Sunday, January 22, 2006

7. ச்சின்னஞ்சிறு கதை - எங்கேயோ படித்தது

இது எங்கேயோ படித்த ஒரு துணுக்கு. நினைவிலிருந்து எழுதுவது. எங்கேயென்று நினைவில்லை.


ஒரு வகுப்பில் ஒரு போட்டி நடந்தது. மாணவர்கள் ஆளுக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டும். கதைக்கான கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் சில விதிகள்..

1. கதை ஒரு அரச பரம்பரை கதையாக இருந்தால் நலம்.
2. குடும்பம் சம்பந்தமாகவும் இருக்கவேண்டும்.
3. அதில் காதல் இருப்பது உத்தமம்
4. கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
5. கதை ரொம்ப பெரியதாக்க இருக்கக் கூடாது. ச்சின்னதாக இருப்பது நலம்.

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற ரொம்பச் சின்னஞ்சிறுகதை.

கதையின் தலைப்பு: மகத நாட்டு இளவரசி

"

இளவரசியார் கர்ப்பமாக இருக்கிறாராம். யாரந்தக் காதலன்?


"

6 comments:

doondu said...
This comment has been removed by a blog administrator.
பரஞ்சோதி said...

ஆகா ஒரே வரியில் எத்தனை பெரிய கதை.

பெரிய கதையாக இருக்கும் என்று நினைத்து வந்தேன்.

தொடர்ந்து கதைகள் கொடுங்க.

சீமாச்சு.. said...

நன்றி பரஞ்சோதி...
நான் கதைகள் எழுதிப் பழக்கமில்லை..
என் (7 வயது) பெண் எழுதுவதைப் பார்க்கும்போது...நான் ஏன் எழுதக்கூடாது என்று தான் தோன்றுகிற்து..
பார்ப்போம்..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

லதா said...

நான் படித்தது சற்று இறை உணர்வும் சேர்ந்தது

இளவரசியார் கர்ப்பமாக இருக்கிறாராம். கடவுளே ! யாரந்தக் காதலன்?

:-))

லதா

சீமாச்சு.. said...

அன்பின் லதா. வருகைக்கு நன்றி.. இந்த "கடவுளே.." இப்பத்தான் கேள்விப்படுகிறேன்..
நல்லாருக்கில்ல..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

சென்ஷி said...

::))