
நேற்று என் காங்கிரஸ் நண்பரிடம் பேசி அநியாயத்தைக் கேட்க நேரிட்ட பாவத்தை இந்த காமராஜ் திரைப்பட்ம் பார்த்து தீர்த்துக் கொண்டேன்!!
காமராஜ் 1975 அக்டோபர் 2 அன்றே காலமாகி விட்டாராம். அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருப்பேனாயிருக்கும். காந்தி ஜெயந்தி அன்று காலமானாராகையால் பள்ளிக்கூடம் லீவு விட்டாங்களா என்னவென்று நினைவில்லை (நான் என்ன டோண்டு சாரா?- எல்லா சமீபத்தையும் நினைவு வெச்சுக்கறதுக்கு). காமராஜைப் பத்தி நான் அறிந்திருந்தது வெகு குறைவு. அவர் நினைவாக எனக்குத் தெரிந்தது அந்த மதிய உணவு மட்டுமே. அதுவும் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளே யாதலால் என்னால் மதிய உணவுக்குப் பேர் கொடுக்க முடியவில்லை.
காலையில் 11 மணிக்கெல்லாம் வகுப்பில் உள்ள பெரிய பசங்கள் மதிய உணவு 'கிண்டுவதற்கென்று' ஸ்பெஷல் பர்மிஷனோடு அலுமினியக் கரண்டியும் கையுமாக அலைவார்கள். எப்பொழுதும் ஒரே மெனுதான். ஒரு மாதிரியாக ஒரு கோதுமை சாதம். சாப்பிட முயன்றதில்லை.
அந்தத் திட்டத்தின் பின்னாலான் ஒரு பெரிய தத்துவத்தை இத்தனை நாளும் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய உணர்ந்ததில்லை.
இந்தப் படம் பார்க்க வேண்டுமென்று இரண்டு வருடங்களாக நினைத்திருந்தாலும்... இந்த படத்தின் வினியோக உரிமை எடுத்துள்ள நம்ம விருதுநகர் முருகன் ஞானவேல் (நியூஜெர்சியில் வசிப்பவர்) என் நெருங்கிய நண்பராதலால் அவரிடமிருந்து DVD விலைக்கு வாங்கிவிட எப்பொழுதோ சொல்லி வைத்திருந்தும் ( முருகன் சார்.. அதைக் கொஞ்சம் இப்படி அனுப்பி வையுங்க சார்!!) அவரைச் சந்திக்க வாய்ப்புகிடைக்கவில்லை.
எப்படியோ படத்தின் வீடியோ கேசட் கடையில் பார்த்ததுமெ எடுத்து வந்து விட்டேன்.
ஆரம்பத்திலிருந்து ஒரே மூச்சில் பார்த்து விட நினைத்தாலும் இரண்டு சிட்டிங்கில் தான் பார்க்க முடிந்தது...
எவ்வளவு ஒரு தங்கமான மனிதர்..
"படிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு காசு வாங்கறது தாய்ப்பாலை காசுக்கு விக்கிறதுக்குச் சமம்ண்ணேன்..."
"எப்பவும் நாமளே ஜெயிச்சுக்கிட்டிருக்க முடியுமான்னேன்... அவங்களும் ஜெயிக்கட்டும்ணேன்... அது தான் ஜனநாயகம்ணேன்..."
"குழந்தைங்க.. பொய் சொல்ல மாட்டாங்கன்னேன்.."
"சுதந்திரம் வாங்கியும் இவ்வளவு வருஷங்களாகியும் ஜனங்க பட்டினியைப் போக்க முடியலையே..."
அவரின் ஒவ்வொரு வசனங்களின் பின்னால் உள்ள ஒரு தெய்வீக மனதை தரிசிக்க முடிந்தது.
அவரை.. அவரின் வெள்ளையுள்ளத்தை.. பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை...
இத்தனை நாள் அவரை பத்தி விவரமாக அறிந்து கொள்ளாமைக்கு வெட்கப் பட்டேன்..
படம் பார்க்கும் போது சில இடங்களில் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை!!
