Sunday, February 19, 2006

12. உங்க கிட்ட பணம் கொடுத்தா... என்ன செய்வீங்க...?

நாமெல்லாம் ஓரளவுக்குப் படிச்சவங்க தானே...
சரி. உங்க கிட்ட யாரோ ஒரு நண்பர் வந்து..."ஏலே.. குப்புசாமி..இந்தா ஒரு ஐயாயிரம் ரூபா பணம் கொஞ்சம் இருக்கு.. வெச்சுக்கோ... அப்புறம் நான் கேக்கும்போது மறக்காமல் திருப்பிக் கொடு.." ன்னு பணம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?
வாங்கி வெச்சுப்போம் தானே? எங்க..? நம்ம பர்ஸுல தானே..
ஏன் கொடுக்கிறார்.. ஏதோ ஒரு காரணம்.. நம்மகிட்ட இருந்தா ஒர் பத்திரமா இருக்கும்-னு தானே..

என்னை மாதிரி கொஞ்சம் முன் ஜாக்கிரதையுள்ள ஆளுங்க.."அண்ணே.. கொடுக்கிறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை... திருப்பிக் கேக்குறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை.. நான் கொஞ்சம் செலவாளி... சமயத்தில் செலவ்ழிஞ்சுரும்... கேக்கிறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு நாள் டயம் கொடுங்க... எடுத்து ரெடியா வெச்சிருக்கேன்.." சொல்லுவோம்... தப்பில்லை...
'சமயத்தில் என்ன செலவழியறது.... உடனே அடைக்க வேண்டிய கடன்களை அடைப்போம் தானே...

எதுவுமே தப்பில்லை...
சரி கொடுத்த அன்பரே.. ஒரு நாள் ராத்திரி 11 மணிக்கு கதவைத் தட்டி.."குப்புசாமீ..அந்தப் பணம்.. உடனே..தேவைப் படுது..அவசரமா..கம்பன் எக்ஸ்ப்ரஸ்..ல ஊருக்குப் போறேன்" -னு சொல்றாருன்னு வெச்சுக்கோங்களேன்...
என்ன சொல்வோம்...
"என்ன்ய்...யா.. இது... இப்படிப் பண்றே....கொஞ்சம் முன்னாடி சொல்லப் ப்டாதா...? நாளைக்கு பாங்க் லீவு ஆச்சே....இப்படிப் படுத்தறே..." சலிச்சுக்குவோமா..இல்லியா..?

இன்னும் கொஞ்சம்.. கூடுதலா.."உன்னையெல்லாம்..யாருய்யா..எங்கிட்ட கொடுக்கச் சொன்னது..? நான்...கேட்டேனா உன்னை..? "

சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் எரிச்ச்லும் சேருமில்லயா..? "இதுக்குத் தான் வாங்காதீங்க.. இது வேலீல போற ஓணானை..மடீல விட்டுக்கற கதை...ன்னு சொன்னேன்.. " அந்தப் பணத்தில் பட்டுப்புடவையோ.. அல்லது வீட்டுச்சாமானோ.. வாங்கிக்கிட்ட மனைவியும் ..சொல்வாங்க தானே..

கொடுக்க முடியாதுன்னு இல்லை... நம்மளை பழி சொல்லிடக்கூடாதுன்னு.. ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி... அவ்வளவுதான்...

1996-ல் எனக்கு இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டது...

மயிலாடுதுறையில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தேன்.. கொஞ்சம் பெரிய வீடு... 2 க்ரெள்ண்ட் நிலம்.. அதில் நடுநாயகமாக 2400 சதுர அடியில் வீடு..சுற்றிலும் தோட்டம்.. பெரிய காம்பவுண்ட் சுவருடன்... பெரியதாக....

உடனே குடிபுகும் எண்ணம் இல்லையாதலால்... வீட்டைஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கும் விட்டாயிற்று...

வீட்டு வாடகையை.. எப்படி.. பெறுவது...? அதற்கும் ஒரு தேவையில்லாவிடினும்... அதை ஒரு நண்பரிடம்.. (நீண்ட நாள் நண்பரெல்லாம் இல்லை.. சமீபத்திய அறிமுகம் தான்.. ஆனாலும் நேர்மையானவரென்று பட்டது.... ) சரி வாடகையை...மூர்த்தி சாரிடம் கொடுத்துடுங்க என்று.. சொல்லிவிட்டேன்...அவரும் நான் வாங்கி வைத்திருக்கிறேன்.. என்று உத்திரவாதம் தந்துவிட்டார்...

