Tuesday, January 11, 2011

111. சீமாச்சுவின் தாம்பூலம் - 11 ஜனவரி, 2011

இன்று தேதி 1/11/11 (மாதம்/நாள்/வருடம் அமெரிக்க பாணியில்).. இன்று என் 111 வது இடுகையை இடுவது குறித்து மிக மகிழ்ச்சி.. அருமையான பொருத்தம் என்று இன்று மதியம்தான் நினைத்தேன்.. கீழே யுள்ள படத்தில் பாருங்கள்.. அந்தக் குழந்தை எவ்வளவு குறிபார்த்து அடித்திருக்கிறது.. அதைவிட அந்த ஃபோட்டோ எவ்வளவு துல்லியமாக அந்த மஞ்சள் நீர் குழந்தையின் மேல் படுவதற்கு சற்று முன்பாக எடுக்கப்பட்டிருக்கிறது... அவ்வளவு சந்தோஷம் எனக்கு ... ஹிஹி..

பழமைபேசி ஐயா 750 இடுகைகளும் மற்றவர்கள் ஆயிரத்துக்கு மேலான இடுகைகளும் இட்டு கொண்டாடும் நேரத்தில்.. நான் இத்தனை ஆண்டுகளில் 111 அடித்திருப்பது ஒரு குட்டி சாதனை தான்.. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ..”எல்லாரும் வகைவகையான மளிகை சாமான்களையெல்லாம் வெய்யிலில் உலர்த்தியிருந்தாங்களாம்.. அதைப் பார்த்த ஒரு எலி தன் வாலை வெய்ய்யிலில் உலர்த்தியிருந்ததாம்..” அது என்னதான் வாலாயிருந்தாலும் எலிக்கு அது உடலின் ஒரு முக்கியமான பாகம் தானே.. என்ன நான் சொல்றது? வர்றவங்களெல்லாம் “111 க்கு வாழ்த்துகள் அண்ணே..” என்று ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போடுங்ககண்ணே....


oOo oOo

அமெரிக்காவிலெல்லாம் காருக்கு நம்பர் ப்ளேட் வாங்கும் போது “Personalized Tags" என்று உங்களுக்கு விருப்பமான 7-8 எழுத்து கேட்டு வாங்கலாம். அதற்கு வருடத்துக்கு $30-$50 அடிஷனல் சார்ஜ் உண்டு.. கீழே பாருங்க.. கலிஃபோர்னியாக் காரர் ஒருவர் “EarthQuake" அப்படீன்னு போட்ட்டு ஒரு ப்ளேட் போட்டிருக்காரு..அது போல சென்ற வாரம் ஒரு கார் ப்ளேட் பார்த்தேன்..அதில் “2XYNOXX" என்று போட்டிருந்தது அது பார்ப்பதற்கு Personalized Tag மாதிரி தான் தெரிந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. பக்கத்திலிருந்த என் மகளிடமும் மனைவியிடமும் கேட்டேன்.. அவர்களுக்கு சட்டெனப் புரியவில்லை.. பிறகு நான் விளக்கியதும்..”ஆமாமில்லே..” அப்படீன்னு ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் பின்னூட்டட்த்தில் சொல்லுங்கள்.. நிச்சயம் யாராவது சரியாகச் சொல்வீர்களென்று தெரியும்..

oOo oOo oOo


புகைவண்டிகள் போவதற்காக, கஷ்டப்பட்டு காசு செலவழிச்சி தண்டவாளங்கள் போட்டால் அதுல ஒருத்தரு எவ்வளவு ஈஸியால் சைக்கிளைத் தள்ளிக்கிட்டுப் போறாரு பாருங்க.. கொழுப்புதான்..

oOo oOo oOo

எனக்கு மிகப்பிடித்த சுயேச்சை வேட்பாளர் இவர். இவர் பெயர் ஷாம்லால் காந்தி.. இவர் அமிர்தசரஸில் இருக்கிறார். எல்லா தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிடுவார். காந்தியின் கொள்கைகளைத் தவறாமல் இன்றும் பின்பற்றுகிறார். மக்கள் இவரை காந்தியென்றே அழைக்கிறார்கள். இன்றும் தன் கையாலேயே நெசவு செய்து கைத்த்றி ஆடைகளையே அணிகிறாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

சமீபத்திய (2009) தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு தன் கைவிரல் அடையாளமையையும் தன் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பிக்கிறார் பாருங்கள்..தேர்தலில் போட்டியிடும் போது வாக்கு சேகரிக்க சைக்கிளில் தான் செல்வார்.. அவருக்கு ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் போது ஒரு காவலர் பாதுகாப்பு தரப்பட்டது.. அந்த காவலரிடம் அப்பொழுது வாகன வசதியில்லை.. அதனால் அவரையும் தன் சைக்கிளை டபுள்ஸ் அழைத்துக்கொண்டு (அவரே சைக்கிளை மிதித்துக் கொண்டு) சென்று வாக்கு சேகரித்தார்..

