Thursday, February 12, 2009

71. அபிஅப்பாவின் குடும்ப அரசியல் !!

நமக்கெல்லாம் நம்ம கலைஞர் செய்யற குடும்ப அரசியல் தான் தெரியும். "குடும்ப" அரசியல்னா என்ன, எப்படி செய்யறதுன்னு நான் கலைஞரைப் பாத்துத்தான் கத்துக்கிட்டேன்.. இன்னும் எங்கியும் செஞ்சுப் பழகலை.. ஆனால் நம்ம அபிஅப்பா இப்பவே ஆரம்பிச்சுட்டார் போல..


கனிமொழி நிஜம்மாவே கவிஞரா ன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. அவங்க எழுதின கவிதைன்னு நான் படிச்சது எல்லாம் அந்த "தென்னாடுடைய சிவன்" கவிதை தான்.. ஆனால் அதுவும் அவங்க எழுதினதான்னு அவங்க கையெழுத்துல பாத்தாத்தான் தெரியும்..


இந்தமாதிரி நான் கேட்பேன் என்று முன்னாடியே தெரிஞ்சோ என்னமோ, நம்ப அபி பாப்பா கையெழுத்துல தானே எழுதிய கவிதையை ஸ்கேன் பண்ணிப் போட்டுட்டாரு... இப்போ நானே எந்தக் கேள்வியையும் கேட்க முடியாம "மயிலைக்கவிஞர் அபி பாப்பா" ன்னு தாசில்தார் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டியதாப் போச்சு.. "மயிலை" என்பது மயிலாடுதுறையைக் குறிக்க வேண்டுமானாலும் வெச்சுக்கலாம் அல்லது "மழலைக் கவிஞர்" என்பதின் மெட்ராஸ் தமிழ் மொயிபெயர்ப்பாயும் வெச்சுக்கலாம..







இது என்ன கவிதை வகைன்னு தமிழறிந்த சான்றோரெல்லாம் திகைப்புல இருக்காங்க.. நம்ம மாதவிப்பந்தல் கேயாரெஸ் "இது எண்சீர் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் தான்" என்று நியூ ஜெர்ஸியிலிருந்து துண்டைப்போட்டுத் தாண்டுறாரு.. நானென்னவோ இது "தரகு கொச்சகக் கலிப்பாவா இருக்குமோ" ன்னு நிகண்டு, சுகண்டு மிகண்டு எல்லாம் தேடிக்கிட்டிருக்கேன்..

நம்மக் கவிஞரின் முதல் அதிரடிக் கவிதையே இலக்கிய உலகத்துக்கே ஒரு புதிய பாதையாகப் பரிணமித்தது குறித்து மிக மகிழ்ச்சியடைகிறேன் !!



எது எப்படியோ..நம்ப அபிஅப்பாவின் குடும்ப அரசியல் வளர்ந்தால்.. எங்க ஊரு மயிலாடுதுறைக்கும் ஒரு இலக்கிட எம்.பி அப்புறம் ச்சின்னதா ஒரு கேபினெட் லெவல் மத்திய அமைச்சர் ப்தவியும் கெடைக்கும். ஏதோ எங்க அமைச்சர் அபிபாப்பா புண்ணியத்துல நானும் அபிஅப்பாவும் சேர்ந்து எங்க ஊர் DBTR National Higher Secondary School கட்டடங்களைக் கட்டிக்குவோம்..


மயிலாடுதுறையில் சமீபத்தில் கவிஞரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.. என்ன்மாய் ஒரு நுண்ணரசியல் வாதங்கள்.. எல்லாரையும் ஒட்டியும் பலசமய்ங்களில் வெட்டியும் பேசிய பாங்கு... எல்லாம் பார்க்கும் போது.. நம்ம பதிவர் அபிஅப்பாவே இதெல்லாம் நம்ம கவிஞரிடமிருந்து தான் கற்று வந்திருக்கிறார் என்பது உள்ளங்கை ஆப்பிள் போலத் தெளிவாகத் தெரிகிறது..


எப்போதும் கலைஞருடன் ஒட்டியே இருக்கும் ஆற்க்காட்டார் மாதிரி .அந்த ந்ட்டுப் பாப்பாவும் இப்போ இருக்கிறார்ப்போல் தெரிகிறது.. கவிதையிலே கையெழுத்து போடும் போது "நட்ராஜ்" -னு நட்டுப்பாப்பா பேரையும் போட்டதிலிருந்தே.. இன்னொரு "தென் மண்டல அமைப்புச் செயலாளர் உருவாகிறார்" னு தெரியவில்லையா..

