Friday, July 21, 2006

24. இதை இப்படித்தான் பார்ககணுமுன்னு சட்டமா இருக்கு?

ச்சின்ன வயதில் பக்கத்து வீடு அல்லது எதிர் வீட்டில் யாருக்காவது அயல் நாட்டிலிருந்து தபால் வந்தால் அந்தத தபால் வந்த கவரும் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டாம்பும் சமயங்களில் அதில் கட்டி வந்த நைலான் கயிறும் அதி முக்கியத்துவம் பெறும்.

அந்த ஸ்டாம்பை யார் பெறுவது என்று பெரிய யுத்தமே சமயங்களில் நடக்கும். இந்த சண்டைகளில் அந்த தபாலில் வந்த செய்தியோ அல்லது பொருளோ முக்கியத்துவம் இழக்கும்.

oOo

சில வீடுகளில் வாங்கி வரப்பட்ட விலையுயர்ந்த புடவையை விட அது சுற்றி வந்த ப்ளாஸ்டிக் பை மிக முக்கியத்துவம் பெறும். அந்தப் பையை மறுநாள் யார் பள்ளிக்கு எடுத்துச் செல்வது என்று குழந்தைகளிடையே ஒரு பெரிய சண்டை மண்டை உடையும். இதற்காகவே எனக்குத் தெரிந்தவர்களின் வீட்டில் ஏதாவது விலையுயர்ந்த ஜவுளியோ... நகையோ வாங்கினால் இன்னொரு ப்ளாஸ்டிக் பை கொடுய்யா-ன்னு கேட்டு வாங்குவாங்க. இந்த பெரிய சமயோசிதத்தால் ஒரு பானிப்பட் யுத்தம் தவிர்க்கப்படும்.

oOo

சமயங்களில்.. சில வீடுகளில் LKG UKG படிக்கும் பிள்ளைகள் .. அப்பத்தான் ஆங்கிலம் கற்று மழலை ஆங்கிலம் பேசும் பிள்ளைகள் சமயத்தில் ஆங்கிலத்தில்.. Sundar Uncle met with an accident.. என்று சொல்லும் போது .."ஆஹா .. என் புள்ளை இங்கிலீஷுல என்ன என்னவோ பெருசாச் சொல்லுதே.." என்று சிலாகிக்கும் பொது.. அந்தச் செய்தியில் உள்ள விபரீதம் உரைக்காமலே போகிறது.

oOo

கம்ப்யூட்டர் கன்சல்ட்டண்ட்டுகளான நாங்கள் சமயத்தில் க்ளையண்ட் இடங்களுக்கு இது போல கருத்தரங்கங்களுக்குச் செல்வதுண்டு. வாடிக்கையாளரின் குறைகளைக் கேட்டு அதற்கு வழிவகை செய்யவேண்டிய தீர்வுகளை தயார் செய்து தர ஒப்பந்தப் புள்ளி (contract or proposal) செய்து தர வேண்டியது எங்கள் கடமை.. வாடிக்கையாளரின் பிரதிநிதி அவர்கள் சிஸ்டங்களில் தற்போது உள்ள குறைகளைப் பட்டியலிட பட்டியலிட எங்கள் புன்னகை (மனதிற்குள்) சில சமயம் வெளியிலும் விரியும். ஒவ்வொரு குறையும் எங்களுக்கு சில நூறு ஆயிரம் டாலர்கள் வியாபாரம்.. வாடிக்கையாளருக்கும் அது ஒரு சோகம் ஒர் செலவு தான்.. எங்களுக்கு அது ஒரு வியாபாரமாச்சே...

oOo

John Hopkins University வளாகத்தில்.. அமைச்சர் அன்புமணி ஆற்றிய உரையும் இப்படித்தான் ஒரு க்ளையண்ட் பிரதிநிதி கன்சல்டண்டுகளுக்கெதிரே ஆற்றிய உரை தான். இந்தியாவில் நாம் நிர்ணயிக்கத் திட்டமிட்டிருக்கிற, ஒவ்வொன்றும் 250 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படப்போகிற நான்கு பொதுமக்கள் சுகாதாரம் (public health institutes) நிலையங்களுக்கு (மொத்த திட்ட மதிப்ப்ய் 1000 கோடி ரூபாய்) john Hopkins University யின் பங்கு பற்றி அன்புமணி ஆற்றிய உரை இது. அங்கு இருந்த "அயல் நாட்டு அறிஞர்கள்" புன்னகையிலும் மகிழ்ச்சியிலும் உள்ள அர்த்தத்துக்கு காரணமாக மேலே சொன்ன பத்தியைப் படியுங்கள்...

அந்த உரையில் இந்தியாவின் பிரச்ச்சினைகளாக அவர் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் "அம்மாவுக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் .. அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் வேண்டும்.. இந்த வருட இறுதியில் எனக்கு 5000 ரூபாய்க்கு செக் வரவேண்டியிருக்கிறது" ரகம்.

