Saturday, July 08, 2006

20. வியக்க வைக்கும் குழந்தைகள்..

பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.. சரி இன்னிக்கு ஒரு குட்டி பதிவு போடலாம்-னு தான்..

சமீபத்தில் என்னை வியக்க வைத்த் இரண்டு குழந்தைகள்.

0Oo

நியூ ஜெர்சியில் வசிக்கும் என் நண்பரின் மகன் ஐந்து வயது ஸ்ரீகாந்த். பிறக்கும் போதே ஒரு கையில் கம்ப்யூட்டர் கீ போர்டும் இன்னொரு கையில் மெளசும் வைத்துக் கொண்டு பிறந்தவன்...

மாலையில் பள்ளி விட்டு திரும்பியவன் புஸ்தக மூட்டையை (நாங்க அப்படித்தான் ச்சின்ன வயசில் சொல்லுவோம்) விசிறி எறிந்து விட்டு விளையாடப் போய்விட்டான்.

மாலை 7 மணி....

"ஸ்ரீகாந்த்.. புத்தகப்பையை எங்க வெச்சே?" , அம்மா

"தெரியாதும்மா.. இங்க தான் எங்கேயோ வெச்சேன்.."

"அதை முதல்ல தேடி எடுத்துட்டு மத்த வேலையைப் பாரு.."

அப்புறம் மெளனம்..

பையன் மும்முரமாக கம்ப்யூட்டரில் ..

தேடாமல் என்ன செய்கிறான் என்று கோபத்துடன் போய்ப்பார்த்த அம்மாவுக்கு ஆச்சரியமும் சிரிப்பும்.

பையன் www.google.com தளத்திற்குச் சென்று Where is my school bag என்று தேடிக் கொண்டிருந்தான்..

!!!!!!!

0O0

கண்ணீர் விட்டுக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த என் மனைவியைப் பார்த்து என் மூன்று வயது இளைய மகள் (சூர்யா) கண் கலங்கி அனுதாபத்துடன் கேட்ட கேள்வி.

"Is Vengayam hurting your feelings mommy?"

oOo

3 comments:

Sivabalan said...

//"Is Vengayam hurting your feelings mommy?" //

இது நல்லாயிருக்குங்க...


இப்ப குழந்தைகள் எல்லாம் அப்படிதான்... நம்ம வீட்டிலும் இதே கதைதான்.

நன்றி.

ramachandranusha(உஷா) said...

ரெண்டுமே அழகு. அவ்வப்பொழுது குட்டிகள் உதிர்க்கும் மழலைகளை எடுத்துப் போடுங்க.

நாகை சிவா said...

மறுபடியும் வந்தாச்சா. மிக்க மகிழ்ச்சி. மயிலை சிவா அவர்களின் பதிவில் தான் உங்க பின்னூட்டத்தை பார்த்து வந்தேன்.

//பையன் www.google.com தளத்திற்குச் சென்று Where is my school bag என்று தேடிக் கொண்டிருந்தான்..//
மனம் விட்டு சிரித்தேன். ;)))