Thursday, January 06, 2011

109. நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க !!

நம்ம முன்னாள் மந்திரி ஆண்டிமுத்து ராசாவால நம்ம நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு அப்ப்டீன்னு விஷுவலைஸ் பண்ணிப் பார்க்கின்ற முயற்சி இது..

ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இப்படித்தான் இருக்கு...




அதுவே பத்தாயிரம் ரூபாயின்னா இப்படியிருக்கும்... ஒன்பது நோட்டுதான் படத்துல தெரியுது.. பத்தாவது நோட்டு மேல இருக்கு..



ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 100 நோட்டு வெச்சி ஒரு பண்டல் கட்டினா அது ஒரு லட்ச ரூபாய.. அது போல 100 கட்டு கட்டினா.. அது ஒரு கோடி ரூபாயாயிருக்கும்.. அது பார்ப்பதற்கு இப்படித்தான் குட்டியூண்டா இருக்கும்.. ஒரு பெரீய்ய மஞ்சப்பையில போட்டு எடுத்திட்டுப் போகலாம்...





அதுவே ஆயிரம் கோடி ரூபாயின்னா இப்படி ஒரு பெரிய்ய பொட்டியாக் கட்டிக்கிட்டுப் போகலாம்.. ஒரு கார்ல எடுத்துட்டுப் போற சைஸ்தான் இருக்கும்.. கார் நீங்க முன்னாடியே வாங்கி வெச்சிருக்கணும்.. இல்லேன்னா ஆயிரம் கோடி ரூபாயை உடைச்சி சில்லறைமாத்தி கார் வாங்க வேண்டியதாயிருக்கும்..





ஆயிரம் கோடியெல்லாம் பத்தாதுங்க.. நமக்கு பத்தாயிரம் கோடியிருந்தா நல்லாருக்கும்னு நெனச்சீங்கன்னா, இது போல 10 பெரிய பொட்டிங்க கட்ட வேண்டியிருக்குங்க...


அதுவே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடின்னா எப்படியிருக்குங்க? நம்ம பெட்டி மாதிரி 1760 பொட்டி வெக்கணுங்க.. ஆனா நம்ம ராசா சில்லறைக்குக் கஷ்டப்படப்போறாரேன்னு எல்லாத்தையும் 100 ரூபாய் நோட்டாப் போட்டு 17600 பொட்டிகளை அடுக்கிட்டோங்க.. அது இப்படித்தான் இருக்குங்க...

அந்தப் பொட்டிக்கு ஓரமா ராசா நின்னுக்கிட்டிருக்காரு பாருங்க... தெரியறாருங்களா?






இது போதுமா நம்ம குடும்பத்துக்கும் நம்ம தலைவர் குடும்பத்துக்கும் அப்ப்டீன்னு யோசிக்கிறாரு பாருங்க...



ஆனால்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் எந்த ஊழலும் பண்ணலை.. நம்புங்க.. நம்புங்க.. நம்புங்க.... இந்த பொட்டிகளை நான் எங்கேயும் பதுக்கி வெக்கலை.. அதையும் நம்புங்க...


53 comments:

sriram said...

"மாப்பிள்ளை மாதிரி” ராஜா பாவமுங்க,
பெரிய வீட்ல, சின்ன வீட்ல எல்லாரும் எடுத்துக்கிட்டு (இதுல இத்தாலி ராணி வேற இருக்காங்க) போக இவருக்கு என்ன கெடச்சிருக்கும்னு நெனைக்கிறீங்க?

அபி அப்பா said...

அண்ணே! அந்த சி ஏ ஜி யின் 59 பக்க அறிக்கையிலே எந்த இடத்திலும் ராஜா ஊழல் போன்ற வார்த்தை இல்லவே இல்லை. தவிர 1.75 லட்சம் அவரு அடிச்சதா எங்கயும் சொல்லவே இல்லை. தவிர எல்லா இடத்திலும் உத்தேச வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்கிற வார்த்தை தான் தெள்ள தெளிவா இருக்கு.ஒன்னே முக்கால் லட்சம் என்பது எல்லாம் அதிகம் அண்ணே:-))

BalajiVenkat said...

As said by abhi appa... this scam is the revenue loss to the nation.. but while selling those spectrum to the companies he got huge amount as bribe and that was distributed amongst all who are connected with this bribe... Niira Radia got the commission of 60 crores for her work... if we assume that her share is around .1% of the total amount then the bribe would have been 60000 crores...

CWG's calculation was based on the current market rate compared to the 3G sales.

guddos to your visualization, its too good that how our gajana will be and how do we prepare for budget...

ஆயில்யன் said...

//அபி அப்பா said...

அண்ணே! அந்த சி ஏ ஜி யின் 59 பக்க அறிக்கையிலே எந்த இடத்திலும் ராஜா ஊழல் போன்ற வார்த்தை இல்லவே இல்லை/

அப்படி ஒரு வார்த்தை இருந்தால் சி.ஏ.ஜியே சொல்லிடுச்சு நான் பதவியை விட்டுடறேன் அல்லது பணத்தை ரிடர்ன் பண்ணிடறேன்னு சொல்லியிருப்பாங்க போல :) நம்ம அரசியல்வாதிங்க நொம்ப்ப்ப்ப் நல்லவங்க அண்ணே உங்களுக்குத்தான் புரிபடல அபி அப்பா தான் உங்களை நல்லா கவனிக்கணும் :)))))))))

அதிருக்கட்டும் தடாலடியா நீங்க ஏன் அரசியல்ல குதிக்கிறீங்கோ :) #டவுட்டு

பழமைபேசி said...

அண்ணே, நீங்களும் சூடாகி இடுகையும் சூடாக்குறீங்க... 32 ஆயிரம் கோடில மின்திட்டங்கள் வருதாம்... ஒரு எட்டு அதுமேலயும் கண் வெச்சுகோங்க பின்ன?!

Anonymous said...

செம மேட்டர் ராசா விரைவில் பெட்டியை சிறையில் எண்ணி பார்ப்பார்

Anonymous said...

அடிச்சி விளையாடுங்க படங்கள் விளக்கம் செம உழைப்பு

உண்மைத்தமிழன் said...

அட ஆண்டவா..? இம்மாம் பெரிய ஊழலை பண்ணிட்டு எம்மாம் சொகுசா வூட்ல உக்காந்துக்குன்னு ஜாலியா இருக்காங்க பாருங்கோ..

இந்த மாதிரி கயவாளிகளுக்கு நம்மாளுகளே சொம்பு தூக்குறாங்களேன்றதையும் நினைச்சா வருத்தமாத்தான் இருக்கு..

சீமாச்சு அண்ணா.. இதை வைச்சு ஹாலிவுட்ல ஏதாவது படம் எடுக்குற ஐடியா இருக்கா..? கதை என்கிட்ட ரெடியா இருக்கு.. இருந்தா சொல்லுங்க.. செஞ்சிருவோம்..!

பனிமலர் said...

அருமையான பதிவு, உங்கள் பதிவை படித்ததும் எனக்குள் தோன்றியதை ஒரு தனி பதிவாகவே எழுதிவிட்டேன். உங்கள் பதிவின் படங்களை பயன்படுத்தியுள்ளேன்.

http://panimalar.blogspot.com/2011/01/blog-post.html

Unknown said...

I did not expect this from you. Sorry! மேலாண்மையிலும் பொருளியலிலும் தேர்ந்தவர் என்றே உங்களை அறிந்திருக்கிறேன்:-(

இந்த நஷ்டம், ஊக வாணிக‌ லாபம் என்றே கொள்ளவும் - entirely speculative profit that was/is unrealized! பல நிலைகளிலும் ஊடுருவி இருக்கும் ஊழல் இதன் முக்கியக் காரணி. ஊழலை வளர்த்து வைத்திருக்கும் நம் சமூக அவலம் முக்கியக் காரணி.

ராசா மட்டுமே இந்த ஊழலின் காரணர் அல்லர். அந்த அளவுக்கு அவர் திறமையுள்ளவராகத் தோன்றவில்லை ("தலைவ"ரின் குடும்ப அரசியலைப் பேசும்போது, நழுவித் திணறுகிறார்).

உங்கள் பதிவுக்குத் தலைப்பு "நம்ம காந்தித் தாத்தாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க‌" என்றிருந்தாலும் நஷ்டம் இல்லை.

அபி அப்பா, காஃபி குடிச்சாச்சா? 1.76 லட்சம் "கோடி"யை முழுங்கினா நியாயமா?

