Tuesday, July 25, 2006
26A. நம்ம நாட்டுல இதக கண்டுபிடிக்கிறது கஷ்டமா?
இன்றைக்கு இரண்டு செய்திகள் என் கவனத்தைக் கவர்ந்தன?
செய்தி 1: சிறுதாவூர் பங்களா எனக்குச் சொந்தமானது அல்ல. அதில் நான் வாடகைக்குத் தான் குடியிருந்தேன் - ஜெயலலிதா அறிக்கை.
ஒரு வீடு தன்னுடையது அல்ல என்றும் அதில் தான் வாடகைக்குத் தான் இருந்ததாகவும் கூறும் ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு அது பின்னர் யாருக்குத்தான் சொந்தமானது என்று கூறுவதோ அல்லது தான் எந்ததேதியிலிருந்து எந்த தேதிவரை அங்கு இருந்ததாகவும் அதன் வாடகை எவ்வளவு .. யாரிடம் தரப்பட்டது என்று சொல்ல முடியாதா? அட.. அது அவர் தான் தனிப்படையாக வாடகை தரவில்லையென்றால்.. தனது அந்தரங்க உதவியாளரிடமிருந்தாவது அந்த செய்தியை கேட்டு வாங்கித் தந்திருக்க முடியாதா? அல்லது அந்த விவரங்களையும் சேர்த்து அறிக்கையில் வெளியிட்டால் தான் பொதுமக்களுக்கு செய்தியின் பின் உள்ள நேர்மை தெளிவாகும் என்பது தெரியாதா?
செய்தி 2: சிறுதாவூர் பங்களாவின் உரிமையாளர் யார்? - ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி
தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் மாநிலத்தின் ஒரு உடமையின் உரிமையாளர் யார் என்பதை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனக்குக் கீழ் வரும் பத்திரப்பதிவுத்துறையைக் கேட்டு மக்களுக்குத் தெரிவிக்கக் கூடாதா? யாராவது அந்தச் சொத்துக்கு வரி கட்டித் தானேயிருக்க வேண்டும்? அப்படியென்றால் அது யார் பேரில் உள்ளது? அவர் பெயரில் எவ்வாறு எப்பொழுது பதிவு செய்யப் பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? அதைக் கண்டு பிடித்துச் சொல்லவேண்டியது அரசின் கடமையல்லவா?
அதுவும் இந்தக் கேள்வி முதலமச்சருக்கே முக்கியமான கேள்வியென்றால்.. ஏன் பத்திரப்பதிவுத்துறை மெளனம் சாதிக்கிறது?
ஜெயலலிதாவே தங்கியிருந்து வாடகை தருகிறாறென்றால் அது எவ்வளவு பெரிய சொத்தாக இருக்க வேண்டும்? அதற்கு வாடகை எவ்வளவு பெரிய தொகையாக இருக்க வேண்டும்? அதைப் பெறுபவரோ அல்லது அதன் சொந்தக்காரரின் உறவினர்களோ தமிழகத்திலோ அல்லது செய்தியெட்டும் தொலைவிலோ இருந்தால் ஏன் இன்னும் பத்திரிகைகளுக்கு பதில் சொல்லவில்லை?
இதெல்லாம் நமது நாட்டில் மிகப்பெரிய மர்மங்களா என்ன?
இதுக்கெல்லாம் computerization ஒன்றுதான் ஒரே வழி. அனைத்து உரிமைகளும்.. உடைமைகளும் computerize செய்யப்பட்டு பொதுமக்கள் (அட ..குறைந்த பட்சம் முதலமைச்சரின் அலுவலர்களாவது) எளிதில் அணுகி விவரங்களைக் கண்டுபிடிக்க வழிவகை செய்யப்பட்வேண்டும்.
நடக்கும் என்று நம்புவோம்.
(படம் உதவி: விகடன்)
பி.கு: வாசகர்களின் ஏகோபித்த வேண்டுதல்களின் பேரில் மீள் பதிவு செய்யப் பட்டது. முன்னதை ப்ளாக்கர் சாமி விழுங்கிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
முத்து(தமிழினி) has left a new comment on your post
சீமாச்சு டியர்,
உங்க சிறுதாவூருக்கான காமெண்ட் இது (அங்க தலைப்பு நீங்க பெருசா வைச்சதனால பிளாக்கர் எடுக்கறதில்ல)..
" கருணாநிதி பங்களா ஓனர் பெயரை சொல்றது பெரிய விஷயம் இல்லை.
அப்புறம் அவர் முன்னாடி வந்து வயித்திலும் வாயிலும் அடிச்சிகிட்டு அழுவறதை யார் தாங்கறது? நமக்கு யாரும் அடிக்காமயெ தனிமனித தாக்குதல், பழிவாங்குதல் என்றெல்லாம் அழுவது புதுசா என்ன"
அன்பின் முத்து(தமிழினி),
நீங்கள் சொன்னதன் பேரில் தலைப்பைக் குறுக்கியாகிவிட்டது.
அந்தப் பழைய போஸ்ட் காணவே காணோம்.. காக்கா தூக்கிண்டு போயிடுத்தூஊஊஊஊ...
//அப்புறம் அவர் முன்னாடி வந்து வயித்திலும் வாயிலும் அடிச்சிகிட்டு அழுவறதை யார் தாங்கறது? நமக்கு யாரும் அடிக்காமயெ தனிமனித தாக்குதல், பழிவாங்குதல் என்றெல்லாம் அழுவது புதுசா என்ன"//
நல்லா சொன்னீங்க. இப்பல்லாம் யார் கிட்டேருந்தும் ஒரு ஹானஸ்ட் ரியாக்ஷன் எதிர் பார்க்க முடியறதில்லை.
முன்னாடியெல்லாம் பள்ளிக்கூடத்துல தான் வாத்தியார் அடிக்க கை ஓங்கறதுக்கு முன்னாடி கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ஒரு அலறல் வரும். இப்ப அந்த டெக்னிக்கை எல்லாரும் பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள் போல.
அன்புடன்,
சீமாச்சு...
அட போங்க சீமாச்சு,
எல்லாம் இந்த கூட்டுக்களவாணிங்க போடுற இயல், இசை, நாடகத் தெருவிழா.
நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன், நீ அழுவுற மாதிரி அழு மாதிரியான் டெக்னிக்தானே.
ஹரிஹரன்,
www.harimakesh.blogspot.com
சீமாச்சு,
ரொம்ப வருடங்களுக்கு முன் கல்கியில் கடுகு ஒரு கட்டுரை எழுதியிருந்தார் - அரசியல் வாதிகளின் சொத்து பற்றி. அதில் கடுகு அவர்களின் ஒரு அரசியல்வாதி நண்பர் தன் பெயரில் இருக்கும் சொத்துக்களை கடுகு பெயருக்கும், கடுக் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கும் மாற்றினால், நஷ்டம் கடுகு அவர்களுக்குத்தான் என்பார் - ஏனென்றால் அந்த அரசியல்வாதியின் சொத்து அனைத்தும் பினாமிகள் பெயரில் இருக்கும்! அது போலத் தான் இதுவும். இது கிட்டத்தட்ட சொத்துள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
ரங்கா.
Post a Comment