பணத்துக்கென்று உடனடி தேவையொன்றுமில்லை... நானும் அமெரிக்கா வந்துவிட்டேன்..வாழ்க்கை வழக்கமான பாதையில்...

15 மாதம் கழித்து..திரும்பி மயிலாடுதுறை சென்றேன்.... எல்லோரையும் பார்த்து விட்டு....வீட்டையும் போய்ப் பார்த்துவிட்டு.. குடியிருந்தவரிடம்.. 'என்னங்க.. வீடு நல்லாருக்கிறதா...' என்று சம்பிரதாயமாக விசாரித்தேன்..
'எல்லாம் வசதியாக இருக்கு... மாசாமாசம் வாடகையை மூர்த்தி சார் கிட்ட கொடுத்துக்கிட்டு வர்றோம்..வாங்கிகிட்டீங்க்ளா..?" -ன்னு கேட்டார்..

'இல்லங்க.... இன்னும் சாரைப் பார்க்கல.. பார்த்து வாங்கிக்கிறேன்... ஒண்ணும் ப்ரச்சினையில்லை..."

அன்றுதான் ..விமானத்தில் வந்திருந்ததால்.. ஜெட் லாக் வேறு.. தூக்கம் வேறு வரவில்லை..யாரைப் பார்க்கலாம்.. பொழுது போகும் என்று டி.வி.எஸ்..50 எடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் போது.. மூர்த்தி சார்.. பார்த்து விட்டார்...
"எப்ப வந்தீங்க தம்பி...வாங்களேன்..வீட்டுக்கு.."
பிடிவாதமாக..வீட்டுக்குள்..அழைத்துப் போய்விட்டார்...
எல்லா நலன்களும் விசாரித்த பிறகு... வீட்டு வாடகையைப் பற்றிப் பேச்சு வந்தது..
"அதெல்லாம் ஒண்ணும் அவசரத் தேவையில்லை..ஸார்.. உங்களால் முடிஞ்ச போது குடுங்க... நான் ஒரு மாசம் இங்கதான் இருக்கப் போறேன்.."

"இல்ல தம்பி... டிக்கெட் எல்லாம்.. எடுத்து வந்திருப்பீங்க.. இங்கேயும் உங்களுக்குப் பணம் தேவைப்படலாம்...வாங்கிக்குங்க...நீங்க வர்றீங்க ன்னு கேள்விப் பட்டு பேங்க் லாக்கரிலேருந்து எடுத்து வெச்சேன்..."

உள்ளே.. திரும்பி.. மனைவியிடம்.."தரணீ.. தம்பி பையை எடுத்து வா..."

உள்ளிருந்து ஒரு மஞ்சள் கலர் சங்கம் சில்க் ஹவுஸ் பை வந்தது..
'புடிங்க் தம்பி.. உங்க வாடகைப்பணம்.."

உள்ளே திறந்து பார்த்தேன்... ஒவ்வொரு மாத வாடகையும் ..குடித்தனக்காரர் தந்தது.. தனித்தனியாக.. ரப்பர் பேண்ட் போடப்பட்டிருந்தது....
அதில்..எந்த மாதத்திற்கான வாடகை.. எந்த்த் தேதியில் தந்திருந்தார்.. என்ற குறிப்பும்.. எழுதிய பேப்பர் துண்டு ஒவ்வொரு ரப்பர் பேண்டிலும் செருகியிருந்தது....

ஆச்சரியமாக இருந்தது....

"ஏன் சார்.. இதை நீங்கள்.. உங்க தேவைகளுக்குப் பயன் படுத்தியிருக்கலாமே... நான் ஒண்ணும் சொல்லியிருக்கமாட்டேனே..?"

"நமக்கு எதுக்குத் தம்பி உங்க பணம்....ஆண்டவன் நமக்கு நெறயக் கொடுத்திருக்கான்....பத்திரமா... கொடுக்கணுமேன்னு தான் பேங்க்ல...லாக்கர் ல வெச்சிருந்தேன்...."

இந்த மாதிரி ஒரு இருபது பைகள்.. அவர் லாக்கரில் எப்பொழுதும் இருக்கிறது.. சமயங்களில்.. . கூடவும்.. இருக்கும்.. எல்லாம்.. மற்றவர் பணம்... அவர் அதைத் தொடுவதில்லை.... எடுத்து தன் பேங்க் அக்கவுண்டிலும்போடுவதில்லை...

வாங்கி வைத்திருந்தால்.. எப்ப கேட்டாலும் கிடைக்கும்.. நீங்கள் கொடுத்த அதே நோட்டு.... அதே நம்பர்களுடன்...

