உலக செய்தி ஒன்றைப் படித்து அதைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைய வேண்டும்.. அது தவிர அந்த செய்தி பற்றி யாரிடமாவது நேர்முகம் செய்யும் போது அவரிடம் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் எழுத வேண்டும்..
நான் சிறு வகுப்புகளில் படிக்கும் காலங்களிலெல்லாம் உள்ளூர் செய்திகளையே நான் படிக்க வாய்ப்பு கிடைக்காது.. ஆசிரியர்கள் மட்டுமே தினமணியையும், தினத்தந்தியையும் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் படித்த பள்ளியில் ஆங்கிலச் செய்தித்தாள் படித்த ஆசிரியர்களைப் பார்த்ததாக நினைவில்லை.. ஒரு வேளை ஆங்கில செய்தித்தாள்களின் விலையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம.. மற்றபடி எனக்கு போதித்த ஆசிரியர்களின் தன்முனைப்பையும், அறிவுத் திறனையும் விமரிசிக்கும் தேவை எனக்கு இல்லை...
ஹோம் வொர்க் செய்வதற்காக வலையில் தேடி அவளே மேய்ந்து தேர்ந்தெடுத்த் செய்தி..
கடந்த காலத்தில் தான் ஆட்சி செய்து.. பல ஊழல்களால் தன் பெயரையும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் (இரண்டும் ஒன்றுதானோ..) பெயரையும் மாசு படுத்தி.. தனது சொந்த மக்களாலேயே மிக மோசமான நிலையில் தோற்கடிக்கப்பட்டு ஒளிந்திருக்கும் ஒரு தலைவர் பற்றியது..
உலகளவில் அவரைப்பற்றிய இந்த செய்தியின் குறிப்பை நாலே நாலு வரியில்
”ஓடி ஒளிந்து கொண்ட ஒரு தலைவர்..” என்ற குறிப்பில் அழகாக எழுதினாள்..
அந்தத் தலைவரிடமே அவரை நேர்முகம் செய்யச் செல்லும் போது கேட்க வேண்டிய கேள்விகளாக அவள் எழுதியது என்னை வியப்பில் ஆழ்த்தியது..
மிக நேர்மையான கேள்விகள்..!! அவள் படித்த் செய்திகளில் அவளது புரிந்துணர்வை வெளிப்படுத்தும் கேள்விகள்...!!
1. கலைஞரே.. உங்கள் (தமிழ்) மக்களிடமிருந்தே நீங்கள் மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏன் வந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
2. கலைஞரே, உங்களை 5 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய தமிழக மக்களே.. “நீங்கள் ஆண்டது போதும்.. இனியும் நீர் தேவையில்லை” என்று உங்களை ஒதுக்கி வைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... அதற்கு நீங்கள் எவ்வாறு காரணமானீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
3. கலைஞரே.. நீங்களே இத்தனை முறை ஆண்டது போதாதா..? உங்கள் மக்கள் அவர்களுக்கான மாற்று தலைவரை வேண்டும் போது, அவர்களின் ஆசைக்குட்பட்டு வழிவிட்டு வேறு தலைவரை அவர்களுக்கு வழங்குவதில் உங்களுக்கென்ன தடை..?
8 comments:
Good questions
But answer?
உங்கள் கேள்விக்கான விடை கலைஞர் திருக்குறள் வழி வாழ்க்கை நடத்தியது தான். என்ன திருக்குறள் என்கிறீர்களா?
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் - (குறள்-67)
அண்ணே, பயந்துகிட்டே படிச்சேன். சூர்யாவுக்கு என்ன பதில் சொல்வதுன்னு.... நல்லவேளை கடாபி கட்சிகாரன் பதில் சொல்லட்டும்.. நான் தப்பிச்சேன்:-))
//உங்கள் கேள்விக்கான விடை கலைஞர் திருக்குறள் வழி வாழ்க்கை நடத்தியது தான். என்ன திருக்குறள் என்கிறீர்களா?
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் //
சதுக்க பூதம்.. கலைஞர் அவரோட பையனை அவையத்து முந்தி இருக்கச்செய்தது அவருக்கு நல்லதாயிருக்கலாம்.. மத்தபடி அவரை நம்பி ஆட்சியைக் கொடுத்த தமிழகமக்களை 1 லட்சம் கோடி கடனாளியாகவும் .. உலகமகா ஊழலாளிகள் என்ற பெயரையும் தமிழக மக்களுக்கு வாங்கித் தந்துவிட்டாரே.. அது தான் இப்ப பிரச்சினை !!
சீமாச்சு..
சூர்யாவின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதற்குக் கண்டனங்கள்!
(இஃகி, இது எப்படி இருக்கு?)
//சதுக்க பூதம்.. கலைஞர் அவரோட பையனை அவையத்து முந்தி இருக்கச்செய்தது அவருக்கு நல்லதாயிருக்கலாம்.. மத்தபடி அவரை நம்பி ஆட்சியைக் கொடுத்த தமிழகமக்களை 1 லட்சம் கோடி கடனாளியாகவும் .. உலகமகா ஊழலாளிகள் என்ற பெயரையும் தமிழக மக்களுக்கு வாங்கித் தந்துவிட்டாரே.. அது தான் இப்ப பிரச்சினை !!
சீமாச்சு.. //
ஆஹா. நக்களுக்காக நான் அந்த பின்னூட்டத்தை இட்டிருந்தேன். கடந்த சில காலமாக கருணாநிதியின் செயல் பாடுகளால் உண்மையிலேயே கொள்கை அடிப்படையில் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தலை குனிந்து இருக்கிறார்கள். கொள்ளையின் அடிப்படையில் இருப்பவர்கள் மட்டும் தான் தற்போது அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
Post a Comment