Thursday, January 13, 2011

112. படித்ததில் சிரித்தது...உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க...1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்

--தினமலரில் ஒரு வாசகரின் பின்னூட்டம்.. படித்துவிட்டு சிரிக்கத்தான் முடிந்தது...


தமிழக போக்குவரத்துத் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாம் !!

போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு: அதிமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை; போனஸ் தரவில்லை. அதனால், உங்களுக்கு செலவு மிச்சமானது. 18 முறை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க, தமிழக அரசு 1,254 கோடி ரூபாய் மானியம் அளித்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர்களுக்கு 195 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கினோம். இப்போது நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், 520 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கியுள்ளோம். ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கி வருகிறோம்.போக்குவரத்துக் கழகங்களில் முன்பு 700 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், தற்போது 1,000 கோடி ரூபாயாக உள்ளது.


1234 கோடி ரூபாய் மானியம் கொடுத்த பின்னாலும் 1000 கோடி ரூபாய் நஷ்டமாம.


அமைச்சர் நேருவுக்கு நிர்வாகத் திறமையில்லையென்றால் பதவியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு திறமையானவரிடம் பொறுப்பைக் கொடுக்கலாமே..

அமைச்சருக்கு சொந்தமாக இருக்கும் MJT Travels நிறுவனம் நல்ல லாபத்தில் ஓடுகின்றதாம். தொழிலாளர்களுக்கெல்லாம் போனஸ் கொடுத்துள்ளாராம். ..5 comments:

பழமைபேசி said...

”நேரு”வையே சந்தேகப்படலாகுமா?? குறுக்கால போக மாட்டார்ணே.... இதா, அபி அப்பா வந்துட்டே இருக்காரு!

ஆயில்யன் said...

//இதா, அபி அப்பா வந்துட்டே இருக்காரு!//

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :)))

Anonymous said...

:)

- அப்துல்லா

கபீஷ் said...

//பழமைபேசி said...
”நேரு”வையே சந்தேகப்படலாகுமா?? குறுக்கால போக மாட்டார்ணே..//

பழமைபேசி சான்றிதழ் குடுத்தாச்சுடோய். நேரு வாழ்க

அரசூரான் said...

அண்ணே, அந்த தினமலர் பின்னூட்ட வாசகர் யாருன்னு பார்த்தீங்களா/படிச்சீங்களா? அது நம்ம சின்ன அய்யாவா இருக்க போகுது.... அய்யோ... அய்யோ.