சீமாச்சு சார், இதுக்கு நீங்க அபிஅப்பா சாப்பிட்ட லட்சம் கோடின்னு போட்டிருக்கலாம் (நகைச்சுவையா இல்லன்னா, தஞ்சாவூர்க் குசும்பு என்று மன்னிக்க!)

Unknown said...

இந்த நஷ்டம், வராத‌ ஊக வாணிக‌ லாபம் என்றே கொள்ளவும் என்று படிக்கவும். நன்றி

அபி அப்பா said...

\\if we assume that her share is around .1% of the total amount then the bribe would have been 60000 crores... \\

இங்க பாருங்க பாலாஜி வெங்கட், இப்ப கூட நீங்க யூகத்தின் அடிப்படையில் தான் நீராராடியா ஒரு சதவீதம் பெற்றிருந்தால் கூடன்னு தான் சொல்றீங்க:-))))))

தவிர நீராராடியா கார்பரேட் லாபிக்கு வாங்கின ஊதியம் தான் 60 கோடின்னு சொன்னதா தகவல். தவிர ஸ்பெக்ட்ரம் கைமாத்தி விட்டதுக்கு லஞ்சமா பெற்றதாக சொல்லவில்லை. கார்பரேட் லாபி என்பது கார்பரேட் கம்பனிகளின் வானளாவிய உரிமை என பொருளாதார நிபுனர் பிரதமரே சொல்லியிருக்காரு. அதும் நீராராடியா உங்களிடமோ என்னிடமோ பத்திரிக்கைகளிடமோ கூட சொல்லவில்லை. சி பி ஐ கிட்டே சொன்னதா பத்திரிக்கைகள் சொல்லுது. இதிலே எத்தனை சதம் உண்மை என்பது யாருக்கு தெரியும்? இருங்க வர்ரேன்...

அபி அப்பா said...

அந்த அறிக்கையே வருவாய் இழப்பு பற்றிய எங்கள் மதிப்பீடு உத்தேசமானது தான்( presumptive) என்று குறிப்பிடுகின்றது. மேலும் தன் முகவுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ள தொகை விவாதத்துக்குரியதே(how ever the amount of loss could be dedbated) என்றும் கூறுகிறது.

வருவாய் இழப்பு தொகை எப்படியெல்லாம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எஸ் டெல் என்கிற நிறுவனத்துக்கு உரிமம் கொடுத்தது தவறு. அது சரியான அனுபவம் உள்ள நிறுவனம் அல்ல. 18 கோடி ரூபாய்க்கு பதிலாக வெறும் பத்து லட்ச ரூபாய் மட்டுமே தன் ஷேர் கேப்பிடலாக கொண்டுள்ளது என்று அந்த 59 பக்க அறிக்கையில் தனது 42 வது பக்கத்தில் கூறுகின்றது. சரி ஒத்துப்போம். அதே அறிக்கையில் 52 வது பக்கத்தில் " எஸ் டெல் கம்பனி 5.11.2007ல் ஒரு கடிதம் எழுதுகின்றது ட்ராய் அமைப்புக்கு. (கவனிக்க ராசாவுக்கு அல்ல ட்ராய் அமைப்புக்கு) நிர்னயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக 6000 கோடி தருவதாக கூறுகின்றது. பின்னர் அதே நிறுவனம் 27.12.2007ல் அதாவது 50 நாள் பின்னர் நான் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக 13,752 கோடி தருகின்றேன் என கடிதம் எழுதுகின்றது.(கவனிக்க அதன் ஷேர் பங்கு முதலீடு வெறும் பத்துலட்சம் மட்டுமே) ஆக இதிலிருந்தே அது டுபாக்கூர் கம்பனி என்று நமக்கு புரிகின்றது. இப்போது அந்த அறிக்கை தனது 52ம் பக்கத்தில் சொல்கின்றது என்னவென்ரால் அப்படி சொன்ன அது போன்ற கம்பனியில் இருந்து அந்த 13,752 கோடி மற்றும் அது போல சொன்ன கம்பனிகளிடம் இருந்து சொல்லப்பட்ட பல கோடிகளை சேர்த்து தொலைதொடர்பு துறை பெற்றிருந்தால் அதன் கூட்டு தொகை 53,523 கோடி ரூபாய் ஆக இருந்திருக்கும். அப்படி பெறாத காரணத்தால் இழப்பு ஏற்பட்டுவிட்டது" என தனது 52வது பக்கத்தில் கூறுகின்றது. அதாவது 42ம் பக்கத்தில் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட வேண்டிய கம்பனி என்று எஸ் டெல் கம்பனியை கூறிய அதே அறிக்கை தனது 52ம் பக்கத்தில் அந்த கம்பனியில் இருந்து வாங்கிகிட்டா அரசுக்கு லாபம் என்று கூறுகின்றது.

இந்த முரண்பாடு எப்படி?????

தோழி கெக்கேபிக்குனி, வெல் செட். நல்லா சொன்னீங்க. ஆனா சீமாச்சு அண்ணனுக்கு தொழிலே பொருளாதாரம் தான். அதில் நிபுனத்துவம் பெற்றவர் தான். அமரிக்க பொருளாதார தாக்கம் ஏற்ப்பட்ட அந்த வருஷத்தின் நவம்பர் மாத லீவை கேன்சல் செய்து விட்டு உடனே நாடு திரும்ப வேண்டும் என தான் சார்ந்த நிறுவனத்தால் உடனடியாக திரும்ப அமரிக்காவுக்கு அழைக்கப்பட்டவர் தான். அதனால் அண்ணனுக்கு இதல்லாம் தெரியாமல் இருக்க வாய்பில்லை தான். சும்மா ஜாலியா எழுதிட்டாருன்னு தான் நினைக்கிறேன்:-)))

அது போல தம்பி உனாதானா சொல்வதை யாரும் சீரியசா எடுத்துக்க மாட்டாங்க. ஏன்னா கவர்னர் ராஜ்பவன்ல சுதந்திர தின டீ பார்டிக்கு செலவழித்த எட்டுலட்சம் ரூபாய்க்கே குதி குதின்னு குதிச்சவர். ஒரு தமிழக அரசின் கவர்னர் டீ பார்டிக்கு கொடுத்த எட்டு லட்சத்துக்கு குதிச்சவர் 150 கோடி பாராளுமன்ற முடக்கத்துக்கு செலவானதை பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டார். அன்னை ஜெ கொடநாட்டுக்கு போய் வர (ஒரு ரூபாய் சம்பளக்காரி) செலவு செய்யும் தொகை பத்தி கவலைப்பட மாட்டாரு. அதனால அதை லூஸ்ல விட்டுடலாம்.

தவிர கெக்கேபிக்குனி, நான் தெளிவாகத்தான் சொன்னேன். கோடியை முழுங்கிவிட்டு லட்சம் என சொன்னது தெளிவாகத்தான்.

ஏன்னா அடிமட்ட மக்களிடம் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கு விஷயம். இது தான் உண்மை.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

முதலில், சீமாச்சுவின் கிராஃபிக்ஸ் கலக்கலுக்கு ஒரு சபாஷ்!

’ஒரு யூக வாணிக‌ லாபம்’, ‘suggestive', 'debatable', 'subject to speculation' என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டி பிரச்னையின் பூதாகாரத்தை எப்படியாவது நீர்த்துப்போக முனையும் அறிவுஜீவிகளுக்கு ஒரு முக்கியமான வரி: அப்படியென்றால், லாஜிகலாக இந்த ஊழல் 1,76,000 கோடியை விட அதிகமாகக்கூட இருக்கக்கூடும் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

ஒரே ஒரு ரூபாய் இழப்பு செய்திருந்தால்கூட, அதுவும் வேண்டுமென்றே செய்திருந்தால், குற்றம் குற்றமே. குற்றம், ஊழல் புரிவதற்காகவே pre-medidated and pre-planned நடவடிக்கைகள் இருந்துள்ளன என்பது கண்கூடு.

இம்மாதிரி குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இல்லாதது நம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனம்.

இதையும் கூட விளையாட்டாகவே பலர் எடுத்துக்கொள்வது நாடு போகும் நீசப்பாதையையே காட்டுகிறது.

வயிறு எரிகிறது ;-(

Unknown said...

எல்லேராம், டிபிகல் தமிழ் வாத பிரச்னை, பட்டம் கொடுத்து பிரச்னையை திசைமாற்றுவது: அறிவுஜீவி, ஒரு ரூபாய் சம்பளக்காரி....