நாலு பேருக்கு நல்லதுன்னா ஓண்ணுமே தப்பில்லை-ன்னு நம்ம வேலு நாயக்கர் சொன்னா மாதிரி.. எங்க ஊருக்கே நல்லது-ன்னா அபிஅப்பாவின் குடும்ப அரசியலும் தப்பில்லைதான்..

அபிஅப்பாவின் குடும்பம் வாழ்க!!!

புகைப்படம்: கவிஞருடன் நான்.. (புகைப்படம் எடுத்தவர் "எதிர்கால தென்மண்டல அமைப்புச் செயலாளர்" alias மயிலை ஆற்காட்டார் alias நட்டுப்பாப்பா )

37 comments:

அபி அப்பா said...

ஆகா! காவிதாயினியின் கவிதை கேயாரெஸ், நீங்க எல்லாம் விவாதம் பன்ணும் அளவு ஆகிடுச்சா!

உங்க ஆசீர்வாதம் எப்பவும் வேண்டும் அண்ணா!

I.A.S தேர்வாகியும் அதை அப்போதிருந்த உங்கள் சூழ்நிலை காரணமாய் அதை உதறி விட்ட நீங்களே அபிக்கு ஆசிரியராய் இருந்தும் வழிகாட்டவும் வேண்டும்!

IAS பின்ன MP பின்ன மினிஸ்டர் ஆகா .... எங்கப்பா அந்த ஆப்பிள் ஜூஸ்....


நன்றி அண்ணா!

Iyappan Krishnan said...

கவுஜ சூப்பர் :) அபி பாப்பாவா இது.. இன்னும் குட்டிப் பொண்ணாவே நினைச்சுட்டு இருக்கேன்... காலம் சீக்கிறமாவே ஓடுது

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
Irunga kummi-kku piragu vaaren :)

துளசி கோபால் said...

கவிதாயினியைக் கண்ணுலே காமிச்சதுக்கு நன்றிப்பா.

கவிதை எனக்கும் 'காப்பி' வந்துச்சு:-)))))

வெட்டிப்பயல் said...

கவுஜ சூப்பர் :)

தொல்ஸ் அண்ணே,
வீட்டுக்கு கவுஞ்ஜர்களை எல்லாம் சேர்த்துக்காதீங்க :)

வல்லிசிம்ஹன் said...

நட்டுப்பாப்பா எடுத்த போட்டோவா. அந்தச் சின்னக் கைகள் காமிரா பிடிக்க ஆரம்பிச்சிடுச்சா:)
வாழ்க அபி அப்பா குடும்பம். வளர்க கவிதாயினியின் புகழ்.

நன்றி சீமாச்சு.

Anonymous said...

//வாழ்க அபி அப்பா குடும்பம். வளர்க கவிதாயினியின் புகழ்.//

ரிபிட்ட்டேஏஏஏஏஎய்

கைப்புள்ள said...

//கவுஜ சூப்பர் :) அபி பாப்பாவா இது.. இன்னும் குட்டிப் பொண்ணாவே நினைச்சுட்டு இருக்கேன்... காலம் சீக்கிறமாவே ஓடுது//

ரிப்பீட்டேய்.

நிஜமா நல்லவன் said...

கவுஜ சூப்பர் :) அபி பாப்பாவா இது.. இன்னும் குட்டிப் பொண்ணாவே நினைச்சுட்டு இருக்கேன்... காலம் சீக்கிறமாவே ஓடுது

நிஜமா நல்லவன் said...

வாழ்க அபி அப்பா குடும்பம். வளர்க கவிதாயினியின் புகழ்.

நாகை சிவா said...

தொல்ஸ் ஒரு சண்முகநாதன் போஸ்ட் ஆச்சும் நமக்கு ஒதுக்கனும் சொல்லிட்டேன் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவிதாயினி!
உன் கவிதா இனி,
என் செவி-தா நனி!

அருமையா வந்திருக்கு! அருமையா வந்திருக்கு!
அதை டைப் அடிக்காம, படமா கொடுத்தீங்க பாருங்க, அந்தப் பிஞ்சுக் கையெழுத்தில்! அது தான் சூப்பர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்ம மாதவிப்பந்தல் கேயாரெஸ் "இது எண்சீர் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் தான்" என்று நியூ ஜெர்ஸியிலிருந்து துண்டைப்போட்டுத் தாண்டுறாரு..//

அபி...
அதெல்லாம் இலக்கணம் படிச்சவங்க பண்றதும்மா!
நான் அப்படி எல்லாம் இல்லைம்மா!
அபி-அப்பா எதைச் சொன்னாலும் நம்பிறாதம்மா! :))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவிதைக்குப் பொய் அழகு-ன்னு சொல்வாய்ங்க!
ஆனா நம்ம அபி பொண்ணு கவிதைக்கு உண்மை அழகு-ன்னு நிரூபிச்சிருக்கா!