இதைப் போல் நிறைய அதிசயங்க்ள் அவரிடம் உண்டு....
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை... ஏதாவது கேட்டால்..
"ஆண்டவன் நமக்கு..நெறய கொடுத்திருக்கான் தம்பி...."

சபலமேயிருந்ததில்லை.. அவரிடம்....

இத்தனைக்கும் அவர் .. குடும்பச் சூழ்நிலைகளால்.. அதிகம் படித்ததில்லை.... ..

9 comments:

சீமாச்சு.. said...

test comment...

Boston Bala said...

டெஸ்ட் (காமெண்ட்டில்) உடனே செஞ்சுடறீங்களே ;-))

Vassan said...

சபலமேயிருந்ததில்லை.. அவரிடம்....

இருந்ததில்லையா.. இப்ப இல்லையா அவர்...

இதே மயிலாடுதுறையில் இருக்கற ஒரு நண்பனுக்கு உதவ நூறாயிரம் ரூபாய்க்களுக்கு மேலாக கடனை கொடுத்தார், சிங்கையில் வாழும் என் மச்சினன் ஒருவர். ( உங்கள் தெரு முத்துராமனின் மாமா மகன்) . வருடங்கள் 5/6 ஆகியும், அம்மா மண்டபத்தில் கரைத்து விட்டது போல ஆகிவிட்டதாம் பணம் ;)

சீமாச்சு.. said...

அன்பின் பாஸ்டன் பாலா..
//டெஸ்ட் (காமெண்ட்டில்) உடனே செஞ்சுடறீங்களே ;-))


ஹி..ஹி...ஒரு நாள் போஸ்ட்..போட்டுட்டு..ஆசையோல ஒரு 1 நாள் கழிச்சு வந்து பாத்தா.. ஒரு கமெண்ட் கூட இல்ல.. என்னடாது.. நாம எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. யாருமே.. கமெண்ட் போடலியேன்னு பாத்தா அது ப்ளாக்கர் ப்ரச்சினை.. கமெண்ட் போட விட மாட்டேங்குது..அதனால தான் இந்த சோதனையெல்லாம்... எனக்கு ப்ளாக்கர் புதுசு.. ப்ளாக்கருக்கும் நான் புதுசு.. கொஞ்சம் பழகுற வரைக்கும்...

நன்றி.. உங்கள் வருகைக்கு...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

சீமாச்சு.. said...

அன்பின் சில்வியா..
//A Royal Salute to Mr. Murthy!!!

அவரிடம் நிச்சயமாகச் சொல்கிறேன்.. இப்படியும் நல்லவர்களாக எனக்கு நண்பர்கள் தந்திருக்கிறார்கள்...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

சீமாச்சு.. said...

அன்பின் வாசன்..
நீங்க எனக்கு ஒரு ஸ்பெஷல் தான்..என் பேரோட.. என் ஊரையும் சொந்தம் கொண்டாடுபவராச்சே....

//இருந்ததில்லையா.. இப்ப இல்லையா அவர்...

இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குதோ... இப்பவும் இருக்கிறார். அதே மயிலாடுதுறையில் தான்..இப்பத்தான் சமீபத்தில் அவருக்கு "அறுபதாம் கல்யாண்ம்" நடந்தது.. ஆண்டவன் அருளில் அவர் இன்னும் நிறைய ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதே என் ப்ரார்த்தனையெல்லாம்..

உங்கள் மச்சினர் அனுபவம் மாதிரி எனக்கும் நடந்ததுண்டு.. என்ன ..அதெல்லாம் வெளியில் சொல்லிக்கிறதில்லை...என்ன பண்றது. அப்படியும் சில பேர்..
அடிக்கடி வாங்க.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Paavai said...

thollulagil nallar oruvar ularel - thaan nyabagam varudu

லதா said...

//..."ஏலே.. குப்புசாமி..இந்தா ஒரு ஐயாயிரம் ரூபா பணம் கொஞ்சம் இருக்கு.. வெச்சுக்கோ... அப்புறம் நான் கேக்கும்போது மறக்காமல் திருப்பிக் கொடு.." ன்னு பணம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க? //

என் பெயர் குப்புசாமி இல்லை என்று சொல்லிவிடுவேன்;-)

சீமாச்சு.. said...

அன்பின் லதா,
//என் பெயர் குப்புசாமி இல்லை என்று சொல்லிவிடுவேன்;-)
//

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.. ஆனாலும் ரொம்ப நேர்மையானவர் போலருக்கு..

"ஆமாம் நான் தான் குப்புசாமி.. ரொம்ப நன்றி மாமோவ்.." வாங்கி பையில் போட்டுக்கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...