இங்கே அபிஅப்பாவுக்கு ஆப்பு வைக்கலாம்னு தட்டச்சிட்டு இருந்தேன், நீங்க வந்திட்டீங்க. இப்ப அபிஅப்பாவுக்கு சின்னதா ஆப்பு: அபிஅப்பா, நீங்களோ நானோ அடிமட்டம் இல்லை! சீரியஸா பாயிண்டு பிரிச்சுப் பேசிட்டு, ”அடிமட்டம்”னு ஒரு லட்சம் கோடிக்கு நொள்ளைச் சாக்குச் சொன்னா சரியாப் படலை. ஒருலட்சம் கோடின்னா, ஒழுங்காச் சொல்லுங்க, இல்லை நட்டு மிஸ் கிட்ட போட்டு கொடுத்திருவேன். சைடுகேப்ல, அன்னை பத்தி வேற...;-)

எல்லேராம், //லாஜிகலாக இந்த ஊழல் 1,76,000 கோடியை விட அதிகமாகக்கூட இருக்கக்கூடும்.// ஆம். ஸோ?! எல்லாரும் இங்க ஒரு ஒரு விதத்தில சொல்லுறது ஒரே விஷயம் தான், ராசா மட்டுமில்ல, நிறைய பேருக்கு லாபம்; ராசா இதுல மிகக்கூடிய லாப ஷேர் பார்க்கலை. ”அடிக்கிறதுக்கு ஒரு டார்கட் வேணும். அடிச்சிருவோம்”.

அபி அப்பா said...

வாங்க ராம் அண்ணே! அறிவுஜீவி பட்டத்துக்கு நன்னி நன்னி! (ஒரே ஊர்காரங்க பட்டம் கொடுத்துக்குறாய்ங்கன்னு சொல்லிடாதீங்கப்பா.) விஷயத்துக்கு வருவோம். அண்ணே நீங்க சொல்வது படி பார்த்தாலும் யூகம்னுவந்த பின்னே அது 1.75 லட்சம் கோடி(கெக்கேபிக்குனிக்காக இந்த தபா கோடிய சேர்த்துகிட்டேன்) தாண்டி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதுக்கு இல்லை தான். ஆனா வருமான இழப்பு என்று தான் சொல்லனுமே தவிர அதை எப்படி ஊழல் கணக்கிலே சேர்த்து சீமாச்சு அண்ணன் மாதிரி கிராபிக்ஸ் செஞ்சு இத்தனை பணம் கிட்ட தட்ட கன்டெய்னர்ல தான் ராஜா டெல்லில இருந்து பெரம்பலூர் எடுத்து வந்தார்னு சொல்ல முடியும்? முதலில் அதை ஊழல் இல்லை வருமான இழப்பு என்பதை ஒத்துகிட்டு பின்னே அது எத்தனை கோடி என்கிற வாதத்துக்கு வாங்க.

சரி ஊழல் இல்லை, வருமான இழப்பு என்கிறதை நீங்க இப்ப ஒத்துகிட்டீங்க உங்க பின்னூட்டம் வழியாக. ஆனா அது எந்த முறையிலே வருமான இழப்பு என்பதை தான் நான் மேலே சொன்னேன். அப்படி செஞ்சிருந்தா இத்தனை வருமானம் வந்திருக்கும் இப்படி செஞ்சிருந்தா இத்தனை வருமானம் வந்திருக்கும் என சி ஏ ஜி சொன்னது எல்லாமே முன்னுக்கு பின் முரணாக இருக்கு. அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் தீர்பா நினைச்சு ஏத்துக்கனும் ராசாவை தூக்கிலே போடனும்னு அடம் பிடிக்கிறீங்க."வயித்தெரிச்சலா இருக்கு"ன்னு அங்கலாய்க்கிறீங்க. நாடு நீசப்பாதையில் செல்வதா கொந்தளிக்கிறீங்க. ஆனா இப்படி கொந்தளிக்கும் நேரத்தில் இன்னும் ஒரு தபா அந்த சி ஏ ஜி அறிக்கையை திரும்பவும் படிச்சு பார்த்தாலென்ன?

ஒரு அம்மாவுக்கு மூன்று பசங்க. தொலை தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் பஸ்ஸில் போய் வருவாங்க. ஒருத்தன் சாயந்திரம் அம்மாகிட்டே வந்து "அம்மா நான் பஸ்ல வராம பஸ் பின்னாடி ஓடி வந்து 3 ரூவா மிச்சம் பிடிச்சேன்"ன்னு சொன்னான். அடுத்த மகன் ஓடி வந்து 'அம்மா நான் ஆட்டோ பின்னால ஓடி வந்து 15 ரூபா மிச்சம் பிடிச்சேன்"ன்னு சொன்னான். அடுத்த மகன் அம்மாகிட்டே வந்து நான் டாக்சி பின்னால வந்து 50 ரூபா மிச்சம் பிடிச்சேன்"ன்னு சொன்னான். அது போல இருக்கு சி ஏ ஜி அறிக்கை. பணமே இல்லாத வெறும் பத்து லட்சம் பங்கு முதலீடா வச்சிருக்கும் எஸ் டெல் நிறுவனம் கிட்டே இருந்து 14 ஆயிரம் கோடி ரூபாய் வருதுன்னு சொன்னதை ஏத்துக்காததால் 14000 கோடி நஷ்ட்டம் வந்தது என சி ஏ ஜி அறிக்கை சொல்வது டாக்சி பின்னால ஓடி வந்து 50 ரூபா மிச்சம் பிடிச்ச கதையா தான் இருக்குது. இது போலத்தான் அந்த அறிக்லை முழுவதும் இருக்கு.... இருங்க இன்னும் கொந்தளிக்கிறேன்....

அபி அப்பா said...

கெக்கேபிக்குனி சொன்ன விஷயத்துக்கு பின்ன வர்ரேன். முதல்ல இதை பார்த்திடுவோம்.\\ஒரே ஒரு ரூபாய் இழப்பு செய்திருந்தால்கூட, அதுவும் வேண்டுமென்றே செய்திருந்தால், குற்றம் குற்றமே. குற்றம், ஊழல் புரிவதற்காகவே pre-medidated and pre-planned நடவடிக்கைகள் இருந்துள்ளன என்பது கண்கூடு.\\ ராம் அண்ணே! இந்திய அரசாங்கம் அல்லது தமிழக அரசாங்கம் என்பது கம்பனி அல்ல. கம்பனி அல்ல. கம்பனி அல்ல. ஒரு மக்களுக்காக மக்களுக்காக இயங்கும் ஒரு அரசாங்கம். அந்த நீங்க சொன்ன வருவாய் இழப்பு இல்லாம அரசாங்கம் பல லட்சம் கோடி வருவாய் ஈட்டி என்ன செய்யும்??? அதை மக்களுக்கு தானே கொடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு சமையல் கேஸ் விலை 330 ஆக இருந்ததை மத்திய அரசு தடாலடியாக 380 ஆக்குச்சு. சரி வேற வழியில்லை. உடனே தமிழக அரசு ஒரு சிலிண்டர் வச்சிருக்கும் நபர்களுக்கு இந்த அதிக சுமை தாங்காதுன்னு உடனே அதிலே 30 ரூபாய் தமிழக அரசு மானியமாக வழங்கும் என அறிவிக்குது. மாயவரத்தில் மொத்தம் 2 இண்டேன் கம்பனி டீலரும் ஒரு பாரத் கம்பனி டீலரும் இருக்காங்க. ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் நபர்கள் மாத்திரம் 27000 பேர் இருக்காங்க. 40 நாளுக்கு ஒரு சிலிண்டர்ன்னு சராசரியா வாங்குறாங்க. ஆக 40 நாளுக்கு ஒரு தபா 27000 x 30 ரூபாய் சராசரியா மாயவரத்திலே மட்டும் மாதம் ஒரு கோடி ரூபாய் போகுது.. மொத்த தமிழ்நாட்டுக்கும் 300 கோடி போகுது. வ்ருஷத்துக்கு 3000 கோடி இழப்பு தமிழக அரசுக்கு ஏற்படுது. இது நீங்க சொன்ன மாதிரி வேண்டுமென்றே செய்த இழப்பு தான்.