பார்த்து முடித்த உடன் மூன்று எண்ணங்கள் தோன்றின...
1. இந்தியாவுக்குச் சென்றிருக்கும் மனைவிக்குப் போன் பண்ணி ஒரு அழகான காமராஜ் படம் எடுத்து வர வேண்டும்.
2. காமராஜ் பற்றிய நல்ல புத்தகங்கள் எடுத்து வரச்சொல்ல வேண்டும் (தம்பி .. ரஜினி ராம்கி.. கொஞ்சம் வாங்கி அனுப்ப முடியுமா ராஜா..?)
3. நம்ம விருதுநகர் முருகன் சார் கிட்ட சொல்லி ஒரு 10 DVD வாங்கி எனக்குத் தெரிந்த தமிழ் இளைஞர் பட்டாளத்தை அவசியம் பார்க்கச் சொல்ல வேண்டும்.
இந்த இனிய சுதந்திர நன்னாளில் பெருந் தலைவர் காமராஜர் பற்றி அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லோரும் அவசியம் ஒரு முறை இந்தப் படத்தைப் பாருங்க.. ! காமராஜ் ஆட்சின்னா என்னன்னு புரியும்..
5 comments:
சீமாச்சு,
நானும் VCD வாங்கி வைத்திருக்கிறேன்.பல முறை பார்த்து விட்டேன் .ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் வடிவதை தடுக்க முடியவில்லை.
"காந்தி ஜெயந்தி அன்று காலமானாராகையால் பள்ளிக்கூடம் லீவு விட்டாங்களா என்னவென்று நினைவில்லை (நான் என்ன டோண்டு சாரா?- எல்லா சமீபத்தையும் நினைவு வெச்சுக்கறதுக்கு)."
இது என்ன சார் தேவையற்ற சந்தேகம்? அன்று கண்டிப்பாக லீவ் விட்டார்கள். காந்தி ஜெயந்தி அல்லவா, ஹி ஹி ஹி. இதற்கெல்லாம் போய் டோண்டு ராகவனை எதிர்ப்பார்க்க முடியுமா?
சமீபத்தில் 1975-ல் அக்டோபர் இரண்டாம் தேதி அவர் காலமான செய்தி அன்றைய ரங்கா தியேட்டரில் பாதி படம் ஓடிக் கொண்டிருக்கும்போது (நாளை நமதே) படத்தை நிறுத்தி ஸ்லைட் போட்டார்கள்.
இறுதி ஊர்வலம் அன்று தமிழக அரசு கண்டிப்பாக லீவ் விட்டிருக்க வேண்டும், ஏனெனில் அது புரோட்டோக்கால். நான் இருந்த மத்தியப் பணித்துறையில் லீவ் விட்டதாக ஞாபகம் இல்லை.
காமராஜ் மறைவுடன் ஒரு சகாப்தமே முடிவு பெற்றது என்பதே நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவர் இறந்த போது எங்கள் பள்ளியில் வலைப்பந்து போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது.,பாதியில் நிறுத்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம்.
suba veera pandian eluthiya ahatum parkalam puthakathai padichu parunga
enna pantrathu padatha pathutu peru muchu viduratha thavira
// பார்த்து முடித்த உடன் மூன்று எண்ணங்கள் தோன்றின...
1. இந்தியாவுக்குச் சென்றிருக்கும் மனைவிக்குப் போன் பண்ணி ஒரு அழகான காமராஜ் படம் எடுத்து வர வேண்டும்.
2. காமராஜ் பற்றிய நல்ல புத்தகங்கள் எடுத்து வரச்சொல்ல வேண்டும் (தம்பி .. ரஜினி ராம்கி.. கொஞ்சம் வாங்கி அனுப்ப முடியுமா ராஜா..?)
3. நம்ம விருதுநகர் முருகன் சார் கிட்ட சொல்லி ஒரு 10 DVD வாங்கி எனக்குத் தெரிந்த தமிழ் இளைஞர் பட்டாளத்தை அவசியம் பார்க்கச் சொல்ல வேண்டும். //
Hats off.....
Post a Comment