Monday, February 02, 2009

70. கவிதை - கலைஞர் கருணாநிதி !!

மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!
மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?

வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !!




உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?



தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்..!!



இப்படியெல்லாம் கலைஞர் "சங்கத் தமிழ்" புத்தகத்திலே பக்கம் 288-ல் சொல்லியிருக்கிறார் !!



அந்தப் படத்தில் உள்ள பையன் இதெல்லாம் கலைஞரைப் பார்த்துக் கேட்கிறமாதிரி இருக்கிற தென்று நீங்கள் நினனத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை..


படம் உதவி: நண்பரும் சக பதிவருமான ஐயப்பன்

6 comments:

அபி அப்பா said...

அட நம்ம ஊர் குசும்பு! ஆனாலும் கசக்கும் உண்மை தான் அண்ணா:-((

RRSLM said...

//வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?
//

உள்ளொன்றும் வெளியோன்றுமாய் எப்படி இருக்க முடிகர்தேன்றே தெரியவில்லை. இளையகுடி, மூத்தகுடி, இறந்த குடி மற்றும் வாரிசுகள் அனைவருக்கும் சேர்த்து வைத்து விட்டு போகவேண்டும் என்றும், தன் இறந்த பின்னும் தனது குடும்பமும், சொந்தகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தாத்தா நினைக்கின்றார் போல. இதையெல்லாம் நினைக்கும் பொழுது சில நேரம் இறைவன் இருக்கிறான என்ற என்னத்தொன்ருகிறது.

அருமையான பதிவு. இதுதான் உங்களுக்கு எனது முதல் பதிவு.
மீண்டும் சந்திப்பொம்!

பழமைபேசி said...

Timing touch!

Iyappan Krishnan said...

இன்னமும் அந்தப் படம் பாக்கும்போதெல்லாம் மனசு உறுத்திட்டே இருக்கு :(

Anonymous said...

குசும்பு.... மனசுகண்க்கிறது

*இயற்கை ராஜி* said...

:-((