தந்தையே, நீ எனக்கு கற்பித்தது விந்தையே-ன்னு சொல்வதை நல்லாப் பாருங்க!
அபி அப்பா எல்லாம் சொல்லிக் கொடுக்குறாரு...இது என்ன விந்தை? :)))

அபி அப்பா கற்பிக்கும் அழகை என்ன ஒரு நயமான உள்குத்தோடு, உண்மையோடு, கவிநயத்தோடு, எதுகை மோனையோடு சொல்லியிருக்கு இந்தக் கவிதையில்!

:))))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கடுக்கதை விட்டாய்//

கடுக்கதை என்னும் நாட்டுவழக்கை கவிதையில் கொண்டு வந்து,
"எல்லே" என்று பாடும் ஆண்டாள் பெண் கவிகளின் வரிசையில் இவளும் சேர்ந்துவிட்டாள்!

சீமாச்சு.. said...

//கடுக்கதை என்னும் நாட்டுவழக்கை கவிதையில் கொண்டு வந்து,
"எல்லே" என்று பாடும் ஆண்டாள் பெண் கவிகளின் வரிசையில் இவளும் சேர்ந்துவிட்டாள்//

என்ன கேயாரெஸ், அபிபாப்பாவை ஆண்டாள் ஆக்கிய வரிசையில் நம்ம அபிஅப்பா-வும் நம்மாழ்வார் லெவலுக்கு உயர்ந்துட்டார்.. ஆண்டாள் திருமணம் லெவல்ல அவரோட வீரசேகரவிலாஸ் பதிவு போயிட்டிருக்கு !!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தந்தையே எனக்குத் தந்தயே-ன்னு சொல்லும் போது, ஓர் எழுத்தை அசைத்து மரூஊ மயக்கம் என்ற இலக்கணத்தையும் சாதித்தாள்! :)

தந்தையே
விந்தையே
சந்தையை
தந்தயே
ன்னு எதுகை வரிசை ஜூப்பரு!

உரிப்பொருளான பலதையும் பல வரிகளில் சொல்லி
கருப்பொருளான வாழ்த்தைக் கடைசி வரியில் வைத்தது தான் பாங்கு!

வாழ்க! இதே போல இன்னொரு கவிதை பாடிக் காட்டி விட்டால், "இனிய இளங் கவி"-ன்னு பட்டம் கொடுத்துடறேன்-ம்மா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது போன்ற பல திருக்கள் பெற்று, சுட்டிப் பெண் பரிமளிக்க
அந்தப் பரிமள ரங்கனை (திருஇந்தளூர்) வேண்டுகிறேன்!

சீமாச்சு.. said...

வெட்டிசார்,
//தொல்ஸ் அண்ணே,
வீட்டுக்கு கவுஞ்ஜர்களை எல்லாம் சேர்த்துக்காதீங்க :)//

இனிமேல் தொல்ஸைப் பாராட்டிப் பாடாத எவரையும் நாங்கள் பக்கம் சேக்கறதாயில்லை..

இந்த வ்ருடத்துக்கான விருதுகள்:


முதல் கட்டமா "சீமாச்சு அண்ணா விருது" தொல்ஸூக்கு வழங்கப்படுகிறது..

"தொல்ஸ் ஐயா விருது" நம்ம கவிதாயினி அபிபாப்பாக்கு அளிக்கப்படுகிறது..

அதிக பின்னூட்டம் போட்டதினால "அண்ணன் நட்டுப்பாப்பா விருது" நியூஜெர்ஸி கேயாரெஸ்ஸுக்கு உடனே அளிக்கப்படுகிறது..


உங்களுக்கு ஏதாவது வேணுமுன்னா.. வரிசையிலே நில்லுங்க..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்ன கேயாரெஸ், அபிபாப்பாவை ஆண்டாள் ஆக்கிய வரிசையில் நம்ம அபிஅப்பா-வும் நம்மாழ்வார் லெவலுக்கு உயர்ந்துட்டார்//

கரெக்டாச் சொல்லுங்க சீமாச்சுண்ணே!

நம்மாழ்வாருக்கு என்னைப் போல சின்ன வயசு!
அபி அப்பா தான் பெரீய்ய்ய்ய்வரு! அவர் தான் பெரியாழ்வாரு! :))

அபி அப்பா said...

