Tuesday, August 28, 2007

56. என் நண்பனே.. நடராஜா.. !!

நியூ டெல்லி: ஆகஸ்ட் 30, 1989 அதிகாலை..


"நம்ம நடராஜ் ஆக்ஸிடெண்ட்லே இறந்துட்டானாம் டா..", இரவு முழுவதும் NIC யில் வேலை பார்த்து விட்டு வந்துவிட்டு.. காலையில் கதவைத்திறந்த என் நண்பன் சொன்னான்.

"எந்த நடராஜு? நம்ம நடராஜா? எப்படி? என்ன ஆச்சு?", வழக்கமாகவே கதை விடும் நண்பன் சொல்வதும் பொய்யாக இருக்கக் கூடாதா என ஒரு ஆதங்கத்துடனும் அழுகையுடனுமே கேட்டேன்.

"ஆமாம்.. நம்ம நடராஜே தான்.. வேலூர்-லே தான்.. நேத்து சாயங்காலம் .. லைப்ரரி புக் ரிடர்ன் செய்துட்டு வரும் போது.. ஃபுட் போர்ட்லேருந்து ஸ்லிப் ஆகி விழுந்துட்டானாம்..."

"பின் சக்கரம் வயித்துல ஏறிடிச்சாம்.. நேத்து நைட் கம்ப்யூட்டர்ல மெட்ராஸ் NIC லேருந்து தட்டிக்கிட்டே இருந்தானுங்க... ராத்திரி முழுக்க அழுது தீத்துட்டேன்..."

ரொம்ப சோகமாயிட்டேன்.... நான் என் நிலைக்கு வர சில வாரங்கள் ஆயிடிச்சி..

oOo oOo

இறக்கும் போது நடராஜுக்கு 26 வயசு.. கை நிறய்ய சம்பளம் வாங்கும் வேலை.. அப்பொழுதுதான் தொடங்கப்பட்டு மாவட்டம் தோறும் கிளை பரப்பிக் கொண்டிருந்த மத்திய அரசின் NIC (National Informatics Center) (ராஜீவ் காந்தியின் கனவு நிறுவனம்) யில் வேலூர் மாவட்டத்தில் தலைமைப் பதவி.. மாவட்ட கலெக்டரின் அறைக்கு அடுத்த அறை அவன் அறை தான்.. எப்பொழுது வேண்டுமானாலும் கலெக்டரைச் சந்திக்கலாம்..

காதலித்தவளையே கல்யாணம் கட்டி அன்றுடன் 126 நாளாகியிருந்தது...

ஆடி மாதம் கழிந்து குடித்தனம் வைக்கலாமென்று மயிலாடுதுறையிலிருந்து ஆசை மனைவியும் குடும்பத்தாரும் சீர் செனத்திகளோடு முதல் நாளிரவு தான் வந்திறங்கியிருந்தார்கள்... கொண்டு வந்த மூட்டைகளின் கட்டு கூட இன்னும் பிரிக்கவில்லை....

மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்...

oOo oOOo

நடராஜ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்....

நான் B.Sc and M.Sc கணிதம் படிக்கும் போது எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல படிப்பாளி.. Calculus, DIfferential Equations, Classical Mechanics எல்லாம் தலைகீழ் பாடம்.

B.Sc., கணிதத்தில் கல்லூரியில் முதலிடம்.. M.Sc., கணிதத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாமிடம்.. எது கேட்டாலும் பொறுமையாக்ச் சொல்லித் தருவான்..

M.Sc முடித்துவிட்டு.. அண்ணாமலையில் PGDCA .. பெங்களூர் IISc (Indian Instititute of Science)-ல் Master of Engineering (Computer Science) முடித்தவர். அந்தக் காலத்தில் மாயவரத்தில் ME என்பதெல்லாம் ரொம்ப அதிகம்.. நிறைய்ய பேர் பார்க்க முடியாது.. ஊருக்கே ஒருத்தர் ரெண்டு பேர் தான் இருப்பாங்க...

oOo oOo




1986, 1987 ஜூனில் நாங்களெல்லாம் வேலையில்லாப் பட்டதாரிகள்.. சொல்லிக்கொள்ளும் படியான நிரந்தர வேலையில்லா விட்டாலும் படித்த கணிதம் சோறு போட்டது. +2 மற்றும் B.Sc மாணவ/மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துக் கொஞ்சம் டீ/சிகரெட் குடிக்கக் காசு பார்த்துக் கொண்டிருந்தோம்



1987 ஜூலையில் நான் IIT Kharagpur M.Tech படிக்கச் செல்ல மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயிலேறிக் கொண்டிருந்த நேரம்.. அரக்கப் பரக்க ஓடிவந்து..

