இன்று படித்த செய்தி:
கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள், இறுதி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனு தாக்கல் செய்த 14 பேரின் மனுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பரிசீலனைக்கு வந்தன. அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்து உள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்று குவித்த பியாராசிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோர் தண்டனை குறைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன. இதேபோல், சொத்தை அபகரிப்பதற்காக தன் மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்த சுப்ரீம் கோர்ட், இவரது கொடூரத்தைக் கடுமையாக சாடி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
இவர்கள் தவிர உ.பி.,யில் வீடு ஒன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த மூன்று பேரை கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் தூக்கி வீசிய, ஷெரோம், ஷியாம் மனோகர் மற்றும் நான்கு பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், "இந்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனாலும், அவர்கள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட இவர்கள் எல்லாம், ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
மரண தண்டனை கைதிகள் 14 பேரின் தண்டனையை குறைத்தது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதுபோல குறைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்சல் குரு விவகாரத்தில் ஜனாதிபதி தன் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
oooooooooo
குடியரசுத்தலைவரின் கருணை அதி்ர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனைகளே.. rarest of the rare cases க்கு மட்டும் வழங்கப்பட்ட நிலைகளில், இந்த தண்டனைக்குறைப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.
அப்ஸல்குரு, கசாப் போன்ற தீவிரவாதிகளையும் முக்கியமாக தர்மபுரி மாணவிகள் எரிப்புக் கொலைகாரர்களையும் மன்னிக்கும் முயற்சிகளுக்கு முன்னோட்டமாகத்தான் இது தெரிகிறது.
குடியரசுத்தலைவரின் கருணைமனு என்ற இந்த நடைமுறையையே ஒழித்துக் கட்டவேண்டும் என்பது என் கருத்து. சட்டம் தன் கடமையை மட்டும் செய்யட்டும் .. குற்றவாளிகளுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை..
14 comments:
அண்ணனை வழி மொழிகிறேன்!!!
என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு.
//சட்டம் தன் கடமையை மட்டும் செய்யட்டும் .. குற்றவாளிகளுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை.//
ஆனா, மேல சொன்னது பூத்ததுமாதிரித் தெரியலையே?? வெடிச்சது மாதிரி அல்ல இருக்கு??
//கருணையே உருவமான....//
கருணையே உருவான அப்படின்னுதான் சொல்றது.... அதென்ன உருவமான?? அப்ப மனசுல கருணை இல்லையோ??
ரைட்டு ஆனா .... என்னா சொல்றது... தப்புதேன்
//குடியரசுத்தலைவரின் கருணை அதி்ர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனைகளே.. rarest of the rare cases க்கு மட்டும் வழங்கப்பட்ட நிலைகளில், இந்த தண்டனைக்குறைப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.
அப்ஸல்குரு, கசாப் போன்ற தீவிரவாதிகளையும் முக்கியமாக தர்மபுரி மாணவிகள் எரிப்புக் கொலைகாரர்களையும் மன்னிக்கும் முயற்சிகளுக்கு முன்னோட்டமாகத்தான் இது தெரிகிறது.
குடியரசுத்தலைவரின் கருணைமனு என்ற இந்த நடைமுறையையே ஒழித்துக் கட்டவேண்டும் என்பது என் கருத்து. சட்டம் தன் கடமையை மட்டும் செய்யட்டும் .. குற்றவாளிகளுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை..//
கருணை மனு கருணையை எதிர்பார்த்து தானே செய்யப்படுகிறது. அப்படி இல்லை என்றால் சில குற்றவாளிகளுக்கு கருணை மனு செய்யும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுத வேண்டியது தானே. ஜனாதிபதி செயலில் நான் தவறு காணவில்லை.
மன்றாடுங்கள்/ வேண்டுங்கள் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று மதங்கள் சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்கிறோம், அதை ஏமாற்று என்று கொள்ளவில்லை. அதையே ஒரு ஜனாதிபதி செய்யும் போது அது தவறு என்றாகிவிடுமா ?
பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் பாதிப்பு அடைந்தோரில் எனக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது.
//கருணையே உருவான //
உருவான அப்படீன்னாலும் உருவமான அப்படீன்னாலும் ஒண்ணு தானுங்களே..
எனக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரிலீங்களே...