அது போல சத்துணவு, ஒரு ரூபாய் அரிசி எல்லாத்திலயும் அரசுக்கு இழப்பு தான். அதல்லாம் எங்க போய் முடியுது. ஏழை மக்களுக்கு பாரம் இல்லாம இருக்க அரசாங்க செய்ய வேண்டிய கடமை தானே. நீங்க சொல்வது போல அரசாங்கம் என்ன இழப்பே இல்லாம இருக்க கார்பரேட் கம்பனியா நடத்துது?

நீங்க சொல்வது படி பார்த்தால் உரமான்யத்தில் இருந்து கான்கிரீட் வீடு, விவசாய இலவச மின்சாரம் எல்லாமே இழப்பு தான். வேண்டாம் சப்சீடி என நீங்களும் நானும் அமரிக்கா, துபாய்ல உட்காந்து சொல்லிக்கலாம். இங்க வந்து நிலைமையை பாருங்க. புரியும்....

இதே செல்போன் இந்தியாவுக்குள்ளே வந்த போது இன்கமிங் கால் சார்ஜ் இருந்தது உங்களுக்கு தெரியும் தானே. நம்புங்க இன்கமிங் கால்க்கு கூட காசு உண்டு. இன்றைக்கு சி ஓ ஜி திட்டத்துல அவனவன் கல்யாணம் நிச்சயம் செஞ்சாலே நிச்சயதார்த்ததுக்கு பொண்ணுக்கு சி ஓ ஜி போட்டு செல் பரிசா தர்ரான். 24 அவர்ஸ் கடலை ஃப்ரீ... இதல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சுன்னு சொல்ல முடியுமா?

\\’ஒரு யூக வாணிக‌ லாபம்’, ‘suggestive', 'debatable', 'subject to speculation' என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டி பிரச்னையின் பூதாகாரத்தை எப்படியாவது நீர்த்துப்போக முனையும்\\ ராம் அண்ணே இந்த வைரவரிகள் எல்லாம் நாங்கள் சப்பை கட்டு கட்ட சொல்லப்பட்டவை இல்லை. அந்த சி ஏ ஜி அறிக்கையில் இருக்கும் வரிகள் தான்!

அபி அப்பா said...

அண்ணே இதுக்கு மேல பொங்கனும்னா ட்ராய் முதல் பி ஜே பி ஆட்சி காலம் முதல் ஆரம்பத்தில் இருந்து பொங்கனும். நீங்க சரின்னா பொங்கிடுறேன். இப்போ கடமை அழைக்குது.

அபி அப்பா said...

அண்ணே எனக்கு தெரிந்து இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஆரம்பம் முதல் நடந்தது என்ன என்பதை நான் படித்து தெரிந்து கொண்ட வகையில்:

முதலில் அது ஒரு இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கை தானே தவிர அது ஒன்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அல்ல என்பதை மனதில் உள்வாங்கி கொண்டு மேலே போவோம்.

அந்த அறிக்கையில் SCAM என்கிற வார்த்தை எங்கும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக REVENUE LOSS என்றே சொல்லே பயன் படுத்தப்பட்டு இருக்கின்றது. வருவாய் இழப்புக்கு ஏலம் விட வேண்டாம் என்று எடுத்த கொள்கை மாற்றம் தான் அதாவது பாலிஸி ஷிஃப்ட் காரணம் என்கிறது அறிக்கை. அந்த கொள்கை மாற்றத்தை முன்மொழிந்தவர் யார்? ஏற்றுக்கொண்டவர் யார்?

எல்லா துறையிலும் ஆட்சியில் உள்ள மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கும். அதற்கு தேசிய கொள்கை நேஷனல் பாலிசி என்று பெயர். தேசிய கல்விக்கொள்கை, தேசிய ஜவுளிக்கொள்கை, தேசிய வெளியுறவு கொள்கை இதே போல தேசிய தொலை தொடர்பு கொள்கையும் ஒன்று. இது அந்த துறை சம்மந்தப்பட்ட அமைச்சரின் தனிப்பட்ட கொள்கையும் இல்லை. பிரதமரின் தனிப்பட்ட கொள்கையும் இல்லை. அதற்காக ஒரு வல்லுனர் குழு அமைத்து அது பிரதமர் உட்பட அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று பின்னர் வெளியிடப்படும். அதன் படி அந்த துறையை சேர்ந்த அமைச்சர் நடக்க வேண்டும்.

தொலை தொடர்பு கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க ட்ராய் அதாவது (Telecom Regularitu Authority of India) என்கிற குழு உள்ளது. அது 1994ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ( 2 G ஸ்பெக்ட்ரம்) ஏலத்துக்கு விட வேண்டும் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த கொள்கைக்கு (NTP 94 - National Telecom Policy ) என்று பெயர்.

அதன்படி சில பெரிய நிறுவனங்கள் அதை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால் அவை தங்களுக்கு வணிக அடிப்படையில் கட்டுப்படியாகவில்லைனென்று கூறி 1998ல் அரசிடமே திருப்பி கொடுத்து விட்டன.
தொடரும்.............

அபி அப்பா said...

தொடர்ச்சி........

அதனால் அந்த குழு ட்ராய் 1999ம் ஆண்டு மீண்டும் கூடி இனி ஏலத்துக்கு விட வேண்டாம். முதலில் வருபவர்களுக்கு முதலில் என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றமும் அன்றைய அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டன. அந்த புதிய கொள்கைக்கு "New NTP 99" என நாமகரனம் சூட்டப்பட்டது.

1999 முதல் அந்த துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத்மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் பின்னர் ராசா என எல்லோருமே அதன் அடிப்படையில் தான் செயல்பட்டு வந்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

இப்படி இருக்க நீங்கள் இதோ இந்த பணக்கட்டுக்கு முன்னே நிற்பது தான் ராசா என கிராபிக்ஸ் செய்து ராசாவை மட்டும் குற்றவாளியாக ஆக்க என்ன காரணம். உடனே உனா தானா பொங்குவார். தெரியும். என்னான்னு பொங்குவார். 1999ல் வித்த பவுனு இப்ப அதே விலையில் தான் விக்குதா?ன்னு. எல்லாம் நல்ல கேள்வி தான். இதற்கான பதிலை ராத்திரி வந்து பொங்குகிறேன். இதை ஏன் ராசாகிட்டே மட்டும் கேட்கனும் என்பது தான் இப்போதைக்கு என் கேள்வியே? இன்றைக்கு இளங்கோவன் "திமுக ஸ்பெக்ட்ரத்தால் தான் காங்கிரசுக்கு மானமே போச்சு"ன்னு பேசுவதை சகித்து கொள்ள முடியவில்லை. எப்படி ராஜீவை கொன்றது திமுக தான் என வாழ்ப்பாடி கூவி கூவி பிரச்சாரம் செய்து திமுக தோற்றதோ (1991ல்) அதே நிலைப்பாடு சில காங்கிரஸார் கூட எடுப்பது அநியாயம் என்கிறேன்.

அதே அறிக்கையில் இந்த தணிக்கை 2003 - 04 முதல் 2009-10 காலம் வரையிலானது என்கிறது தலைப்பு. ஆனால் உள்ளடக்கமோ ராசாவின் பதவிகாலம் 2007-10 வரைய்லானது என்கிறது. மற்ற தணிக்கை அறிக்கை என்ன ஆச்சு? பி ஜே பி ஆட்சி கால தணிக்கை அறிக்கையிலே என்ன சொல்லப்பட்டிருக்கு? அப்படியே வருவாய் இழப்பாக வைத்து கொண்டால் கூட ட்ராய் அமைப்பை தானே குற்றம் சாட்டி இருக்க வேண்டும். அதில் இருக்கும் தொலை தொடர்பு துறை வல்லுனர்களைகளையும் அதை ஆமோதித்த பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தமைக்காக ஒட்டுமொத்த அமைச்சரவையும் தானே விசாரனைக்குட்படுத்த வேண்டும்?

இதிலே கிராபிக்ஸில் ராஜா என்று தனிப்பட்ட மனிதனை போடாமல் மத்திய அரசு, பிரதமர், ட்ராய் உறுப்பினர்கள், பிஜேபி அரசில் இருந்தவங்க, எல்லாரும் தானே இருக்கனும். நீங்க சொன்ன 1.75 லட்சம் கோடியை சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் நீங்களே சமமாம பிரித்து தானே கொடுத்திருக்கனும்? அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த காங்கிரஸ் அரசை கலைச்சிட வேண்டாமா? கலைச்சிட வேண்டாமா? கலைச்சிட வேண்டாமா?

