Sunday, November 25, 2007

57. பரீட்சை முடிஞ்சுப் போச்சு.....

நவம்பர் 17 .. GARP (Global Association of Risk Professionals) என்ற அமைப்பினர் நடத்திய Financial Risk Manager(FRM) என்ற தகுத்க்கான பரீட்சை எழுதினேன்.

கடந்த 6 மாதங்களாகவே இதற்குப் படித்து வந்துள்ளேன்... இது படித்துத் தேர்வானால் என் தொழிலில் என் வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

படித்து முடித்து .. ஐடி தொழிலுக்கு வந்த பின்னரும் நிறைய தேர்வுகள் எழுதியுள்ளேன்.. பெரும்பாலும் அவை ஐடி சம்பந்தப் பட்டவை. தேர்வுகள் கம்பியூட்டரில் இருக்கும். முடிந்தவுடன் பாஸா.. ஃபெயிலா.. என்று தெரிந்து விடும்.

இந்தத் தேர்வு இது கொஞ்சம் வித்தியாசமானது. இது நிதி சம்பந்தமான ரிஸ்க் பற்றியது. மருந்துக்கும் Oracle, JAva, C, C++ எல்லாம் கிடையாது (அதுவாக இருந்தால் அடிச்சு ஆடிடுவோமில்ல...) நிறைய கணிதம், புள்ளியியல், நிதி நிர்வாகம்.. அனைத்திலும் கேள்விகள் இருந்தது..

ஐடி தேர்வுகளில் பெயிலானால் மறுநாளே (அடுத்த அட்டெம்ப்ட்) எழுதிடலாம்.. இந்த தேர்வு வருடா வருடம் நவம்பர் மாதம் மட்டுமே.. இந்த வருடம் தவறினால் அடுத்த வருடம் நவம்பர் தான்

தேர்வு எழுத கணிணி கிடையாது. பேப்பர், பென்சில் (பேனா கூட கிடையாது), கால்குலேட்டர் மட்டும். தேர்வு மொத்தம் 5 மணி நேரம்.

காலையில் 9 - 11:30 வரை. மதியம் 1-3:30 வரை.

எனக்குள் .. ஒரு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அக்கறையும் பதற்றமும் இருந்தது. இரண்டு நாள் முன்னாடியே பென்சிலகளைத் தேர்ந்தெடுத்து சீவி.. சாமி (மற்றும் அம்மா) படம் முன்பு வைத்து விட்டேன். கால்குலேட்டரும் சாமியிடம்..

தேர்வுக்கு முதல் நாளிரவு 1 மணிவரை படித்து காலை ஐந்து மணிக்கே எழுந்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிவிட்டு.. 7 மணிக்கே.. தேர்வுமையத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன்..

என்னையும் சேர்த்து மொத்தம் 22 பேர் தான் இந்த மையத்தில் தேர்வு எழுதினர். நன்றாகவே எழுதியுள்ளேன்.. உலகம் முழுவதும் மொத்தம் 10000 பேர் எழுதுவர். பொங்கல் சமயத்தில் தேர்வு முடிவு வரும். கண்டிப்பாக பாஸ் செய்வோம் என்று நம்பிக்கையுள்ளது..


(B.Sc, M.Sc) கணிதம் படித்து விட்டு ஐடி-யில் இருப்பவர்களுக்கு இந்தத் தேர்வு ஒரு நல்ல திருப்பம் தரும். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.. என்னாலான உதவிகள் செய்யத் தயார்..

11 comments:

துளசி கோபால் said...

கண்டிப்பா, வெற்றி உங்கள் பக்கம்தான்.

வாழ்த்து(க்)கள் சீமாச்சு.

நல்லா இருங்க.

இலவசக்கொத்தனார் said...

நம்பிக்கை இருக்குல்ல, கட்டாயம் பாசாயிடுவீங்கண்ணா!!

வாழ்த்துக்கள்!!

Seemachu said...

