Sunday, July 17, 2011

125. ஜெய் பத்மநாபா !! ஜெய் பத்மநாபா !!

”சீமாச்சு அண்ணன் இருக்காங்களா ?” - என் செக்ரட்டரியின் ஃபோனில் ஒரு பழக்கப்பட்ட குரல் ஒலித்தது..

“யாருங்க நீங்க..? திருப்பதி பாலாஜி சாருங்களா?”

“ஆமாம்.. அண்ணன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...”


“அண்ணன் இப்போ இன்னொரு முக்கியமான புது கஸ்டமர் கிட்டே பேசிட்டிருக்காங்களே.. இன்ஸ்டண்ட் மெஸஞ்சர் ல கூட ’டூ நாட் டிஸ்டர்ப்’ ரெட் லைட் எரியுதுங்களே..”

“நானும் பார்த்தேன்.. யாரு அது புது கஸ்டமர்?”

“இருங்க... பார்த்து சொல்றேன்.. ட்ரிவேண்ட்ரத்துலேருந்து பத்மநாப ஸ்வாமிகிட்டே பேசிட்டிருக்கார்..”

“ஆஹா...”

“அவரு முடிச்ச உட்னே உங்க கிட்டே பேசச் சொல்றேன்.. சாரிங்க.. ரொம்ப பிஸி இப்ப..”

oOo oOo oOo

இங்கே என்னுடன் பேசிக்கிட்டிருந்தார்.. பத்மநாபஸ்வாமி..

“ராஜா..என் பொக்கிஷங்களெல்லாம் இப்ப வெளியில கொண்டு வந்துட்டேன்.. நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்..எங்க அண்ணன் பாலாஜி அட்டகாசம் தாங்க முடியலை... என்னவோ பெருசா 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வெச்சிகிட்டு ரொம்ப அலம்பல் பண்ணிக்கிட்டிருக்காரு..”

“ஆமாண்ணே.. இங்க அமெரிக்காவுல எல்லாம் அவரு கோவில் தாங்க.. உலகளவுல பார்த்தா அவருக்கு ஒரு 500-600 கோவில் தேறும்ணே...” - இது நான்.




”அதான் நானும் பார்த்தேன்.. நமக்கு தேவலோகத்துல செலவாக்கு அதிகம்.. பூலோகம் இது வரை அண்ணன் கையில இருந்திச்சி.. இனிமே இங்கேயும் நம்ம கொடி நாட்டியாகணும் சீமாச்சு..”

“செஞ்சிருவோம்ணே.. நீங்களே என்னைத் தேடி வந்துட்டீங்க.. நானும் இனி உங்க அணியிலே சேர்ந்துடலாமாண்ணே..”

“வா ராஜா !! நீ தான் முதல்.. இனிமே நீதான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும் சீமாச்சு..”

”ரொம்ப நன்றிண்ணே... வேற யார்கிட்டயாவது பொறுப்புகள் கொடுத்திருக்கீங்களாண்ணே..”

“இன்னும் இல்லே சீமாச்சு.. நீயே பார்த்து உன் அணியைத் தேர்ந்தெடுத்துக்க..”

“நீங்களே சொல்லிட்டீங்களில்லேண்ணே.. இனி அடிச்சு தூள் கெளப்பிடலாம்.. அப்புறம் நம்ம பாலாஜி அண்ணன் ஒண்ணும் பிரச்சினை பண்ண மாட்டாருங்களேண்ணே ?”

“நீ .. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே சீமாச்சு.. நான் பார்த்துக்கிறேன்..”

“இல்லண்ணே.. இங்க தமிழ் நாட்டுல இருக்கிறமாதிரி ஏதாவது ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி சகோதரச் சண்டை மாதிரி ஏதாவது நடந்திடப் போவுது..”

“அதல்லாம் இல்லாம நான் பார்த்துக்கிறேன் சீமாச்சு...”

“அப்புறம் ஒரு சந்தேகம் பத்மநாபண்ணே..”

“சொல்லு சீமாச்சு.. எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வெச்சாப் போச்சு...”

“இங்க பூலோகத்துல இருக்குற 5 கோடி ஜனங்கள்ல என்னை எப்படி அண்ணே செலக்ட் பண்ணினீங்க?”

“நீ பொறக்கும் போதே உன்னை செலக்ட் பண்ணிட்டேன் சீமாச்சு.. உன்னை கொஞ்ச நாள் ட்ரையினிங் அனுப்புவோமுன்னு தான் பாலாஜி அண்ணன் கிட்டே இருக்கச் சொன்னேன்.. அப்புறம் உனக்கு 11, 12 ம் வகுப்புகள் -ல கெமிஸ்ட்ரி பாடம் எடுத்தவரு பேரு என்ன நினைவிருக்கா?”

“இருக்குண்ணே.. நன்ன கே.பி சாரு.. மாயவரம் நேஷனல ஹையர் செகண்டரி ஸ்கூல் ..”

“அவரு முழு பேரு என்ன?”

“கே. பத்மநாபன்..”

“உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகணும்னு தான் நான் உனக்கு மட்டும் அவரு ரூபத்துல தெரிஞ்சேன்.. உன் வாழ்க்கையிலே எல்லாமே எழுதப் பட்ட விதி தான் சீமாச்சு...”
”ரொம்ப நன்றி பத்ம்நாபண்ணே.. அப்புறம்...”

“என்ன வேணும் சீமாச்சு..?”