நான் ஓய்வுபெற்று மயிலாடுதுறையில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அப்பொழுது தேர்தலில் நின்றால் இவரைபோல இருக்க வேண்டும் (நானே நெசவு செய்து கைத்தறி அணியாவிட்டாலும்) என்று ஆசை (இதை ஆசை என்று சொன்னால் கூட அது ஆடம்பரமாகிவிடும் அபாயம் உண்டு) உண்டு..

படுபாவி ஆண்டிமுத்து இராசாவைப் பத்தி இரண்டு இடுகை போட்டதுக்கு பரிகாரமாக காந்தியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு இந்த இடுகையில்...

கீழே படத்தில் பாருங்கள் வாக்கு சேகரிக்க காந்தி செல்கிறார்.. அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவர் பின்னே வாகனத்தில் செல்கின்றனர்.


oOo oOo

யாராவது ஆங்கிலப் புத்தாண்டை வானத்தில் ஆகாய விமானத்தில் இருக்கும் போது அனுபவித்திருக்கிறீர்களா?

1996 ம் வருட இறுதியில் அட்லாண்டாவிலிருந்தேன். என் திருமணத்துக்காக மயிலாடுதுறை செல்ல வேண்டியிருந்தது. டிக்கெட் தேடிக்கொண்டிருந்த போது டிசம்பர் 31 அன்று மாலை தான் லுஃப்தான்ஸாவில் கிடைத்தது. டிசம்பர் 31 மாலை 4:30 மணி அளவில் அட்லாண்டாவில் ஏறி ஃப்ராங்க்ஃபர்ட் விமான் நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்தில் மாறி.. ஜனவர் 2, 1997 விடியற்காலையில் சென்னையில் இறங்க வேண்டியிருந்தது. புது வருடம் வானத்தில் 38000 அடி உயரத்தில் பிறக்கப் போகிறது. விமானத்தில் ஏதாவது விசேஷமாக செய்வார்கள்.. வசந்தமாளிகை படத்தில்..”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்..” பாட்டு மாதிரி அரைகுறை உடை (இல்லாவிட்டாலும் பரவாயில்லை) தேவதைகள் தட்டில் ஒயின் கிளாஸுடன் வந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுவார்கள் என்றெல்லா கனவு கண்டு கொண்டிருந்தேன்.. கல்யாண கனவுகளுடன் இந்த கனவுகளும் சேர்ந்து கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது..

விமானத்தில் ஏற் ஒண்ணரை மணி நேரம் தான் ஆகியிருக்கும்.. அப்பொழுது அட்லாண்டாவில் மாலை 6 மணியிருக்கும்.. அப்பொழுதுதான் விமானத்தின் கேப்டன் மைக்கில் அறிவித்தார்..” Ladies and Gentleman.. It is about midnight in Frankfurt now.. On behalf of Lufthansa Airlines, I am happy to wish you a Very Happy and Prosperours New Year" என்று மட்டும் சொல்லி முடித்து விட்டார்... நான் கனவு கண்டு முடிப்பதற்குள் புது வருஷம் என்னைத் தாண்டி ஓடிவிட்டது. பக்கத்தில் உள்ளவர்களுக்கு “Happy New Year" சொல்ல வேண்டுமென்று நினைத்தால் அவர் தண்ணியடித்து மட்டையாகிவிட்டிருந்தார்.. ஒரு எக்ஸ்ட்ரா ஆல்கஹால் இல்லை.. வானத்தில் கூட தேவதைகள் இல்லை.. ரொம்ப கஷ்டமாக அப்புசாமித்தாத்தா (சீதேக்கிழவி புகழ்) லெவலில் புலம்பிக்கொண்டு தூங்கிவிட்டேன்...

சென்னையில் இறங்கியபொழுது புத்தாண்டு பரிசாக என் வருங்கால மனைவி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.. அவரை அப்பொழுதுதான் முதல் முறையாக சந்தித்தேன்.. பயந்து பயந்து அவங்க அப்பா பின்னாடி பதுங்கி எட்டிப் பார்த்துப் பேசியவரிடம் இவ்வளவு வீரம் இருக்குமென்று என்னால் அன்று நம்பமுடியவில்லை.. நான் பேசாவிட்டாலும்.. போரில் நான் வாங்கிய விழுப்புண்கள் பேசாமலாப் போய்விடும்?

oOo


பின்குறிப்பு: சகபதிவர் கெக்கேபிக்குனி அவர்களின் கண்டனத்தை மதிக்கும் வகையில் இந்த இடுகையில் (மட்டும்?) நடிகையர் படங்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன

14 comments:

கோவி.கண்ணன் said...