வந்துட்டேன் வந்துட்டேன் கேயாரெஸ் கொட்டத்தை அடக்க என் தங்கைகளோடு வந்துட்டேன்!

அபி அப்பா said...

\\நம்மாழ்வாருக்கு என்னைப் போல சின்ன வயசு!
அபி அப்பா தான் பெரீய்ய்ய்ய்வரு! அவர் தான் பெரியாழ்வாரு! :))
\\ கேயாரெஸ் அய்யா எதுனா தமிழ் புலவர் பேர் சொல்ல கூடாதா, வைரமுத்து,பா.விஜய், தாமரைன்னு, நம்மாழ்வார் பெரியாழ்வார்ன்னு எல்லாம் ஆங்கில போயட்ஸா? புதசெவி:-))

Ungalranga said...

என்ன நடக்குது இங்க?
???
??
?
அளவில்லா குழப்பத்தோடு ..
ரங்கன்..

கோவி.கண்ணன் said...

//இது என்ன கவிதை வகைன்னு தமிழறிந்த சான்றோரெல்லாம் திகைப்புல இருக்காங்க.. நம்ம மாதவிப்பந்தல் கேயாரெஸ் "இது எண்சீர் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் தான்" என்று நியூ ஜெர்ஸியிலிருந்து துண்டைப்போட்டுத் தாண்டுறாரு.. நானென்னவோ இது "தரகு கொச்சகக் கலிப்பாவா இருக்குமோ" ன்னு நிகண்டு, சுகண்டு மிகண்டு எல்லாம் தேடிக்கிட்டிருக்கேன்..//

:)))

அப்ப அது காவடி சிந்து இல்லையா ?

அபி அப்பா said...

\\கவிதைக்குப் பொய் அழகு-ன்னு சொல்வாய்ங்க!
ஆனா நம்ம அபி பொண்ணு கவிதைக்கு உண்மை அழகு-ன்னு நிரூபிச்சிருக்கா!

தந்தையே, நீ எனக்கு கற்பித்தது விந்தையே-ன்னு சொல்வதை நல்லாப் பாருங்க!
அபி அப்பா எல்லாம் சொல்லிக் கொடுக்குறாரு...இது என்ன விந்தை? :)))\\

கேயாரெஸ்! இதில ஏதோ உள்குத்து இருக்குன்னு நெனைக்கிறேன்!

இதே சீமாச்சு அண்ணா சொல்லி கொடுத்து இருந்தா சரி! அவ விந்தையேன்னு பொய் சொல்றான்னு எடுத்துக்கலாம்! நானெல்லாம் என்னத்த சொல்லி கொடுத்துட போறேன்:-))

அபி அப்பா said...

கோவியாரே! அப்ப இது காவடி சிந்துவும் இல்லியாமா? அப்ப என்ன முடிவுக்கு தான் வர்ராங்க பெரியவங்க எல்லாம்:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
வந்துட்டேன் வந்துட்டேன் கேயாரெஸ் கொட்டத்தை அடக்க என் தங்கைகளோடு வந்துட்டேன்!//

தங்கைகளுக்கு வணக்கம்!
வழக்கம் போலச் சீக்கிரம் கட்சி மாறி இந்தப் பக்கம் வாங்க! :))

கொட்டம் அடக்கிடலாம் - கந்த
கோட்டம் அடங்கிடுமோ?
திட்டம் தீட்டிடலாம் - தொல்(லைக்)
காப்பியம் தீட்டிடுமோ?
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்மாழ்வார் பெரியாழ்வார்ன்னு எல்லாம் ஆங்கில போயட்ஸா? புதசெவி:-))//

ஆமாம்! அவிங்க எல்லாம் ஆங்கு+இலர் பொயட்ஸ் தான்!
ஆங்கு ஆணவம் இலர்
ஆங்கு ஆசை இலர்
ஆங்கு கடுமை இலர்
ஆங்கு கவிதை உளர்! :)

செம்மொழிக் கவிகளை எல்லாம் ஆங்கிலத்துக்குத் தாரை வார்க்கும் அபி அப்பாவின் போக்கைக் கண்டித்து, கவிதாயினி அபி தலைமையில், தமிழ் உணவான பிரியாணி உண்ணும் விரதம் துவங்கட்டும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேயாரெஸ்! இதில ஏதோ உள்குத்து இருக்குன்னு நெனைக்கிறேன்!//

அடடா!
அது என்ன "நினைக்கிறேன்"-ன்னு சொல்றீங்க தல?
அதான் நாங்களே சொல்லிட்டோமே! //அபி அப்பா கற்பிக்கும் அழகை என்ன ஒரு நயமான உள்குத்தோடு//

ஓ...சொல்லியே லேட்டாத் தான் உங்களுக்குப் புரியுதுங்களா?
ஹிஹி! அப்படின்னா எங்க வூட்டுப் பொண்ணு சும்மா பாடலை! கரீட்டாத் தான் பாடி இருக்கா!