அதை விடுத்து ராசா மேலே குத்தம் அவர் தான் கண்டெய்னர்ல வச்சு தூக்கிகிட்டு வந்துட்டாரு என சொல்வது அபத்தம் தானே அண்ணா?

அபி அப்பா said...

அண்ணா, இதிலே பத்திரிக்கைகள் புழுகும் அண்ண புழுகு ஆகாச புழுகுகள் பற்றியும் பார்த்துடலாமா?

ஆரம்பம் முதலே மாத்தூர் மாத்தூர்ன்னு ஒருத்தர். நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன். அவரு யாருன்னா தொலைதொடர்பு துறையிலே அதாவது டெலிகாம் செக்ரட்ரி ஐ ஏ எஸ் ஆப்பீசர். இப்ப ரிட்டையர்டு ஆகியாச்சு. அந்த மவராசன் சொன்னது தான் எல்லா டிவிலயும் குறிப்பா ஜெயா டிவில இன்னும் ஒரு உண்மை தமிழன் ரவிபெர்னார்டு லூயிபிலிப் சட்டைல அழுக்கு படாம நோகாம நொங்கு திம்பாரு. அவங்க எல்லாருக்கும் மாத்தூருக்கு சிலை வைக்காதது தான் பாக்கி. அந்த மாத்தூர் என்ன சொன்னாருன்னா " இந்த வக்காலி ராசா என்ர பேச்சை கேட்கவே இல்லியாக்கும். நான் ஏலத்துக்கு வுட்டுடலாம்ன்னு நொடிக்கு நூறு தபா சொன்னேனுங். ஆனா அவன் கேட்கலைங்.."

அதை எல்லா பத்திரிக்கையும் மாங்கு மாங்குன்னு சொல்லுச்சு. எழுதுச்சு. படிச்ச எங்களுக்கே கிர்ன்னு ஆகிப்போச்சு. எங்க தலைவர் கூட ஆடிப்பூட்டாரு. "ராசா தப்பு செஞ்சதா நிரூபனம் ஆச்சுன்னா விலக்கிடுவோம்"ன்னு. ஆனா பாருங்க அண்ணா, அதுக்கு தொலைதொடர்பு துறைல இருந்து பதில் வந்துச்சு. ஒரு பய வாய தொறக்கனுமே. வாயை இறுக்கி மூடிகிட்டானுவ. ரவிபெர்னார்டு சீமான பேட்டி எடுக்க பூட்டாரு.

அப்படி என்ன தான் சொன்னுச்சு தெரியுமா தொலைதொடர்பு துறை???

\\‘2 ஜி’ அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு பற்றி நான் சொன்ன ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டார் அமைச்சர் ராசா. - ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்திட வில்லை.
- எனது ஒப்புதலையும் ராசா பெறவில்லை.
- ஏலம் விடுவதன்மூலம் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற - எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை\\ இப்படி சொன்ன மாத்தூருக்கு தொலை தொடர்பு துறை என்னா பதில் சொன்னுச்சுன்னா......

\\\‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு உத்தரவில் மாத்தூர் கையெழுத்திட்டிருக்கிறார். அதனை நிருபிக்கும் ஆவணங்கள் இதோ என்று மாத்தூரின் கையெழுத்திட்ட ஆவணங்களையும் பத்திரிகைகாரர்களுக்கும், ஊடகங்களுக்கும் அளித்திருக்கிறது. அவரது பரிந்துரையின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் ‘2ஜி’ அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- முன்னதாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்தது எப்படி என்பதற்காக, நடத்தப்பட்ட எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் மாத்தூர் கலந்து கொண்டார். கடைசியாக நடந்த கூட்டத்தில் அவர்தான் ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற பரிந்துரைகளையும் செய்தார்.

- 2008ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்று அவர் இப்போது கூறுகிறார். அது முழுக்க முழுக்க தவறு.

- 2010 ஆம் ஆண்டு ‘3 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டுக்குத்தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மாத்தூர் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டிருக்கிறார் \\\ இப்படி சொல்லிட்டு அந்த மாத்தூர் முத்து முத்தா கையெழுத்து போட்ட பேப்பரையும் அது சம்மந்தமா நடந்த கூட்டத்தின் அஜண்டாவையும் பத்திரிக்கை எல்லாத்திலயும் கொடுத்ததோடு மட்டும் இல்லாம கோர்ட்டிலயும் கொடுத்துச்சு.

ஆனா இதல்லாம் வெளியே வராது. ஏன்னா ராசா சாவனும் இதானே எல்லா பத்திரிக்கையும் ஆசைப்படுது. இன்னும் இருக்கு வர்ரேன்...

அபி அப்பா said...
This comment has been removed by the author.
அபி அப்பா said...

இதிலே ராஜாவை கார்னர் செய்யும் போது இன்னும் ஒரு கூத்தும் நடத்துது பத்திரிக்கை எல்லாம்... ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஹார்ஷா எழுதிட்டாராமாம். இது கோர்ட்டுல இருக்கு வாதம். அதனால நான் அத்தனை இதிலே சொல்ல வரலை. இருக்கட்டும்.ராசா அதிகப்பிரசங்கியாம். என்னடா கூத்து இது. கிட்ட தட்ட நம்ம பிரதமர் கேபினட் அமைச்சரா பதவி வகித்த காலத்துக்கு இனையாக காபினட் அமைச்சரா வாஜ்பாய் காலத்தில் இருந்து இருக்காரு ராசா. படிப்பிலேயும் அல்பசல்பம் இல்லை. வக்கீலுக்கு படிச்சி தொலைச்சுட்டாரு. அவரு எழுதினதிலே குத்தம்.

ஆனா அவரை விட உசத்தியா டான்பாஸ்கோவிலே படிச்ச அம்மையார் ஒரு நாட்டின் முதலமைச்சரா இருந்தவங்க அப்போ உதவி பிரதமாரா இருந்தவரை "செலக்டிவ் அம்னீஷியா" என்கிற நோய் தாக்கிய நோயாளி என சொன்னா அவங்க "ப்ரேவ் லேடி" ஆனா ராசா அதிகபிரசங்கி. தன் சக அமைச்சரை கவனிக்க தரக்குறைவாக இல்லை, மரியாதை குறைவாக இல்லை.. சில வார்த்தை பிரயோகங்கள் சரியில்லை என்று கோர்ட்டில் வாதிடப்படுது.

என் தனிப்பட்ட கேள்வி என்னான்னா பிரதமர் என்ன மடாதிபதியா? வாயை பொத்திகிட்டே பேசனும், பேசிட்டு திரும்பி வரும் போது பேக்கை காமிக்காம ரிவர்சிலேயே வரணும் கேரள கோவில்கள் மாதிரி..... என்ன கொடுமை இதல்லாம். இந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் ராசாவுக்கு மாத்திரமா? ஜெயலலிதாவுக்கு இல்லியா????

அப்படி என்ன தான் அந்த கடிதத்தில் ராசா எழுதியிருந்தாருன்னு கேட்டீங்கன்னா அதையும் சொல்ல தயார் தான்....

அடடா அண்ணே, நான் இன்றைக்கு இதிலேயே நேரத்தை கழித்து விட்டேன்... மீதிய ராத்திரி பார்த்துப்போம்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

அட ராஜா எந்த ஊழலும் பண்ணலேங்க.. அவர் நல்லவருங்க.. அத விட அவர் தலைவர் , ரொம்ப ரொம்ப நேர்மையானவர்.. அவர் இதுவரைக்கும் ஒரு பைசான்னா ஒரு பைசா கூட கொள்ளை அடிச்சதில்லை. அவர் மூத்த மகன் மதுரை காந்தி மிசூசியத்தில் பகுதி நேரமா அஹிம்சை பத்தி வகுப்பு எடுத்திட்டு வரார். அவர் மகள் ஒரு சன்னியாசி மாதிறி வாழ்ந்திட்டு வராங்க..

அபி அப்பா said...

குறை ஒன்றும் இல்லை, உங்க வாதம் பிரமாதம்... குறை ஒன்றும் இல்லை..