ஒவ்வொரு புள்ளி விவரமும் உண்மையாகவே 'பகீர்' ரகம். அந்த வீடியோவை ஒரு மணி நேரம் பார்த்த போது எனக்கு நமது நாட்டின் தற்போதைய தேவையை நினைத்து கவலையாக இருந்தது.. ஒரு பெருமூச்சு தான் வந்தது..

சில பேருக்கு அவர் பேசிய ஆங்கிலமும்.. அவர் மொழிப்புலமையும் ..அவர் பார்க்காமலேயே சொன்ன புள்ளிவிவரங்களும் பெருமையாக இருக்கின்றன.

இங்கு நான் அமைச்சர் அன்புமணியைக் குறை கூறவில்லை.. தபால் அனுப்பியவர் சரியாகத்தான் அனுப்பினார்.. நாம் தான் அதில் ஒட்டியிருக்கிற ஸ்டாம்புக்கும் கட்டி வந்த ப்ளாஸ்டிக் கயிறுக்கும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்...

சில பேருக்கு ப்ளாஸ்டிக் பை முக்கியம்.. சிலருக்கு அதில் வந்த பொருள் முக்கியம்..

சிலருக்கு குழந்தை பேசும் ஆங்கிலம் பெருமை.. சிலருக்கு.. அது சொன்ன Sundar Uncle met with an accident ல் சொல்லப்பட்ட சுந்தர் மாமாவின் உடல் நிலை எப்படியிருக்கிறதோ என்ற கவலை முக்கியம். நான் இரண்டாவது ரகம் தான்.. நம் நாட்டில் இது போன்ற விஷயங்களில் பலர் எப்பொழுதுமே முதல் ரகமாகவே இருக்கிறார்கள்...

இதை இப்படித்தான் பார்க்கணுமுன்னு சட்டமா இருக்கு?

8 comments:

Anonymous said...

//நாம் தான் அதில் ஒட்டியிருக்கிற ஸ்டாம்புக்கும் கட்டி வந்த ப்ளாஸ்டிக் கயிறுக்கும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்...//


பட்டிகாட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி!

ஜெ. ராம்கி said...

:-) Interesting narration.

Anonymous said...

i was just thinking again and again on this article overnight.
excellent !!!

Anonymous said...

Sir, I feel you are blowing up Dr.Anbumani's issue for no reason.
At the outset,he spoke in English-in a medical univ-for elite people.
I watched the Hopkins video.
It shows his prowess in the language,let alone the content he spoke .Again, it does matter to a person in remote village of Mayiladuthirai for the minister spoke in English.
Again, unlike other Indian federal ministers-who are uneducated or cant speak in English for nuts in international symposiums,Dr.Ramadoss does stand out !

Yes,i agree he spoke about AIDS epidemic in India.But look at the content that he had put in succinctly across a wide group of people!
Again,apart from AIDS, he did mention about geriatric clinics in ou country which is a welcome move.
I guess you would move forward with other posts..
I didnt mean to offend you,yet its my 2 cents with regards to this issue !Thanks !

சீமாச்சு.. said...

அன்பின் பிரபு,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
அமைச்சர் அன்புமணி ஆங்கிலத்தில் மிக அழகாக பேசினார் என்பதை எந்த விதத் தயக்கமும் இன்றி சென்ற பதிவிலேயே ஒத்துக் கொண்டு விட்டேன். அந்த வீடியோவையும் அவர் தனியாக டாக்டர் மதுரம் அவர்களுக்குத் தந்த பேட்டியின் வீடியோவையும் 90 நிமிடங்கள் செலவழித்து நிதானமாக ஃபாஸ்ட் பார்வர்டு செய்யாமல் நள்ளிரவு தாண்டியும் பார்த்து விட்டேன்.

இப்பொழுதைய ப்ரச்சினை அன்புமணியின் தகுதியோ அல்லது அவரின் ஆங்கிலப்புலமையோ இல்லை.
நான் அதை விட்டு வந்து ஒரு முழு நாள் ஆகிவிட்டது.

அடுத்த பதிவு இதைப் பற்றியானதாக இருக்காது. உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு

நாகை சிவா said...

சாதிக்க வேண்டியது, நிறைய உள்ளது. அதை விட்டுவிட்டு தேவையில்லாத தனி மனித எகோ பிரச்சனையில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கின்றார்கள். என்னத்த சொல்ல.

-L-L-D-a-s-u said...

Good Post

Muthu said...

சீமாச்சு டியர்,

உங்க சிறுதாவூருக்கான காமெண்ட் இது (அங்க தலைப்பு நீங்க பெருசா வைச்சதனால பிளாக்கர் எடுக்கறதில்ல)..


" கருணாநிதி பங்களா ஓனர் பெயரை சொல்றது பெரிய விஷயம் இல்லை.

அப்புறம் அவர் முன்னாடி வந்து வயித்திலும் வாயிலும் அடிச்சிகிட்டு அழுவறதை யார் தாங்கறது? நமக்கு யாரும் அடிக்காமயெ தனிமனித தாக்குதல், பழிவாங்குதல் என்றெல்லாம் அழுவது புதுசா என்ன"