"இங்க வா மாப்பிள்ளை... இந்தா இதுல 300 ரூபா இருக்கு.. இப்பத்தான் டியூஷனில் வசூலாச்சு.. நீயும், வெளியூர்/வெளிமாநிலம் போயி IIT-ல படிக்கப் போற... படிச்சு எப்படியும் பெரிய ஆளாயிடுவே.... எங்களையெல்லாம் மறந்துராதரா..."


கட்டித் தழுவி அன்போடு சொல்லிச்சென்ற நண்பன் முகம் மறக்கவில்லை.. அவன் சொல்லிச் சென்ற சொற்களும் மறக்கவில்லை....

அவன் போய்ச் சேர்ந்து தான் இன்றோடு 18 வருடங்களாயிடிச்சி... அவன் நினைவுகள் மட்டும் எப்பொழுதும் மடை திறந்த வெள்ளமாக.... வற்றியதேயில்லை...

14 comments:

இலவசக்கொத்தனார் said...

பாவம் சின்ன வயசுங்க. அவங்க மனைவி எப்படி இருக்காங்க. அவங்க குடும்பத்தார் நல்லா பாத்துக்கிட்டாங்களா? இப்போ கேட்டாலும் கஷ்டமா இருக்கே... :-(

Unknown said...

மிகவும் வருத்தமாக உள்ளது.காலம் அவர் குடும்பத்துக்கு மன ஆறுதலை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்

அவரது மனைவிக்கு மறுமணம் நடந்ததா?

சீமாச்சு.. said...

அன்பு இ.கொ & செல்வன்,
வாங்க... உங்க அன்புப் பின்னூட்டங்களுக்கு நன்றி...

இந்த சம்பவத்துக்குத் தொடர்ச்சி 1990.. 1992 நடந்தது.. நண்பனின் இறப்புக்குப் பிறகு அவனின் இளம் மனைவிக்கு சென்னை NIC யில் குமாஸ்தா வேலை கிடைத்தது.. அந்தப் பெண் இருந்தது சோகத்தின் உச்சக்கட்டம்..

அவரை சென்னை வந்து சந்தித்து.. அவர் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றி.. இன்னொருவருக்குத் திருமணம் முடிக்க நாங்கள் பட்ட கஷ்டங்கள் (சில சொந்தக் காரணங்களால்) இங்கு விவரிக்க இயலாது....

ஆண்டவன் அருளில் இப்பொழுது அவர் இன்னொருவர் மனைவி.. 10 வயதில் அழகான ஒரு பெண் குழந்தைக்குத் தாய்..

இப்பொழுது அவரால் என் நண்பரை நினைவு கூற சூழ்நிலைகள் அனுமதிக்குமா என்று தெரியவில்ல...

எங்கள் நட்பு அதையும் விட ஆழமானது..

அன்புடன்,
சீமாச்சு...

ILA (a) இளா said...

//அன்றுடன் 126 நாளாகியிருந்தது//
//மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்//
ஆண்டவா. மனங்கலங்க வெச்சுட்டீங்க சீமாச்சு :(

சீமாச்சு.. said...

////அன்றுடன் 126 நாளாகியிருந்தது//
//மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்//
//
ஆமாம் இளா.. அது தான் பெரிய சோகம்...

மே மாதம் 7ந்தேதி அவர் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டுத் தான் நான் டெல்லி வந்திருந்தேன்.. அதனால் என்னால் உடனே செல்ல முடியவில்லை..

இன்னொரு பெரிய சோகம் அவர் இறந்த மறு நாள் .. அன்று இந்தியா தழுவிய பெரிய 'பந்த்'.. ராஜீவ் காந்தி ஆட்சியில் அதன் பெயர் 'பாரத் பந்த்' என்று ரொம்ப பிரபலம்.