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒரு காலத்தில வெள்ளைக்காரனுக்கு காட்டி குடுத்தவனும் , கூட்டி கொடுத்தவனுக்கும் கருணாநிதி குடும்பத்திற்கு விளக்கு பிடிக்கிறவனுக்கும் என்ன வித்தியாசம்? ரெண்டும் தப்புன்னு தெரிஞ்சே செய்வது தானே? யூக அடிப்படைன்னா ஏன் சுப்ரீம் கோர்ட்ல வழக்கு ? ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ராசா மட்டும் இல்ல பல இத்தாலி ராணிகளுக்கும் இதில தொடர்பிருக்கு.. முடிஞ்சா ராசாவ கார்னர் பண்ணி பாருங்க அப்புரம் தெரியும் பெரிய மனுசங்க வண்ட வாளமெல்லாம் ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ராசாவுக்கு ஆதரவா இருக்கிறவங்க எல்லாம் தயவு செஞ்சு அரசு டெண்டர் அது எதுவா வேணா இருக்கட்டும் விதிமுறைய பாருங்க.. எத்தன விதிகள், எவ்வளவு வருச அனுபவம் எல்லாம் இருக்கணும்னு பக்கம் பக்கமா குடுத்து இருப்பாங்க... இவர் முதல்ல வர்ரவங்களுக்கு முதல்ல குடுப்பாராம் ஆனா தகுதி பத்தி எல்லாம் கண்டுக்க மாட்டாராம். போன ஆட்சியில நடந்த வழிமுறைய பின்பற்ற மந்திரி எதற்கு ஒரு பியூன் போதுமே டிட்டோ போட...அப்படி அனுமதி வாங்கினவன் அடுத்த வாரமே அதில பாதிய மிகப்பெரிய விலைக்கு வித்திடுவானாம்.. ஆனா ஊழல் நடக்கலையாம்...

அபி அப்பா said...

\\ஒரு காலத்தில வெள்ளைக்காரனுக்கு காட்டி குடுத்தவனும் , கூட்டி கொடுத்தவனுக்கும் கருணாநிதி குடும்பத்திற்கு விளக்கு பிடிக்கிறவனுக்கும் என்ன வித்தியாசம்?\\

அந்த ஆறு வித்யாசம் எல்லாம் நீங்க ஆராய்சி பண்ணுங்க. எங்களுக்கு அதுக்கான அவசியம் இல்லை.

யூக அடிப்படைன்னா ஏன் சுப்ரீம் கோர்ட்ல வழக்கு ?

கோர்ட்டுல போட்டவங்க கிட்டே கேட்க வேண்டிய கேள்வி இது. கோர்ட்டிலே போட்ட பின்னே சி ஏ ஜி கிட்டே "எதை வச்சு 1.75 லட்சம் கோடின்னு சொல்றே?"ன்னு கோர்ட்டிலே கேட்பாங்க. அப்ப சி ஏ ஜி "இது யூக அடிப்படையிலே தான் சொன்னேன்னு சொல்லும் பாருங்க அப்ப அவங்க கிட்டே போய் முட்டிகுங்க.

\\ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ராசா மட்டும் இல்ல பல இத்தாலி ராணிகளுக்கும் இதில தொடர்பிருக்கு.. முடிஞ்சா ராசாவ கார்னர் பண்ணி பாருங்க அப்புரம் தெரியும் பெரிய மனுசங்க வண்ட வாளமெல்லாம் ...\\

ராசாவை இதுக்கு மேல என்னாத்த கார்னர் பண்ணுவீங்க? பதவிய விட்டு தூக்கியாச்சு. சி பி ஐ ரெய்டு நடத்தியாச்சு. வருமானவரித்துறை ரெய்டு நடத்தியாச்சு. சி பி ஐ சம்மன் கொடுத்து அவரும் போய் 2 நாள் விசாரனைக்கு ஒத்துழைச்சாச்சு. இன்னும் நீங்க சொல்வது போல எந்த இத்தாலி ராணியையும் மாட்டி விடலையே... இன்னும் என்னாத்த கார்னர் செய்ய போறீங்க சாமீ???

நீங்க கொஞ்சம் யோசிச்சு பேசினா நல்லா இருக்கும்.

அபி அப்பா said...

\\ராசாவுக்கு ஆதரவா இருக்கிறவங்க எல்லாம் தயவு செஞ்சு அரசு டெண்டர் அது எதுவா வேணா இருக்கட்டும் விதிமுறைய பாருங்க..\\
சரி நான் தான் பார்க்கலை. பார்க்காம விவாதம் செய்ய வந்துட்டேன். நீங்க எல்லாம் பார்த்தவரு. அதை கொஞ்சம் புட்டு புட்டு வைத்தா என்ன? நானும் புரிஞ்சுப்பேன்ல..

\\போன ஆட்சியில நடந்த வழிமுறைய பின்பற்ற மந்திரி எதற்கு ஒரு பியூன் போதுமே டிட்டோ போட...அப்படி அனுமதி வாங்கினவன் அடுத்த வாரமே அதில பாதிய மிகப்பெரிய விலைக்கு வித்திடுவானாம்.. ஆனா ஊழல் நடக்கலையாம்...\\

திரும்பவும் சொல்றேன். என் வாதம் என்னன்னு திரும்பவும் படிச்சுட்டு வாங்க. ராசாவை மட்டும் கண்டெய்னர்ல பணம் அள்ளிகிட்டு போனதா சொல்வதை தான் எதிர்கிறேன். ஊழல் நடக்கவில்லை அல்லது நடந்தது என்பது பற்றி நான் இங்க வாதிட வரலை. அதுக்கு தனி பதிவு போடுங்க. அங்க வச்சுப்போம் கச்சேரியை. நான் சாதாரணமா விஷயம் தெரியாம உளற மாட்டேன். ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்து விட்டு தான் விவாதத்துகே வருவேன். சும்மா உங்க டகால்டி எல்லாம் வேண்டாம் இங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஊழலே நடக்கலேண்னா அப்புரம் ராசா ஏன் ராஜினாமா? சிபிஐ ஏன் வழக்கு? ஊடகங்களும் , எதிர்கட்சி மட்டும் காரணமெனில் ஏன் பாராளுமன்ற கூட்டுகுழுவுக்கு ஒப்புதல் இல்லை? இந்த ஊழல் வெறும் யூகம் மட்டுமெனில் எதற்கு இவ்வளவு நடவடிக்கைகள் ராசா மீது? ஒருவேளை எதிர்கட்சிகள் தான் காரணமெனில் ஆளுங்கட்சி எதற்கு? எதிகட்சி என்ன சொன்னாலும் கேட்க பிரதமரும்,கருணாவும் ஏன் ஆட்சி செய்ய வேண்டும்? ஆக ஆதாரம் இல்லாமல் யாரும் இதை விவகாரமாக்கவில்லை என்பது நிச்சயம்..

அபி அப்பா said...

\\எதிர்கட்சி மட்டும் காரணமெனில் ஏன் பாராளுமன்ற கூட்டுகுழுவுக்கு ஒப்புதல் இல்லை?\\

இதை சொன்னதும் நீங்க தான்...

\\எதிகட்சி என்ன சொன்னாலும் கேட்க பிரதமரும்,கருணாவும் ஏன் ஆட்சி செய்ய வேண்டும்? \\

இதை சொல்வதும் நீங்க தான். என்ன எழவுடா இது... எதிர்கட்சி சொல்வதை கேட்க சொல்றீங்களா? கேட்காதேன்னு சொல்றீங்களா? எதுக்கும் ஒரு டீ சாப்பிட்டு வாங்களேன். நான் வெயிட் பண்றேன்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நான் இந்த விசயத்தில முழுவதுமா உடன்படுகிறேன்.. ராசா மட்டும் காரணமல்ல அது மட்டும் இல்லாம 1.75 லட்சம் கோடி என்பது இழப்பு தானே தவிர ஊழல் அல்ல.. ஆனால் ஊழல் அதில் கண்டீப்பாக பாதி இருக்கும். ஏனெனில் 1.75 லட்சம் கோடியை ராசவிடம் கொடுத்து யாரும் குறுக்கு வழியில் வாங்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஹோட்டலுக்கு போகிறோம் அங்கே சர்வர், பில் போடுபவர்,மேளாளர் நமக்கு தெரிந்தவர்.500 ரூபாய்க்கு சமமான பார்சல் வாங்குகிறோம். சர்வர் நமக்கு 325 ரூபாய்க்கான பில்லை மட்டும் கொடுக்கிறார். நாம் சர்வருக்கு 75 ரூபாய் கொடுக்கிறேன். இங்கே எனக்கு லாபம் ரூபாய் 100. சர்வருக்கு ரூபாய் 75 ஆனால் ஹோட்டலுக்கு நஷ்டம் ரூபாய் 175 ரூபாய். இங்கே ஊழல் அல்லது இழப்பு 175 இதை நடத்த காரணமாக இருந்தவர் ராசா & கோ.

