Monday, July 10, 2006

22. ஏன் யாருமே இதைப்பத்தி எழுதலை ?

ஆமா.. யாராவது தமிழ் வலைப்பதிவர்கள் இதைப்பத்தி எழுதியிருப்பாங்க-ன்னு காலையிலேருந்து காத்திருந்தேன்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை அனுப்பப்பட்ட GSLV F2 தோல்வியடைந்துவிட்டது. அதற்கு முதல் நாள் அனுப்பப்பட்ட அக்னி-3ம் தோல்விதான்.

GSLV தோல்வியால் மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டம்.

அடுத்தமுறை நாம் மறுபடியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை தவறாமல் விஞ்ஞானிகள் அயராது முயலவேண்டும்.. வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

oOo

இதெல்லாம் பார்த்தால்.. எங்க கம்பியூட்டர் தொழில்ல இது போன்ற பெரிய பாதிப்பெல்லாம் கிடையாது. சமயத்துல ஒரு பெரிய project implementation தோல்வியடைந்து பெரிய நஷ்டமெல்லாம் வருவதுண்டு.. இருந்தாலும் பெரிய நஷ்டங்கள் 5 வினாடி 15 வினாடியில் நடப்பதென்பத்ல்லாம் எங்கள் தொழிலில் கிடையாது..

ப்ரொக்ராம் தப்பானா.. சர்வர் வெடித்து சிதறும் என்பது மாதிரி விபரீதங்களிருந்தால்.. இப்ப அங்கங்கே நிமிடத்துக்கு நாலு வெடிச்சிக்கிட்டிருக்கும். நல்ல வேளை அப்படியெல்லாம் இல்லை.. நாம பொழச்சோம்..

6 comments:

Boston Bala said...

I presume these folks also wrote:
அக்னி ஏவுகணை தோல்வி

துளசி கோபால் said...

ஏன் எழுதலையா?

இன்னும் அதிர்ச்சியிலே இருந்து மீளலை. துக்கத்துலே இருக்கோம்.

கிவியன் said...

துளசி சொல்லவது மாதிரி அதிர்ச்சிதான். இதனை எழுத மனம் வரவில்லை.

//நம்பிக்கை தவறாமல் விஞ்ஞானிகள் அயராது முயலவேண்டும்.. வெற்றி இலக்கை அடைய வேண்டும்.//

இதுதாங்க முக்கியம். அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்த தோல்விகளை கடந்துதுதான் வந்திருக்கின்றன. இதையும் அரசியலாக்காமல் இருந்தால் சரி.

VSK said...

இல்லீங்களே!
நக்கீரன்னு ஒருத்தர் காலையிலேயே எழுதி பதிவு போட்டுட்டாரே!

aathirai said...

சீமாச்சு,
மார்ஸ் போலார் மிஷன் இரண்டு முறை பெய்லானதுக்கு
மென்பொருள் தான் காரணம்

நாகை சிவா said...

சில பெயர் எழுதி உள்ளார்கள். மும்பை குண்டு வெடிப்பால் இது சற்று பின் தங்கி விட்டது என்பது உண்மை.
மலை நாடன் பதிவில் இதைக் குறித்து ஸ்விஸ் நாட்டின் கேலிச் சித்திரம் அதை தொடர்ந்து சில விவாதங்களும் நடைப்பெற்றது.
மீண்டும் வெற்றி பெறுவோம்.