பந்த் தினால் அவர் உடலை மயிலாடுதுறை கொண்டு செல்வதில் கூட ப்ரச்சினைகள்...

அன்றைய சோகங்கள் என்னால் மறக்க இயலாதவை...

அன்புடன்,
சீமாச்சு...

Raja said...

I know him very well. He is my relative also. its really sad.He is very brilliant and affectionate.

சதுக்க பூதம் said...

It is really great that still u remember your old friend death date even after 15 years.I too know about him. He is really a brillant and good person

சீமாச்சு.. said...

//Raju said...
I know him very well. He is my relative also. its really sad.He is very brilliant and affectionate.

//
அன்பு ராஜு, எனக்கும் உங்களை யாரென்று ஊகிக்க முடிகிறது..

வாழ்க்கை எப்படி போகிறது?

அன்புடன்,
சீமாச்சு..

சீமாச்சு.. said...

//சதுக்க பூதம் said...
It is really great that still u remember your old friend death date even after 15 years.I too know about him. He is really a brillant and good person
//
நடராஜ் தான் 'மறந்துராதரா'-ன்னு சொல்லிட்டுப் போன பிறகு 15 வருஷம் ஆனால் என்ன.. அதுக்கு மேல ஆனால் என்ன? மறக்க முடியுமா?

ஆமாம் அவரைத் தெரிஞ்சிருந்தால் என்னையும் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகமாச்சே.. என்னையும் தெரியுமா?

உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ள முடியுமா? "சதுக்க பூதம்" என்ற பெயரிலிருந்து உங்களை என்னால் யாரென்று யூகிக்க முடியவில்லை..

அன்புடன்,
சீமாச்சு...

Anonymous said...

Dear Seemachu, I am also from Mayavaram, DBTR etc... I am guessing your friend married my classmate who was the niece of Viruthambal teacher. Or is it a different one? which year did you finish your plus two? I was the 3rd set (1982) to this Plus two system.

சீமாச்சு.. said...

//Dear Seemachu, I am also from Mayavaram, DBTR etc... I am guessing your friend married my classmate who was the niece of Viruthambal teacher. Or is it a different one? which year did you finish your plus two? I was the 3rd set (1982) to this Plus two system.

//
அனானி.. வாங்க.. நடராஜ் மனைவி.. விருத்தாம்பபாள் டீச்சர் உறவினரா.. என்று தெரியவில்லை.. அவங்க கார்காத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நம்ம ஊரில் அவர்களெல்லாரும் ஒரு வகையில் ஒருவருக்கொருவர் உறவினர்தாம்..

நான் ப்ளஸ் 2 முடித்தது.. 1981-ல். நான் இரண்டாவது செட்.

கொஞ்சம் முகம் காட்டுங்களேன்.. அனேகமாகத் தெரிந்தவராகத்தான் இருப்பீர்கள்..

அன்புடன்,
சீமாச்சு...

அபி அப்பா said...

ஆமாம்ண்ணே! எனக்கும் ட்க்ஹெரியும் அவங்க கார்காத்தார்ன் தான்!ஆனா விருத்தாம்பா டீச்சருக்கு சொந்தமானு தெரியாது!!! ஆனா என் சீனியர் நடராஜ் பத்தி நல்லா திரியும்:-(((

Anonymous said...

Dear Seemachu, I don't have a blog of my own or anything. But I do like to read about the current events.
I accidentally came across your blog and realised you are from Mayavaram too. I was in 8th std when Abhitha Gujambal teacher started working.

Dr.Srishiv said...

நெறைய எழுதறீங்க ஐயா, அருமையாக இருக்கின்றது உங்கள் வலைப்பூ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, ஒருவருடமாக வலையுலகில் நான் அதிகம் வராத காரணத்தினால் உங்கள் வலைப்பூவை எல்லாம் பார்க்கும் வாய்ப்புகிடைக்கவில்லை, இனி அடிக்கடி பார்க்கின்றேன், நன்றி மீண்டும். ஸ்ரீஷிவ்...@ சிவா...