அக்கா தங்கையுடன் சேர்ந்து மூன்று குழ்ந்தைகள். எப்பொழுதும் அம்மா கூடவே இருந்துதான் படித்தோம். அப்பா வேலையாக டில்லியில்..
வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் வருவார்..
மற்றப்டி படிக்கும் காலத்தில் எப்போதும் அம்மா.. அம்மா.. அம்மாதான்..
ஒரே பையன்.. அம்மா செல்லம் வேறு.. தட்டில் சாதம் போட்டு... கையில் விடும் அதிகப்படியான நெய்யில் .. நான் அம்மா செல்லம் என்று எனக்குத் தெரியும்..
"படிச்சு...முடிச்சு.. வேலைக்குப் போயி எனக்கு என் பையன் பட்டுப் புடவை வாங்கித் தருவான்.,.", அம்மா பெருமிதம் எப்பொழுதும் 1970களில்..
பட்டுப்புடவை.. பட்டுப்புடவை.. இது தான் அம்மாவின் கனவுகள் அப்பொழுது..
1990 களில் வீட்டில் வசதி வந்துவிட்டது... நான் சவுதி போய் சம்பாதிக்க் ஆரம்பித்து விட்டேன்.. பணவசதி சொல்லிக்கொள்ளும் படி இல்லையென்றாலும்... பஞ்சமில்லை.. ஆண்டவன் அருள்..
1991 -ல் ஒரு நாள்.. திடீரென்று.. அம்மா சொல்லிவிட்டாள்.. "நான் இனிமேல் நிதப்படிக்கு பட்டுப்புடவை தான் கட்டிக்கப் போறேன்.." தினமும் பட்டுப்புடவை.... தினமும்.. தண்ணீரில் துவைத்து ..பிழிந்து .. காயவைத்து...
பக்கத்து வீட்டுப் பெண்களின்... "பையன் வாங்கித்தரான்னு.. அந்த்ப் பட்டுப் புடவையை எப்படிப் படுத்தறா பாரு மாமி.. ட்ரை க்ளீன் பண்ணி .. அயன் பண்ணி கட்டிக்கக் கூடாதா.."... அம்மாவுக்கு அதெல்லாம் பத்திக் கவலையில்லை..... எப்போதும் போல சாதா அம்மா தான்...ஓரு கனவு நிறைவேறிய த்ருப்தி....
தொண்ணூறு இறுதியில்.. "எனக்கு பவுனில் வளையல் வாங்கிக் கொடுடா..சீனா.." கேட்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா.... 'நம்ம அம்மா தானே..' அப்புறம் செய்யலாம்னு.. ஒரு உரிமை கலந்த அலட்சியம்... கொஞ்சம் கண்டு கொள்ளவில்லை.....
கையில் நிறைய வளையல் போட்டிருந்து.. மயிலாடுதுறையில் தனியாக இருக்கும் போது யாராவது வந்து அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு எடுத்துப் போய்விட்டால்.... வளையல்போகட்டும்....அம்மாவுக்கு ஏதாவது...ஆயிடுச்சுன்னா.." என்ற ஜாக்கிரதை உணர்ச்சியும் ஒரு புறம்..
எங்களுக்கு முதல் குழந்தை பெண்மகவு (நம்ம சூப்பர் ..டூப்பர் தான்...) பிறந்த போது...நான் பிரசவ அறைக்குள்தான் இருந்தேன்.. மனைவி படும் துயரம் பார்த்டு.. அம்மாவும் என்னைப் பெற்றெடுக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருப்பாதானே.. என்று உடலெல்லாம் பதறியது..
மனைவிக்காவது.. அமெரிக்காவில் உள்ள பெரிய மருத்துவமனை..... நான்.. ஏதோவொரு வீட்டு நடுக்கூடத்தில் தான் பிறந்தேன்.. அப்பொழுதெல்லாம்.. பெயின் கில்லர்கள் கூடக் கிடையாது...'பொறக்கும் போதே.. உனக்குத் தலை கொஞ்சம் பெரிசுரா.... நீ ஒரு மண்டை பெருத்த மகாதேவன்...டா.." அம்மா சொல்வதுண்டு...
"என்னைப் பெக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருக்கியாம்மா.. " என் நெஞ்சு விம்மியது... உடனே..நகைக் கடைக்குப் போய்.. 1 டஜன் வளையல்கள் அம்மாவிற்கு... 24 பவுன்..அம்மாவிற்குக் கொடுத்தவுடன்.. பெருமை பிடிபடவில்லை.. அம்மாவிற்கு.... இதை இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்..
