காலேஜ அட்மிஷனுக்கு பிப்ரவரியிலிருந்தே துண்டு போட்டுக்கிட்டிருக்கும் போது இவர்கள் தேர்வு முடிவுகள் வந்து 6 வாரம் கழித்து வந்தார்கள்...பையன் OC மாணவர் வேறு..என் அண்ணன் மகனுக்கு நான்கு வருடம் முன்பு 7 லட்ச ரூபாய் கேபிடேஷன் கொடுத்து கோவையில் ஒரு பெரிய்ய கல்லூரியில் பிப்ரவரி மாசமே (12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே) சீட்டு வாங்கினோம்.. இப்பவோ ஜீன் மாதம் வேறு.. மார்க்கும் அவ்வளவாக இல்லை.. ஊரில் உள்ள ஒரு பதிவர் தம்பிக்குப் போன் போட்டேன்..

” ராஜா... நம்ம ஊரு காலேஜ் எதிலயாவது நம்ம பையனுக்கு ஒரு சீட்டு கிடைக்குமா? மார்க்கை மட்டும் கேட்காதே...”

” என்னண்ணே.. ஒரு சீட்டாண்ணே வாங்கிடலாம்ணே.. ”

”ரொம்ப லேட்டாயிருச்சே ராஜா.. மேனேஜ் மெண்ட் கோட்டாவெல்லாம் முடிஞ்சிருக்குமே...”

”பரவாயில்லண்ணே.. ஆமாம்..நீங்க ஏண்ணே என்னைக் கேக்கிறீங்க.. உங்க பேரைச் சொன்னாலே எதுவும் கேக்காம சீட்ட்டு கொடுத்திருவாங்கண்ணே... ”

”நெசம்ம்ம்மாவா ராசா? என் பேருக்கெல்லாம் எஞ்சி்னீயரிங் காலேஜ் சீட்டெல்லாம் குடுக்குறாங்களா...?”

”என்னண்ணே.. நானே இப்பப் போயி உங்க பேரைச் சொல்லி சீட்டு வாங்கிருவேண்ணே.. உங்க பவரே உங்களுக்குத் தெரியலியேண்ணே....”

“இதெல்லாம் சொன்னா எங்க வீட்டுத் தங்கமணி கூட நம்ப மாட்டாளே ராஜா”

“அப்படி ஏதாவது சொன்னால் அண்ணிகிட்டே போனைக் குடுங்கண்ணே... நான் சொல்றேன்..”


.......

சில தொலைபேசித் தொடர்புகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் பையனுக்கு நல்ல கோர்ஸில் நல்ல காலேஜில் எந்தக் காசும் வாங்காமல் சீட்டு கிடைத்துவிட்டது.. என் பெயரும் ஒரு காரணமென்பதில் ஒரு மகிழ்ச்சிதான்.. அமெரிக்காவிலிருந்த தங்கமணி நேரில் சென்று கல்லூரியில் சேர்த்தாலும்.. எனக்கென்னவோ வீட்டில் கிடைக்கும் மதிப்பில் பெரிய்ய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை

ஆண்டவனுக்கு நன்றி !! பையன் நல்லமுறையில் படித்துத் தேறுவது இனி அவன் கையில்..

oOo

இந்த YouTube காணொளியில் குழந்தை வர்ஷா ஹரிகதா காலேட்ஷேபம் செய்கிறது. சீதா கல்யாணம். தொலைக்காட்சி சீரியல்களின் வரவால் தொலைந்து போகும் அபாயத்திலிருந்த இந்தக் கலை மறுபடியும் மொட்டு விடுவதில் மிகமிக மகிழ்ச்சி..

குழந்தை வர்ஷாவின் காணொளியைக் கேளுங்கள்.. உங்கள் ஆசிகளும் குழந்தைக்குச் சேரட்டும்..இன்னும் எழுத வேண்டியது நிறைய்ய இருக்கிறது.. அக்கினிச் சித்தருக்கு பதில் சொல்ல வேண்டும்.. இந்த இடுகையில் அக்கி்னி சம்பந்தமான விஷயங்கள் அதிகம் எழுதிவிட்டதால் .. அடுத்த இடுகையில் (அது நூறாவது ... அதில் வேண்டாம்..) எழுதி விடலாம்...

13 comments:

ஆயில்யன் said...

//ஜெகவீரபாண்டியன் M.A (Eco), M.A (Pub Adm), M.Phil, B.Ed//

அட ஆமால்ல! 1990களில் மேதின கொண்டாட்டங்களில் ஊர் ஃபுல்லா சுவர் விளம்பரங்களில் இப்படித்தான் ஒரு கெத்தா இருக்கும் எக்ஸ் ஏம்.எல்.ஏ ஆயி இமேஜ் நாசமா போன ஆளு அனேகமா இவுரு ஒருத்தாரா இருக்கக்கூடும் :))

ஆயில்யன் said...

//என் பெயரும் ஒரு காரணமென்பதில் ஒரு மகிழ்ச்சிதான்//


ரைட்டு! மைண்ட்ல வைச்சுக்கிறேன் :)

நாகை சிவா said...

அண்ண்னே எனக்கு ஒரு சீட்.... ;)

பழமைபேசி said...

//நான் நித்தியானந்தாவின் பக்தனில்லை. //

நம்பிட்டோம்...

//என் பெயரும் ஒரு காரணமென்பதில்//

ஆகா.... வீட்ல வந்தவிட்டு, கேட்டுட்டு மிச்சத்தைப் பேசலாம்...

//நல்ல கோர்ஸில் நல்ல காலேஜில் எந்தக் காசும் வாங்காமல் சீட்டு கிடைத்துவிட்டது.. //

ஓகோ... கல்லூரியில இடமும் கொடுத்துக் காசும் கொடுக்கறாய்ங்களா இப்ப? இது நல்லா இருக்கே?? பையனை ஏன் காசு வாங்க விடாமத் தடுத்தீங்க??

