அன்பிற்குரிய மனைவியுடனும், ரொம்ப செல்ல மகளுடனும் பாஸ்டனில் வாழ்ந்து வந்த நேரம்.
மகளுக்கு அப்பொழுது வயது நான்கு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதிகம் (அளவுக்கு அதிகமான) மற்ற குழந்தைகளுடன் நேரம் செலவிட வழியில்லை.
கூடுமான வரையில் எனது நண்பர்களுக்கெல்லாம் ஒன்று திருமணமாகவில்லை அல்லது ஒரிரண்டு வயதில் பெண் மகவு மட்டுமே உண்டு.
என் மகள் படிக்கும் பள்ளியிலும் (வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே.. அதுவும் மூன்று மணி நேரம்) எல்லோரும் அனேகமாக பெண் குழந்தைகளே !!
பக்கத்து வீட்டில் ஒரு பெங்காலி-மலையாளி குடும்பம் குடி வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு நான்கு வயது பையன் உண்டு.
என் மனைவிக்கும் இது ஒரு வசதியாக இருந்தது. சில (வெகு சில) நேரங்களில் மகளை அவர்கள் வீட்டுக்கு விளையாட அனுப்புவார்கள்.
ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்த நேரம். வழக்கமாக ஓடி வந்து கட்டிக் கொள்ளும் மகள் என்னிடம் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தாள். மனைவிக்கும் என்ன விஷயமென்று தெரிந்திருக்க வில்லை.
"மதியம் சாயோக் (பக்கத்து வீட்டுப் பையன் பேர்) வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ஒரு யோசனையாகவே இருக்கிறாள் என்ன வென்று தெரியவில்லை" - மனைவி
என் மகளிடம் என்னவென்று கேட்போமென்று நெருங்கினேன்.
உரையாடல் வழக்கமான பாணியில்.. நான் தமிழில் கேள்விகள், என் மகள் எல்லாக் குழந்தைகள் பாணியில் ஆங்கிலத்தில் பதில். உரையாடல் சுவை கருதி அனைத்தும் தமிழில்...
"என்னடா கண்ணம்மா !!"
"ம்ம்.. ஒண்ணுமில்லப்பா.."
"சும்மா சொல்லு.."
"நான் ஒண்ணு சொல்றேன்.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டியே"
"சரி"
"அம்மா கிட்ட கூட சொல்லக் கூடாது'
"சரி"
"பின்கி ப்ராமிஸ்"
இரண்டு பேரும் வலது கை சுண்டி விரல் கோர்த்து சத்தியம் செய்து கொண்டோம்.
"இன்னிக்கு சாயோக்கைப் பார்த்தேன் "
"சரி. என்ன சொன்னான்?"
"ட்ரெஸ் இல்லாமல் பார்த்தேன்.."
"அதனால என்ன? அவனும் பேபிதானே"
"இல்ல இது வேற.."
"என்ன? சரியாச் சொல்லு"
"This guy has got A TAIL !!!!!!!!!!!!!!!!!!!!!!"
Monday, January 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
aiyyo! :-)
வாங்க சீமாச்சு.
நலமா?
இது குழந்தை உலகம். க்ளீன் ஸ்லெட்
ஹி.. ஹி...
அன்பின் துளசியக்கா..
என் மகள்கள் இருவரும்.. இன்னும் கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நீங்கள் சொல்லுவது போல் குழந்தைகள் உலகம் கல்மிஷமில்லாதது..
நன்றி.. உங்கள் பின்னூட்டத்திற்கு..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..
ஆனந்த், ரரா, ராம்ஸ். உங்களுக்கு என் நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..
Post a Comment