“இந்த ‘தென் மண்டல அமைப்பாளர், துணைப் பொதுச் செயலாளர், கழகப் பொதுச் செயலாளர்’ மாதிரி பதவியாக் கொடுத்திருங்கண்ணே..”

“தென்மண்டலம் என்ன ராஜா.. தென்மண்டலம்.. இனி நீதான்.. இந்த பத்மநாபனுக்கு அகில உலக ஒருங்கிணைப்பாளர்..”

“அப்புறம்.. துணைமுதல்வர்.. முதல்வர் பதவியெல்லாம் உண்டில்லையாண்ணே..”

“தாராளமா.. ராஜா.. இப்பல்லாம் ஜூலையில பொதுக்குழு வெக்கிறதுதான் ஃபேஷன்.. ஜூலை 20 உன் பிறந்த நாள் அன்னிக்கு தேவலோகத்துல பொதுக்குழு வெச்சிருக்கேன்.. முப்பத்து முக்கோடி தேவர்களும் வருவாங்க.. பொதுக்குழுவுல உன்னை என் பூலோக வாரிசாகவும்.. அகில உலக ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிச்சிடறேன் ராஜா..”

“சரீண்ணே.. அங்கே கேரளாவுல உங்க தொண்டர் பத்மநாப அரசர் வாரிசெல்லாம் ஏதாவது தகராறு பண்ணிடப் போறாங்கண்ணே..”

“கவலைப் படாதே சீமாச்சு.. அவங்களுக்கெல்லாம் வயசாச்சி.. எல்லோரையும் தேவலோகத்துல பதவி கொடுத்து ப்ரமோட் பண்ணிடறேன்..”

“ரொம்ப சரீண்ணே.. அப்ப இந்த மாசம் இருபதாம் தேதி என் பிறந்தநாள்லேயே உங்க அகில உலக ஒருங்கிணைப்பாளரா பதவி ஏத்துக்கறேன் அண்ணே.. அப்படியே கொஞ்சம் கேஷ் என் அக்கவுண்ட்ல போட்டுடுங்க.. கழகப் பணிக்குத் தேவைப்படுது..”

“சரி ராஜா... இப்ப சில்லரையா 50 ஆயிரம் கோடி ரூபாய் போட்டுடறேன்.. அப்புறம் எல்லாம் உனக்குத் தானே..”

சொல்லிவிட்டு மறைந்தார் பத்மநாபஸ்வாமி..

மூடியிருந்த கையை விரித்துப் பார்த்தால்.. கையில் துளசி தளங்களும் தீர்த்தமும் .. அத்துடன்.. “ஜெய் பத்மநாபா” என்று ஒரு துண்டுச்சீட்டும் இருந்தன..

oOo oOo

ஆகவே பக்தர்களே.. கழகப் பணி ஆரம்பித்தாகிவிட்டது.. அமெரிக்காவில் முதல் ஒரிஜினல் பதமநாப ஸ்வாமி கோவிலாக என் வீட்டிலேயே ஸ்வாமி ஆவாஹனம் செய்யப்பட்டது.. பக்தர்கள் தரிசிக்க வரலாம்... ஸ்வாமி அருள் பெறலாம்... வேறெங்கிலும் கிளைக் கழகங்களோ, கோவில்களோ துவக்கப்பட வேண்டுமென்றால், முறைப்படி என்னிடம் தலைமைக் கழகத்தில் பதிவு செய்து ஆரம்பிக்கலாம்..

“ஜெய் பத்மநாபா !! ஜெய் பத்மநாபா !!”

பின்னூட்டம் போடுபவர்களுக்கு ”அகில உலக பத்மநாபர் பக்தர் முன்னேற்றப் பேரவை” உறுப்பினர் கார்டும் .. தகுதிகளுக்கேற்றாற் போல் வாரிய பதவிகளும் வழங்கப்படும்..


4 comments:

Ramachandranwrites said...

நானும் உண்டு, நானும் உண்டு. உடல் மண்ணுக்கு, உயிர் சீமாச்சு அண்ணனனுக்கு

சமுத்ரா said...

:):)

அபி அப்பா said...

ஆகா அண்ணே! எனக்கு நீங்க எதுனா பதவி குடுத்தா "குடும்ப அரசியல்"ன்னு நாலு பேர் பேசுவாய்ங்க. அதனால என்ன பரவாயில்லை. "பொருளாளர்" பதவி மட்டும் கொடுத்துடுங்க அண்ணே. கூகிள் பஸ்ல எல்லாரும் "எங்க காலேஜ் எங்க காலேஜ்"ன்னு தொடர் விட்டுகிட்டு இருக்காங்க. எல்லாமே சூப்பரா இருக்கு. எனக்கு மாத்திரம் பொருளாளர் பதவி கொடுத்து பாருங்க. நம்ம ஸ்கூலை அதை விட பிரமாதப்படுத்தி கட்டி அங்கயே டி பி டி ஆர் காலேஜ்ம் கட்டி மறக்காம கெமிஸ்ட்ரி லேப்க்கு பத்மநாபன் கெமிஸ்ட்ரி லேப்ன்னும் வச்சு அசத்திடுறேன் அண்ணே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஹாப்பி பர்த்டே, சீமாச்சு. கொஞ்சம் லேட்தான், ஆனாலும் படிச்ச உடனே சொல்லிட்டேன்!

பத்மநாபன்னு என் கிளாஸ்மேட் (தமிழ் வாத்தியார் தம்பி) இப்ப எங்கேன்னு தெரியல ;-(

நேரம் இருக்கும்போது ‘சாட்’ல வாங்க!