//“2XYNOXX" //

Against Gay Marriage ?

கோவி.கண்ணன் said...

101 வாழ்த்.......'துகள்' அண்ணே !

:)

ramachandranusha(உஷா) said...

2XYNOXX ரெண்டு பொண் குழந்தைகள் வேணாம், ஆண் ஒன்னு பொண் ஒண்ணு வேணும என்கிறாரா ???

அப்படியே ஒரு வாழ்த்துகள் வெச்சிக்கிறேன் அண்ணாச்சி :-)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அவருக்கு 2 பசங்க

இராகவன் நைஜிரியா said...

அண்ணா “111” க்கு வாழ்த்துகள்.

//“2XYNOXX" //

புத்திசாலிகள் யாராவது பதில் சொல்லுவாங்க. அதனால் இந்த பின்னூட்டத்தை இ-மெயில் ஃபாலே அப்பில் போட்டுக்கறேன்.

// இவ்வளவு வீரம் இருக்குமென்று என்னால் அன்று நம்பமுடியவில்லை.//

நீங்க மட்டும் ஏமாந்த மாதிரி சொல்றீங்க. எல்லோரும் அப்படித்தான் ஏமாந்திருக்கோம்.

// அதைவிட அந்த ஃபோட்டோ எவ்வளவு துல்லியமாக அந்த மஞ்சள் நீர் குழந்தையின் மேல் படுவதற்கு சற்று முன்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.//

நல்ல போட்டோ அண்ணே..

பழமைபேசி said...

111 நாமம் யாருக்கு?

வாழ்த்துகள் அண்ணே!!!

Seemachu said...

@கோவியாரே..
// கோவி.கண்ணன் said...
//“2XYNOXX" //

Against Gay Marriage ?//
உங்கள் கோணங்கள் எப்பொழுதுமே வித்தியாசமானவை.. நீங்கள் சொன்ன அர்த்தத்திலும் வர் வாய்ப்பு இருக்கிறது.
இருந்தாலும் அப்படி இருக்காது என்று நம்புகிறேன்.. விடை அடுத்த பின்னூட்டத்தில்..

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி !!

Seemachu said...

// ramachandranusha(உஷா) said...
2XYNOXX ரெண்டு பொண் குழந்தைகள் வேணாம், ஆண் ஒன்னு பொண் ஒண்ணு வேணும என்கிறாரா ???//

உஷா, வாங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றி..

X, Y என்ற குறியீடுகள் குரோமசோம்களைக் குறிப்பதென்று நீங்களும் கோவியாரும் விடைக்கு மிக நெருக்கத்தில் வந்துவிட்டீர்கள். சரியான் விடை “எனக்கு 2 ஆண் குழந்தைகள்.. ஒரு பெண் குழந்தையும் இல்லை” என்பதே..

நன்றி

Seemachu said...

//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
அவருக்கு 2 பசங்க
//
பாலா, மிகச் சரியான விடை. வாழ்த்துக்கள் !!

Seemachu said...

நைஜீரியா ராகவன்,
வாங்க.. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்தன.. உங்களிடம் பேச் முடியவில்லை அன்று.

//நீங்க மட்டும் ஏமாந்த மாதிரி சொல்றீங்க. எல்லோரும் அப்படித்தான் ஏமாந்திருக்கோம்.//

ஏமாந்த அப்புறம் அதை வெளியிலே சொல்லக்கூடாது :)

Seemachu said...

@பழமைபேசியாரே,
வாங்க.. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

கோநா said...

111க்கு வாழ்த்துக்கள் seemachu . உங்களுக்கு 1xxnoxy யா? விழுப் புண்களுக்கு வரலாற்றில் நிச்சயம் இடமுண்டு, அதுல இந்தமாதிரி நாம தள்ளித்தள்ளி இல்லாம, பக்கத்து பக்கத்துலயே இருப்போம்.

அரசூரான் said...

அண்ணே 111-க்கு வாழ்த்துகள். அதுல பார்த்தீங்கள் எவ்வளவு கோ-இன்சிடன்ஸ்-ன்னு அதான்னே சிறப்பு.

கவிஞர் கண்ணதான், வாலி வைரமுத்து எல்லாம் ஆயிரக் கணக்கில் பாடல் எழுதியவர்கள். ஆனால் பட்டுக்கோட்டை 108 பாடல்கள் மட்டுமே எழுதி இன்றும் மக்கள் மனதில் வாழ்கின்றார்.

அதுபோல்... நீங்க பதிவுல பட்டுக்கோட்டை அண்ணே.

பெம்மு குட்டி said...

“111 க்கு வாழ்த்துகள் அண்ணே..” உங்க விருப்படியே டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டாச்சி