உங்க ஐயா காளமேகத்துக்கிட்டே கேட்டுச் சொல்லுங்களேன்..
//ஆனா, மேல சொன்னது பூத்ததுமாதிரித் தெரியலையே?? வெடிச்சது மாதிரி அல்ல இருக்கு??//
இந்தக் குற்றங்களைப் பற்றி நான் முன்னர் படித்திருக்கிறேன். நம் நாட்டில் நீதி ரொம்ப தாமதப்படுத்தப் படுகிறது. இந்தக் குற்றங்களைப் படித்த போதே இவர்கள் இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்று தான் அப்பொழுது பெரும்பான்மையான மக்கள் நினைத்தார்கள். இவர்களை இவ்வளவு நாட்கள் உயிருடன் விட்டு வைத்ததே தவறுதான்.
மன்னிப்பு என்ற கருணைக்கு இவர்கள் சற்றும் தகுதியானவர்கள் கிடையாது. பொதுஜனத்தின் மறதியைப் பயன்படுத்தி இவர்களை மன்னிப்பது சட்டத்துக்குச் செய்யப்படும் துரோகம் மட்டுமே..
கோவியாரே.. வாங்க..
//சில குற்றவாளிகளுக்கு கருணை மனு செய்யும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுத வேண்டியது தானே//
குடியரசுத்தலைவருக்குக் கருணைமனு செய்வதென்பது மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் அடிப்படை உரிமையென்று நினைக்கிறேன்.
நீதிபதிகள் தீர்ப்பில் அவ்வாறெல்லாம் எழுதி அவர்களுக்கு அந்த உரிமையை மறுக்க முடியாது..
குடியரசுத்தலைவரின் கருணைமனு மீதான நடவடிக்கையும் should be time-boxed. குறித்த காலத்திற்குள் (3 or 6 months maximum if President is not able to decide on the outcome either way, the accused should be hanged without any further thoughts or considerations என்பது என் suggestion.
இவர்கள் செய்தது வெறும் பாவம் இல்லை. மகா பாவம். இப்படியான குற்றங்கள் நடைபெறும் என்று ஆண்டவனுக்கு முன்னாடியே தெரிந்திருந்தால், he would have added a further disclaimer that certain Paavams will not be forgiven under any circumstances..
//ரைட்டு ஆனா .... என்னா சொல்றது... தப்புதேன்
//
அபிஅப்பா, வாங்க.. வல்லவன் வகுப்பதே சட்டமாக மாறுகிறது. நல்லவர் நினைப்பதும் சட்டமாக மாறும் காலம் வரவேண்டும்..
//பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் பாதிப்பு அடைந்தோரில் எனக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது.//
கோவி ஐயா, உங்கள் பின்குறிப்பு உங்கள் வெள்ளை உள்ளத்தைக் (Honesty and transparency) காண்பிக்கிறது. இதற்காக மட்டுமே நான் மதிக்கும் தமிழ்ப்பதிவர்கள் லிஸ்டில் நீங்கள் நீண்டகாலமாக இருக்கிறீர்கள்...
உருவம் - அஃறிணை
உரு - பொதுத்திணை
உருவானவர் - உயர்திணை
@கோவி அண்ணா
//பின்குறிப்பு : குற்றவாளிகள் மற்றும் பாதிப்பு அடைந்தோரில் எனக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது//
குற்றவாளிகளுக்கு நான் பின்னூட்டியதும் இல்லை என்று கூட டிஸ்கி போடுவீங்க போல இருக்கு? :)
//கோவி ஐயா, உங்கள் பின்குறிப்பு உங்கள் வெள்ளை உள்ளத்தைக் (Honesty and transparency) காண்பிக்கிறது. இதற்காக மட்டுமே நான் மதிக்கும் தமிழ்ப்பதிவர்கள் லிஸ்டில் நீங்கள் நீண்டகாலமாக இருக்கிறீர்கள்...//
போச்சுறா! கோவி அண்ணாவுக்கே தாம்பூலம் குடுக்கறீங்களா? :)
தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும். இங்கே தலைகீழாக அல்லவா நடக்கிறது,.
சீமாச்சுஜி, தொடர்பதிவை மறந்துட்டீங்களே?
http://kgjawarlal.wordpress.com
Post a Comment