துளசியக்கா.. வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நனறி.. நான் பதிவு போடும் போதெல்லாம் வரும் உங்கல் முதல் பின்னூட்டம் எனக்கு ஒரு புது தெம்பு..

ஒவ்வொரு புது பதிவருக்குமே.. உங்கள் பின்னூட்டம் ஒரு டானிக் தான்..

அன்புடன்
சீமாச்சு..

Seemachu said...

வாங்க இ.கொ..

நேத்திக்குத்தான் உங்களை நெனச்சுக்கிட்டேன்.. ஒரு தமிழன்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.. ஏதோ ஒரு பேச்சுக்கு ..யாரிடமோ அவர் பதில் சொல்லும் போது.. "We are not daily boilers" அப்படீன்னாரு.. எனக்குச் சட்டுனு ஒண்ணும் புரியல..

என்னங்க அது .."daily boilers" அப்படீன்னா.. என்னங்க அது.. அப்படீன்ன்னேன்..

அதுவா.. அதுக்கு..."அன்றாடங் காய்ச்சிகள்" அப்படீன்னு அர்த்தம் அப்படீன்னாரு..

ஆஹா.. இது நம்ப இலவசக் கொத்தனார் ஸ்டைலாச்சேன்னேன்..

அவர் .."அது யாரு.. அது இலவசக் கொத்தனார்.. " னு கேக்க..

அது ஒரு பெரிய உரையாடலாயிடிச்சி..

அன்புடன்,
சீமாச்சு..

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாழ்த்துக்கள் சீமாச்சு!

இந்த பதிவும் இதுபற்றி அறியோதோருக்கு உதவட்டும். உங்கள் நல்ல மனம் போலவே.

ஆயில்யன் said...

அண்ணே வாழ்த்துக்கள்!

எனக்கு PM சம்பந்தமா டீடெயில் வேணுமே.?
எப்படி மெம்பராகி பரீட்சை எழுதுறதுஎனக்கு தகுதி உண்டா அப்ப்டின்னு..????

இலவசக்கொத்தனார் said...

//துளசியக்கா.. வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நனறி.. நான் பதிவு போடும் போதெல்லாம் வரும் உங்கல் முதல் பின்னூட்டம் எனக்கு ஒரு புது தெம்பு..//

அதாவது டீச்சர் வந்து வெரி குட் இன் பின்செல்லிங் இல்லையா?!!!


அதாங்க ஊக்கு விக்கறது!

(நம்ம ஸ்டைல் அப்படின்னு சொல்லிட்டீங்க. அப்புறம் எதாவது சொல்ல வேண்டாமா?) ஹிஹி

Seemachu said...

இ.கொ,
//
அதாவது டீச்சர் வந்து வெரி குட் இன் பின்செல்லிங் இல்லையா?!!!


அதாங்க ஊக்கு விக்கறது!
//
ஆமாம்.. ஆமாம்.. டீச்சர் ஈஸ் வெரி குட் இன் பின் செல்லிங்...

உங்க ஸ்டைலே தனிதான்..

மறக்கவோ மறுக்கவோ முடியாது..

அன்புடன்,
சீமாச்சு...

Seemachu said...

அன்பு ஜீவா வெங்கட்ராமன்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

அடிக்கடி வாங்க...

Seemachu said...

அன்புத்தம்பி ஆயில்யா..

//எனக்கு PM சம்பந்தமா டீடெயில் வேணுமே.?
எப்படி மெம்பராகி பரீட்சை எழுதுறதுஎனக்கு தகுதி உண்டா அப்ப்டின்னு..????
//
நிச்சயம் சொல்றேன்.. அந்தத் தேர்வும் ஜனவரி 2003-லேயே எழுதியுள்ளேன்.. நிச்சயம் உதவுகிறேன்..

ஒரு நாள் Googletalk-ல் பேசுவோம..
அன்புடன்,
சீமாச்சு..

ராமானுஜம் ராகவன் said...

Fantastic photograph sir... The happiness in the children..