கடைசி நாட்களில்.. அம்மாவிற்கென்று தேவைகள் அதிகம் இருக்கவில்லை...
அம்மா கையால் நிறைய தான தருமங்கள் செய்ய வைத்தாகிவிட்டது.. அப்பாவுடன் தனியாக இருக்க ஆரம்பித்ததால்... அம்மாவுக்கு நிறைய நேரம் மிச்சப்பட்டது.. 'வாயில்லா ஜீவன்கள்.. " என்று பசுமாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்ள்... வீட்டில் பசுக்கள் கிடையாது.. தெருவில் வரும் பசுக்கள் தான்.. அவைகளிடம் நிறையப் பேசுவாள்... அகத்திக்கீரை கட்டு கட்டாகக் கொடுப்பாள்.. வாசலில்வரும் ஆடு மாடுகளுக்கெனெ.. ஏதாவது எப்பொழுதும் சாப்பிட வைத்திருப்பாள்.. வாசலில் வரும் பசுக்களும்.. அம்மாவுக்காக வாசல் கேட்டில்.. நின்று கொண்டிருக்கும்...
அம்மா காலமாகி வீட்டில் காரியம் நடந்து கொண்டிருக்கும் போது... அம்மா அன்பு வைத்திருந்த எல்லா ஜீவன்களும்.. வாசலில் வந்திருந்தன.. அம்மாவைக் காட்டுக்குக் கொண்டு செல்லும் போது.. ஒரு பசுமாடு....பின்னாடியே.. ரொம்ப தூரம் வந்தது..... கண்ணில் ஒரு ஏக்கம் தெரிந்தது...கலங்கியேப் போய்விட்டேன்..
வீட்டுப் பக்கத்தில் வதான்யேஸ்வரர் கோயிலில் ஏழெட்டுப் பசுக்கள் உண்டு.. பக்தர்கள் கோவிலுக்கு நேர்ந்துவிட்டவை...அவை தரும் பாலில் கோவிலில் அபிஷேகம் நடக்கும்.. அவைகளுக்குக்கென்று கோவில் ப்ரகாரத்தில் நிழல் த்ரும் இட்மோ.. ப்ராமரிக்கக் கட்டுமானங்களோ இன்னும் வந்திருக்க்கவில்லை..
சென்ற நவம்பர் 7, 2005ல்.. அம்மா நினைவு நாளில்.. அம்மா பெயரில்.. கோவிலில் ஒரு பசுமடம் (கோசாலை) கட்டி.. அப்பா கையால்.. திறந்து வைத்தேன்.. பத்து முதல் பதினைந்து பசுக்கள் தாராளமாகக் கட்டலாம்.. அவை நீரருந்த தண்ணீர்த்தொட்டி.. தண்ணீர்த்தொட்டிக்கு நீர் பிடிக்க மோட்டார் வசதிகள்.... பசுக்களைக் குளிப்பாட்ட வசதிகள்....பராமரிப்புச் செலவுகளுக்கு மாதாமாதம் பண வசதி...பக்தர்களுக்கு பசுவின் பெருமை தெரிய முகப்பில் காமதேனு ஓவியம்...பக்தர்கள் வந்து பசுக்களுக்கு கீரை கொடுத்து தொட்டுச் செல்ல வசதிகள்..
கோவிலுக்கு வரும் பக்தர்கள்.. பசுக்களுக்கு அகத்திக்கீரை வாங்கித்தர வசதியாக்... வாசலில் அர்ச்ச்னை தட்டு விக்கும் பாட்டியிடம் தனியாக பணம் தந்து.."பாட்டி.. எப்பவும் ஒரு 25 கட்டு அகத்திக்கீரை கட்டு வெச்சிருக்கணும்..இந்த பணத்தை வெச்சி முதல்ல வாங்கிப்போடு.." என்று சொல்லி வைத்தோம்...
எல்லாம் பார்த்துப் பார்த்து.. என் அருமை அண்ணன் (என் உடன் பிறக்காவிட்டாலும்... எங்கள் வீட்டுத் தலைமகன்... நான் தெயவத்துக்குச் சம்மாக மதிக்கும் ஒரு அதிசயப் பிறவி.. இவரைப்பற்றி நிறைய எழுதணும்..) ..ஆலோசனையில்.. எல்லாம் பாத்து..ப்பாத்து.. செய்திருக்கிறோம்..
அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.. அம்மாவுக்குப் பிடித்த ஒரு விஷய்ம்...
எல்லாப் பசுக்களும் ஒரு வகையில் அம்மா தான்...
அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே.....
இது முடிவல்ல இன்னொரு ஆரம்பம் தான்... உன் தயவில்.. உன் அருளில்.. அண்ணனும்.. அப்பாவும்.. நம் குடும்பமும் அருகிருக்க.. இன்னும் நிறைய செய்வோம்.... எல்லோருக்கும் செய்வோம்...
12 comments:
அம்மா பத்தி இன்னும் நிறைய எழுதலாம்...எழுதுவோம்...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
தாயாருக்காக தனயன் கட்டிய கோவில் அன்னை தான் முன்னறிந்த தெய்வம்
மிக நெகிழ்ச்சியான பதிவு சீமாச்சு அவர்களே. எங்கே உங்கள் அம்மா கேட்டபடி வளையல் வாங்கி போடாமல் விட்டீர்களோ என்ற பதைபதைப்புடன் படித்தேன் நல்ல வேளை வாங்கித் தந்து விட்டீர்ர்கள்.
பசுக்களின் துயரம் பற்றி படித்தபோது நெகிழ்ந்து விட்டேன்.
இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய "அப்பா, அன்புள்ள அப்பா பதிவில் பின்னூட்டமாக நகலிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_16.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அண்ணனைப் பற்றியும் எழுதுங்க... ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க. நெகிழ்வா இருக்கிறது.
நன்றி என்னார்....அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சமீபத்தில் என் சித்தி மகனுடன் (என் அம்மாவின் தங்கை) சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன்..
"ஏண்டா சந்துரு.. நீ அப்பா பையனா.. அம்மா பையனா..?"
"நீயே சொல்லேன்" - இது சந்துரு.
"உன்னைப் பாத்தா.. அப்பா பையன் மாதிரி தான் தெரியுது.."
"அப்பாவை புடிக்குந்தான்.. ஆனால் அம்மாவை அதிகமாப் புடிக்கும்..அம்மா பையன் தான்" இது சந்துரு..
"ரொம்ப சந்தோஷம்.. என்னை மாதிரியே நீயும் அம்மா பையனா இருக்கறதுக்கு..."
"ரொம்ப சந்தோஷப் படாதே.. நான் அம்மா பையன்னு தான் சொன்னேன்.. உன்னை மாதிரி அம்மா பைத்தியமில்ல்ல்லை..."
தாய்க்காக ஒரு கோவில் மட்டுமல்ல.. நிறைய கட்டலாம்...
அன்பின் என்னார்...உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி...
அன்பின் டோண்டு சார்...
பெரியவங்களெல்லாம் என் பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றி. "சமீபத்தில்"-னு எங்கேயாவது எழுதினால் எனக்கு உங்க ஞாபகம் தான் வருது..
நல்ல வேளையாக அம்மா கேட்ட வளையல்களை கொஞ்சம் முன்னாடியே வான்கித்ட் தந்துவிட்டேன்.. நாலைந்து வருஷம் அம்மா அதை போட்டிருந்தாள்.. இது மட்டும் நான் வாங்கித் தராமலிருந்திருந்தால்.. குற்ற உணர்ச்சியில் வாழ் நாளெல்லாம்.. கூனிக்குருகிப் போயிருப்பேன்...
ரொம்ப நன்றி டோண்டு சார்..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
அன்பின் பாஸ்டன் பாலா..
வருகைக்கு நன்றி... அண்ணனைப் பற்றியும் எழுதுகிறேன்...
எழுத நிறைய இருக்கிறது.. இது போன்ற அண்ணன்கள் கிடைப்பது அரிது.. ஆண்டவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உங்கள் வருகைக்கு நன்றி,
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
Yes, my heart skipped a beat till I read that she did wear those bangles.
There is no person's love in the world that matches a mother's love.
I have a lump in my throat...
ரொம்ப நல்ல பதிவு இது சீமாச்சு!
நெஞ்சு கனமாகிப்போச்சு!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
அன்பின் பாவை.. ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கு..
அம்மாவைக் குறையின்றி வைத்திருக்க உதவிய ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
நன்றி நாமக்கல் சிபி..அடிக்கடி வாருங்கள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
4. Ambala Perimma
It's nice to know that you have built a Ghoshala. I did not know
of it before. The rest of the happenings are 'history', which I know
already.
You also need write many things which lifts others thinking. If I read
your write-up, you as the author should have improved because you have
thought about it a lot and I as a reader should improve because it is
an
interesting thought. The author and the reader may not agree on the
write-up, but the reader is educated by an interesting opinion. I am
sure you can write such stuff more in future!
Post a Comment