அக்கினிச் சித்தர்... இதைக் கொஞ்சம் கவனிக்கப்படாதா??

*இயற்கை ராஜி* said...

பையன் நல்லமுறையில் படித்துத் தேறுவது இனி அவன் கையில்..
//


பையனுக்கு வாழ்த்துக்கள்...

*இயற்கை ராஜி* said...

இப்போல்லாம் உங்க இடுகை முழுமையாக இருப்பதில்லையே ஏன் ( சில போட்டோக்கள் மிஸ் ஆகுதே)
;-(((

unmai vilambi said...

அய்யா பெரியவரே , தற்பெருமையிலே காலம் ஓடுதே. ஏன் நம்ம ஊரிலே போஸ்டர் கலச்சாரம் இருக்குன்னு இப்பதான் புரியுது

Seemachu said...

//அய்யா பெரியவரே , தற்பெருமையிலே காலம் ஓடுதே. ஏன் நம்ம ஊரிலே போஸ்டர் கலச்சாரம் இருக்குன்னு இப்பதான் புரியுது//

பெரியவர் என்ற சொல்லாடலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு இதில் தற்பெருமை மட்டும் தான் தெரிகிறது என்றால் அது உங்க பிரச்சினை மட்டுமே.. நான் அதில் எழுதியது ஒரு சுயஎள்ளலுடன் கூடவும் தான்..

என் உறவினருக்கு, என் உறவினர் என்பதால் மட்டுமே என் பெயர் சொல்லிச் உதவி தந்தவர் என் பள்ளிக்கால நண்பர். அதற்குப் பிறகு அவருடன் தொடர்பில்லை. அது அவர் தவறில்லை.. நான் தான் ஊர் விட்டு வந்தவன். நான் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் என் தேவையின் போது நான் அவரிடம் சென்று எங்கள் பள்ளிக்கால நட்பைக் காட்டி உதவி கேட்பதென்பது எனக்கு ஒவ்வாதது. அப்படிக் கேட்காத போதிலுமே.. எங்கள் நட்பினை மதித்து அவர் செய்வதும்.. அதை என்னிடம் சொல்லாத்துமே... இங்கே உயர்ந்த விஷயங்கள்..


மேலோட்டமா படிச்சி அடுத்தவரைக் குறைசொல்வதற்காக மட்டுமே கருத்துச் சொல்லாதீர்கள்..

Seemachu said...

//ரைட்டு! மைண்ட்ல வைச்சுக்கிறேன் :)//

வா..ராஜா.. நீ எப்பவுமே நம்ம மைண்ட்ல உண்டு.. வாழ்த்துக்கள்

Seemachu said...

//அண்ண்னே எனக்கு ஒரு சீட்.... ;)//

புலிக்கி இப்பத்தான் கல்யாணமே ஆயிருக்கு... அப்புறம் இருக்கு இன்னும் ஒரு 15 வருஷம்.. அதுக்குள்ள எங்க ஸ்கூலே காலேஜ் லெவலுக்கு ஆயிடும்.. அப்போ எல்லாருக்குமே இடம் உண்டு..

Seemachu said...

//அக்கினிச் சித்தர்... இதைக் கொஞ்சம் கவனிக்கப்படாதா??//

ஏங்கய்யா.. அவரைப் புடிச்சி இழுக்குறீங்க.. பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் ஆமா... (வின்னர் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் !!!)

Seemachu said...

//இப்போல்லாம் உங்க இடுகை முழுமையாக இருப்பதில்லையே ஏன் ( சில போட்டோக்கள் மிஸ் ஆகுதே)
;-(((//

வாங்க தாயீ...அதெல்லாம் போடாமலே எனக்கும் ஒரு நிறைவு வருவதில்லை தான்.. அதான் பாருங்க.. கீழே ஒரு உண்மை விளம்பி “பெரியவரே” ந்னு கூப்பிடறாரு..

நானெல்லாம் யூத்து தான்னு எல்லாருக்கும் சொல்லிக்க வேண்டியிருக்கு...

அபி அப்பா said...

ஆகா நான் இந்த தாம்பூலத்தை போட்டுக்க விட்டுட்டனே!

அண்ணே நீங்க ராவணன் படத்து கார்த்திக் மாதிரி. உங்க பலம் உங்களுக்கே தெரிய மாட்டேங்குது:-))))

அந்த நாத்து நடும் போராட்டம் இன்னும் நியாபகம் இருக்குதா என்ன? அதை அவரே மறந்து போய் ரொம்ப நாள் ஆச்சு. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரி எம் எல் ஏ பத்வி வந்த பின்னே படிச்ச படிப்பும் மறந்து போச்சு. பழகின மனுஷனயும் மறந்து போச்சு. வந்த பாதையும் மறந்து போச்சு.

@ புலி அதானே புலி, இப்ப தான் கல்யாணம் ஆகியிருக்கு அதுக்குள்ள காலேஜ் சீட்டா??

@ ஆயில்! போதும் போதும் படிச்சவரை. சட்டுபுட்டுன்னு கண்ணாலம் கட்டிகிட்டு புலி மாதிரி புள்ளைக்கு சீட்டு கேளுப்பா

@ பழமைபேசி அய்யா! ஏனய்யா இந்த கொலவெறி?

@ அண்ணாவுக்கு! அப்ப நீங்க நித்யாவின் சீடர் இல்லியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

@ ராஜி! வர வர ராஜி நீ உனாதானா பதிவு எல்லாம் படிச்சு படிச்சு ரொம்ப பெரிய பதிவா எதிர் பார்க்கிறயோ:-)))