அபி அப்பா said...

\\ஆனால் ஊழல் அதில் கண்டீப்பாக பாதி இருக்கும். \\\

ஆகா இங்கயும் யூகம் தானா பாதி இருக்கும் முக்கால்வாசி இருக்கும் அப்படீன்னு... நான் தான் டீ குடிக்க போவனும்.. என்னால முடியல..

குறை ஒன்றும் இல்லை !!! said...

சரிங்க உங்க வழிக்கே வரேன்..ராசா மீது ஏன் நடவடிக்கை? அவர் சார்ந்தவர்கள்,பினாமிகள் மீது ஏன் நடவடிக்கை? என்ன ஆதாரத்துடன் சிபிஐ நடவடிக்கை எடுத்தது? நேரடியான பதில் சொல்லுங்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

யூகம் தொகையில் மட்டுமே ஊழலில் அல்ல. நிச்சயான கூட்டுக்கொள்ளை நடந்திருக்கிறது.வெறும் யூகம் என ஒதுக்கி விட முடியாத தொகை என்பதாலே ராசா மற்றும் அவர் சார்ந்தவர் மீது நடவடிக்கை....

அபி அப்பா said...

\\சரிங்க உங்க வழிக்கே வரேன்..ராசா மீது ஏன் நடவடிக்கை? அவர் சார்ந்தவர்கள்,பினாமிகள் மீது ஏன் நடவடிக்கை? என்ன ஆதாரத்துடன் சிபிஐ நடவடிக்கை எடுத்தது? நேரடியான பதில் சொல்லுங்கள்.\\

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு, பதவியை ராஜினாமா செய்ய சொல்லு இல்லாட்டி பாராளுமன்றம் நடக்காது என கூக்குரல் விட்டவங்க கீட்டே போய் கேளுங்க இதை. நடவடிக்கை எடுத்தாலும் குத்தம் எடுக்கலைன்னாலும் குத்தமா?

நடவடிக்கை எடுத்தாச்சு. விஷயம் கோர்ட்டுக்கு போயாச்சு. விசாரணை நடக்குது. உண்மை எதுன்னு தெரிய போவுது. பின்னே நீங்க ஏன் தீர்ப்பு சொல்லிகிட்டு இருக்கீங்க. ஆக்சுவலா நீங்க "இதிலே இத்தாலி ராணிக்கும் பங்கு இருக்கு, கூட்டு கொள்ளை நடந்திருக்கு"ன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க. நியாயமா பார்த்தா உங்க கேள்வி இப்படித்தான் இருக்கனும். "இத்தாலி ராணி மேல் ஏன் நடவடிக்கை எடுக்கலை. குறை ஒன்றும் இல்லையாகிய நான் சந்தேகப்படுகின்றேன். உடனே நடவடிக்கை எடு"ன்னு தான் கூப்பாடு போடனும். சும்மா முன்னுக்கு பின் முரணா பேசாதீங்க. யாராவது பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க போங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நடவடிக்கை எடு நடவடிக்கை எடு, பதவியை ராஜினாமா செய்ய சொல்லு இல்லாட்டி பாராளுமன்றம் நடக்காது என கூக்குரல் விட்டவங்க கீட்டே போய் கேளுங்க இதை// அப்போ எந்த வித ஆதாரமும் இல்லாமல் யார் மீது இப்படி நடவடிக்கை எடுக்க சொன்னாலும் சிபிஐ எடுக்குமா? வயசானாலே இபப்டி தான் போல !!!! உங்க தலைவர் மாதிறியே முன்னுக்கு பின் முரணா பேசறீங்க!!!!போங்க போய் தெளிவா பேசக்கூடியவங்கள கூட்டிட்டு வாங்க!!!!! என்னமோ எதிர்கட்சிக்காரன் நாடாளுமன்றத்த முடக்குவேன்னு சொன்னதால தான் நடவடிக்கையாம் மத்தபடி எந்த ஆதாரமும் தேசத்திற்கு ஒரு சேதாரமும் இல்லையாம்... கவுண்டர் சொல்ர மாதிறி அடங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி...

அபி அப்பா said...

\\! உங்க தலைவர் மாதிறியே முன்னுக்கு பின் முரணா பேசறீங்க!!!!போங்க போய் தெளிவா பேசக்கூடியவங்கள கூட்டிட்டு வாங்க!!!!!\\

ரைட்டு ரைட்டு... தம்பி உன் கிட்டே வாதம் செய்ய எனக்கு திராணி இல்லை. ஒத்துக்கறேன்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இப்பதான் தெரியுது ராஜா எவ்வளவு கஷ்டப்பட்டருப்பாருன்னு!...

இதுல ராஜாவுக்கு கிடைச்சது, அந்த முதல் நோட்டாக்கூட இருக்கும்.

சீமாச்சு.. said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. முதன்முதல் சூடான இடுகை 39 பின்னூட்டமெல்லாம் நான் இதுவரைக்கும் பெறாதது..

இந்த வாய்ப்பளித்த நண்பர்களுக்கும் முக்கியமாக ஆண்டிமுத்து இராசா வுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

தேவைப்பட்டால் பார்லிமெண்டின் பொதுக்கணக்குக் குழு முன் நான் ஆஜராகி இந்தப் பதிவை விளக்கவும் தயார்.. மன்மோகன்சிங்குக்குப் பின்னால் நானும் துண்டுபோட்டுக்கொள்கிறேன்..

சீமாச்சு.. said...

"பொங்கட்டுமா அண்ணே” என்று பர்மிஷன் கேட்டுக்கிட்டு..விட்டு விட்டுப் பொங்கி பின்னூட்ட எண்ணிக்கையை ஏற்றிவிட்ட மயிலாடுதுறை மாஃபியா அபிஅப்பாவுக்கு ஸ்பெஷல் நன்றி..

அரசியலில் இவ்வளவு அப்பாவியா நீங்க..?

உலகத்துல எந்த மூலையில யார் கலைஞ்ரின் ஊழலைச் சொல்லி எழுதினாலும் அதை சமாதானம் சொல்லி சாக்குபோக்கு எழுதும் கழகக்கண்மணிகள் தான் கலைஞரின் உண்மையான பலம் !!!


ஆனால்.. உங்களைப் போன்று உணர்ச்சிபூர்வமாக மட்டுமே சிந்தித்து பகுத்தறிவுடன் பேசுவதாக எண்ணி ஊழலை சமாளித்துப் பேசும் கழகக்கண்மணிகள் தான் தமிழ்நாட்டின் சாபம் கூட...
நீங்களெல்லாம் கலைஞர், கழகம் என்ற மாயையை விட்டு விலகிவந்து மக்கள் நலன் மட்டுமே சிந்தித்து நாட்டை உயர்த்தும் நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கும் அப்பாவி குடிமகனாக.. அபிஅப்பாவின் & நட்டுவின் அன்பு சீமாச்சு அண்ணனாக..
என்றென்றும்
சீமாச்சு...

அபி அப்பா said...

அட போங்க அண்ணே! ரொம்ப சிரமப்பட்டு பொங்கினேன். புஸ்ன்னு போச்சே. நான் அடிச்சதை எல்லாம் பார்த்துட்டு "இதோ நிற்பது தன் ராசா" என போட்டதை மாத்திட்டு அதிலே சம்மந்தப்பட்ட அத்தனை பேரையும் கும்பலா போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்:-)))))))))))

@நீங்க எப்போதுமே எங்க அன்பு சீமாச்சு அண்ணாச்சி தான்.

Prakash said...

Part 1:

ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உரு வாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?

1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை

இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.

1995 - ஏலமுறை அறிமுகம்

மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.

1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை

இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.

2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்

டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.

Prakash said...

தலைமைக் கணக்கு அதிகாரியின் வரம்பு

அரசின் கொள்கை முடிவுகளில் CAG/CVC தலையிட உரிமை இல்லை என்று 10-க்கும் மேற்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மத்திய சட்ட அமைச்சகம் 13.8.2010 அன்று தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றம் இப்பிரச்சினையில் இத்தீர்ப்புகளை வசதியாக கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளது.

என்னதான் சொல்கிறது CAG?