தந்தையே, நீ கற்பித்தது விந்தையே

ஹா ஹா ஹா
கையைக் கொடும்மா அபி கண்ணு! :)

KarthigaVasudevan said...

என்னப்பா இங்க சர்சையப்பா
பாருங்கப்பா இது வாழ்த்துப்பா
அபிபாப்பா இங்க சொல்லுதுப்பா
அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பா
அபிஅப்பா எனக்கு சித்தப்பா
( அதனால )
எனக்கும் வேணும்பா மந்திரி போஸ்டுப்பா
எதோ கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கப்பா
அடச்சே இருக்கிற பாவகைகள்ல
இது என்ன பா
நீங்களே கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா ..;
போதும்பா நாங்க போறோம்பா ( பிரேக் போட்டு நிறுத்த முடியலையே கவிதையை ...!abi pls help me)

ராமலக்ஷ்மி said...

அபிஅப்பா பதிவில் பதிந்த பாராட்டை இங்கும் பதிந்து வைக்கிறேன்:

சந்தையையே தனக்குத் தந்த தந்தையை விந்தையாய் பார்ப்பதாய் ஆரம்பிக்கும் அபி கூறுகிறாள்:

//"பேதையாய் நானிருந்தாலும்
மேதையென்று கூறுகிறாய்//

அற்புதம்.

//கவிதை படிக்க மட்டுமே தெரிந்த என்னை
கவிதை எழுதுகிறாள் எனக் கதை விட்டாய்”//

தேர்ந்த கவிஞர்களுக்குக் கூட இததகைய வரிகள் சிக்குமா தெரியவில்லை. தெரிகிறது ஒரு தேர்ச்சி எழுத்தில்.

//”அதை உண்மையாக்கி விட்டேன் பத்தாவது வரியில்”//என்ன ஒரு பன்ச்சுடன் முடித்திருக்கிறாள் குழந்தை,அந்த //‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’// தான் கவிதை எனக் கூறி.

அமைச்சராகவிருக்கும் அபியிடம் இப்போதே போட்டு வைக்கிறேன் ஒரு அப்ளிகேஷன், அரசவைக் கவிஞர் போஸ்டுக்கு:)! பார்த்து செய்யச் சொல்லுங்கள் அபிஅப்பா:)!

வெண்பூ said...

அபி அப்பாவின் குடும்ப அரசியலை அம்பலப்படுத்திய சீமாச்சுவிற்கு வலையுலக நக்கீரன் கோபால் அவார்டு குடுக்க பரிந்துரைக்கிறேன்.. அபி அப்பாவிற்கு வலையுலக கலைஞர் அவார்டு குடுக்கலாமோ..

நட்புடன் ஜமால் said...

\\DBTR National Higher Secondary School \\

ஹையா நானும் இங்க படிச்சனே

10ஆவது மட்டும்

மற்றவை குருஞானம் ...

சீமாச்சு.. said...

//\DBTR National Higher Secondary School \\

ஹையா நானும் இங்க படிச்சனே

10ஆவது மட்டும்

மற்றவை குருஞானம் ...//

ஜமால் சார்.. நம்ம ஸ்கூல் ஸ்டூடண்டா நீங்க. அவசியம் பேசணும் உங்க கூட. நம்ம தாயின் புன்னகை ப்ளாக் படிக்கிறீங்களா?

அபிஅப்பாவும் நானும் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

சீமாச்சு..

மங்களூர் சிவா said...

//வாழ்க அபி அப்பா குடும்பம். வளர்க கவிதாயினியின் புகழ்.//

ரிபிட்ட்டேஏஏஏஏஎய்

மங்களூர் சிவா said...

//கவுஜ சூப்பர் :) அபி பாப்பாவா இது.. இன்னும் குட்டிப் பொண்ணாவே நினைச்சுட்டு இருக்கேன்... காலம் சீக்கிறமாவே ஓடுது//

ரிப்பீட்டேய்.

தருமி said...

அபிக்கு வாழ்த்துக்கள்.

//உங்கள் சூழ்நிலை காரணமாய் அதை உதறி விட்ட ...//


ம்ம்..அப்படில்லாம் இருக்கோ ..ம்ம்..!