
இந்தப் பழையப் பெட்டியைத் துழாவுவது என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான்..
பெட்டியைக் குடைந்தபோது இந்த பழைய ஹால் டிக்கெட் போட்டோவுடன் கிடைத்தது..
1987-ல் GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வு எழுத விண்ணப்பித்தது. சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி தான் தேர்வு மையம். M.Sc Maths படித்து முடித்து... GATE எழுதி IIT Kharagpurல் M.Tech (Computer Science) படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து அது ஆயிற்று 18 வருடங்கள்...
முடியைக் கொடுத்து அனுபவம் பெற்றாயிற்று..
இந்த முடிக்காகத்தான்.. வெட்டவேண்டுமேயென்று NCC-யில் சேர மறுத்தேன். இப்ப தோணுது.. NCC யில் சேர்ந்திருக்கலாமோ-யென்று...
No comments:
Post a Comment