இல்லாத ஏலமுறையை 2ஜி உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்காததாலும், ஒருங்கிணைந்த உரிமம், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின் பற்றப்படாததாலும், மற்றும் அனுமதிக்கப்பட்ட அலைக் கற்றைக்கு உபரியாக பயன்படுத்தும் அப்போதைய நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாத தாலும் இராசா காலத்தில் ரூ.1,76,645 கோடி வருவாய் இழப்பு என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கூற்று சரி தானா?

முதலாவதாக, 2001-க்குப் பின்பு ராசா பதவி ஏற்கும் மே 2007 வரை, ஏலமுறை எந்த அமைச்சராலும் பின் பற்றப் படவில்லை. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமைக் கட்டணமாக ரூ.1658 கோடி என்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.8.2007இல் கூட டிராயின் வழிகாட்டுதலிலும் 2ஜி-க்கு ஏலமுறை தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (In the 2G bands (800 MHz, 900MHz, 1800MHz, allocation through auction may not be possible.)

இந்த அடிப்படையில்தான் 2008-லும் 122 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது பற்றிய சர்ச்சை மற்றும் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிறகும் இந்தக் கொள்கைகளில் வழிக்காட்டக் கூடிய TRAI அமைப்பும் 11.5.2010இல் 2ஜி அலைக்கற்றைக்கு ஏலமுறைதேவை யில்லை என்று குறிப்பிட்டுள்ளது. (Spectrum in 800, 900 and 1800 MHz bands should not subject to Auction).

தவிரவும், 3ழு சேவைக்கான 800, 900, 1800 MHz. MHz ஏலக்கற்றைகளுக்கு, ஏல முறையை பரிந்துரைத்து உள்ளது. இப்போதைய அமைச்சர் கபில்சிபல் அவர்களும் ஏலமுறை சிறந்த வழியல்ல (­Auctions may not be the best way to award spoectrum) என்றும்,இது கட்டண உயர்விற்கே வழி வகுக்கும் என்றும், மீண்டும் 1995 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த ஏலமுறையை சுட்டிக் காட்டிக் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை. எனவே வருவாய் இழப்பிற்கு இராசா அவர்கள்தான் காரணம் என்பது நியாயமற்றது.

தவறான தகவல் அடிப்படையில் சில நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதாக CAG -யால் தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட உரிமம் பெறும் நிறுவனங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாமே தவிர, அரசிற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு இடமில்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.1658/- கோடியில் மாற்றம், ஏதுமில்லாதபோது வருவாய் இழப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே, ஏலமின்றி 2ஜி உரிமங்கள் கொடுக்கப்பட்டதால் ரூ.1,02498/- கோடி வருவாய் இழப்பு என்பது ஒரு மாயத் தோற்றமே!

Shobha said...

நான் அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கறேன் . இந்த சப்ஜெக்ட் பத்திப் பேசினால் நான் ரொம்ப குழம்பிவிடுவேன் அதுனாலே நோ கமெண்ட்ஸ். அபிஅப்பா பொங்கின பொங்கலுக்கு இந்த வர்ஷம் மாயவரத்துல யாருமே பொங்கல் வைக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன் .
ஷோபா

thaiman said...

"அபி அப்பா " போன்ற "உண்மை" தொண்டன் இருக்கும் வரை "தமிழ் இன தலைவர்" கலைஞர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இருபார்..ஆனால் நாம் தான் இருக்க மாட்டோம்!!!

அய்யா சீமாச்சு இது மாதரி படங்கள் தேடி பிடிபதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது....

My 2 cents
ஆண்டிமுத்து ராஜா பணம் வாங்கும் பொது சரியாய் எண்ணி பார்த்து வங்கினாரனு ஒரு சின்ன சந்தேகம்!!!!

முகமூடி said...

அபி அப்பா, ரொம்ப தெளிவா எல்லாருக்கும் புரியும்படி எழுதி இருக்கீங்க. ஆனா என்னவோ தெரியல முரசொலி படிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்.

நாட்டுக்கு ஏற்பட்டத பத்தி பேசும்போது அது வருவாய் இழப்பு. ராசா அண்டு கோ செஞ்சது பத்தி பேசும்போது ஊழல். சிஏஜி முன்னத பத்தி மட்டும்தான் பேச முடியுங்கிறதால அந்த டெர்ம் மட்டும்தான் உபயோகிக்க முடியும். ஆனா நாம பேசுறது அத இல்லீங்களே.

ஒரே ஒரு சின்ன கேள்வி. ராசா, கருணாநிதி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள், மற்றும் குடும்பத்தார், காங்கிரஸ் மேலிடம் இவர்கள் யாரும் பெரிய அளவில் இந்த ஸ்பெக்ட்ரம் மேட்டரில் காசு பார்க்கவில்லை என்கிறீர்களா? எவ்வளவு என்பதை விடுங்க, டுபாக்கூர் பினாமி கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்து கணிசமான அளவு ஊழல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறீர்களா? ஆதாரம் இல்லை என்றால் நம்பமாட்டேன் என்றால் அதே அளவுகோளின்படி ஜெயலலிதா அண்ட் கோவும் ஊழல்வாதிகள் இல்லைதானே? அவர்களை மட்டும் ஊழல் பேர்வழிகள் என்று பிரச்சாரம் செய்கிறீர்களே, அது ஏன்? (முக்கியமாக டான்சி கேஸ் - இதற்கும் ஸ்பெக்ட்ரத்துக்கும் ஒரு நூலிழைதான் வேறுபாடு. அரசுக்கு வருவாய் இழப்பு என்ற அடிப்படை என்னவோ அதேதான்)

என்ன இருந்தாலும் தலைவர் தலைவர்தான். விஞ்ஞான முறையில் ஊழல் என்பதற்கு உதாரணம் காட்டக்கூடிய அளவு தகுதியுடைய ஒரே ஆள்னா அது சும்மாவா?

இது சும்மா ஜெனரல் நாலேட்ஜ் கொஸ்டீன் : நீங்க கழக பொறுப்பு எதிலாவது இருக்கீங்களா? இல்ல வெறுமே தொண்டர்தானா?

அரசூரான் said...

என் குத்தமா? உன் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல?
தானாடா விட்டாலும் தன் தசையாடும்ன்னு சொல்லுவாங்களே அதுதான் எனக்கு ஞாபகம் வருது.
தேனையும் குடிச்சிட்டு, புறங்கையையும் நக்கிட்டு, கடைசியா ராஜினாமா பண்ணி எல்லோர் நெற்றியிலும் நாமம் போட்டாகி விட்டது... எல்லோரும் இடத்தை காலி பண்ணுங்கப்பா.

சீமாச்சு.. said...

//முகமூடி said...
அபி அப்பா, ரொம்ப தெளிவாஎல்லாருக்கும் புரியும்படி எழுதி இருக்கீங்க. ஆனா என்னவோ தெரியல முரசொலி படிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங். //
முகமூடி அண்ணா.. வாங்க.. நான் உங்க இடுகைகளின் தீவிர ரசிகன்.. அப்பப்போ உங்க பக்கம் வந்து ஏமாந்துட்டு வருவேன்..

ஊழலுக்கும் வருவாய் இழப்புக்கும் நீங்க கொடுத்த விளக்கம் அருமை.. நீங்கள் என் இடுகையெல்லாம் படிப்பதே எனக்குப் பெருமை..

நம்ம ஊரு பக்கம் (மயிலாடுதுறை) வந்தால் நம்ம ஸ்கூலைக் கொஞ்சம் எட்டிப் பாருங்கண்ணா..

சீமாச்சு.. said...

@அபிஅப்பா..

அபிஅப்பா...

அபிஅப்பா..
அபிஅப்பா....

எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்... முகமூடியண்ணா கேள்விக்கு பதில் சொல்ல உடனே ஓடிவாருங்க...

சீமாச்சு.. said...

@அரசூரான்...

தீர்வு கெடைக்காமலா போயிரும்.... நம்புவோம்.. நம்பிக்கைதான் வாழ்க்கையே...

Anonymous said...

Appreaciate for the work you have put into the post, this helps clear up some questions I had.

Anonymous said...

@Abhi Appa:I accept ur point on Raja.Then why is he serving jail sentence?.If he is so sure then why didnt he fight for his justice and what about his friend Mrs Kanimozhi(So called Chankya of TN politics's daughter),why is she serving jail sentence?.do u think we are fools and you want to make us fools.Nothing will work except they serving sentence and this list will def expand with Dayanidhi,Chiddu,.....and finally land Mainos in jail or atleast their name of Lady of sacrifice wud be fizzled out.